புதிய ஃபியட் புன்ட்டோ ப்யூர், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

By Ravichandran

ஃபியட் புன்ட்டோ ப்யூர், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்டது.

ஃபியட் புன்ட்டோ ப்யூர் குறித்த கூடுதல் தகவல்களையும், படங்களையும் கீழே காணலாம்.

fiat-punto-pure-relaunched-in-india-at-rupees-4-49-lakh

புன்ட்டோ ப்யூர் பற்றி...

ஃபியட் நிறுவனம் தங்களின் புன்ட்டோ ஹேட்ச்பேக் வேரியண்ட்டில், புன்ட்டோ ப்யூர் என்ற காரை அறிமுகம் செய்துள்ளனர். முதல் தலைமுறை

புன்ட்டோ காரே தான், ஃபியட் புன்ட்டோ ப்யூர் என்ற பெயரில் அறிமுகம் செய்யபடுவதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின் ஃப்யூவல் வகை - பெட்ரோல் / டீசல்
இஞ்ஜின் கொள்ளளவு - 1.2 லிட்டர் / 1.3 லிட்டர்
பவர் - 6000 ஆர்பிஎம்களில் 67 பிஹெச்பி / 4,000 ஆர்பிஎம்களில் 75 பிஹெச்பி
டார்க் - 2,500 ஆர்பிஎம்களில் 96 என்எம் / 1,750 ஆர்பிஎம்களில் 197 என் என்

கியர்பாக்ஸ்;

ஃபியட் புன்ட்டோ ப்யூர் காரின் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின், இரண்டுமே 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

டிசைன்;

ஃபியட் புன்ட்டோ ப்யூர் காரானது, புதிய பெயரில் மீண்டும் மறுஅறிமுகம் செய்யபட்டுள்ள முதல் தலைமுறை புன்ட்டோ என்பதால், இதில் பெரிய அளவிலான டிசைன் மாற்றங்கள் எதுவும் இல்லை.

இது நிகழ் தலைமுறை புன்ட்டோ காரை காரை காட்டிலும், வளைந்த தோற்றம் கொண்டதாக உள்ளது. ஃபியட் புன்ட்டோ ப்யூர் காரின் ஹெட்லைட்கள் மற்றும் டெய்ல்லைட்கள், தற்போதைய புன்ட்டோ எவோ காரில் உள்ளதை காட்டிலும் சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது.

விற்பனைக்கு அறிமுகம்?

ஃபியட் புன்ட்டோ ப்யூர் கார், தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து ஃபியட் டீலர்ஷிப்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

தேங்கிய ஸ்டாக்குகள்;

முதல் தலைமுறை இந்தியா ஃபியட் புன்ட்டோ மறுபிரவேசம் செய்யபடுவதற்கான முக்கிய காரணமே, விற்காமல் தேங்கி போன ஸ்டாக்குகள் விற்று தீர்க்க தான் என கூறப்படுகிறது.

ஃபியட் இந்தியா நிறுவனம், தங்களின் புன்ட்டோ எவோ ஹேட்ச்பேக்-கை சில மாற்றங்களுடன் மேம்படுத்தியது. இதையடுத்து, மக்கள் புதிய ஹேட்ச்பேக் மாடலை விரும்பி வாங்க ஆரம்பித்தனர். இதனால், பழைய மாடல்களின் விற்பனை குறைந்ததால், அதன் ஸ்டாக்குகள் தேங்க ஆரம்பித்தது.

போட்டி?

ஃபியட் புன்ட்டோ ப்யூர் காருக்கு போட்டியாக, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் ஃபோர்டு ஃபிகோ விளங்குகிறது.

விலை;

ஃபியட் புன்ட்டோ ப்யூர் காரின் பெட்ரோல் வேரியண்ட்கள், 4.49 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) துவக்க விலையில் இருந்தும், டீசல் வேரியண்ட்கள் 5.59 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) துவக்க விலையில் இருந்தும் கிடைக்கின்றன.

இதர தொடர்புடைய செய்திகள்;

பழைய ஃபியட் புன்ட்டோ கார் மீண்டும் விற்பனைக்கு வருகிறது

தீபாவளி ஸ்பெஷல்: ஃபியட் புன்ட்டோ ஸ்போர்டிவோ லிமிடெட் எடிஷன் அறிமுகம்

ஃபியட் புன்ட்டோ அபார்த் மற்றும் அவென்ச்சுரா அபார்த் கார்கள் விற்பனைக்கு வந்தது

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Fiat has launched a new variant of their Punto hatchback, which is called as the Punto Pure, at the 2016 Delhi Auto Expo. The Punto Pure is basically the new version of the First generation Punto with a new nametag. The Fiat Punto Pure is now on sale at all the Fiat dealerships allover India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X