ஹோண்டா நிறுவனத்தின் 10 புதிய டூ வீலர்கள் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

By Ravichandran

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், 10 புதிய இருசக்கர வாகன மாடல்கள் காட்சிபடுத்த ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனம் சார்பாக ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தவிருக்கும் தயாரிப்புகள் குறித்த தகவல்களை வரும் ஸ்லைடர்களில் விரிவாக காணலாம்.

ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா...

ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா...

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், 10 புதிய மாடல்கள் காட்சிபடுத்தபடும் என ஹோண்டா நிறுவனம் உறுதி செய்துள்ளது.

4 கான்செப்ட் நிலை பைக்களும், 6 இதர வாகனங்களும் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த 10 வாகனங்களும் இந்த ஆண்டிற்குள் அறிமுகம் செய்யபட்டுவிடும்.

நட்சத்திரங்களும் பங்கேற்பு;

நட்சத்திரங்களும் பங்கேற்பு;

இந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஹோண்டா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடர்களான அக்‌ஷய் குமார் மற்றும் டாப்ஸி பன்னு-வும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

ஹோண்டாவின் சூசகமான அறிவிப்பு;

ஹோண்டாவின் சூசகமான அறிவிப்பு;

ஜனவரி 1, 2016-ஆம் தேதி அன்று, ஆங்கில புத்தாண்டு வாழ்த்தை, ‘ஹாப்பி நவி இயர்' என சூசகமாக தெரிவித்து, ஹோண்டா நிறுவனம் தங்களின் அடுத்த தயாரிப்பின் பெயரை அறிவித்து இருந்தது.

நவி-ஸ்கூட்டாரா? மோட்டார்சைக்கிளா?

நவி-ஸ்கூட்டாரா? மோட்டார்சைக்கிளா?

தங்களின் அடுத்த தயாரிப்பின் பெயரை சூசகமாக அறிவித்து இருந்தாலும், நவி என்ற புதிய தயாரிப்பினை ஆட்டோ எக்ஸ்போவின் போது அறிமுகம் செய்ய உள்ளதாக ஹோண்டா நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஆனால், இது வரை, அந்த நவி என்ற தயாரிப்பு, ஸ்கூட்டரா அல்லது மோட்டார்சைக்கிளா என்று ஹோண்டா நிறுவனம் இது வரை உறுதி செய்யவில்லை.

ரகசியங்கள் காக்கும் ஹோண்டா...

ரகசியங்கள் காக்கும் ஹோண்டா...

இந்த 2016-ஆம் ஆண்டின் போது, பிற தயாரிப்புகள் என்ன என்ன அறிமுகம் செய்யபடலாம் என்பது குறித்து ஹோண்டா நிறுவனம் ரகசியம் காத்து வருகிறது.

நியோவிங் என்ற 3-சக்கர ஹைப்ரிட் ஸ்கூட்டர் கட்டாயம் காட்சிபடுத்தபடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈவி-கப் கான்செப்ட்;

ஈவி-கப் கான்செப்ட்;

இதோடு மட்டுல்லாமல், ஈவி-கப் கான்செப்ட் வாகனமும் காட்சிபடுத்தபடும். இந்த ஈவி-கப் கான்செப்ட் முதன் முறையாக 2015 டோக்கியோ மோட்டார் ஷோவில் காட்சிபடுத்தபட்டது.

மார்க் மார்கேஸ்?

மார்க் மார்கேஸ்?

இந்த 13-வது ஆட்டோ எக்ஸ்போ பதிப்பில், மார்க் மார்கேஸ் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கபட்டுள்ளது.

ஹோண்டா காட்சிபடுத்தபடும் வாகனங்கள்;

ஹோண்டா காட்சிபடுத்தபடும் வாகனங்கள்;

ஹோண்டா நிறுவனம், மோட்டோ ஜிபி, ஆர்சி213வி ப்ரோட்டோ பைக் உள்ளிட்ட வாகனங்களை காட்சிபடுத்த உள்ளது.

ஹோண்டாவின் வாகனங்களை காணவரும் அனைத்து பார்வையாளர்களையும், தங்கள் நிறுவனத்தின் மோட்டோ ஜிபி வாகனத்துடன் நின்றும், அவற்றின் மீது அமர்ந்தும் புகைப்படங்கள் எடுத்து கொள்ளவும் ஹோண்டா நிறுவனம் அனுமதிக்கிறது.

சோட்டா பீம்...

சோட்டா பீம்...

இந்த நிகழ்ச்சியின் போது, சோட்டா பீம் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த தகவல்களை குழந்தைகளுக்கும், குடும்பத்தினர்களுக்கும் எடுத்து விளக்க உள்ளது.

வெளிப்புற பகுதியில், சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த பாடங்களும், செயல்முறை விளக்கங்களும் அளிக்கபட உள்ளது.

சிஆர்எஃப் 50;

சிஆர்எஃப் 50;

இந்த நிகழ்ச்சியின் போது வழங்கபடும் பயிற்சிகளின் ஒரு பகுதியாக சிஆர்எஃப் 50 மற்றும் ரைடிங் சிமுலேட்டரும் வழங்கபட உள்ளது.

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

More from DriveSpark

Article Published On: Monday, January 25, 2016, 16:48 [IST]
English summary
Honda Motorcycle and Scooters India has confirmed that they would be showcasing 10 new models at the 2016 Delhi Auto Expo. Four concept bikes and six other vehicles are to be showcased at this Auto Expo. These vehicles would be launched in India within 2016. Brand Ambassadors Akshay Kumar and Taapsee Pannu also would attend this event.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+