ரெண்டும் கெட்டான் டிசைனில் ஹோண்டா அறிமுகம் செய்திருக்கும் புதிய நவி!

By Ravichandran

பைக் மற்றும் ஸ்கூட்டரின் கிராஸ்ஓவரான (கலப்பின வாகனமான) நவி என்ற இரு சக்கர வாகனத்தை, ஹோண்டா நிறுவனம் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்துள்ளது.

மோட்டோ ஸ்கூட்டர் வகையிலான இந்த நவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

இஞ்ஜின் விவரம்;

இஞ்ஜின் விவரம்;

இஞ்ஜின் - 109.2 சிசி

பவர் - 7,500 ஆர்பிஎம்களில், 8 பிஹெச்பி

டார்க் - 5,500 ஆர்பிஎம்களில் 8.83 என்எம் டார்க்

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

புதிய ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டருக்கு, ஹோண்டா நிறுவனம் காம்பி-பிரேக் சிஸ்டம் பொருத்தியுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

புதிய ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டரின் சஸ்பென்ஷன் பொருத்த வரை, முன் சக்கரத்திற்கு டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் சக்கத்திற்கு மோனோ ஷாக் போர்க்கும் வழங்கபட்டுள்ளது.

ஸ்டைல்;

ஸ்டைல்;

ஹோண்டா நிறுவனம், தங்களின் நவி மோட்டோ ஸ்கூட்டருக்கான டிசைன் அம்சங்களை, அந்நிறுவனத்தின் ஆஃப்ரோட் பைக்களில் இருந்து ஏற்று கொண்டுள்ளது.

ஆனால் ஏற்று கொண்ட அம்சங்களை கொண்டு, அதன் சிறிய புரோஃபைலை வழங்கியுள்ளது.

ஹெட்லேப் பற்றி;

ஹெட்லேப் பற்றி;

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டரின் ரெக்டாங்கிள் (செவ்வகம்) வடிவிலான ஹெட்லாம்பானது, வட்ட வடிவில் மாற்றபட்டுள்ளது. சக்கரங்கள் சிறியதாக காட்சி அளிக்கிறது.

ஸ்டோரேஜ்;

ஸ்டோரேஜ்;

புதிய ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டரின் முன் பகுதியில் ஸ்டோரேஜ் (தேக்கி வைத்து கொள்ளும்) இடம் வழங்கபட்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

புதிய ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டரானது 5 நிறங்களில் கிடைக்கிறது.

பேட்ரியார் ரெட், ஹாப்பர் ரெட், ஷாஸ்டா வைட், ஸ்பார்க்கி ஆரஞ்ச் மற்றும் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

வேரியண்ட்கள்;

வேரியண்ட்கள்;

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது, ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டரின், தி நவி ஸ்ட்ரீட், தி நெவி அட்வென்சர் மற்றும் நவி ஆஃப்-ரோட் ஆகிய 3 வேரியண்ட்கள் காட்சிபடுத்தபட்டது.

புக்கிங்;

புக்கிங்;

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் மூலமாகவும், புக்கிங் செய்து கொள்ளும் வாய்ப்புகள் வழங்கபட்டுள்ளது.

புக்கிங் எப்போது?

புக்கிங் எப்போது?

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டரின் புக்கிங், ஃபிப்ரவரி 3-ஆம் தேதி முதல் துவங்கிவிட்டது.

டெலிவரி;

டெலிவரி;

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டரின் முதல் டெலிவரி நடவடிக்கைகள், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து துவங்க உள்ளது.

போட்டி?

போட்டி?

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டருக்கு தற்போதைய நிலையில், எந்த விதமான நேரடி போட்டி வாகனமும் இல்லை.

மாறாக, ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர் தான், தற்போது விற்பனையில் உள்ள பிற ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக விளங்கும் என தெரிகிறது.

விலை;

விலை;

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டரின் முக்கியமான சிறப்பு அம்சமே அதன் விலையாக தான் உள்ளது.

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர், 39,500 என்ற (எக்ஸ்-ஷோரூம் (டெல்லி)) விலையில் கிடைக்கும்.

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

More from DriveSpark

Article Published On: Friday, February 5, 2016, 13:25 [IST]
English summary
Honda has launched their very quirky new Navi Crossover in India at the 2016 Delhi Auto Expo. The Honda Navi has derived some styling cues from Honda's offroad bikes and are miniaturized to give it a smaller profile. Honda Navi Moto Scooter is available in 5 colour Options - Patriot Red, Hopper Green, Shasta White, Sparky Orange and Black.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+