ஜாகுவார் எக்ஸ்இ சொகுசு காரின் பிரத்யேக படங்கள்!

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஜாகுவார் எக்ஸ்இ சொகுசு காரை விற்பனைக்கு அறிமுகம் செய்து வைக்க சிறப்பு அழைப்பின் பேரில் பாலிவுட் நடிகை கேத்ரீனா கைஃப் வந்திருந்தார். மேடையில் ஏறிய அவர் சுற்றத்தை மறந்துவிட்டு ஜாகுவார் எக்ஸ்இ காரின் அழகில் மயங்கியதோடு, அந்த காரை அங்குலம் அங்குலமாக பார்த்து ரசித்தார். மேடையில் சிவப்பழகியாக நின்றிருந்த ஜாகுவார் எக்ஸ்இ காருடன் சேர்ந்து போஸ் கொடுத்து கேமரா கண்களுக்கு விருந்து படைத்தார். கேத்ரீனாவையே அழகில் மயக்கிய, புத்தம் புதிய ஜாகுவார் எக்ஸ்இ காரின் பிரத்யேக படங்களை உங்கள் கண்களுக்கும் விருந்தாக்குகிறோம்.

ஜாகுவார் எக்ஸ்இ சொகுசு கார்

டாடா மோட்டார்ஸ் கீழ் வந்தது முதல் ஜாகுவார் நிறுவனத்தின் வளர்ச்சி கிடுகிடுவென உயர்ந்து வருவது பலரும் அறிந்த விஷயம். டாடா அளித்து வரும் பெரும் முதலீடுகளை வைத்து தற்போது புதிய கார் மாடல்களை ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் உருவாக்கி வருகிறது. அந்த வகையில், ஜாகுவார் நிறுவனம் குறைவான விலையில் உருவாக்கியிருக்கும் புத்தம் புதிய கார்தான் எக்ஸ்இ சொகுசு கார். இந்த புதிய காரின் வரவு ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனெனில், விலையில் இந்த புதிய ஜாகுவார் கார் ஆடி ஏ4, பிஎம்டபிள்யூ சி க்ளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும். ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் பிராண்டுகளை விட ஜாகுவார் பிராண்டுக்கு மதிப்பு அதிகம் என்பதால், வாடிக்கையாளர்களின் கவனத்தை இந்த கார் நிச்சயம் வெகுவாக கவரும். இதுதான், ஜெர்மன் சொகுசு கார் நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சொகுசு அம்சங்கள் மட்டுமே நிறைந்த காராக மட்டுமின்றி, ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான செயல்திறன் மிக்க மாடலாகவும் இதனை ஜாகுவார் தயாரிப்பதையும் குறிப்பிட வேண்டும். ஆம், இந்த புதிய எக்ஸ்இ கார் செயல்திறனில், ஜாகுவார் எஃப்- டைப் ஸ்போர்ட்ஸ் காரின் குணாதிசயங்களை பெற்றிருப்பதை எமது முந்தைய செய்தித் தொகுப்பில் விரிவாக படித்திருப்பீர்கள். ஜாகுவார் நிறுவனத்தின் குறைவான விலை கொண்ட நவீன தொழில்நுட்ப அம்சங்கள் பொருந்திய புத்தம் புதிய கார் என்பதும் கேத்ரீனா கைஃப் மட்டுமில்லை, இந்திய கோடீஸ்வரர்களையும் வெகுவாக கவரும் என நம்பலாம்.

ரூ.39.90 லட்சம் விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, இந்திய மார்க்கெட்டில் ஜாகுவாரின் விற்பனை கிராஃப் நிச்சயம் மேல்நோக்கி செல்லும் என்று ஆணித்தரமாக நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 11, 2016, 10:46 [IST]
English summary
Jaguar has launched the XE Sports Saloon in India at the 2016 Auto Expo. Prices for the new XE start at Rs. 39.90 lakh.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X