மஹிந்திரா வெரிட்டோ எலக்ட்ரிக் கார்: 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்?
பேட்டரியை அடிப்படையாக கொண்டு இயங்கும் மஹிந்திரா வெரிட்டோ எலக்ட்ரிக் கார், அடுத்த மாதம் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது அறிமுகம் செய்யபட உள்ளது.
இந்திய வாகன சந்தை, படு வேகமாக வளர்ந்து வருவதால் ஏராளமான நிறுவனங்கள், தங்களின் வாகனங்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கின்றனர்.
மஹிந்திரா நிறுவனம் மூலம் தயாரிக்கபட்டு, விரைவில் அறிமுகம் செய்ய உள்ள, மஹிந்திரா வெரிட்டோ ஈவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்?
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தங்களின், வெரிட்டோ எலக்ட்ரிக் காரை பல்வேறு தருணங்களில் காட்சி படுத்தியுள்ளனர்.
இந்த எலக்ட்ரிக் செடான் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது அறிமுகம் செய்யபட அதிக வாய்ப்புகள் உள்ளது. முன்னதாக, 2014 ஆட்டோ எக்ஸ்போவின் போதும் இந்த வெரிட்டோ எலக்ட்ரிக் செடான் காட்சிபடுத்தபட்டது என்பது குறிப்பிடதக்கது.

மஹிந்திரா வெரிட்டோ எலக்ட்ரிக் பற்றி...
தற்போதைய நிலையில், மஹிந்திரா நிறுவனம் இந்திய வாகன சந்தையில் ஈ2ஓ மாடல் காரை மட்டுமே வழங்கி வருகின்றனர்.
இதற்கு அடுத்தபடியாக, அறிமுகம் செய்யபட உள்ள வெரிட்டோ எலக்ட்ரிக் செடான் கார் முழுக்க முழுக்க எலக்ட்ரிக் சக்தியில் மட்டுமே இயங்கும். மஹிந்திரா நிறுவனம், தங்களின் எலக்ட்ரிக் வாகன சந்தையை தொடர்ந்து விரிவாக்கம் முயற்சித்து வருகின்றனர்.

மாசு உமிழ்வுக்கு தீர்வு?
உலகின் அனைத்து மூலைகளிலும், மாசு உமிழ்வு பெரும் பிரச்னையாக உள்ளது. சமீபத்தில் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாசு வெளிப்பாடு பிரச்னைகள் அபாய அளவுகளை எட்டியது.
இதனை குறைக்கும் முயற்சியாக, டெல்லி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது. மேலும், வாகன உபயோகத்திற்கான ஆட் / ஈவன் என வாகன உபயோகத்திற்கான புதிய முறை கொண்டுவர பட்டுள்ளது.

வளமான எதிர்காலத்திற்கு உதவும் வெரிட்டோ;
பசுமையான வருங்காலத்திற்கான, நெடுங்கால தீர்வாக எலக்ட்ரிக் வாகனங்களும், ஹைப்ரிட் வாகனங்களும் தான் அமைய உள்ளது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் எலக்ட்ரிக் வாகனங்களின் பிரயோகத்தை ஊக்குவிக்கும் நோக்கில், ஃபேம் அல்லது ஃபாஸ்டர் அடாப்ஷன் அண்ட் மேனுஃபேக்சரிங் ஆஃப் எலக்ட்ரிக் வெஹிகில்ஸ் என்ற திட்டத்தின் கீழ் ஊக்கதொகையினை வழங்கி வருகிறது.

இஞ்ஜின்;
வெரிட்டோ மற்றும் மேக்ஸிமோ ஈவி-க்களில், மஹிந்திரா ஈ2ஓ காரில் பயன்படுத்தபடும், அதே எலக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தபடுகிறது. வெரிட்டோ செடானில் உபயோகிக்கபடும் பேட்டரியானது, 7 மணி நேரத்தில் முழுமையான அளவிற்கு சார்ஜ் செய்ய கூடிய வகையில் உள்ளது.
ஒரு முறை வெரிட்டோ செடானை முழுமையாக சார்ஜ் செய்வதன் மூலம், 80 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும். மேலும், இந்த வெரிட்டோவில் அதிகபடியாக ஒரு மணிநேரத்திற்கு 85 கிலோமீட்டர் என்ற வேகத்தை எட்ட முடியும்.

தாஜ்மஹால் அருகே உபயோகம்;
வெரிட்டோ மற்றும் மேக்ஸிமோ ஈவி வாகனங்களின் இறுதி வடிவம் கொண்ட வாகனத்தை, மஹிந்திரா நிறுவனம் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்ய உள்ளது.
தற்போதைய நிலையில், மஹிந்திரா மேக்ஸிமோ ஈவி, தாஜ்மஹாலை சுற்றியும், அருகே உள்ள பகுதிகளில் பயணியர்களின் போக்குவரத்திற்கு பயன்படுத்தபடுகிறது.

டேக்ஸி சர்வீஸ்களுக்கு பரிந்துரை;
மஹிந்திரா நிறுவனம், அதன் வெரிட்டோ எலக்ட்ரிக் வாகனங்களை டேக்ஸி வேவைகளுக்கு பரிந்துரைக்க திட்டம் செய்துள்ளது.
ஏராளமான டேக்ஸிக்கள், டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் டேக்ஸிக்களை இயங்கி வருகின்றன. இந்த வகை எலக்ட்ரிக் வாகனங்களை, இத்தகைய கேப் சர்வீஸ்களுக்கு உபயோகிப்பதன் மூலம் மாசு வெளியீட்டை அதிக அளவில் குறைக்க முடியும்.

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்


Click it and Unblock the Notifications








