மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ் கான்செப்ட், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்
மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ் கான்செப்ட், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.
பலேனோ ஆர்எஸ் கான்செப்ட் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

இஞ்ஜின்;
மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ் கான்செப்ட் காரானது, 1.0 லிட்டர், 3-சிலிண்டர் பூஸ்டர்ஜெட் டர்போ சார்ஜ்ட் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.
இந்த பூஸ்டர்ஜெட் டர்போ சார்ஜ்ட் பெட்ரோல் இஞ்ஜின், 5,500 ஆர்பிஎம்-களில் 110 பிஹெச்பியையும், 2,000 ஆர்பிஎம்களில் 170 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

திறன்;
மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ் கான்செப்ட், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 12 நொடிகளில் எட்டிவிடும்.

உச்சபட்ச வேகம்;
மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ் கான்செப்ட் கார், அதிகபட்சமாக மணிக்கு 200 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;
மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ் கான்செப்ட், 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.

டிசைன்;
டிசைன் படி, இந்த பலேனோ ஆர்எஸ் காரில், பெரிய் மாற்றங்கள் எதுவும் செய்யபடவில்லை. ரியரில் மட்டும் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யபட்டதனால், இதற்கு டிஃப்யூஸர் பொருத்தபட்டது போல் காட்சி அளிக்கிறது.
இதன் பின் பக்கத்தில், ஒரு ஆர்எஸ் பேட்ஜும், புதிய பிளாக் அல்லாய் சக்கரங்கள் சேர்க்கபட்டுள்ளது.

இண்டீரியர்;
மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ் கான்செப்ட் காரின் ஏராளமான மாற்றங்கள் செய்யபட்டுள்ளது. இந்த பலேனோ ஆர்எஸ் கான்செப்ட்-டில், முழுவதும் பிளாக் இண்டீரியர், ஸ்போர்ட்ஸ் சீட்கள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.
இதோடு மட்டுமல்லாமல், இது ஃபிளாட்-பாட்டம் ஸ்டியரிங் வீல், மற்றும் ஆப்பிள் கார்பிளே உடைய டச் அடிப்படையிலான இன்ஃபோடெய்ன்மண்ட் சிஸ்டம் கொண்டுள்ளது.

எப்போது வெளியீடு?
இந்த மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ் கான்செப்ட், வரும் தசரா அல்லது தீபாவளி பண்டிகைகாலங்களின் போது, நெக்ஸா ஷோரூம்களின் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

போட்டி?
மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ் கான்செப்ட் ஃபியட் புன்ட்டோ மற்றும் போலோ ஜிடி ஆகிய மாடல்களுடன் போட்டியிட வேண்டி இருக்கும்.

விலை?
மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ் கான்செப்ட் காரின் விலை, உயர் ரக பலேனோ பெட்ரோல் வேரியண்ட்-டை காட்டிலும் சற்று விலை கூடுதலாக இருக்கலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;
மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ் கான்செப்ட் ஹேட்ச்பேக் கார், விரைவில் அறிமுகம்
அட்வான்ஸ் புக்கிங்கில் அசத்தும் புதிய மாருதி பலேனோ காரின் வெற்றிக்கான காரணங்கள்
அறிமுகமான 2 நாட்களில் 4,500 முன்பதிவுகளை பெற்ற மாருதி பலேனோ

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்


Click it and Unblock the Notifications








