அதி உயரமான மெர்சிடிஸ் ஜி வேகன் 500 4x4 ஸ்குயர்ட் எஸ்யூவி, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

By Ravichandran

மெர்சிடிஸ் நிறுவனம், தங்களின் ஜி வேகன் 500 4x4 ஸ்குயர்ட் எஸ்யூவி வாகனத்தை வாகனத்தை, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்தனர்.

ஜி வேகன் 500 4x4 ஸ்குயர்ட் எஸ்யூவி வாகனம் குறித்த கூடுதல தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இஞ்ஜின் கான்ஃபிகரேஷன் - ட்வின்-டர்போ வி8

இஞ்ஜின் வகை - பெட்ரோல்

கொள்ளளவு - 4.0 லிட்டர்

பவர் - 5,250 - 5,500 ஆர்பிஎம்களில் 416 பிஹெச்பி

டார்க் - 2,250 - 4,750 ஆர்பிஎம்களில் 610 டார்க்

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஜி வேகன் 500 4x4 ஸ்குயர்ட் எஸ்யூவி வாகனத்தின் இஞ்ஜின், 7-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் 4 சக்கரங்களுக்கும் பவரை கடத்துகிறது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

போர்டல் ஆக்ஸில்களுடன் இணைத்து வைக்கபட்டுள்ள 22 இஞ்ச் வீல்களின் மீது ஜி வேகன் 500 4x4 ஸ்குயர்ட் எஸ்யூவியின் பாடி நிற்கிறது.

இதனால், இந்த ஜி வேகன் 500 4x4 ஸ்குயர்ட் எஸ்யூவி, 450 மில்லிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது. மேலும், இந்த எஸ்யூவி 1000 மில்லிமீட்டர் வரையிலான அளவு வரையிலான தண்ணீரிலும் எளிதாக செல்ல முடியும்.

டிசைன்;

டிசைன்;

ஜி வேகன் 500 4x4 ஸ்குயர்ட் எஸ்யூவி பிற மெர்சிடிஸ் வாகனங்களை போல தான் காட்சியளிக்கிறது.

இந்த எஸ்யூவி கண்ணை ஈர்க்கும் வகையிலான அம்சங்களுடன் நிறைந்துள்ளது. ஆனால், காட்சிக்கு வைக்கபட்ட நியான் நிற பெயிண்ட் ஸ்கீம் குறித்து ஒன்றும் கூறுவதற்கு இல்லை.

உயர்ந்த எஸ்யூவி?

உயர்ந்த எஸ்யூவி?

ஜி வேகன் 500 4x4 ஸ்குயர்ட் எஸ்யூவி வழக்கமான வாகனங்களை காட்டிலும் உயரமாக உள்ளது. இதன் உயரம் சுமார் 2 மீட்டர் ஆகும்.

விற்பனைக்கு அறிமுகம்?

விற்பனைக்கு அறிமுகம்?

மெர்சிடிஸ் நிறுவனம் இந்த ஜி வேகன் 500 4x4 ஸ்குயர்ட் எஸ்யூவியை, கடந்த ஆண்டு தான் ஜெர்மனியில் விற்க துவங்கினர்.

ஆனால், இது எப்போது இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என்பதை குறித்து எந்த விதமான அதிகாரபூர்வ தகவல்களும் இதுவரை வழங்கபட வில்லை.

போட்டி?

போட்டி?

மெர்சிடிஸ் ஜி வேகன் 500 4x4 ஸ்குயர்ட் எஸ்யூவி, இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் பட்சத்தில், ரேஞ்ச் ரோவர் மாடல் தான் இதற்கு உகந்த போட்டி மாடலாக விளங்க உள்ளது.

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Mercedes has unveiled their madcap G500 4x4 Squared at the 2016 Auto Expo. This G Wagon 4x4 Squared grabbed attention of lots of Eye Balls at the 2016 Delhi Auto Expo due to its features and its unusual height of around 2 metres. If and when launched in India, G500 4x4 Squared SUV will have to compete with the Range Rover.
Story first published: Wednesday, February 10, 2016, 11:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X