புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்?
புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடானை, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்வோம்.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் எலன்ட்ரா;
ஹூண்டாய் நிறுவனம், புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடானை 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், காட்சிபடுத்த உள்ளது. முன்னதாக, இந்த கொரிய கார் நிறுவனம், அடுத்த தலைமுறை எலன்ட்ரா-வை 2015 எல்ஏ ஆட்டோ ஷோவில் காட்சிபடுத்தியது.

எப்போது அறிமுகம்;
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டாலும், எலன்ட்ரா செடான் இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகம் செய்யபடும்.
ஃப்ளாக்ஷிப் தயாரிப்பான எலன்ட்ரா, இந்திய வாகன சந்தைகளில், பிரிமியம் செடான் காராக அறிமுகம் செய்யபட உள்ளது. நவீன மற்றும் மேம்படுத்தபட்ட புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான், தற்போது விற்பனையில் உள்ள எலன்ட்ரா செடான் காருக்கு மாற்றாக வர உள்ளது.

டிசைன்;
டிசைன் பொருத்த வரை, இந்த புதிய 2016 ஹூண்டாய் எலன்ட்ரா செடான், ஃப்ளூயிடிக் 2.0 தாத்பர்யத்துடன் சித்தாந்தத்துடன் வழங்கபட மாட்டாது.
புதிய 2016 ஹூண்டாய் எலன்ட்ரா செடான், ஜெனிஸிஸ் பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யபட்டுள்ள ஜி90 சொகுசு செடான் காரில் இருந்து, சில டிசைன் அம்சங்களை ஏற்று கொண்டுள்ளது. புதிய 2016 ஹூண்டாய் எலன்ட்ரா செடான் கட்டாயம் மக்களை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இஞ்ஜின்;
புதிய 2016 ஹூண்டாய் எலன்ட்ரா செடான், 1.6 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின் வடிவில் வெளியாகிறது. இந்த 2 வகையான இஞ்ஜின்களும், 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

திறன்;
புதிய 2016 ஹூண்டாய் எலன்ட்ரா செடான் காரின் திறன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.

இண்டீரியர்;
பயணியர்களுக்கு பிரிமியம் மற்றும் சொகுசுகள் நிறைந்தது போன்ற வகையில், புதிய 2016 ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் இண்டீரியர் அமைப்புகள் மேம்படுத்தபட உள்ளது.

இதர வசதிகள்;
இந்த புதிய 2016 ஹூண்டாய் எலன்ட்ரா செடானில், ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகள் உடைய ஹர்மன் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் கொண்ட புதிய டேஷ்போர்ட் பொருத்தபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;
புதிய 2016 ஹூண்டாய் எலன்ட்ரா செடான், இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம்
புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் விற்பனைக்கு வந்தது - விபரம்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்


Click it and Unblock the Notifications








