யமஹா எம்டி-03 ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம்?
யமஹா எம்டி-03 ஸ்ட்ரீட் ஃபைட்டர், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
யமஹா எம்டி-03 ஸ்ட்ரீட் ஃபைட்டர் பை குறித்த கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

ஆட்டோ எக்ஸ்போவில் யமஹா;
விரைவில் துவங்கும் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், யமஹா நிறுவனம் பங்கேற்க உள்ளது.
இந்த எக்ஸ்போவின் போது, பல்வேறு நிறுவனங்களின் ஏராளமான தயாரிப்புகள் காட்சிபடுத்தல்களும், அறிமுகங்களும் நடை பெறுகிறது.

எக்ஸ்போவில் யமஹா எம்டி-03?
ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் யமஹா நிறுவனம், இந்த எக்ஸ்போவின் போது, யமஹா எம்டி-03 ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக்கையும் காட்சிபடுத்துகிறது.

குறிக்கோள்;
யமஹா எம்டி-03 ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக் உள்ளிட்ட வாகனங்களை இந்திய வாகன சந்தைகளில் காட்சிபடுத்துவதும், அறிமுகம் செய்வதும், தங்கள் நிறுவனத்தின் சந்தை ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதற்காக தான் என தெரிகிறது.

எம்டி-03 ஸ்ட்ரீட் ஃபைட்டர் பற்றி...
யமஹா எம்டி-03 ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக், யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3 மோட்டார்சைக்கிளை அடிப்படையாக கொண்டுள்ளது. யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3 மோட்டார்சைக்கிள் தற்போது இந்திய சந்தைகளி விற்பனை செய்யபட்டு வருகிறது.
யமஹா எம்டி-03 ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக், யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3 மோட்டார்சைக்கிள் இடையே ஏராளமான பாகங்கள் பகிர்ந்து கொள்ளப்ப்ட உள்ளது. இது செலவுகளை குறைக்கும் நோக்கில் செய்யபடுகிறது.

புதிய மாற்றங்கள்;
யமஹா எம்டி-03 ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக், முழுமையான ஃபேரிங் கழிக்கபடுகிறது. மேலும், அப்ரைட் ரைடிங் போஸ்சர் வழங்குவதற்காக, புதிய ஹெட்லேம்ப் பொருத்தபடுகிறது.

இஞ்ஜின்;
யமஹா எம்டி-03 ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக், 321 சிசி, இன்லைன் 2-சிலிண்டர்கள் உடைய லிக்விட்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.
இதன் இஞ்ஜின், 41.42 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 29.6 என்எம் டார்க்கை வெளிபடுத்தும் வகையில், யமஹா இஞ்ஜினியர்கள் இதனை வடிவமைத்துள்ளனர். இனிமையான ரைடிங் அனுபவம் வழங்கும் வகையில், இதன் இஞ்ஜின் 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

சர்வதேச சந்தைகளில் விற்பனை;
தற்போதைய நிலைவில், இந்த யமஹா எம்டி-03 ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக், சர்வதேச சந்தைகளில் விற்கபட்டு வருகிறது.

இந்தியாவில் அறிமுகம்?
யமஹா எம்டி-03 ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக், இந்திய வாகன சந்தைகளில், இந்த ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்யபடலாம் என தகவல் தெரிவிக்கிறது.

விற்கபடும் விதம்;
யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3 மோட்டார்சைக்கிளை போலவே, இந்த யமஹா எம்டி-03 ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக்-கையும், சிகேடி அல்லது கம்ப்ளீட்லி நாக்ட் டவுன் யூனிட் என்ற வகையிலேயே, யமஹா இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

போட்டி வாகனங்கள்?
இந்திய சந்தைகளை பொருத்த வரை, யமஹா எம்டி-03 ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக்-கிறகு கடுமையான போட்டி காத்திருக்கிறது.
ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக் ரகத்தில், பிரிமியம் பைக்-கான பிஎம்டபுள்யூ ஜி310ஆர் பைக்கும் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கலந்து கொள்கிறது. இந்த செக்மெண்டில், கேடிஎம் ட்யூக் 390 மற்றும் கவாஸாகி இசட்250 பைக்குகளும் கடும் போட்டியை வழங்க உள்ளது.

விலை?
யமஹா நிறுவனத்தின் முழுமையாக ஃபேரிங் செய்யபட்ட மோட்டார்சைக்கிளை காட்டிலும், இந்த யமஹா எம்டி-03 ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக்-கின் விலை குறைவாகவே நிர்ணயிக்கபடும் என எதிர்பார்க்கலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;
யமஹா எம்டி 03 மாடல்... சமீபத்தில் வந்த ஆர்3 பைக்கின் நேக்டு ஸ்டைல் மாடல்!
விரைவில் இந்தியா வரும் 14 புதிய மோட்டார்சைக்கிள்கள் - முழு விவரங்கள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்


Click it and Unblock the Notifications








