யமஹா எம்டி-09 பைக் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்
புதிய யமஹா எம்டி-09 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் இந்த புதிய பைக்கை அறிமுகம் செய்தார். அத்துடன், முதல் பைக்கை அவருக்கு பரிசாக வழங்கியது யமஹா நிறுவனம்.
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் யமஹா எம்டி-03 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யமஹா எம்டி குடும்ப வரிசையில், அதன் உயர் வேரியண்ட்டான யமஹா எம்டி-09 பைக் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஆபிரஹாமுக்கு கிஃப்ட்
இந்த பைக்கை அறிமுகம் செய்து வைத்த பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாமுக்கு, இந்த புதிய எம்டி-09 பைக்கை யமஹா நிறுவனம் பரிசாக வழங்கியது.

எஞ்சின்
இந்த ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரக சூப்பர் பைக்கில் 3 சிலிண்டர்கள் கொண்ட 847சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, 113.4 பிஎச்பி பவரையும், 87.5 என்எம் டார்க்கையும் இந்த புதிய பைக் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

செயல்திறன்
இந்த பைக் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 225 கிமீ வேகம் வரை செல்லும்.

மைலேஜ்
லிட்டருக்கு 19.1 கிமீ மைலேஜ் தரும் என யமஹா நிறுவனம் தெரிவிக்கிறது.

எடை
188 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில் 14 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

முன்புறத்தில் 137மிமீ இடைவெளி வரை நகரும் அமைப்புடைய டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளது.

டிஸ்க் பிரேக் சிஸ்டம்
முன்புற சக்கரத்தில் 298மிமீ ட்வின் ஹைட்லாலிக் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் 245மிமி விட்டம் கொண்ட ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக்குகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்
அத்துடன், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் தொழில்நுட்பம், ட்ராக்ஷன் கன்ட்ரோல் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

சக்கரங்கள்
இந்த சூப்பர் பைக்கில் 17 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வண்ணங்கள்
ரேஸ் புளூ, மேட் க்ரே என்ற இரு வண்ணங்களில் கிடைக்கும்.

விலை
ரூ.10.20 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த புதிய யமஹா சூப்பர் பைக் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








