இளசுகளின் கவனத்திற்கு... புதிய யமஹா எம்டி09 பைக்கின் எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!
நடுத்தர வகை சூப்பர் பைக் மார்க்கெட்டில் இங்கிலாந்தை சேர்ந்த டிரையம்ஃப் நிறுவனத்தின் அதிரடி பைக் மாடல்களால், சற்று திகைத்துப் போன யமஹா நிறுவனம், தன் பங்கிற்கு எம்டி-09 என்ற புதிய சூப்பர் பைக் மாடலை விற்பனைக்கு களமிறக்கியிருக்கிறது.

மிரட்டலான தோற்றம், செயல்திறன் போன்றவற்றில் இந்த புதிய பைக் இளம் வாடிக்கையாளர்களின் புருவத்தை உயரச் செய்திருக்கிறது. அவர்களுக்காகவே, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வைக்கப்பட்டிருந்த இந்த புதிய சூப்பர் பைக்கை வளைத்து கட்டி படங்களை எடுத்துள்ளனர் எமது சிறப்பு நிருபர் குழுவினர். அந்த படங்களை பெரு மகிழ்வுடன் கேலரியில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
இந்த பைக்கை ஜான் ஆபிரஹாம் அறிமுகம் செய்து வைத்த கையோடு, அந்த பைக்கை அவருக்கே பரிசளிப்பதாக யமஹா நிறுவனம் அறிவித்தது. சூப்பர் பைக் பிரியரான ஜான் ஆபிரஹாமின் கார், பைக் பிரியம் பற்றி ஏற்கனவே பல செய்திகளை வழங்கியிருக்கிறோம்.
புதிய சூப்பர் பைக் வந்தால், ஓடிச் சென்று பார்த்து, ரசித்து டெஸ்ட் டிரைவ் செய்வது அவரது வழக்கம். சில வேளைகளில் ஹெல்மெட் கூட போடாமல் பறந்து, பத்திரிக்கை கேமரா கண்களில் மாட்டிய சம்பவங்களும் உண்டு.
இந்த நிலையில், ஜான் ஆபிரஹாமின் கராஜை அலங்கரிக்கப் போகும் இந்த புதிய பைக்கின் பிரத்யேக படங்களை உங்களின் பார்வைக்கு வழங்குவதில், ஒன் இந்தியா தமிழ் தளத்தின் அங்கமான டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் பெரு மகிழ்வு கொள்கிறது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் நிகழ்வுகளை முழுமையாக தெரிந்துகொள்ள டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திலும், எமது சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்பில் இருங்கள்.
புதிய யமஹா எம்டி-09- முழு விபரம்


Click it and Unblock the Notifications




































