மோட்டார்சைக்கிள்களின் விலைகளை உயர்த்திய ஹீரோ... புதிய விலை பட்டியல் வெளியீடு...!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தை திருத்தியமைக்கப்பட்ட விலை பட்டியலுடன் அப்டேட் செய்துள்ளது. இதனை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

மோட்டார்சைக்கிள்களின் விலைகளை உயர்த்திய ஹீரோ... புதிய விலை பட்டியல் வெளியீடு...!

ஹீரோ மோட்டோசைக்கிள்களின் இந்த விலை உயர்வு ரூ.750-லிருந்து ரூ.2,800 வரை உள்ளது. விலை அதிகரிப்பை பெற்றுள்ள ஹீரோ நிறுவனத்தின் பைக்குகளை அட்டவணையாக கீழே காண்போம்.

Models New Price Old Price
Splendor Plus Kick Start Rs 60,350 Rs 59,600
Splendor Plus Self Start Rs 62,650 Rs 61,900
Splendor Plus Self Start i3S Rs 63,860 Rs 63,110
Super Splendor Self Start/Drum Rs 68,150 Rs 67,300
Super Splendor Self Start/Disc Rs 70,800 Rs 71,650
Splendor iSmart Self Start/Disc Rs 67,900 Rs 67,100
Passion Pro Self Start/Drum Rs 65,740 Rs 64,990
Passion Pro Self Start/Disc Rs 67,940 Rs 67,190
Glamour Self Start/Drum Rs 69,750 Rs 68,900
Glamour Self Start/Disc Rs 73,250 Rs 72,400
HF Deluxe Self Start/Drum Rs 56,675 Rs 55,925
HF Deluxe Self Start/Drum i3S Rs 58,000 Rs 57,250
Destini 125 Steel Wheels/Drum Rs 65,310 Rs 64,310
Destini 125 Alloy/Drum Rs 68,100 Rs 66,800
Maestro Edge 125 Alloy/Drum Rs 69,250 Rs 67,950
Maestro Edge 125 Alloy/Disc Rs 71,450 Rs 70,150
Pleasure Self Start/Steel Wheels Rs 55,600 Rs 54,800
Pleasure Self Start/Alloy Rs 57,600 Rs 56,800
மோட்டார்சைக்கிள்களின் விலைகளை உயர்த்திய ஹீரோ... புதிய விலை பட்டியல் வெளியீடு...!
ஆனால் இதில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200டி மற்றும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்குகளின் விலை விபரங்கள் குறிப்பிடப்படவில்லை. அதேபோல் எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் பெயரும் இதில் இல்லை.
மோட்டார்சைக்கிள்களின் விலைகளை உயர்த்திய ஹீரோ... புதிய விலை பட்டியல் வெளியீடு...!

ஏனெனில் இந்த 160சிசி பைக்கின் விலையில் கொண்டுவரப்பட்டுள்ள உயர்வை இந்நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. ஹீரோ நிறுவனம் எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கை வரும் மாதங்களில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

மோட்டார்சைக்கிள்களின் விலைகளை உயர்த்திய ஹீரோ... புதிய விலை பட்டியல் வெளியீடு...!

மேலும் இந்நிறுவனம் ஊரடங்கினால் நிறுத்தி வைத்திருந்த தொழிற்சாலை பணிகளை இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு வழிமுறைகளோடு மீண்டும் துவங்கவும் ஆயத்தமாகி வருகிறது. கொரோனா வைரஸினால் ஹீரோ உள்பட அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனையும் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து நடைபெறவில்லை.

மோட்டார்சைக்கிள்களின் விலைகளை உயர்த்திய ஹீரோ... புதிய விலை பட்டியல் வெளியீடு...!

இதனை மீண்டும் ஆரம்பிக்க ஹரியானா (குர்கான் மற்றும் தருஹேரா), உத்தரகாண்ட் (ஹரிதுவார்) மற்றும் ராஜஸ்தானில் உள்ள க்ளோபல் பார்ட்ஸ் செண்டரில் பணிகளை ஹீரோ நிறுவனம் விரைவில் துவங்கவுள்ளது.

மோட்டார்சைக்கிள்களின் விலைகளை உயர்த்திய ஹீரோ... புதிய விலை பட்டியல் வெளியீடு...!

இந்த பணிகளில் முக்கியமான பணியாளர்கள் மட்டுமே ஈடுப்படுத்தப்பட உள்ளனர். மீதமுள்ள தொழிலாளர்கள் வீட்டிலிருந்தே பணிப்புரியவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Most Read Articles
English summary
Hero MotoCorp announces price hike on all models, detailed list inside Table Code
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X