இந்த பைக்குல போனா பொண்ணுங்க எல்லாம் ஒரு ரவுண்டு போலாமான்னு கேப்பாங்க! பல்சர் என்250 எப்படி இருக்குது?
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வாடிக்கையாளர்கள் விரும்பும் விதமாகவும் அதே நேரம் சிறந்த பெர்பார்மன்ஸ் வழங்கும் விதமாகவும் பைக்குகளை தயார் செய்து விற்பனைக்கு கொண்டு வருவதில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் சமீபத்தில் தனது வாகன அணிவகுப்பில் பஜாஜ் பல்சர் என் 250 என்ற பைக்கை இணைத்துள்ளது. இந்த பைக்கை ஓட்டி பார்த்து அதன் அனுபவத்த தான் இங்கே நாங்கள் வழங்கி உள்ளோம்.
பைக் தயாரிப்பில் நீண்ட ஆண்டுகளாக அனுபவம் பெற்ற மிகப்பெரிய நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள இந்த பஜாஜ் பல்சர் என் 250 என்ற பைக் அக்ரஷிவ் ஸ்டைலிங் உடனும் நவீன தொழில்நுட்பத்துடனும் அனைத்து வகையிலும் முன்னணியில் இருக்கும் வகை பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை ஓட்டி பார்க்க எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு அழைப்பு வந்தது.

அதன்படி பெங்களூர் பன்னார்கட்டா சாலையில் உள்ள பஜாஜ் ஷோரூம்க்கு சென்று அங்கு இந்த பஜாஜ் பல்சர் 250 பைக்கை எடுத்து நாங்கள் ஓட்டி பார்த்தோம். இந்த பைக்கின் டிசைன் அம்சங்கள் ஓட்டி பார்க்கும்போது எங்களுக்கு கிடைத்த அனுபவம் மார்க்கெட்டில் உள்ள மற்ற பைக்கிற்க்கு இந்த பைக்கில் உள்ள வித்தியாசங்கள் என்ன? உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் காணலாம் வாருங்கள்.
டிசைன் மற்றும் ஸ்டைலிங்: பஜாஜ் பல்சர் 250 பைக்கில் வித்தியாசமான டிசைன், நரி வடிவ ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. இது பைக்கில் காண லுக்கையும் ஸ்போர்டியரான ஃபீலையும் கொடுக்கிறது. இந்த பைக்கில் தங்க நிறத்தில் யுஎஸ்டி ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளது. இது பைக்கின் லுக்கையே மாற்றி அமைக்கிறது. இந்த பைக்கில் உள்ள எல்சிடி டிஸ்ப்ளேவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் உள்ள பெட்ரோல் டேங்கில் இருபுறங்களிலும் 250 என்ற எண் கிராபிக்ஸ் ஸ்டைல் மூலம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்சரின் லோகோவும் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில் போலியான ஏர் வென்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இன்ஜின் கேஸிங் பஜாஜ் லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் லுக்கிற்காக இதன் எக்ஸாஸ்ட் பகுதி சற்று மேலே தூக்கி இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் பின்பக்கமும் என் 250 என்ற பேட்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. கருப்பு,சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் இந்த பைக் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில் கருப்பு நிற என் 250 பைக்கில் மட்டும் தங்க நிற யூஎஸ்டி ஃபோர்க் பொருத்தப்படவில்லை. இந்த பைக்கில் உள்ள டிஜிட்டல் டிஸ்ப்ளே பார்க்கவே புதிதாக இருக்கிறது.

இந்த டிஸ்ப்ளேவில் கால் அலர்ட், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. இந்த டிஸ்ப்ளே என் 150, மற்றும் என் 160 ஆகிய பைக்குகளிலும் இடம் பெறுகிறது. அதனால் இந்த பைக்கை பல்சர் ரசிகர்கள் விரும்பி வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கின் லுக் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இருக்கிறது.
இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 249 சிசி ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 24.1 பிஎச்பி பவரையும், 25 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முன்பக்கம் 37 மிமீ யூஎஸ்டி ஃபோர்க்கும் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்சரும் 230 வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் உள்ள டயரை பொருத்தவரை முன்பக்கம் 110/70-17 என்ற அளவில் டயர்களும், பின்பக்கம் சற்று அகலமாக 140/70-17 என்ற அளவில் டயர்கள் வழங்கப்பட்டுள்ளது. இது நல்ல கிரிப் மற்றும் ஸ்டெபிலிட்டியை கொடுக்கிறது.
ரைடிங் இம்ப்ரசன்: பல்சர் 150 பைக்கை பொறுத்தவரை கையாள சிறப்பாக இருக்கிறது. ஓட்டும்போது பாதுகாப்பாகவும் இருக்கிறது. இந்த பைக்கில் மொத்தம் மூன்று விதமான ஏபிஎஸ் மோடுகள் உள்ளன. ரெயின், ரோடு, ஆஃப் ரோடு என இவை வழங்கப்பட்டுள்ளது. இவை மூன்றும் தனித்தனியான ரைட்டிங் கண்டிஷனில் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த பைக் எடை குறைவாக இருக்கிறது. இதனால் சுலபமாக டிராபிக்கலில் ஓடி செல்ல முடிகிறது.
இந்த பைக்கில் உள்ள சீட்டிங் பொசிஷனை பொருத்தவரை நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் சஸ்பென்ஷன் சாஃப்டாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளமேடு நிறைந்த சாலைகளில் இந்த பைக்கை ஓட்டி செல்லும் போது அதன் அதிர்வுகளை எல்லாம் இந்த சஸ்பென்ஷன் எடுத்துக் கொள்கிறது. இது ஒட்டுமொத்த ரைடிங் குவாலிட்டியை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்த பைக்கில் உள்ள இன்ஜின் குறைவான ரேஸிலும் ஓரளவு மீடியமான ரேஸிலும் நல்ல பெர்ஃபார்மன்ஸ் டார்க்கை வழங்குகிறது. ஆனால் அதிக ரேஸ் கொடுக்கும்போது, அதிக வேகத்தில் பெர்பார்மன்ஸ் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஆஃப் ரோட்டில் செல்லும்போது ஆஃப் செய்து விட்டால் பைக்கின் முழு திறன் வெளிப்படுகிறது.
ஆனால் இந்த பைக்கில் உள்ள ஏபிஎஸ் சிஸ்டம் சடன் பிரேக் செய்யும் போது குறுக்கீடு செய்து பிரேக்கிங் அனுபவத்தை கெடுக்கிறது என சொல்லலாம். இந்த பைக் திருப்பங்களில் ஸ்டேபிளாக இருக்கிறது. முக்கியமாக ரைடருக்கு திருப்பும் போது ஒரு நம்பிக்கையை கொடுக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இறுதி தீர்ப்பு: பஜாஜ் பல்சர் 250 பைக் தனித்துவமான டிசைன் சிறந்த பெர்பார்மன்ஸ் துடிப்பான ஹேண்டிலிங் ஆகியவற்றால் நம்மை கவர்கிறது. இந்த பைக் நகர்புறங்களில் பயன்படுத்த சிறந்த பைக்காக இருக்கிறது. இந்த பைக்கில் உள்ள சில ஆப் ரோடு அம்சங்கள் பல்வேறு பகுதிகளில் இந்த பைக்கை ஓட்டலாம் என்ற நம்பிக்கையை தருகிறது.
இந்த பைக்கில் உள்ள ஏபிஎஸில் இருக்கும் சின்ன பிரச்சனைகளை தவிர ஒட்டுமொத்தமாக 250சிசி செக்மெண்டில் மற்ற போட்டி பைக்குகளுக்கு இணையாக பல்வேறு அம்சங்களை கொண்ட பைக்காக இருக்கிறது. இந்த பைக் தெருக்களிலும் வளைவு நெழிவு கொண்ட மலைப்பாதைகளிலும் ஓட்டி செல்லும் போது ரைடர்களுக்கு நல்ல அனுபவத்தை தரும் பைக் விரும்பி களுக்கு இந்த பைக் நிச்சயம் பிடிக்கும்.இந்த பைக் குறித்த விரிவான விமர்சனத்தை விரைவில் வெளியிடுவோம்.


Click it and Unblock the Notifications









