ராக்கெட் மாதிரி சும்மா பிச்சுக்கிட்டு பறக்குது! கேடிஎம் 390 டியூக் பைக்கின் ரிவியூ!

கடந்த 2013-ம் ஆண்டு இந்தியாவில் ஆரஞ்சு நிற ஏவுகணை ஒன்று இந்திய இளைஞர்களை குறி வைத்து தாக்கியது. இந்த ஏவுகணை தாக்குதலில் இந்திய இளைஞர்கள் எல்லாம் கிறங்கி போய்விட்டார்கள். இந்த ஏவுகணையின் பெயர் தான் கேடிஎம் 390 டியூக். இந்த பைக் அறிமுகமாகும் போது குறைந்த விலையில் அதிக பெர்ஃபாமென்ஸ் கொண்ட பைக்காக அறிமுகமானதால் இந்திய இளைஞர்கள் இந்த பைக் மீது அதிக மோகம் கொண்டனர்.

அடுத்து நான்கு ஆண்டுகள் உருண்டோடியது. இதன் இரண்டாம் தலைமுறை பைக் அறிமுகமானது. இதில் அதன் டிசைன் லேசாக மாற்றப்பட்டு, பெர்பார்மன்ஸ் அதிகரிக்கப்பட்டு, முக்கியமாக மாசு கட்டுப்பாட்டிற்கு ஏற்றவாறு இதன் இன்ஜின் மாற்றியமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது .அப்பொழுதும் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அலையே உருவானது.

ktm 390 duke review

அதன் பின்பு சுமார் 6 ஆண்டுகளாக கேடிஎம் நிறுவனம் 390 பைக்கின் விற்பனையை சிறப்பாக விற்பனை செய்து வந்தது. இந்த பைக் மீதான மோகம் நாளுக்கு நாள் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. இதனால் தொடர்ந்து இந்த பைக் சிறப்பான விற்பனையில் இருக்கிறது. இந்நிலையில் கேடிஎம் நிறுவனம் இந்த பைக்கின் வாடிக்கையாளர்களிடம் சில கருத்துக்களைக் கேட்டு அவர்களின் கருத்துக்களின் மூலம் இந்த பைக்கில் சில மாற்றங்களை செய்துள்ளனர்.

இப்படியாக கேடிஎம் நிறுவனம் தனது மூன்றாவது தலைமுறை 390 டியூக் பைக்கை தயாரித்துள்ளது. இதில் புதிய இன்ஜின் மற்றும் மேம்படுத்தப்பட்ட டிசைன் மற்றும் பைக்கின் லுக் என அனைத்தும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றாம் தலைமுறை கேடிஎம் 390 பைக்கை ஓட்டி பார்க்க டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு அழைப்பு வந்தது. அதன் படி எங்கள் குழு புனே விற்கு நேரில் சென்று இந்த பைக்கை ஓட்டி பார்த்தது.

ktm 390 duke review

டிசைன் மற்றும் அம்சங்கள்: இந்த புதிய 2024 கேடிஎம் 390 பைக்கின் லுக் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பழைய தலைமுறை பைக்கிற்கும் இந்த பைக்கில் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன முன் பக்கம் புதிய எல்இடி டிஆர்எல் மற்றும் ஸ்பிளிட் ஹெட்லைட் டிசைன் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்குக்கு அக்ரஸிவான லுக் கொடுப்பதற்காக 15லி ஃப்யூயல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த டிசைன் ரோட்டில் நடந்து செல்பவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு சிறப்பாக இருக்கிறது.

இந்த ஃப்யூயல் டேங்கிற்கு கீழே முற்றிலும் புதிய கேடிஎம் 390 டியூக் பைக்கிற்க்கான இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினை கூல் செய்ய வளைவான டிசைனில் ரேடியேட்டர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இனி நீங்கள் இந்த 390 டியூக் பைக்கை போட்டுவிட்டு நிறுத்தி இறங்கும்போது உங்களுக்கு தீஞ்சு போன வாடை எதுவும் வராது.

ktm 390 duke review

இந்த பைக்கில் டூ ஸ்லீப் சீட் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இதில் பின்பக்கத்தில் முன்பக்க சீட்டை விட சற்று உயரமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின் பக்க டெயில் லைட்டை பொருத்தவரை தலைகீழாக பொருத்தப்பட்ட டெயில்லைட் வழங்கப்பட்டுள்ளது, இதற்கு மேலே ஸ்பிளிட் செய்யப்பட்ட கிராப் ஹேண்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கம் உள்ள நம்பர் பிளேட் அருகே டர்ன் சிக்னல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வழக்கம் போல இந்த பைக்கின் அலாய் வீல்கள் கேடிஎம் ஆரஞ்சு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பைக்கின் சஸ்பென்ஷன் சிஸ்டத்தை பொருத்தவரை அட்ஜஸ்ட் செய்ய கூடிய சஸ்பென்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரேம் கேடிஎம் ஆரஞ்சு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. பார்க்க சிறப்பாக இருக்கிறது.

ktm 390 duke review

மேலும் இந்த பைக்கில் 5 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ரைட் மோடுகளை தேர்வு செய்து கொள்ளலாம். 390 டியூக் பைக்கில் ரைட் மோடுகள் வருவது இதுதான் முதல் முறை. மேலும் இதில் ஆக்டிவ் லான்ச் கண்ட்ரோல் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆகியவற்றை கையாளும் ஆப்ஷன்கள் உள்ளன.

மொத்தத்தில் இந்த பைக்கின் லுக்கை பொறுத்தவரை போல்டாகவும் பார்க்க அட்ராக்டிவாகவும் இருக்கிறது. இந்த பைக்கின் பில்டு குவாலிட்டியும் அடுத்த கட்டத்திற்கு செல்லும் வகையில் சிறப்பாக இருக்கிறது. நிச்சயமாக இந்த பைக்கின் வெளிப்புறத் தோற்றத்தை மாற்றியதற்காக கேடிஎம் நிறுவனத்தை பாராட்டலாம். இது வெகு சிறப்பாக இருக்கிறது.

ktm 390 duke review

ஸ்பெக் மற்றும் டைமன்ஷன்: கேடிஎம் நிறுவனம் இந்த 2024 கேடிஎம் 390 பைக்கில் புதிய இன்ஜினை கொண்டு வந்துள்ளது. அதன்படி இந்த இஞ்சின் 398.7சிசி லிக்யூட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் ஆக பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 44.25 பிஎச்பி பவரையும் 39 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய தலைமுறையை இன்ஜினை விட 2.4 பிஎச்பி பவரும் 2 என்எம் டார்க் திறனும் அதிகமாகும்.

இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது பை டைரக்ஷன் மற்றும் ஸ்லிப்பர் அசிஸ்ட் செட்டப் உடன் இருக்கிறது. இந்த பைக்கில் மொத்தம் மூன்று விதமான ரைடு மோடுகள் உள்ளன. ஸ்ட்ரீட், டிராக் மற்றும் வெட் என இது பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வெட் மோடு என்பது ஈரமான சாலைகளில் வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் போது இந்த மோடை பயன்படுத்தலாம். இதில் இன்ஜின் திறன் சற்று குறைவாக இருக்கும்.

ktm 390 duke review

ஸ்ட்ரீட் மற்றும் டிராக் மோடில் பயணிக்கும் போது இன்ஜின் திறன் முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் கேடிஎம் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதுபோக இந்த பைக்கின் டிராக் மோடில் லான்ச் கண்ட்ரோல் சிஸ்டத்தை ஆக்சஸ் செய்ய முடியும். அதன்படி இந்த பைக் 7000 ஆர்பிஎம்-ல் தனது முழு திறனை கிளட்சை விட்டவுடன் வெளிப்படுத்தும் வகையில் தொழில்நுட்பம் உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் சேஸிஸ் சிஸ்டத்தை பொருத்தவரை நேக்கட் பைக்காக இருப்பதால் இதில் ஸ்டீல் டிரையல் பிரேம் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. மேலும் டை- காஸ்ட் அலுமினியம் சப் பிரேம் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முன்பக்கமும் பின்பக்கமும் அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் போட்டியாளராக மார்க்கெட்டில் உள்ள பைக்குகளில் இப்படியான செட்டப் இல்லை.

ktm 390 duke review

இந்த பைக்கின் முன் பக்கம் டபிள்யூபி அப்பெக்ஸ் 43 ஓபன் கேலிபர் யுஎஸ்பி போக் 5 கிளிக் அட்ஜஸ்டபிள் ஆப்ஷன் உடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரீபவுண்டு கம்ப்ரஷன் அட்ஜஸ்டபிள் ஆப்ஷனும் இருக்கிறது. இது ஃப்ரீ லோட் அட்ஜஸ்டபிள் ஆப்ஷன் ஆக இருக்கிறது. பின்பக்கத்தை பொறுத்தவரை ஆப்செட் டபிள்யூ பி அப்பெக்ஸ் மோனோஷா சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதுவும் ஃப்ரீ லோட் ஆக ரிபவுண்டில் அட்ஜஸ்ட் ஆப்ஷன் உடன் கூடவே இருக்கிறது.

இந்த பைக்கின் பிரேக்கிங் செட்டப்பை பொறுத்தவரை முன் பக்கம் 320 மிமீ கூடிய 4 பிஸ்டர் ஃபிக்ஸட் கேலிபர் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் 240 மில்லி டூயல் பிஸ்டன் ஃப்ளோட்டிங் கேலிபருடன் கூடிய டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்க் பிரேக்குகள் டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் சூப்பர் மோட்டோ உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் சூப்பர் மோட்டோ பின்பக்க ஏபிஎஸ்-ஐ மட்டும் ஆப் செய்யும் ஆப்ஷன் உடன் இருக்கிறது.

ktm 390 duke review

இந்த பைக்கின் வீல்களை பொருத்தவரை குறைந்த எடை கொண்ட வீல்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மொத்தமே 1.7 கிலோ எடை கொண்ட வீல்கள் தான் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது கேடிஎம் ஆரஞ்சு நிற அலாய் வீல்களாகவே உள்ளன. இந்த வீல்களில் மெக்ஸைலர் எம்5 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த பைக்கின் ஒட்டுமொத்த எடையை பொருத்தவரை முந்தைய தலைமுறை பைக்கை விட நான்கு கிலோ குறைவாக இருக்கிறது. மேலும் 32 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கூடுதலாக தற்போது 183 கிரவுண்ட் கிளியரன்ஸுடன் இருக்கிறது. சீட் உயரம் 23 மிமீ குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 800 மிமீ உயரத்தில் தான் சீட் அமைக்கப்பட்டுள்ளது.

ktm 390 duke review

டிரைவிங் இம்ப்ரஸன்: பழைய இரண்டாம் தலைமுறை 390 டியூக் பைக்கின் ஃபெர்பாமென்ஸ் வெகு சிறப்பாக இருக்கும் புதிய பைக்கிலும் எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே அளவிற்கு பெர்ஃபார்மன்ஸ் இருக்கிறது. முக்கியமாக லோ மற்றும் மிட் ரேஞ்ச்களில் இந்த பைக் இஞ்சின் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை. குறைவான வேகத்தில் செல்லும்போது இன்ஜின் தடுமாறுகிறது. அதேநேரம் 6000 முதல் 9000 ஆர்பிஎம் வரையிலான திராட்டலில் பயணிக்கும் போது இன்ஜின் சிறப்பாக செயல்படுகிறது.

பைக்கின் புதிய சேஸிஸ் செட்டப் மற்றும் புதிய மேட்ஸிலர் டயர்கள் பைக் பயணத்தை சுலபமாக மாற்றுகிறது. இந்த பைக்கில் அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷன் சிஸ்டம் வழங்கியிருப்பதால் உங்கள் எடை மற்றும் ரைடிங் ஸ்டைலுக்கு ஏற்ப இதை மாற்றி அமைத்துக் கொள்ள ஆப்ஷன் இருக்கிறது. முந்தைய தலைமுறை பைக்கை விட திருப்பங்களில் இந்த பைக் சிறப்பாக செயல்படுகிறது. வெகு விரைவாகவே திருப்ப முடிகிறது.

ktm 390 duke review

மொத்தத்தில் இந்த பைக் முந்தைய தலைமுறை பைக்கை விட சற்று ஸ்மூத்தான பைக்காக இருக்கிறது சாலையில் செல்லும்போது சிறிய மேடு பள்ளங்கள் வந்தாலும் பெரிய மேடு பள்ளங்கள் வந்தாலும் அதை இந்த பைக் சுலபமாக கையாளுகிறது. இந்த பைக்கின் பிரேக்குகள் சிறப்பாக செயல்படுகிறது ஏபிஎஸ் இருப்பதால் இதன் பெர்ஃபார்மன்ஸ் சிறப்பாக இருக்கிறது. பின்பக்க பிரேக் மட்டும் பிரேக் அழுத்தமாக பிடிக்கும் போது சற்று லைட்டாக இருப்பதாக உணர முடிகிறது.

ஒட்டு மொத்தத்தில் சீட்டிங் பொசிஷன் சிறப்பாக இருக்கிறது. ஒரு போட்டியான பொசிஷனில் அமர்ந்து செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் நீங்கள் அதிக உயரத்தில் இருந்தால் இந்த பைக் உங்களுக்கு சற்று சங்கடமாக இருக்கும். உயரமானவர்களுக்கு சிட் உயரம் குறைவாக இருப்பதால் சங்கடமாக இருக்கும்.

ktm 390 duke review

அதே நேரம் இந்த பைக்கை வாங்கும் போது நீங்கள் உயரமாக இருந்தால் பைக்கின் சீட்டின் உயரத்தை அதிகரித்து தரவும் கேடிஎம் நிறுவனம் தயாராக இருக்கிறது. தற்போது உள்ள 800 மில்லி உயரத்தில் இருந்து 820 மீமி உயரம் வரை இதன் சீட்டு உயரத்தை அதிகரிக்க முடியும்.

இறுதி தீர்ப்பு: ஆஸ்திரிய நிறுவனமான கேடிஎம் நிறுவனத்தின் இந்த 390 டியூக் பைக் பிரபலமான நேக்கட் பைக்காக இருக்கிறது. இதன் புதிய அப்டேட்டில் அதன் ஸ்டைல் அப்படியே கொண்டுவரப்பட்டுள்ளது. அதே நேரம் முதல் தலைமுறை பைக்கை உள்ளது. போல புரூட்டலாக இல்லாமல் சற்று ஸ்மூத்தாக அதே நேரம் அதிகப்பவருடன் ஒரு பாக்கெட் ராக்கெட் போல இது உருவாக்கப்பட்டுள்ளது.

பைக்கின் விலையைப் பொறுத்தவரை பழைய தலைமுறை பைக்கில் இருந்து ரூபாய் 13000 அதிகமாக தற்போது ரூபாய் 2.53 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த விலை ஏற்றம் இந்த பைக்கில் உள்ள அப்டேட்களை பார்க்கும்போது நியாயமானதாக தான் தெரிகிறது. அதனால் இந்த பைக்கின் விற்பனை சிறப்பாக இருக்கும் எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, September 17, 2023, 18:14 [IST]
English summary
2024 ktm 390 duke review style features engine all other details
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X