ஒரு தடவை இந்த பைக்கை ஓட்டி பார்த்தா பைக்குல இருந்தே இறங்க மாட்டீங்க! அப்படி இந்த பைக்குல என்ன இருக்குது?

கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் டிவிஎஸ் நிறுவனம் பிஎம்டபிள்யூ நிறுவனத்துடன் தனது முதல் பார்ட்னர்ஷிப்பை அறிவித்தது. இதன் வெளிப்பாடாக அப்பாச்சி ஆர்ஆர் 310 என்ற பைக் அறிமுகமானது. இந்நிலையில் பல்வேறு ஆண்டுகளுக்குப் பிறகு டிவிஎஸ் நிறுவனம் தனது அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை அப்டேட் செய்து 2024 அப்பாச்சி ஆர் ஆர் 310 பைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

2024 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் பல்வேறு விதமான மாற்றங்களை பெற்றுள்ளது. முற்றிலும் புதிய லுக்கில் காட்சியளிக்கிறது. இந்த பைக்கை ஓட்டி பார்க்க எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு அழைப்பு வந்தது. அதன்படி எங்கள் குழுவினர் கோவைக்கு சென்று இந்த பைக்கை ஓட்டி பார்த்தோம். இப்படியாக நாங்கள் இந்த பைக்கை ஓட்டி பார்த்த அனுபவத்தை இங்கே விமர்சனமாக உங்களிடம் பகிர்ந்து உள்ளோம்.

2024 TVS Apache RR 310 Review

முதலில் பார்க்கும்போது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் இதற்கு முந்தைய மாடல் விட பெரிய அளவில் வித்தியாசம் இல்லாதது போல தான் தோன்றியது. முக்கியமாக புதிய பாம்பர் கிரே நிறம் தான் மாற்றப்பட்டுள்ளதாக நாம் உணர்ந்தோம். கலர் குறித்து அதிகம் விருப்பம் இல்லாத வாடிக்கையாளர்களுக்காக அப்பாச்சி டீக்கல்களை புதிதாக அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதுபோக டிரான்ஸ்பரன்ட் கிளட்ச் கவரும் வரும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பைக்கை உற்றுப் பார்க்கும்போது இந்த பைக்கின் பக்கவாட்டு பகுதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது தெரிகிறது. இது பைக்கை பார்க்கும் போதே காணப்படுகிறது. மேலும் இந்த பைக்கின் எடையை 3 கிலோ வரை குறைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது எவ்வளவு வேகத்தை அதிகரித்து உள்ளது என்ற விவரங்கள் தெரியவில்லை. இந்த வித்தியாசம் தெரிய வாய்ப்பு இருக்கிறது.

2024 TVS Apache RR 310 Review

முக்கியமாக டிவிஎஸ் நிறுவனம் இந்த பைக்கில் உள்ள இன்ஜின் மற்றும் எலெக்ட்ரானிக் கருவிகளை அப்டேட் செய்துள்ளது. இது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது இந்த 2024 அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் 312.2 சிசி லீக்யூட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த பைக்கில் பொருத்தப்பட்ட இன்ஜினில் மிகச் சிறந்த இன்ஜினாக இந்த இன்ஜின் தான் இருக்கிறது.

இந்த இன்ஜினின் ஃபோர்ஜ்டு பிஸ்டன் பகுதி 10% குறைவான எடையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பெரிய விட்டதில் திராட்டல் பாடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கில் 13 சதவீதம் பெரிய ஏர் இன்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பைக்கின் ஃபெர்பார்மென்ஸ் சிறப்பாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

2024 TVS Apache RR 310 Review

இவை எல்லாம் சேர்ந்து இந்த பைக்கை 37.5 பிஎச்பி பவரை 9800 ஆர்பிஎம்-ல் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகவும், 29 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகவும் வடிவமைத்துள்ளது. இந்த பவர் முந்தைய இன்ஜினை விட நான்கு பிஎச்பி அதிகமாகவே இருக்கிறது. 1.7 என்எம் டார்க் திறனும் அதிகமாக உள்ளது.

மேலும் இந்த பைக்கில் அர்பன் மற்றும் ரெயின் மோடுகளை பயன்படுத்தும் போது இந்த பைக்கின் இன்ஜின் பவர் குறைகிறது. அப்பொழுது 29.5 பிஎச்பி பவரை 7600ஆர்பிஎம்மிலும், 26.5 என்எம் டார்க் திறனை 6.500 ஆர்பிஎம்-மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. என்ட்ரி லெவல் வேரியண்ட் தவிர மற்ற அனைத்து வேரியண்டுகளிலும் பை-டைரக்ஷனல் குவிக் ஸ்விஃப்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீடு கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த 2024 அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் ஏகப்பட்ட எலக்ட்ரானிக் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன முக்கியமாக இதில் க்ரூஸ் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் நினைத்தால் அவர்கள் ரேஸ் டியூன் டைனமிக்ஸ் ஸ்டெபிலிட்டியை பெற்றுக் கொள்ள முடியும். டிவிஎஸ் நிறுவனம் இதை கஸ்டமைசேஷன் ஆப்ஷனாக வழங்குகிறது. இதற்காக ரூபாய் 16,000 கூடுதலாக செலவு செய்ய வேண்டும்.

இதுபோக புதிய ஐஎம்யு இந்த பைக்கிற்கு கார்னரிங் ஏபிஎஸ், டிராக்சன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், கார்னரிங் க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் வீல் லிப்ட் கண்ட்ரோல் உள்ள அம்சங்களையும் வழங்குகிறது. இப்படியாக இன்ஜின் அப்டேட் குவிக் ஸ்விஃப்ட் புதிய எலெக்ட்ரானிக் அம்சங்களுடன் இந்த பைக்கை ஓட்டி பார்க்கும்போது எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உங்கள் மத்தியில் இருக்கும் இந்த பைக்கை நாங்கள் ஓட்டி பார்த்தபோது ஏற்பட்ட அனுபவத்தை இதோ உங்களுக்காக கூறுகிறோம்.

இந்த பைக்கை ஓட்டி பார்க்கும்போது அப்டேட் செய்யப்பட்ட இன்ஜின் டைரக்ட் மற்றும் லீனியர் பவரை ஸ்மூத்தாக வழங்குவதை நாங்கள் உணர்ந்தோம். மெதுவாக இந்த இன்ஜின் பவர் அதிகரிப்பதையும் உணர்ந்தோம். இதற்கு முந்தைய இன்ஜினில் ஐயாயிரம் ஆர் பி எம் வழங்கும்போது வைப்ரேஷன் ஏற்பட்டது ஆனால் இந்த பைக்கில் நீங்கள் 7500 ஆர்பிஎம்மில் செல்லும்போதுதான் வைப்ரேஷனை உணர முடிகிறது. இதனால் பழைய இன்ஜினை விட வேகமாக பயணிக்க முடியும்.

இந்த பைக் மிக விரைவாக பிக்கப் செய்கிறது. 0-100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 6.74 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது. நீங்கள் வேகமாக செல்லும்போது புதிய விங் லெட்டுகள் அதற்கு ஏற்றார் போல் செயல்படுகின்றன. இதனால் வேகமாக பயணிப்பதில் எந்த விதமான பிரச்சினையும் ஏற்படுவதில்லை.

இந்த பைக்கை நாங்கள் ஓட்டி செல்லும் போது அதிகபட்சமாக 150 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடிந்தது. பைக்கின் டாப் வேகமான 164 கிலோமீட்டர் வேகத்தை எங்களால் பிக்கப் செய்ய முடியவில்லை. அதற்குள் திருப்பங்கள் எல்லாம் வந்து விடுகிறது. இதனால் பைக்கின் வேகத்தை குறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த பைக்கில் உள்ள பிரேக்குகளை பொருத்தவரை முன்பக்கம் 300 மிமீ மற்றும் பின்பக்கம் 240 மிமீ என்ற அளவுகளில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளன. இந்த பிரேக் சிறப்பாக செயல்படுகிறது. முக்கியமாக திருப்பங்களில் போது ஷார்ப்பாக பிரேக் பிடிக்கிறது. முக்கியமாக வேகமாக செல்லும்போது திடீரென பிரேக் பிடித்தாலும் உங்கள் கண்ட்ரோலை விட்டு பைக் செல்லாத வகையில் பிரேக் சிறப்பாக செயல்படுகிறது.

பின்பக்க வீலில் ஏபிஎஸ் இருக்கும் போது பின்பக்க பிரேக் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு சிறப்பாக இல்லை ஆனால் பின்பக்க ஏபிஎஸ்-ஐ ஆஃப் செய்து விட்டால் அந்த பிரேக் சிறப்பாக செயல்படுகிறது. இதனால் இதை ஆஃப் செய்துவிட்டு திருப்பங்களில் சிறப்பாக நம்மால் பைக்கை ஓட்டிச் சென்று ஃபன்னை அனுபவிக்க முடியும்.

இந்த 2024 அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் சஸ்பென்ஷன் செட்டப் எந்தவித மாற்றங்களும் இல்லாமல் இதற்கு முந்தைய மாடல் எப்படி இருந்ததோ அப்படியே தான் இருக்கிறது. முன்பக்க செட்டப்பை பொறுத்தவரை பெரிய அளவுக்கு இல்லை இதனால் ரேஸ் டிராக்கில் இந்த பைக்கை ஓட்டும் போது சிறப்பாக இருந்தது. முக்கியமாக பைக்கை திருப்பும் நேரங்களில் இது நன்றாகவே செயல்பட்டது.

இந்த பைக்கில் செல்லும்போது வேகமாக சென்று திரும்பினாலும் சரி, மெதுவாக சென்று திரும்பினாலும் சரி, பைக்கின் சஸ்பென்ஷன் செட்டப் அதற்கு சிறப்பாக உதவுகிறது. இந்த பைக்கில் உள்ள டயரை பொறுத்தவரை மேக்லைன் ரோடு 5 ரப்பர் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது 17 இன்ச் அலாய் வீலில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள எலெக்ட்ரானிக் அம்சங்கள் பைக்கை எப்பொழுதும் கண்ட்ரோலில் வைத்திருக்க உதவுகிறது.

இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள புதிய குவிக் ஸ்விஃப்டர் பைக்குக்கு டைரக்டான சிறப்பான பெர்பார்மென்ஸை வழங்குவதற்கு உதவி செய்கிறது. ஜென்டிலான இன்புட்டை வழங்கினாலே சிறப்பாக செயல்படும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் குவிக் ஸ்விஃப்டரை பயன்படுத்தாத ரைடர்கள் இதை பழகிக்கொள்ள சற்று காலதாமதம் ஆகலாம்.

பைக்கின் ரைடிங் பொசிஷன் கமிட்டெட்டாக இருக்கிறது. ஆனால் இதற்கு முன்னர் இருந்தது போல அக்ரஸிவான ஃபீல் இல்லை. சீட்டில் போதுமான இடவசதி இருக்கிறது. இந்த பைக்கில் நேரான சாலையில் வேகமாக ஓட்டினாலும் சரி அல்லது வளைவில் நெளிவான சாலைகளில் திருப்புங்களுடன் சென்றாலும் சரி உங்களுக்கு நல்ல டிரைவிங் அனுபவம் கிடைக்கும்.

இந்த 2024 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் பல்வேறு அப்டேட்டை வெளியாகியுள்ளது. இந்த அப்டேட்கள் பெரும்பாலும் கண்களுக்கு பார்க்கும் அளவுக்கு அப்டேட்டுகளாக இல்லை. ஆனால் இந்த பைக்கை ஓட்டி பார்க்கும்போது இந்த அப்டேட்கள் எல்லாம் சிறந்த அப்டேட்களாக உணர முடிகிறது. இதற்கு முந்தைய பைக்கை விட இந்த பைக் பல்வேறு மடங்கு சிறப்பாக இருக்கிறது.

ஸ்மூத்தான இஞ்சின் சார்பான ஹேண்டிலிங் செட்டப் புதிய எலக்ட்ரானிக் அம்சங்கள் எல்லாம் இந்த பைக்கில் சிறப்பாக இருக்கிறது. சாலையில் ஓட்டி செல்ல இளைஞர்களுக்கு பிடித்த வகையில் இந்த பைக்கை நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதனால் நீங்கள் இப்படியாக புதிய பைக்கை வாங்க விரும்பினால் நீங்கள் உடனடியாக அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை இப்பொழுதே புக்கிங் செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, September 27, 2024, 12:00 [IST]
English summary
2024 tvs apache rr 310 review engine features tech spec details
மேலும்... #tvs motor #bike review #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X