ஓலா எல்லாம் ஓரம் போ! ஏத்தரின் இந்த வண்டியை ஊரே வாங்கப்போகுது!
பெங்களூருவில் செயல்பட்டு வரும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் டூவீலர் தயாரிப்பில் மிக முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் தயாரிப்புகள் எல்லாம் தரமான தயாரிப்புகளாக இருப்பதாக மக்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்நிறுவனம் சமீபத்தில் தான் குடும்பத்திற்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது.
இருந்தாலும் இந்நிறுவனத்தின் 450 சீரிஸில் உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 4ம் தேதி ஏத்தர் கம்யூனிட்டி தினம் என்ற ஒரு நாளை அந்நிறுவனம் கொண்டாடி வருகிறது.

இந்நிலையில் இன்று ஏத்தர் கம்யூனிட்டி தினத்தை முன்னிட்டு ஏத்தர் நிறுவனம் தனது அப்டேட் செய்யப்பட்ட 450 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரை அறிமுகத்திற்கு முன்பாகவே நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு இதை ஓட்டி பார்க்க அழைப்பு வந்தது. அதன்படி நமது குழுவினர் பெங்களூருவில் இந்த ஏத்தர் 450 அப்டேட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி பார்த்தார்கள். இது எப்படி இருக்கிறது என்ற விமர்சனத்தை இங்கே பார்ப்போம்.
ஏத்தர் நிறுவனம் தனது 450 சீரிஸ் ஸ்கூட்டரில் சில முக்கியமான அப்டேட்களை செய்துள்ளது முக்கியமாக இதில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ள இரண்டு புதிய கலர் ஆப்ஷன்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி ஹைபர் சாண்ட் மற்றும் ஸ்ட்ரென்த் ப்ளூ ஆகிய கலர் ஆப்ஷன்கள் உள்ளன. மேலும் இந்த ஸ்கூட்டரில் எம்ஆர்எஃப் ஸேப்பர் டயர்களைப் பொருத்தியுள்ளது இதன் மூலம் 24 சதவீதம் அளவுக்கு இதன் ரேஞ்ச் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கூட்டர் தற்போது ஹலோ ஹெல்மெட் உடன் விற்பனைக்கு வருகிறது. 450 எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தற்போது மேஜிக் ட்விஸ்ட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆக்ஸிலரேட்டரை பின்பக்கமாக சுற்றினால் ரீ ஜெனரேட்டிவ் பிரேக்கிங் அம்சம் இதில் வேலை செய்யும். இந்த அம்சம் இதுவரை ஆஃபெக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மட்டுமே இருந்தது. தற்போது புதிதாக 450 ஸ்கூட்டிரில் கொண்டுவரப்பட்டுள்ளது.
அபெஸ் மற்றும் 450 எக்ஸ் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மல்டி மோடு டிராக்ஷன் கண்ட்ரோல் ஸ்டாண்டர்டாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் மூன்று விதமான டிராக்ஷன் மோடுகள் உள்ளன. அதன்படி மழை, சாலை மற்றும் ராலி ஆகிய டிராக்ஷன் மோடுகளை தேர்வு செய்து கொள்ள முடியும். மேலும் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் ஏத்தர் ஸ்டாக் 6 சாஃப்ட்வேர் அப்டேட் உடன் விற்பனைக்கு வருகிறது. இதில் பிங்க் மை ஸ்கூட்டர், whatsapp ஆன் டேஷ்போர்டு, லைவ் லொகேஷன் ஷேரிங் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற உள்ளன.

மேலும் இந்த ஸ்கூட்டரில் ரேஞ்ச் 24 சதவீதம் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விராப் மோடில் 60 கிலோமீட்டர், ஸ்போர்ட் மோடில் 70 கிலோ மீட்டரும், ரைடு மோடில் 75 கிலோமீட்டர், எக்கோ மோட்டில் 85 முதல் 90 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் நிலையில் தற்போது விராப் மோடில் 70 கிலோ மீட்டரும், ஸ்போர்ட் மோடில் 80 கிலோமீட்டர், ரைடு மோடில் 90 கிலோ மீட்டரும், எக்கோ மோடில் 15 கிலோ மீட்டரும் ரேஞ்ச் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போலவே ஏத்தர் 450 எக்ஸ் 3.7 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்கை பொறுத்தவரை எக்கோ மூடில் 130 கிலோமீட்டர், ரைடு மூட்டில் 110 கிலோமீட்டர் என்றும் விராப் மோடில் 85 கிலோமீட்டர் என்றும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ரேஞ்ச் அளவைவிட 24 சதவீதம் அளவுக்கு ரேஞ்ச் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்கூட்டரில் உள்ள பேட்டரி சார்ஜிங் நேரம் அதே அளவிலேயே இருக்கிறது. 2.9 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்கை பொருத்தவரை 0- 80 சதவீதம் சார்ஜ் 3 மணி நேரத்தில் ஏற்றி விடுகிறது. முழுமையாக சார்ஜ் ஏற 4 மணி நேரம் 30 நிமிடம் ஆகிறது. இதுவே 3.7 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்கில் 0-80 சதவீத சார்ஜை 4.5 மணி நேரத்திலும் முழு சார்ஜை 5 மணி நேரம் 45 நிமிடத்திலும் ஏற்றி விடுகிறது.
பெர்ஃபார்மன்ஸை பொருத்தவரை அந்நிறுவனம் சொல்லியது போலவே இருக்கிறது. 0-40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.3 நொடியில் பிக்கர் செய்து விடுகிறது. அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த ஸ்கூட்டர் பயணிக்கிறது. ஸ்கூட்டரில் 8.58 பிஎச்பி பவரும் 29 என்எம் டார்க் திறனும் வெளிப்படுத்தும் வகையில எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பழைய ஸ்கூட்டரில் இருந்த அதே துடிப்பான அம்சம் இதிலும் இருக்கிறது. நீங்கள் சராசரி உயரத்தில் இருந்தால் உங்களுக்கு இந்த ஸ்கூட்டரில் சொகுசாகவும் அதே நேரம் துடிப்பான ரைடிங்கும் கிடைக்கும். மேலும் இந்த ஸ்கூட்டரில் தற்போது புதிதாக எம்ஆர்எஃப் ஸேப்பர் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் சிட்டி பயன்பாட்டிற்கு ஏற்றவாறு இந்த ஸ்கூட்டர் செயல்படுகிறது.
மேலும் இந்த ஸ்கூட்டரில் உள்ள டிராக்ஷன் கண்ட்ரோல்கள் உங்களுக்கு தரமான ரைடிங் அனுபவத்தை தருகிறது. எந்தவித பிரச்சினையில் நீங்கள் சிக்கினாலும் சுலபமாக ஸ்கூட்டரில் இருந்து வெளியே வந்து விட முடியும். அந்த அளவுக்கு சிறப்பாக பெர்ஃபார்மென்ஸ் செய்கிறது. இந்த ஸ்கூட்டரின் சஸ்பென்ஷன் செட்டப்பும் சிறப்பாக இருக்கிறது. பாயிண்டாகவும் இதற்கு முன்பாக இல்லாத வகையிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணிக்கும் போது லேன் மாறுவது திரும்புவது எல்லாம் சிறப்பாக இருக்கிறது. பள்ளமேடுகளில் எல்லாம் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் தாராளமாக இந்த ஸ்கூட்டர் சிறப்பாக செல்கிறது. ஸ்கூட்டரில் உள்ள மேஜிக் ட்விஸ்ட் சிறப்பான பிரேக்கிங் அம்சத்தை வழங்குகிறது. பின்பக்க பிரேக்கிங் சார்பாக இருக்கிறது. இதில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள மேஜிக் சிஸ்டம் ஏத்தரின் பிரேக்கிங் சிஸ்டத்தை சப்போர்ட் செய்கிறது. இதுவும் சிறப்பாக வேலை செய்கிறது.
மேஜிக் ட்விடட் இருப்பதால் சிட்டிக்குள் நீங்கள் பயணம் செய்யும்போது பிரேக் இல்லாமல் இதன் மூலமாகவே அதிக டிராபிக் நிறைந்த பகுதிகளில் பயணம் செய்ய முடியும். மேஜிக் ட்விஸ்ட் மூலம் வாகனத்தை நிறுத்தவே முடிகிறது. வாகனம் மெதுவாக செல்லும்போது பிரேக் பிடிக்க வேண்டிய தேவையே இல்லாமல் இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் இந்த மேம்பாடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உலகில் சிறப்பான ஒரு தயாரிப்பை கொண்டு வருவதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏத்தர் 450 எக்ஸ் என்ற பெயர் ஸ்போட்டியான ஸ்கூட்டருக்கு பெயர் பெற்றதாக இருக்கிறது. அதற்கு ஈடு செய்யும் வகையில் தற்போது புதிதாக வந்து அப்டேட் எல்லாம் இருக்கின்றன. மேலும் புதிதாக வந்துள்ள அப்டேட்டில் மேஜிக்ட்விஸ்ட் மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது. இது போக நீட்டிக்கப்பட்ட ரேஞ்ச் மற்றும் பல்வேறு அப்டேட்கள் நிச்சயம் வாடிக்கையாளர்களை அதிகம் கவரும்.


Click it and Unblock the Notifications









