அடுத்து ஓர் சூப்பர் டூரிங் பைக் வாங்கிய நடிகர் அஜீத்- சிறப்பு தகவல்கள்
கார், பைக்குகள் மீது அஜீத்துக்கு இருக்கும் காதல் அனைவரும் அறிந்ததுதான். சமீபத்தில்தான் அவர் பிஎம்டபிள்யூ எஸ் 1000ஆர்ஆர் சூப்பர் பைக் வாங்கியது குறித்து எழுதியிருந்தோம். அத்தோடு, அந்த பைக்கில் ரேஸ் சூட்டுடன் அவர் சென்னை டூ பெங்களூருக்கு டிரிப் அடித்ததார் என்பதையும் படங்களுடன் வெளியிட்டிருந்தோம்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்து ஓர் பவர்ஃபுல் டூரிங் ரக பைக்கை அஜீத் வாங்கியுள்ளார். அப்ரிலியாவின் கேப்பனார்ட் என்ற அந்த பைக்தான் தற்போது அஜீத்தின் கேரேஜை அலங்கரிக்கும் புதிய வரவு. அந்த புதிய பைக் பற்றிய சில கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய மாடல்
கடந்த ஆண்டு தனது தாயகமான இத்தாலியில் நடந்த இஐசிஎம்ஏ ஆட்டோமொபைல் திருவிழாவில் தனது முதல் சாகச ரக பைக்கான இதனை அப்ரிலியா அறிமுகம் செய்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த அப்ரிலியா கேப்போனார்ட் 1200 பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

எஞ்சின்
இந்த பைக்கில் 1197சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 125 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் அளிக்கும். 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

எடை
அப்ரிலியா கேப்பனார்ட் பைக் 228 கிலோ எடை கொண்டது.

பெட்ரோல் டேங்க்
24 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது.

சிறப்பம்சங்கள்
அமர்ந்து ஓட்டுபவரின் எடை, பின்புற பாக்ஸில் இருக்கும் எடை, எரிபொருள் அளவு ஆகியவற்றை பொறுத்து சஸ்பென்ஷன் அமைப்பை மாற்றிக் கொள்ளும் வசதி கொண்ட அட்ஜெஸ்ட்டபிள் ஆக்டிவ் சஸ்பென்ஷன் அமைப்பு குறிப்பிட்டு கூறலாம். இதுதவிர, குரூஸ் கன்ட்ரோல் வசதியும் இருக்கிறது.

டிரைவிங் மோடு
டூரர், ஸ்போர்ட் ஆகியவை தவிர மழை நேரத்தில் செல்வதற்கு ஏற்ற வகையில் எஞ்சின் வேகத்தை கட்டுப்படுத்திக் கொள்ளும் தொழில்நுட்ப வசதிகள் இருக்கின்றன.

பாதுகாப்பு அம்சங்கள்
ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 3 ஸ்டேஜ் டிராக்ஷன் கன்ட்ரோல் ஆகியவை நிரந்தர அம்சங்களாக இடம்பெற்றிருக்கும்.

டயர்
17 இஞ்ச் டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

டாப் ஸ்பீடு
மணிக்கு 217 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் வாய்ந்தது.

விலை
அப்ரிலியா கேப்பனார்டு சென்னையில் ரூ.24 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








