புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக்கின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

கேடிஎம் ட்யூக் பைக் மாடல்களுக்கு இந்தியாவில் சிறந்த வரவேற்பு இருக்கிறது. சந்தைப் போட்டியை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் ட்யூக் 200, ட்யூக் 250 மற்றும் ட்யூக் 390 பைக் மாடல்களை கேடிஎம் நிறுவனம் விற்பனைக்கு களமிறக்கி உள்ளது.

இதில், ட்யூக் 250 பைக் மாடல் முற்றிலும் புதிய மாடல். கூடுதல் சிறப்பம்சங்களை பெற்றிருப்பதால் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனை வாங்க நினைக்கு வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக, இந்த பைக்கின் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

கேடிஎம் ட்யூக் 200 மற்றும் கேடிஎம் ட்யூக் 390 பைக் மாடல்களுக்கு இடையிலான விலையிலும், சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது ட்யூக் 250 பைக் மாடல். கேடிஎம் ட்யூக் 200 பைக்கை விட கூடுதல் சிறப்பம்சங்கள் இருப்பது தெரிந்த விஷயம்தான். ஆனால், ட்யூக் 390 பைக்கைவிட சில கூடுதல் விஷயங்களையும் இந்த புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக் பெற்றிருக்கிறது.

புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

கேடிஎம் ட்யூக் 250 பைக்கின் டிசைன் தாத்பரியங்கள் சூப்பர் ட்யூக் பைக்கிலிருந்து பெறப்பட்டுள்ளன. ஸ்டிக்கர் மட்டும்தான் கேடிஎம் ட்யூக் 390 பைக் போன்று கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் இரண்டு அனுகூலங்கள். ஒன்று கேடிஎம் ட்யூக் 390 பைக்கிற்கு இணையான தோற்றத்தையும், சூப்பர் ட்யூக் பைக்கின் டிசைன் அம்சங்களும் இந்த பைக்கின் மதிப்பை கூட்டுகின்றன. பலரின் கூற்றுப்படி, ட்யூக் 390 பைக்கைவிட தோற்றத்தில் சற்றே கூடுதல் கவர்ச்சியை ட்யூக் 250 பெற்றிருப்பதாகவே கருதப்படுகிறது.

புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

கேடிஎம் ட்யூக் 250 பைக்கின் முன்புறத்தில் ஓபன் கேட்ரிட்ஜ் அப்சைடு டவுன் என்ற விசேஷ ஃபோர்க்குகளுடன் கூடிய சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, இந்த ஓபன் கேட்ரிட்ஜ் ஃபோர்க்குகளின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்துகொள்ள முடியும். இது ட்யூக் 390 பைக்கைவிட சற்று கூடுதல் மதிப்பை தரும் விஷயம் என்பதையும் பார்க்க வேண்டும்.

புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக்கில் புதிய எஞ்சின் மற்றும் சைலென்சர் கொண்டதாக வந்துள்ளது. இந்த பைக்கில் இருக்கும் 248சிசி எஞ்சின் அதிகபட்சமாக 29.6 பிஎச்பி பவரையும், 24 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அதாவது, 250 சிசி ரகத்திலேயே மிகவும் சக்திவாய்ந்த பைக் மாடலாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது கேடிஎம் ட்யூக் 250 பைக் மாடல்.

புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

இதுமட்டுமில்லை, ட்யூக் 390 பைக்கை போன்றே இந்த பைக்கிலும் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதி உள்ளது. அதிவேகத்தில் செல்லும்போது பைக்கின் வேகத்தை உடனடியாக குறைக்க கியரை மாற்றும்போது எஞ்சின் பிரேக்கிங் ஆகாமல் இருக்க இந்த வசதி உதவும். மேலும், கியரை கடகடவென குறைக்கும்போது எஞ்சின் பிரேக்கிங் காரணமாக பைக் நிலைதடுமாறாமல் இருப்பதற்கும், எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸில் பிரச்னை ஏற்படாமல் தவிர்க்கவும் இது உதவும். இதுவும் மிகச் சிறப்பான வசதியாகவே கூறலாம்.

புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக்கை போன்றே இந்த புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக்கிலும் 13.5 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவானதாக அமையும் என்பதுடன், அடிக்கடி பெட்ரோல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்தையும் தவிர்க்கும்.

புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

கேடிஎம் ட்யூக் 390 பைக் லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால், புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக் லிட்டருக்கு 30 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற எரிபொருள் சிக்கனத்தை புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக் தரும் என நம்பலாம்.

புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் கலர் டிஎஃப்டி திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், கேடிஎம் ட்யூக் 250 பைக்கில் எல்இடி பேக்லிட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் இருக்கும் அதே மோனோஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன் அமைப்புதான் இந்த புதிய பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், ட்யூக் 390 பைக்கில் முன்சக்கரத்தில் 320மிமீ டிஸ்க் பிரேக் இருக்கும் நிலையில், இந்த பைக்கில் 300மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் 230மிமீ டிஸ்க் பிரேக் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் பாஷ் நிறுவனத்தின் ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ட்யூக் 250 பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இல்லை என்பது குறைதான். ஆனால், சரியான விலையில் இந்த பைக்கை தர வேண்டும் நோக்கில், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை தவிர்த்துள்ளது கேடிஎம்.

புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

புதிய கேடிஎம் ட்யூக் 200 பைக் ரூ.1.43 லட்சத்திலும், ட்யூக் 390 பைக் ரூ.2.25 லட்சம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த இரு மாடல்களுக்கும் இடையில் ரூ.1.73 லட்சம் எக்ஸ்ஷோரூம் நிலையில், புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது, ரூ.2 லட்சம் ஆன்ரோடு விலையில் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக்.

புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

தற்போது அறிமுகமாகி இருக்கும் மூன்று கேடிஎம் ட்யூக் பைக் மாடல்களில் இது மிகச் சிறந்த மதிப்பை பெற்றிருக்கிறது. கேடிஎம் ட்யூக் 200 பைக்கின் தோற்றத்தில் எந்த மாறுதலும் இல்லை. எஞ்சின் மட்டும்தான் மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. மறுபுறத்தில் கேடிஎம் ட்யூக் 390 பைக் சக்திவாய்ந்த எஞ்சின், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற கூடுதல் அம்சங்கள் இருக்கின்றன. ஆனால், பட்ஜெட் மற்றும் சிறப்பம்சங்கள் அடிப்படையில் சிறப்பான தேர்வாக ட்யூக் 250 இருக்கும் என நம்பலாம்.

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 25, 2017, 12:12 [IST]
English summary
Read in Tamil: Here is everything you should know about the new KTM Duke 250 bike before booking it.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+