நாங்க ஓட்டி பார்த்த ரொம்ப காஸ்ட்லியான பைக்.. பூச்சியின் முகம் கொண்ட இந்த பைக்கால் கேடிஎம்-யமஹா காலியாக போகுது!

கேடிஎம் (KTM) மற்றும் யமஹா (Yamaha) இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் டஃப் கொடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஓர் பைக் மாடலே அப்ரில்லா ட்யூவோனோ 457 (Aprilia Tuono 457). சென்ற ஆண்டில்தான் இந்த பைக்கை அப்ரில்லா நிறுவனம் உலகிற்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. இது ஓர் அழகான சாலை பயன்பாட்டிற்கு உகந்த ஸ்போர்ட்ஸ் வகை பைக் மாடல் ஆகும். இதன் பயன்பாடு ரேஸ்களுக்கு பயன்படுத்தப்படும் டூ-வீலர்களுக்கு இணையானதாக இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இத்தகைய பைக்கையே ரைடு ரவியூ செய்து பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு சமீபத்தில் கிடைத்தது. இது பற்றிய தகவலையே இந்த பதிவில் நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாங்க அப்ரில்லா ட்யூவோனோ 457 பைக்கின் ரைடு அனுபவம் பற்றிய விரிவான தகவலுக்குள் போகலாம்.

Aprilia tuono 457 review

அப்ரில்லா ட்யூவோனோ 457 பைக்கின் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரம்: கேடிஎம் ஆர்சி 390 (KTM RC 390) மற்றும் யமஹா ஆர்3 (Yamaha R3) ஆகிய பைக் மாடல்களுக்கு போட்டியாகக் கொண்டு வரப்பட்ட ஓர் டூ-வீலரே அப்ரில்லா ட்யூவோனோ 457 ஆகும்.

இவற்றிற்கு போட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தனித்துவமான வடிவமைப்பில் இந்த பைக்கை அப்ரில்லா நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. பூச்சுகளின் முகத்தை பிரதிபலிக்கின்ற வகையிலேயே இந்த பைக்கின் முன் பக்கம் வகையில் உள்ளது. இதுவே இந்த பைக்கிற்கு மற்ற பைக்குகளில் இருந்து மாறுபட்ட லுக்கை வழங்குகின்றது.

Aprilia tuono 457 tft screen

குறிப்பாக, இந்த பைக்கில் தாத்தாவின் கை பிடியை தலை கீழாக கவிழ்த்துப் போட்டதைப் போன்ற அமைப்புடைய எல்இடி லைட்டுகள் இரண்டு வழங்கப்பட்டு இருக்கின்றன. அது, ட்யூவோனோ 457 பைக்கிற்கு கூடுதல் அழகையும், புதிய லுக்கையு்ம வழங்கும் வகையில் இருக்கின்றது. இதுமட்டுமல்ல இதன் ஹெட்லைட் அமைப்பே முற்றிலும் மாறுபட்டதாகவே உள்ளது.

இதுவே ஓர் பூச்சியின் முகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. தொடர்ந்து, ஹெட்லைட் இருக்கும் இடத்தைப் போலவே பைக்கின் பக்கவாட்டு பகுதியும் அதிக கட்டுமஸ்தானதாக தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. தன்னுடைய மூதாதையர் மாடல்களிடம் வேறுபட்டுக் காட்சியளிக்க இந்த கட்டுமஸ்தான பேனல்களே ட்யூவோனோ 457-க்கு உதவியாக இருக்கின்றது.

Aprilia tuono 457 full view

இதேபோல், சௌகரியமான ரைடு அனுபவத்தை வழங்கும் பொருட்டு கிளிப்-ஆன் வசதிக் ஹேண்டில் பார்களே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமல்ல இதன் கால் வைக்கும் இடம் மற்றும் இருக்கை ஆகியவையும் ரைடர்களுக்கு ஏற்றவாறே தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இத்துடன், முக்கிய தகவல்களை ரைடர்களுக்கு வழங்கும் பொருட்டு 5 அங்குல டிஎஃப்டி திரை ஒன்றையும் இந்த பைக்கில் வழங்கி இருக்கின்றனர்.

இந்த திரை பைக்கின் வேகம், பெட்ரோல் அளவு என பல்வேறு முக்கிய தகவல்களை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக்கை அப்ரில்லா நிறுவனம் அதன் புகழ்பெற்ற ஆர்எஸ்457 மாடலை தழுவியே உருவாக்கி இருக்கின்றது. இதன் நேக்கட் வெர்ஷனே ட்யூவோனோ 457 ஆகும்.

இந்த பைக்கில் லிக்யூடு கூல்டு பாரல்லல் ட்வின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 457 சிசி திறனை வெளியேற்றும். அதிகபட்சமாக 36.9 பிஎச்பி பவர் மற்றும் 43.5 என்எம் டார்க் ஆற்றலை இது உருவாக்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸே ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் குயிக் ஷிஃப்டர் ஆகிய அம்சங்களுடன் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

சிறந்த கியரிங்கை பெற வேண்டும் என்பதற்காக இந்த பைக்கில் ஆர்எஸ் 457 மாடலைக் காட்டிலும் ஒரு பல் பெரிய ஸ்பிராக்கட் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது இந்தியாவின் நகர்புற சாலைகளை திறம்பட கையாள உதவியாக இருக்கும். இத்துடன், சிறந்த ரைடு அனுபவத்திற்காக இந்த பைக்கின் முன் பக்கத்தில் 41 மிமீ யுஎஸ்டி ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோஷாக்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இது 130 மிமீ அளவு உயரமான டிராவல் அனுபவத்தை வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த இரண்டும் ப்ரீ-லோடு (Pre Load) அட்ஜெஸ்ட்மென்ட் வசதிக் கொண்டவையாகக் காட்சியளிக்கின்றன. இந்த பைக்கில் வீல்களைப் பொருத்த வரை 17 அங்குல அலாய் வீல்களே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இவற்றில் டிவிஎஸ் யூரோகிரிப் ப்ரோடார்க் வகை டயர்களே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இத்துடன் சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் பக்கத்தில் 4 பிஸ்டன் பை-ப்ரே ரேடியல் காலிபர்களைக் கொண்ட 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பக்கத்தில் சிங்கிள் பிஸ்டன் பை-ப்ரே காலிபர் கொண்ட 220 மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

அப்ரில்லா ட்யூவோனோ 457 பைக்கின் ரைடிங் அனுபவம் எப்படி இருந்தது? இந்த பைக்கில் ரைடு அனுபவம் மிகவும் தரமான சம்பவமாகவே இருந்தது. இதன் கியரிங்கில் செய்யப்பட்டு இருக்கும் மிக சிறிய, அதன் திறன் வெளிப்பாட்டை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றிருக்கின்றது என்றே கூறலாம்.

குறிப்பாக, இதன் பாரல்லல் ட்வின் வகை எஞ்சின் இயங்கும்போது அதன் சத்தம் இசை இசைப்பதைப் போல உள்ளது. ஆகையால், சிக்னலிலும் அதை நிறுத்த உங்களுக்கு மனம் வராது என்றே சொல்லலாம். இந்த பைக்கைக் கொண்டு லோக்கல் டிராவலுக்கு மட்டுமல்ல சமயங்களில் ரேஸ்க்குகூட எடுத்துச் செல்ல முடியும்போல.

அந்த அளவிற்கே இதன் எஞ்சின் திறன் வெளிப்பாடு உள்ளது. ஆகையால், காலியான சாலைகளில் கட்டாயம் இந்த பைக்கில் நீங்கள் ஊர்ந்து செல்ல விரும்ப மாட்டீர்கள். முட்டாள்தனமான வேகத்தை எட்ட கட்டாயம் உங்கள் மூலைத் தூண்ட நேரிடும். இந்த வேகத்தைக் கட்டுபடுத்துவதற்கான பிரேக்கிங் சிஸ்டம் இந்த பைக்கில் இடம் பெறவில்லை என கூறலாம்.

ஷார்ப்பான பிரேக்கிங் அனுபவம் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆகையால், அதிக வேகத்தின்போது கூடுதல் கவனத்துடன் இருத்தல் அவசியம். அதேவேளையில், முன் பக்க பிரேக்கிங்கைவிட சற்றே சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை பின் பக்க பிரேக்கிங் செட்-அப் வழங்குவதை எங்களால் உணர முடிகின்றது. அதேநேரத்தில், இதன் பிரேக்கிங் பேட்களை உயர் தரத்தில் மாற்றினால் கூடுதல் பாதுகாப்பான ரைடை இந்த பைக்கைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அப்ரில்லா ட்யூவோனோ 457 பைக்கில் மூன்று விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஈகோ, ரெயின் மற்றும் ரேஸ் ஆகியவையே அவை ஆகும். ஈகோ ஸ்மூத்தான ரைடு அனுபவத்தையும், ரெயின் மழைக் காலத்திற்கான ரைடிங் மோடாகவும் செயல்படும். இதன் ரேஸ் மோட் பைக்கின் உச்சபட்ச வேகத்தை எட்ட உதவியாக இருக்கும்.

இந்த பைக்கின் டிராக்சன் கன்ட்ரோல் பற்றியும் நாம் இங்கே பேசியாக வேண்டும். அதுவும் சிறப்பாகவே செயல்படுகின்றது. குறிப்பாக, மோட் 3, மோட் 2 மற்றும் மோட் 1 ஆகியவை நம்மை திணறடிக்கும் வகையில் உள்ளன. ஆனால், 150-200 சிசி பைக்குகளை ஓட்டியவர்களால் இதை கையாள்வது சற்றே சிரமமாக இருக்க நேரிடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த பைக் ரூ. 3.95 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த அளவு காஸ்ட்லியான பைக்கையே நாங்கள் ஓட்டி பார்த்தோம். பிரேக்கிங் சிஸ்டத்தைத் தவிர மற்ற அனைத்திலும் இந்த பைக் சிறப்பாக இருந்தது கவனிக்கத்தகுந்தது.

அதேவேளையில், பின் பக்க பிரேக் ஓரளவிற்கு கை கொடுக்கும் வகையில் இருப்பதால் அந்த குறையும் பெரிதாக தெரியவில்லை. போட்டியாளர்களின் பைக் மாடல்களைக் காட்டிலும் விலை குறைவாகவே இந்த பைக்கிற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகையால் விற்பனையில் இந்த பைக் சிறப்பான சம்பவத்தைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, February 21, 2025, 17:00 [IST]
English summary
Aprilia tuono 457 bike review design features and riding impressions
மேலும்... #aprilia #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X