விலை குறைவான ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்று யாருங்க சொன்னா? டெஸ்ட் ரைடு செய்து பார்த்ததில் ஃபுல் மார்க்!!

இந்தியாவில் நீண்ட காலமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் ஈடுப்பட்டு வரும் நிறுவனம் ஏத்தர் எனர்ஜி. மத்திய அரசு எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான மானியங்களை கணிசமாக குறைந்துக் கொண்ட போதிலும், அசராமல் தனது அடுத்தடுத்த தயாரிப்புகளை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் களமிறக்கிய வண்ணம் உள்ளது. இந்த வகையில் மிக சமீபத்தில் சந்தையில் ஏத்தர் 450எஸ் என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏத்தர் எனர்ஜி அதன் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நீண்ட காலமாக விற்பனை செய்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால், 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலமாகவே 2-வீலர் மார்க்கெட்டில் ஏத்தர் நிறுவனத்திற்கு ஓர் கவனிக்கத்தக்க இடம் கிடைத்தது. அத்தகைய 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய விலை குறைவான வெர்சனாக 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் களமிறக்கப்பட்டுள்ளது.

ather 450s test ride review

புதிய ஏத்தர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.30 லட்சம் ஆகும். இந்த விலை குறைவான ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்யும் வாய்ப்பை சமீபத்தில் நாங்கள் பெற்றோம். ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்து பார்த்ததில், மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை காட்டிலும் 450எஸ் எந்த அளவிற்கு சிறந்தது? மற்றும் ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்டிலும் இந்த ஸ்கூட்டர் எந்த அளவிற்கு வித்தியாசமானது? என்ற கேள்விகளுக்கான பதில்கள் கிடைத்துள்ளன. வாருங்கள் அவற்றை ரிவியூவாக இனி விரிவாக பார்க்கலாம்.

தோற்றம் & வசதிகள்: புதிய ஏத்தர் 450எஸ் ஸ்கூட்டரின் தோற்றத்தை பொறுத்தவரையில், பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. பார்த்து, பார்த்து நம் மனதில் பதிந்துப்போன ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரின் அதே ஒல்லியான தோற்றத்தில் தான் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஸ்கூட்டரின் சைடில் ஒட்டப்பட்டுள்ள சிறிய அளவிலான ஸ்டிக்கர் மூலமாக புதிய 450எஸ் ஸ்கூட்டரை அடையாளம் காணலாம். ஸ்கூட்டரின் இருக்கையில் அமர்ந்துவிட்டால், இந்த வித்தியாசத்தை கூட உங்களால் கண்டுப்பிடிக்க முடியாது.

ather 450s test ride review

புதிய 450எஸ் ஸ்கூட்டரின் இருக்கையில் அமர்ந்தவுடன் வேறொரு விஷயமும் நமக்கு உறுதியாகிறது. அதாவது, ஏத்தரின் எலக்ட்டிக் ஸ்கூட்டர்கள் உயரம் குறைவானவை, ஆதலால் உயரமான ரைடர்களுக்கு ஏற்றதாக அவை இருப்பதில்லை என்கிற கருத்து பரவலாக ஏத்தர் வாடிக்கையாளர்கள் மத்தியில் உள்ளது. புதிய 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலாவது இந்த குறையை ஏத்தர் நிறுவனம் சரி செய்யுமா என்கிற கேள்வி எழுந்தது. ஆனால் ஏத்தர் நிறுவனம் இந்த குறையை கண்டுக்கொண்டது போல் தெரியவில்லை.

450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் டச் ஸ்க்ரீன் வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய 450எஸ் ஸ்கூட்டரில் ஹேண்டில்பாருக்கு மத்தியில் வழங்கப்படும் திரையை தொடுதல் மூலமாக கண்ட்ரோல் செய்ய முடியாது. இதற்காகவே, புதிய ஸ்விட்ச்கியர் ஸ்கூட்டரின் ஹேண்டில்பாரில் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்விட்ச்கியர் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக உள்ளது. டச் மூலம் கண்ட்ரோல் செய்ய முடியாவிடினும், 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் இன்ஸ்ட்ரூமெண்ட் திரையில் வண்ண நிறங்களை கொடுக்கும் டிஎஃப்டி தொழிற்நுட்பம் உள்ளது.

ather 450s test ride review

அதேபோல், இன்ஸ்ட்ரூமெண்ட் திரையின் அளவிலும் (7-இன்ச்), அது வழங்கும் விபரங்களிலும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், புதிய 450எஸ் ஸ்கூட்டரின் இன்ஸ்ட்ரூமெண்ட் திரையில் விபரங்கள் சற்று வித்தியாசமான டெம்பிளேட்டில் காட்டப்படுகின்றன. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரையில் மத்தியில் நேரமும், அதற்கு கீழே ஸ்பீடோமீட்டர் மற்றும் பேட்டரியின் சார்ஜை காட்டும் ரேஞ்ச் மீட்டரும் உள்ளன.

திரைக்குள் இடது பக்கத்தில் மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள்/ குறுஞ்செய்திகள் குறித்த அறிவிப்புகள் மற்றும் மியுசிக் கண்ட்ரோல்கள் இருக்க, வலது பக்கத்தில் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் எச்சரிக்கைகளை பெறலாம். மொபைல் போன் இணைப்பு, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் போன்ற ப்ளூடூத்-சார்ந்த வசதிகளை பெற நீங்கள் 450எஸ் ஸ்கூட்டர் உடன் கூடுதலாக புரோ தொகுப்பையும் வாங்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ather 450s test ride review

இந்த புரோ தொகுப்பின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.13 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம், ரூ.1.43 லட்சம். ஸ்கூட்டரின் இன்ஸ்ட்ரூமெண்ட் திரை தன்னிச்சையாக தனது ஒளியை கண்ட்ரோல் செய்து கொள்வதை டெஸ்ட் ரைடிங்கின் போது நாங்கள் கண்டறிந்தோம். இந்த திரைக்கு வலது பக்கத்தில், ஸ்கூட்டரை ரிவர்ஸில் இயக்குவதற்கான ஸ்விட்ச் இடம்பெற்றுள்ளது. ஒட்டு மொத்தமாக, ஸ்கூட்டரின் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லையென்றாலும், ஹேண்டில்பாரின் மத்தியில் வழங்கப்படும் திரையின் டெம்பிளேட்டில் ஏத்தர் நிறுவனம் சிறிது வித்தியாசம் காட்ட முயற்சித்துள்ளது.

இயந்திர பாகங்கள் & சார்ஜிங் திறன்: புதிய ஏத்தர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.9 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளது. 450எக்ஸ் ஸ்கூட்டரின் பேட்டரியுடன் ஒப்பிடுகையில், இது சிறியதே. 450எஸ் ஸ்கூட்டரின் 2.9kWh பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்து, அதிகப்பட்சமாக 115கிமீ தொலைவிற்கு ஸ்கூட்டரை இயக்கி செல்லலாம் என சான்றளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த 115கிமீ ரேஞ்சை பெறுவது மிக கடினம். சொல்லப் போனால், இத்தகைய ரேஞ்சை பெறவே முடியாது.

ather 450s test ride review

சாலையின் தரம் நன்றாக இருந்து, சீராக எந்தவொரு தடுமாற்றமும் இன்றி ஓட்டினாலும் ஸ்கூட்டரை வாங்கிய புதியதில், 100கிமீ-க்கு அதிகமான ரேஞ்சை பெறலாம். ஆனால் இதற்கு சாத்தியக்கூறுகள் குறைவே. புதிய 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக ஸ்மார்ட் ஈக்கோ மோடில் 90கிமீ ரேஞ்சையும், ஈக்கோ மோடில் 85கிமீ ரேஞ்சையும், ரைடு மற்றும் ஸ்போர்ட் மோட்களில் முறையே 75கிமீ மற்றும் 70கிமீ வரையிலான ரேஞ்சையும் பெறலாம் என்கிறது ஏத்தர் எனர்ஜி நிறுவனம்.

எங்களிடம் புதிய 450எஸ் ஸ்கூட்டர் குறைவான நேரமே கிடைத்ததால், மேற்கூறப்பட்ட ரேஞ்ச்களை சரிப்பார்க்க நேரம் போதவில்லை. பேட்டரி சார்ஜ் ஆக எடுத்துக் கொள்ளும் நேரம் நாம் எதிர்பார்த்தது போல் இல்லை. குறிப்பாக, வீட்டில் சார்ஜ் செய்தால், பேட்டரியின் சார்ஜ் 0-80% நிரம்ப சுமார் 6 மணிநேரங்கள் 36 நிமிடங்கள் தேவைப்படுகிறது. முழுவதும் 100% சார்ஜை நிரப்ப இன்னும் 2 மணிநேரங்கள் தேவைப்படலாம்.

ather 450s test ride review

ஆனால் கவலை வேண்டாம், ஏனெனில் ஸ்கூட்டர்களின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்யவே நாட்டில் பல்வேறு பகுதிகளில் க்ரிட் என்ற ஃபாஸ்ட் சார்ஜர்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கொண்டுள்ளது. இருப்பினும், 450எஸ்-இன் பேட்டரியை 80% மேல் அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டாம் என்பது எங்களது பரிந்துரை. மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போன்று, 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் பேட்டரி தொகுப்பானது எலக்ட்ரிக் மோட்டார் ஒன்றினுள் பொருத்தப்பட்டு உள்ளது.

இந்த எலக்ட்ரிக் மோட்டாரின் மூலமாக அதிகப்பட்சமாக 7.24 பிஎச்பி மற்றும் 22 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். 0-இல் இருந்து 40kmph வேகத்தை எட்ட குறைந்தது 3.9 வினாடிகளை எடுத்துக் கொள்ளும் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 90kmph ஆகும். ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் ஈக்கோ மற்றும் ரைடு மோட்கள் உள்ளன. ஆனால் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈக்கோ மற்றும் ரைடு மோட்களில் வித்தியாசமான த்ரோட்டல் மேப் செட்அப்ஸை பெறலாம் என்கிறது ஏத்தர் நிறுவனம்.

ather 450s test ride review

ஈக்கோ மற்றும் ரைடு என இரு மோட்களிலும் 450எஸ் ஸ்கூட்டரை இயக்கி பார்த்த அனுபவத்தில் கூறுகிறோம், இந்த இரு மோட்களும் நகர்புற பயன்பாட்டிற்கு ஏற்றவை. ஸ்போர்ட் மோடில் ஸ்கூட்டர் இன்னும் ஷார்ப்பாக செயல்படுகிறது. ஆனால், அதற்கேற்ப பேட்டரியின் சார்ஜ் வேகமாக கரைக்கிறது. இதற்கு மொத்தமாக எதிர்மறையாக உள்ள ஸ்மார்ட் ஈக்கோ மோடில் ஸ்கூட்டரை அவ்வளவு வேகமாக இயக்க முடியவில்லை, ஆனால் சார்ஜ் நீண்ட நேரத்திற்கு உள்ளது.

புதிய 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பிரத்யேகமான எம்.ஆர்.எஃப் டயர்களும், ஸ்போர்டியான சஸ்பென்ஷன் செட்அப் வழங்கப்பட்டுள்ளது. ஆதலால், 450எஸ் ஸ்கூட்டரில் ஸ்போர்ட் மோடில் நீண்ட தொலைவிற்கு தைரியமாக செல்ல முடியும். சஸ்பென்ஷனை பொறுத்தவரையில், முன்பக்க சஸ்பென்ஷன் சற்று விரைப்பானதாகவும், பின்பக்க சஸ்பென்ஷன் சற்று மென்மையானதாகவும் உள்ளன. ஆக மொத்தத்தில், இவை இரண்டும் கலந்து ஓர் சவுகரியமான பயண உணர்வு நமக்கு கிடைக்கிறது.

ather 450s test ride review

மேடு, பள்ளங்களில் ஏறி இறங்கும்போதும், ஸ்பீடு பிரேக்கர்களிலும் பெரியதாக குலுக்கல் இல்லை. பிரேக்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரில் கூட இவ்வளவு இறுக்கமான பிரேக் கிடைப்பது இல்லை. எப்போது தேவையோ, அதற்கு அடுத்த வினாடிலேயே ஸ்கூட்டரை எங்களால் நிறுத்த முடிந்தது. இதனால் பயணத்தின்போது, ஓர் நம்பிக்கை தானாகவே கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஏத்தர் நிறுவனத்தின் புதிய விலை & செயல்படுதிறன் குறைவான ஸ்கூட்டராக 450எஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடுகையில், ஏத்தர் 450எஸ் ஸ்கூட்டரில் செயல்படுதிறனில் அந்த அளவிற்கு எந்த குறையும் இல்லை. இதனாலேயே, அதற்கேற்ப ரூ.1.30 லட்சம் என்ற சற்று அதிகப்படியான விலையில் இந்த ஸ்கூட்டர் களமிறக்கப்பட்டு உள்ளது.

ather 450s test ride review

450எக்ஸ் உடன் ஒப்பிடுகையில், புதிய 450எஸ் ஸ்கூட்டரில் டச் ஸ்க்ரீன் இல்லை என்பதை குறையாக சொன்னாலும், ஒரு விதத்தில் இது 450எஸ் ஸ்கூட்டருக்கு சிறந்த அம்சமாகவே விளங்கும். குறிப்பாக, மழை காலத்தில் டச் ஸ்க்ரீனை பயன்படுத்தவது சிரமம். அத்தகைய நேரங்களில் 450எக்ஸ் ஸ்கூட்டரை விட 450எஸ் சிறந்ததாக தோன்றும். ஆனால் 450எக்ஸ் ஸ்கூட்டரில் கிடைக்கும் வ்ராப் மோட் புதிய 450எஸ் ஸ்கூட்டரில் இல்லாததை மறந்துவிட வேண்டாம்.

More from DriveSpark

Article Published On: Monday, August 14, 2023, 20:20 [IST]
English summary
Ather 450s electric scooter test ride review design powertrain images
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X