குடும்ப செலவை குறைக்க இந்த ஸ்கூட்டர் பெஸ்ட்! பெட்ரோல் செலவே கிடையாது! குடும்பத்தோட போகலாம்!

பெங்களூருவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நிறுவனம்தான் ஏத்தர் நிறுவனம். இந்நிறுவனம் கடந்த 2011ம் ஆண்டு முதன் முறையாக துவங்கப்பட்டது. சுமார் 13 ஆண்டுகள் இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டு வந்து இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன புரட்சியை செய்துள்ளது என சொல்லலாம்.

இந்நிறுவனம் கொண்டு வந்த 450 சீரியஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்று எலெக்ட்ரிக் வாகன விரும்பிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பவர்ஃபுல்லான டூவீலர் பெர்ஃபார்மன்ஸ் வாகனங்களை விரும்புபவர்கள் ஏத்தர் நிறுவனத்தின் வாகனங்களை தான் தேர்வு செய்வார்கள். ஆனால் ஸ்பீடு எல்லாம் தேவையில்லை குறைவான ஸ்பீடில் பாதுகாப்பான, சொகுசான அதே நேரம் வசதியான பயணத்தை விரும்புவோர்களுக்கு இந்நிறுவனம் ஒரு ஸ்கூட்டரை தயாரித்துள்ளது.

Ather Rizta Review in Tamil

முக்கியமாக குடும்ப செக்மெண்ட்களில் இருப்பவர்கள் விரும்பும் வகையிலாக இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்படுகிறது. இதற்கு ஏத்தர் ரிஸ்டா என பெயர் வைத்துள்ளனர். இதன் டிசைன் சிறிதாக இல்லாமல் பெரிதாக இருக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. இதனால் பார்ப்பதற்கு நல்ல லுக்கிலும் அதே நேரம் அதிக இட வசதியும் கொண்டதாக இது வடிவமைக்கப்படுகிறது. உயரமாக இருப்பவர்களும் இந்த ஸ்கூட்டரை தாராளமாக பயன்படுத்தலாம்.

இந்த ரிஸ்ட்டா ஸ்கூட்டரின் வடிவமைப்பை பொறுத்தவரை அனைவருக்கும் விரும்பும் வகையில் இதன் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களின் ஸ்கூட்டர்கள் எப்படி வடிவமைக்கப்படுகிறதோ அதே போலவே சிங்கிள் கலரில் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரின் முன் பக்க ஏப்ரான் பகுதியில் உள்ள வெள்ளை நிற செக்ஷன் தான் இந்த ஸ்கூட்டரில் இருக்கும் ஒரே டூயல் டோன் அம்சம் ஆகும்.

Ather Rizta Review in Tamil

இந்த ஸ்கூட்டரின் முன் பக்கம் உள்ள லைட்டிங் செட்டப்கள் ஹரிசாண்டல் ஸ்டிரிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் ஹெட்லைட் செட்டப் டிஆர்எல் மற்றும் டர்ன் சிக்னல் ஆகியன உள்ளன. இந்த ஸ்கூட்டரின் பக்கவாட்டு வடிவமைப்பை பொறுத்தவரை பெரிய ஃபுட்போர்டு உள்ளது. அதன் பின்னர் சைடு பேனல்கள் பாடி நிறத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. இது ஸ்கூட்டரின் பின்பகுதியிலும் தொடரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் டெயில் லைட்டுகள் முன்பக்கம் உள்ளதைப் போல ஹரிசாண்டல் பார் செட்டப்பில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரின் சீட்டை பொருத்தவரை நீளமான அதிக இட வசதி கொண்ட சீட்டுகளாக வழங்கப்பட்டுள்ளன முக்கியமாக பின் சீட்டில் அமர்பவர்களுக்கு அதிக இட வசதி கிடைக்கும் அவர்கள் பிடித்துக் கொள்வதற்காக சிங்கிள் பீஸ் கிராப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளன. இது பேக்ரெஸ்ட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சுமார் 900மிமி நீளத்திற்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

Ather Rizta Review in Tamil

இந்த சீட்டுக்கு கீழே 32 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோக இந்த ஸ்கூட்டரின் முன் பகுதியில் 22 லிட்டர் அளவிற்கு ஃபிரங்க் பூட் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து மொத்தமாக 54 லிட்டர் கொள்ளளவு கொண்ட லக்கேஜ் எடுத்துச் செல்லும் இடவசதிகளை கொண்ட வாகனமாக இது இருக்கிறது.

இந்த ஏத்த ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தனது முந்தைய வெர்ஷனான 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து மாறாத ஒரே விஷயம் அதில் உள்ள தொழில்நுட்பம் தான். ரிஸ்டா இசட் என்ற வேரியண்டில் 7 இன்ச் கொண்ட டிஎப்டி ஸ்க்ரீன் பொருத்தப்பட்டுள்ளது. ரிஸ்டா எஸ் வேரியன்டில் ஸ்கிரீன் எப்படி 450s எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ளதோ அதேபோல இதிலும் பொருத்தப்பட்டுள்ளது.

Ather Rizta Review in Tamil

இந்த இரண்டு ஸ்கிரீனிலும் ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரை வாங்கும்போது அதன் உரிமையாளர் ப்ரோ பேக்கேஜ் தேர்வு செய்தால் அதனுடன் கூடுதலாக நேவிகேஷன் அம்சம், ஃபைண்ட் மை ஸ்கூட்டர் அம்சம், டோ தெஃப்ட் நோட்டிபிகேஷன், அலெக்சா ஸ்கில்ஸ் , ஆகிய அம்சங்கள் உள்ளன. இசட் வேரியண்டில் கூகுள் மேப் அம்சங்கள் வாட்ஸப் ரிவ்யூ அம்சங்கள் மற்றும் கால்களுக்கான ஆட்டோ ரிப்ளை அம்சங்களும் வழங்கப்படுகிறது.

இதில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை, புதிதாக அந்நிறுவனம் ஸ்கிட் கண்ட்ரோல் டெக்னாலஜி என்ற புதிய அம்சத்தை புகுத்தியுள்ளது. இது வாகனத்தின் பின் வீல் மட்டும் ஸ்லீப் ஆனால் உடனடியாக தனது பவரை குறைத்து வாகனம் ஸ்கிட்டாவதை தவிர்க்கும். வழுக்கலான சாலைகளில் செல்லும்போது இது பயனுள்ளதாக இருக்கும்.

Ather Rizta Review in Tamil

அதேநேரம் வாகனம் எமர்ஜென்சி கண்டிஷனில் இருக்கும்போது உடனடியாக பிரேக் லைட்டை ஃபிளாஷ் செய்யும் அம்சமும் இதில் இருக்கிறது. எமர்ஜென்சி பிரேக்கிங் செய்யும்போது இந்த லைட் ஃபிளாஷ் ஆகும். இதுபோக இந்த ஸ்கூட்டரில் ஃபால் சேஃப் அம்சங்கள் இருக்கிறது. அதாவது இந்த ஸ்கூட்டர் கீழே விழ முயற்சித்தால் உடனடியாக மோட்டர் கட்ஆப் ஆகி வாகனம் பெரிய அளவில் விபத்தில் சிக்குவதை தவிர்த்து விடும்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பொருத்தவரை இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. 2.9கிலோவாட்ஹவர் பேட்டரி ஆப்ஷனில் எஸ் மற்றும் இசட் வேரியண்ட் ஆகிய இரண்டு வேரியன்ட்களும், 3.7கிலோவாட்ஹவர் பேட்டரியில் இசட் வேரியண்ட் மட்டும் விற்பனைக்கு வருகிறது. இதில் 2.9 கிலோவாட்ஹவர் பேட்டரி பேக்கில் இந்த ஸ்கூட்டர் 123கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரி சார்ஜாக 8.5 மணி நேரம் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ather Rizta Review in Tamil

மற்றொரு பேட்டரி ஆப்ஷனான 3.7 கிலோ வாட் ஹவர் பேட்டரி ஆப்ஷனை பொறுத்தவரை 159 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஏத்தர் டியோ சார்ஜர் மூலம் ஆறு மணி நேரம் பத்து நிமிடம் தான் ஆகிறது.

இந்த இரண்டு பேட்டரிகளும் சார்ஜ் செய்யும் அம்சம் இருக்கிறது. அதில் பத்து நிமிடம் சார்ஜ் போட்டால் 15 கிலோமீட்டர் வரை பயணம் செய்யும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிகள் எல்லாம் ஐபி67 தூசு மற்றும் தண்ணீர் ரெசிஸ்டென்ட் உடன் உருவாக்கப்பட்டுள்ளது.

Ather Rizta Review in Tamil

இந்த பேட்டரிக்கு ஐந்தாண்டுகள் அல்லது 60 ஆயிரம் கிலோ மீட்டர் வரை வாரண்டி வழங்கப்படுகிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள எலெக்ட்ரிக் மோட்டாரை பொருத்தவரை 5.76 பிஎச்பி பவரையும், 22 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.7 நொடியில் பிக்கப் செய்து விடும். அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்.

இந்த ஏத்தர் ரிஸ்ட்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள பிரேம் என்பது 450 ஸ்கூட்டருக்கு உருவாக்கப்பட்டுள்ள அதே பிரேம் தான் இதிலும் வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக இதில் பெரிய அகலமான சப் பிரேம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த ஸ்கூட்டர் முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனும் பின்பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 12 இன்ச் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்கம் 90/90-12 என்ற அளவிலான டயர்களும் பின்பக்கம் 100/80-12 அளவிலான டயர்களும் வழங்கப்பட்டுள்ளன. இது எம்ஆர்எஃப் டியூப்லெஸ் டயர்களாக வழங்கப்பட்டுள்ளன. இதன் பிரேக்கிங் அம்சத்தை பொருத்தவரை முன்பக்கம் 200 மிமீ டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் 130 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரேக்கிங் சிஸ்டம் காம்பி பிரேக்கிங் செட்டப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அளவுகளை பொருத்தவரை 1850 மிமீ நீளமும் 750 மிமீ அகலமும் 1140 மிமீ உயரமும், 1285 மிமீ வீல் பேஸூம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 165 மீமி கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 400மிமீ வரை தண்ணீர் நிரம்பியிருக்கும் பகுதிக்குள் செல்லும் வகையில் இந்த ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏத்தர் ரிஸ்ட்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஸ்மார்ட் எக்கோ மற்றும் ஜிப் ஆகிய இரண்டு விதமான ரைடு மோடுகள் உள்ளன. ஸ்மார்ட் எக்கோ ரைடு மோடில் ஆரம்பத்தில் புல் இருக்கிறது. ஆனால் வேகம் அதிகரிக்க அதிகரிக்க பெரிய அளவில் பெர்ஃபார்மென்ஸ் இல்லை. இது சிட்டி பயன்பாட்டிற்கு இது ஏற்றதாக இருக்கும். இந்த ஸ்கூட்டரின் பெஸ்ட் பெர்பார்மென்ஸை நீங்கள் உணர வேண்டும் என்றால் ஜிப் மோடுக்கு மாற வேண்டும்.

ஜிப் மோடில் பவர்ஃபுல்லான பெர்பார்மன்ஸ் இருக்கிறது. ஸ்மார்ட் எக்கோ மோடைவிட பவர் அதிகமாகியுள்ளது நமக்கு தெளிவாக தெரிகிறது. இதனால் சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து வேகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பவர் எங்கேயும் லேக்கானவில்லை. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 80கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வளவு வேகத்தில் செல்லும்போது நீங்கள் அதைவிட வேகமாக செல்வதாகவே உணர்வீர்கள். வாகனம் 80கிலோமீட்டருக்கு மேல் வேகம் செல்லக்கூடாது என கட்ஆப் செய்யப்பட்டுள்ளது.

வாகனம் பயணிக்கும் போது ஸ்டேபிளாக இருக்கிறது. முன்பக்க சஸ்பென்ஷன் சாஃப்டான செட்டப்பாக இருக்கிறது. பின்பக்க சஸ்பென்ஷன் கொஞ்சம் ஸ்ட்ரிஃப்பாக இருக்கிறது. பள்ளமேடுகள்,வேகத்தடைகளில் பயணிக்கும் போது சுலபமாக பயணம் செய்ய முடிகிறது. வழுகலான சாலைகளில் பயணிக்கும் போது ஸ்கிட் கண்ட்ரோல் சிஸ்டம் ஒரு மேஜிக்கை காட்டுகிறது என சொல்லலாம். வேகத்தை பொறுத்தவரை கட் ஆஃப் இருப்பதால் அதிக வேகத்தில் இதில் பயணிக்க முடியாது.

பிரேக்கிங் விஷயத்தில் ஏத்தர் நிறுவனம் இன்னும் சற்று கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கலாம். காம்பி பிரேக் சிஸ்டம் சிறப்பாக வேலை செய்கிறது. வேகமாக பிரேக் பிடிக்கும்போதும் நல்ல பெர்ஃபார்மென்ஸ் தருகிறது. பின் வீல் லாக்கப் ஆனாலும் ரிஸ்ட்ரா ஸ்கூட்டர் பெரிய அளவில் பிரச்சனை இல்லாமல் ஸ்டேபிளாக இருக்கிறது. இரண்டு ரைடர்கள் அமர்ந்து செல்லும்போது பிரேக் பெரிய அளவில் உதவி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இருந்தாலும் சாலைகளில் செல்லும்போது இது ஓரளவு சமாளிக்க கூடியதாக தான் இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் ரீஜென் சிஸ்டம் இருக்கிறது. இதுவும் பிரேக்கிங்கிற்க்கு சிறப்பாக உதவுகிறது. ஆனால் நீங்கள் ஆக்சிடெண்ட்ரேட்டரை விட்டவுடன் இது உடனடியாக வாகனத்தை நிறுத்தி விடும் என நினைக்க வேண்டாம். பிரேக் பிடித்தால் மட்டுமே நிற்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

இறுதி தீர்ப்பு: ஏத்தர் நிறுவனம் இந்த ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் குடும்பங்களை பிடித்து விட்டது என்றே சொல்ல வேண்டும். குடும்பங்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் இருக்கிறது. அதிக இட வசதி, நல்ல ரேஞ்ச் எல்லாம் இந்த ஸ்கூட்டரில் இருப்பதால் தினம்தோறும் குடும்பத்துடன் பயணம் செய்யும் நபர்களுக்கு இது ஒரு நல்ல ஸ்கூட்டர்தான்.

More from DriveSpark

Article Published On: Friday, May 24, 2024, 10:00 [IST]
English summary
Ather rizta review in tamil performance design comfort
மேலும்... #ஏத்தர் #ather energy #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X