புதிய பஜாஜ் பல்சர் 200 என்எஸ்: சிறப்பு பார்வை

பல்சர் 200என்எஸ்
புதிய மாடல்களை அறிமுகம் செய்யும்போது பெரும் ஆர்ப்பாட்டம் செய்து அதற்கு பிரபலம் தேடுவது வாகன தயாரிப்பு நிறுவனங்களின் இயல்பு. ஆனால், பல்சர் பிராண்டின் மீதுள்ள நம்பிக்கையை மட்டும் வைத்து, எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் புத்தம் புதிய 200சிசி பல்சரை பஜாஜ் ஆட்டோ விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது.

நாடு முழுவதும் தற்போது புதிய பல்சர் கிடைக்கும் என பஜாஜ் அறிவித்துள்ள நிலையில், முதல் டிரிப்பிள் ஸ்பார்க் தொழில்நுட்பம் கொண்ட இந்த பைக் நிச்சயம் பல்சர் பிராண்டு பெயரை தக்க வைக்குமா? இந்த சிறப்பு பார்வை பகுதியில் காணலாம்.

வடிவமைப்பு:

பழைய பல்சர் மாடலுக்கும் புதிய பல்சருக்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லை. கட்டுமஸ்தான திறந்தமேனி உடலமைப்புடன் வந்திருக்கும் புதிய பல்சர் முதல் பார்வையிலேயே முழு மதிப்பெண் பெற்று விடுகிறது. முறுக்கேற்றப்பட்ட இதன் பெட்ரோல் டேங்க் வடிவமைப்பு நிச்சயம் இளம் வாடிக்கையாளர்களை கவரும். சாலையில் செல்லும்போது அனைவரின் கவனத்தையும் சட்டென்று ஈர்க்கும் வடிவமைப்பு அது. புதிய பல்சர் முழுவதும் நேர்த்தியான வளைவு நெளிவுகள் அலங்கரிக்கின்றன.

இதன் ஹெட்லைட் கேடிஎம் டியூக் பைக்கை சற்று ஒத்திருக்கிறது. ஆனாலும், வித்தியாசம் தெரிகிறது. முன்புறம், பக்கவாட்டில் அசத்தியிருக்கும் பஜாஜ் டிசைனர்கள் பின்புறத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இரு சிறிய கிரில்களை பின்புறம் நீட்டிவிட்டு அதில் நம்பர் பிளேட்டை பொருத்தியிருக்கிறது. இது சட்டென்று புதிய பல்சரின் கம்பீரத்தை ஒரே நொடியில் குலைத்துவிட்டது போன்ற உணர்வு. பழைய பல்சர் போன்று இதிலும் அதே தோற்றம் கொண்ட எல்இடி டேஞ்சர் லைட் டிசைன்தான். புதுமை இல்லை.

புதிய பல்சரில் குறிப்பிட்டு சொல்லும் புதிய அம்சம் பின்புறம் நைட்ராக்ஸ் ஒற்றை சஸ்பென்ஸஷனை கொண்டிருக்கிறது. பஜாஜ் பைக்கில் புதிது என்றாலும் மார்க்கெட்டுக்கு பழசுதான். பின்புறம் யூரோகிரிப் டயர் மிக அகலமாக தெரிவது பல்சரின் கம்பீரத்துக்கு கூடுதல் பலம். ஸ்டெப் இருக்கைகளும் பல்சருக்கு புதிது. இரவில் பளிச்சென தெரிவதற்காக ஸ்விட்சுகளில் நீல நிற பேக்கலிட் விளக்குகள் உள்ளன. இடதுபுறம் அனலாக் டாக்கோமீட்டரும், வலது புறத்தில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டரும் கொண்டிருக்கும் புதிய பல்சரில் ஆரஞ்ச் வண்ணம் பேக்கலிட் விளக்குகள் கொண்டதாக இருக்கிறது.

டிஜிட்டல் மீட்டரில் சர்வீஸ் இண்டிகேட்டர் புதிய பல்சரின் கூடுதல் சிறப்பம்சம். டியூக் பைக்கை போன்றே புதிய பல்சரில் புகைபோக்கி குழாய் வெளியே தெரியாமல் பைக்குக்கு கீழே சென்றிருக்கிறது. மொத்தத்தில் புதிய பல்சர் 200என்எஸ் நிச்சயம் கம்பீரமான தோற்றத்தை கொண்ட பைக்காக கூறலாம்.

எஞ்சின்:

கேடிஎம் டியூக் பைக்கின் 4 வால்வு 199.5 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் புதிய பல்சரிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. டிரிப்பிள் ஸ்பார்க் தொழில்நுட்பம் கொண்ட இந்த புதிய எஞ்சின் 9,500 ஆர்பிஎம் எஞ்சின் சுழல் வேகத்தில் அதிகபட்சம் 23.5 பிஎஸ் பவர் வரை வெளிப்படுத்தும்.

இதேபோன்று அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம் எஞ்சின் சுழல் வேகத்தில் 18.3 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் கொண்டிருக்கிறது. 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.61 வினாடிகளையும், 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9.83 வினாடிகளையும் இந்த எஞ்சின் எடுத்துக் கொள்கிறது. அதிகபட்சம் மணிக்கு 136 கிமீ வேகம் வரை செல்லும் திறன் படைத்தது புதிய பல்சர் 200என்எஸ்.

சஸ்பென்ஷன், பிரேக் & டயர்:

முன்புறம் டெலிஸ்கோப்பிக் ஆன்ட்டி ஃபிரிக்ஷன் புஷ் சஸ்பென்ஷனும், பின்புறம் நைட்ராக்ஸ் மோனோ சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டு உள்ளது.

இரண்டு பிரேக்குகளும் 0-60 கிமீ வேகத்தில் 16.33 மீட்டருக்குள் பைக்கை நிறுத்தும் திறனை கொண்டவை. முன்புறம் 100/80 ட்யூப்லெஸ் டயரும், பின்புறம் 130/70 ட்யூப்லெஸ் டயரும் பொருத்தப்பட்டு உள்ளன. இரண்டு புறமும் 10 ஸ்போக் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது.

பெட்ரோல் டேங்க் & மைலேஜ்:

12 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்டு உள்ளது. 145 கிலோ எடை கொண்ட இந்த பைக் நெடுஞ்சாலை பயணத்தில் லிட்டருக்கு 55 கிமீ மைலேஜ் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் 167 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

விலை:

இதன் ரகத்தை சேர்ந்த மற்ற பைக் மாடல்கள் 1.20 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், புதிய பல்சரை ஒரு லட்ச ரூபாய்க்குள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது பஜாஜ். சென்னையில் 98,000 ஆன்ரோடு விலையில் வந்திருக்கும் புதிய பல்சருக்கு அதன் விலையே கூடுதல் பலம் என்பதால் நிச்சயம் ஒரு ரவுண்டு வரும் என்று கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, August 27, 2012, 10:01 [IST]
English summary
Bajaj auto has launched new sports motorcycle Pulsar 200NS in market recently. The company is aiming to capture the entry level sports bike space. The new sportsr bike Powered by a 199.5 cc engine, and offers sophisticated styling and excellent practicality for the Indian buyers looking for a fuel efficient and superb riding experience.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+