இளசுகளின் மனசை ரவுசு பண்ணுமா பஜாஜ் பல்சர் N160 - ரிவியூ

பஜாஜ் நிறுவனம் சமீபத்தில் பல்சர் N160 பைக்கை அறிமுகப்படுத்தியது. இந்த பைக் எப்படி இருக்கிறது. மார்கெட்டில் ஜெயிக்குமா? முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இளசுகளின் மனசை ரவுசு பண்ணுமா பஜாஜ் பல்சர் N160 - ரிவியூ

20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருக்கும் வரப்போகும் சூறாவளி பற்றித் தெரியவில்லை. யாரும் எதிர்பாராத நேரத்தில் எல்லோரையும் அதிர வைக்க ஒரு பைக்கை களம் இறக்கியது பஜாஜ் நிறுவனம். அப்படி ஒரு பைக் வந்து இளைஞர்களைப் பைத்தியமாக்கும் என யாரும் நினைத்துக்கூடப் பார்க்க வில்லை. ஒவ்வொரு இளைஞர்களின் வாயிலும் இந்த பைக்கின் பெயர் தாரக மந்திரமாக ஒலிக்கும் என பஜாஜ் நிறுவனமே நினைத்துப் பார்த்திருக்காது அந்த பைக்கின் பெயர் தான் "பல்சர்" உலகம் முழுவதும் பஜாஜ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்த பைக் என்றால் அது பல்சர் பைக் தான்.

இளசுகளின் மனசை ரவுசு பண்ணுமா பஜாஜ் பல்சர் N160 - ரிவியூ

இந்த 20 ஆண்டுகளில் பல்சர் பைக் பல மாற்றங்களைப் பெற்றுள்ளது. பல வெர்ஷன்களில் இந்த பைக் வந்துவிட்டது. ஒவ்வொரு வெர்ஷனும் ஒவ்வொரு குணாதிசயங்களுடன் கூடியது. கடைசியாகக் கடந்த 2021 அக்டோபர் மாதம் பஜாஜ் நிறுவனம் அக்டோபர் பல்சர் N250 மற்றும் F250 ஆகிய பைக்குக்களை அறிமுகப்படுத்தியது.

இளசுகளின் மனசை ரவுசு பண்ணுமா பஜாஜ் பல்சர் N160 - ரிவியூ

தற்போது கடந்த ஜூன் 24ம் தேதி பஜாஜ் நிறுவனம் பல்சர் N160 என்ற புதிய பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏற்கனவே விற்பனையிலிருக்கும் NS160 பைக்கிற்கு மாற்றாக இந்த பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் அதிகமாக விற்பனையாகும் கேட்டகிரியில் அறிமுகமாகியுள்ளது. இந்த பைக்கை நாங்கள் புனோவில் பல்வேறு பகுதிகளில் ஓட்டிப்பார்த்து டெஸ்ட் செய்தோம். கடும் மழையில் இந்த டெஸ்ட் ரைடை செய்தோம். இந்த பைக் எப்படி இருக்கிறது?

இளசுகளின் மனசை ரவுசு பண்ணுமா பஜாஜ் பல்சர் N160 - ரிவியூ

டிசைன் மற்றும் ஸ்டைல்

பல்சர் N250 பைக்கையும் இந்த N160 பைக்கையும் பார்த்தால் ஒன்றிற்கொன்று வித்தியாசமே இல்லாத அளவிற்கு ஒரே மாதிரியான டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட இது N250 பைக்கா அல்லது N160 பைக்கா என்று குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. N160 வாங்குபவர்களுக்குக் குறைந்த விலையில் அதிக விலை பைக் கிடைப்பது லாபம் தான்.

இளசுகளின் மனசை ரவுசு பண்ணுமா பஜாஜ் பல்சர் N160 - ரிவியூ

இந்த பைக்கின் முகப்பு பக்கத்தைப் பொறுத்தவரை எல்இடி புரோஜெக்டர் ஹெட்லைட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கண்ணிற்கு இமை போல எல் இடி டிஆர்எல் கொடுக்கப்பட்டுள்ளது. மட்கார்டை பொருத்தவரை டெலஸ்கோபிக் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. இது அப்படியே N250 பைக்கில் உள்ள அதே டிசைன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இளசுகளின் மனசை ரவுசு பண்ணுமா பஜாஜ் பல்சர் N160 - ரிவியூ

ஹெட்லைட்டிற்கு மேல் சிறிதாக இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் N250 பைக்கின் அதே ஸ்டைல் தான் அந்த பைக்கை போலவே இதிலும் அசத்தலாக இருக்கிறது. இது பார்க்க இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் ஹெட்லைட் சேர்ந்தார் போன்ற லுக்கை தருகிறது. ரைடர் அமர்ந்து பார்க்கும் போது இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்னும் சிறப்பாக லுக்கை தருகிறது.

இளசுகளின் மனசை ரவுசு பண்ணுமா பஜாஜ் பல்சர் N160 - ரிவியூ

பெட்ரோல் டேங்க் எக்ஸ்டென்ஷன் பார்க்க நல்ல லுக்கில் இருக்கிறது. பெட்ரோல் டேங்கில் க்ரே நிற கிராபிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் டூயல் சேனல் ஏபிஎஸ் வேரியன்ட் பைக்கை ஓட்டிப்பார்த்தோம். இது ப்ரூக்லின் பிளாக் என்ற ஒரே ஒரு கலரில் தான் இருக்கிறது. பைக்கில் பல பகுதியில் சில்வர் மற்றும் சிவப்பு நிற ஸ்டீரீக்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளது. N250 பைக்கிற்கும் இந்த N160 பைக்கிற்கும் உள்ள லுக் ரீதியிலான வித்தியாசம் பின்புறம் உள்ள பேட்ஜிங்கில் தான் இருக்கிறது.

இளசுகளின் மனசை ரவுசு பண்ணுமா பஜாஜ் பல்சர் N160 - ரிவியூ

பின்புறத்திலும் அதே N250 பைக்கில் உள்ள டிசைன் தான் இதிலும் இருக்கிறது. கிளீன் லென்ஸ் எல்இடி டெயில் லேம்ப் இதில் இருக்கிறது. நம்பர் பிளேட் மவுண்ட், இண்டிகேட்டர்கள், ரிஃப்லெக்டர்கள், எல்லாம் ஒரே யூடிட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 17 இன்ச் அலாய் வீல் தனித்துவமான ஸ்போர்க் பேட்டர்ன் பொருத்தப்பட்டுள்ளது.

இளசுகளின் மனசை ரவுசு பண்ணுமா பஜாஜ் பல்சர் N160 - ரிவியூ

இதில் இன்ஜின் டிசைன் மற்றும் ஸ்டைலிங்கில் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் சிலிண்டரின் கூலிங் ஃபின்கள் வேப் பேட்டனில் வித்தியாசமாகவும், எக்ஸாட்கள் எல்லாம் அண்டர் பெல்லியாக அமைக்கப்பட்டுள்ளது.

இளசுகளின் மனசை ரவுசு பண்ணுமா பஜாஜ் பல்சர் N160 - ரிவியூ

பஜாஜ் பல்சர் N160 அம்சங்கள்

பஜாஜ் நிறுவனம் இந்த N160 பைக்கை ஸ்போர்ட்ஸ் பைக் என அறிமுகப்படுத்தியுள்ளது. அதனால் இதில் பல அடிப்படையான அம்சங்கள் எல்லாம் பொருத்தப்பட்டுள்ளது. முதலில் எல்இடி ஹெட்லைட்கள், டிஆர்எல் மற்றும் டெயில்லைட் கொடுக்கப்பட்டுள்ளது. இண்டிகேட்டர்கள் ஹாலஜன் பல்ப்களில் வழங்கப்பட்டுள்ளது. இதையும் எல் இடியாக வைத்திருக்கலாம். இதுவும் எல்இடியாக இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

இளசுகளின் மனசை ரவுசு பண்ணுமா பஜாஜ் பல்சர் N160 - ரிவியூ

அடுத்த சிறப்பான ஒரு அம்சத்தைக் குறிப்பிட வேண்டும் என்றால் அனலாக் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்கள் தான். அனலாக் டேக்கோ மீட்டருடன் வரும் வெகு சில பைக்களில் இதுவும் ஒன்று, பைக் பிரியர்களுக்கு இன்ஜின் ரேஸ் ஆகும் போது நீடில் மேலே ஏறி இறங்குவதைப் பார்த்து ரசிக்க நல்ல வாய்ப்பாக இருக்கிறது.

இளசுகளின் மனசை ரவுசு பண்ணுமா பஜாஜ் பல்சர் N160 - ரிவியூ

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட்கிளஸ்டரில் ஸ்பீடாமீட்டர், ஓடோ மீட்டர், ட்ரிப் மீட்டர், இன்னும் எவ்வளவு தூரத்திற்கு பைக் செல்லும், கியர் போசிஷன் இன்டிகேட்டர் உள்ளிட்ட ஏகப்பட்ட தகவல்கள் இருக்கிறது. இது போக பெட்ரோல் டேங்க் அருகே யூஎஸ்பி சார்ஜிங் ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் செல்போனிற்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம்.

இளசுகளின் மனசை ரவுசு பண்ணுமா பஜாஜ் பல்சர் N160 - ரிவியூ

இன்ஜின் பெர்பாமென்ஸ் மற்றும் ரைடிங் இம்பிரஷன்

பஜாஜ் பல்சர் N160 பைக்கை பொருத்தவரை 165 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜினாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 165 சிசியில் மற்ற 165 சிசி வாகனங்களைவிட இதில் 5 க்யூபிக்மீட்டர் பெரியதாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இது 15.7 பிஎச்பி பவரை 8750 ஆர்பிஎம்மிலும், 14.65 என்எம் டார்க் திறனை 6750 ஆர்பிஎம்மிலும் வழங்குகிறது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இளசுகளின் மனசை ரவுசு பண்ணுமா பஜாஜ் பல்சர் N160 - ரிவியூ

இந்த பைக்கில் ஸ்டார்ட்டர் பட்டன் முதல் அனைத்துமே ஸ்மூத்தாக இருக்கிறது. பல்சர் பைக்களிலேயே ஸ்மூத்தான பைக் இது தான். குறிப்பாக அதிகமான ஆர்பிஎம்மில் சிறப்பான செயல்திறனை உணர முடிகிறது. இந்த பைக் ஸ்போர்ட்டி பைக் என அறிவிக்கப்பட்டதற்கு ஏற்ப செயல்படுகிறது. பெரும்பாலும் இந்த பைக்கை பயன்படுத்துபவர்கள் நகர்ப் புறங்களில் தான் பயன்படுத்துவார்கள். ஆனால் பெரும்பாலும் 4000-6000 ஆர்பிஎம்களில் செயல்பாடு இருக்கிறது. இதன் மூலம் 50 -70 கி.மீ வரையிலா வேகத்தில் சிறப்பான பயண அனுபவத்தைத் தருகிறது.

இளசுகளின் மனசை ரவுசு பண்ணுமா பஜாஜ் பல்சர் N160 - ரிவியூ

நாங்கள் குறைந்த ஆர்பிஎம்மில் பைக்கை ஓட்டி சோதித்து பார்த்தோம். 2000 ஆர்பிஎம்மிற்கும் குறைவாகப் பயணிக்கும் போது இன்ஜின் நாக் ஆகவில்லை. இந்த பைக் 6000 ஆர்பிஎம் வரை பிக்கப் மெதுவாகத்தான் இருக்கிறது. அதற்குப் பிறகு சிறப்பாக இருக்கிறது.

இளசுகளின் மனசை ரவுசு பண்ணுமா பஜாஜ் பல்சர் N160 - ரிவியூ

3000 ஆர்பிஎம் மிற்கும் குறைவாக வாகனம் ஓட்டும் போது அடிக்கடி கியர் மாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. இது சிலருக்குப் பிடித்த விஷயமாக இருக்கும். இந்த பைக்கின் 85 சதவீதமான டார்க் பெரும்பாலான ஆர்பிஎம் ரேஞ்ச்களில் கிடைக்கிறது. இது சிறப்பான ஒரு எக்ஸ்பிரியன்ஸை வழங்குகிறது. பஜாஜ் நிறுவனம் பல்சர் N160 பைக் 30-70 கி.மீ வேகத்தில் வேகமாக 3, 4 மற்றும் 5 கியர்களை மாற்ற முடியும் எனக் கூறியுள்ளது.

இளசுகளின் மனசை ரவுசு பண்ணுமா பஜாஜ் பல்சர் N160 - ரிவியூ

சஸ்பென்சன், சேஸிஸ், பிரேக் ஆகிய அம்சங்கள் எல்லாம் N250 பைக்கில் உள்ள அதே விஷயம் தான் இந்த N160 பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. சஸ்பென்சனை பொருத்தவரை முன்பக்கம் 37 மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் மோனாஷாக் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. டெலஸ்கோபிக் சஸ்பென்சனை பொருத்தவரை மற்ற வண்டிகளைக் காட்டிலும் சிறப்பான சஸ்பென்சனாக கொடுக்கப்பட்டுள்ளது. மோசமான சாலைகளையும் சுலபமாகச் சமாளிக்கிறது. சிறிய குழிகளில் ஏறி இறங்குவது தெரியாத அளவிற்கு இருக்கும். இதன் சீட் வசதியும் நீண்ட தூரம் பயணிப்பதற்கு ஏற்றதாக இருக்கிறது.

இளசுகளின் மனசை ரவுசு பண்ணுமா பஜாஜ் பல்சர் N160 - ரிவியூ

சீட் குஷனாகவும் சாஃப்டாகவும் இருப்பதால் நீண்ட தூரப் பயணங்களில் சிறப்பான அனுபவத்தைத் தருகிறது. பிரேக்கிங்கை பொருத்தவரை முன்பக்கம் 300 மிமீ டிஸ்க் மற்றும் பின் பக்கம் 230 மிமீ டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது. Grimeca பிரேக் சிஸ்டம் பொருத்தப்படுகிறது. இது இன்டஸ்டரியில் பெஸ்டாக இருக்கிறது.

இளசுகளின் மனசை ரவுசு பண்ணுமா பஜாஜ் பல்சர் N160 - ரிவியூ

இந்த பைக்கில் சிங்கள் சேனல் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. நாங்கள் இந்த பைக்கை புனேவில் கடுமையான மழையில் சோதனை செய்தோம். எங்களுக்கு அந்த மழையில் ஏபிஎஸ் சிறப்பாக வேலை செய்ததை உணர முடிந்தது. இந்த பைக்கில் MRF Zapper டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இளசுகளின் மனசை ரவுசு பண்ணுமா பஜாஜ் பல்சர் N160 - ரிவியூ

ஒட்டு மொத்தத்தில் இந்த பஜாஜ் பல்சர் N160 பைக் என்ஜாய்யபில் அனுபவத்தைத் தரும். மழையிலும் குறுகிய சாலைகளிலுமே நாங்கள் எதிர்பாராத விதமாக பல்சர் N160 பைக் செயலாற்றியது.ஹைவேயில் வேகம் சற்று குறைவாக இருந்தது. இருந்தாலும் இந்த பைக்கிற்கு இது போதுமான வேகம் தான்.

இளசுகளின் மனசை ரவுசு பண்ணுமா பஜாஜ் பல்சர் N160 - ரிவியூ

பல்சர் N160 வேரியன்ட் மற்றும் கலர் ஆப்ஷன்கள்

பஜாஜ் பல்சர் N160 பைக்கை பொருத்தவரை 2 விதமான வேரியன்ட்களில் வருகிறது. அதில் 4 ஆப்ஷன்கள் உள்ளது. இரண்டு வேரியன்டகளிலும் மெக்கானிக்கல் ரீதியான எல்லாம் ஒன்றாகத் தான் இருக்கும். இரண்டிற்கும் ஒரே வித்தியாசம் ஏபிஎஸ் தான். டூயல் சேனல் ஏபிஎஸ் ஒரு வேரியன்டாகவும், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஒரு வேரியன்டாகவும் வருகிறது.

இளசுகளின் மனசை ரவுசு பண்ணுமா பஜாஜ் பல்சர் N160 - ரிவியூ

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பைக்கை பொருத்தவரை 3 கலர் ஆப்ஷன்கள் உள்ளன.

- கரீபியன் ப்ளூ

- ரேசிங் ரெட்

- டெக்னோ க்ரே

விலை ரூ1.23 லட்சம்

டூயல் சேனல் ஏபிஎஸ் வேரியன்டை பொருத்தவரை ஒரே ஒரு கலர் ஆப்ஷன் ப்ரூக்லின் பிளாக் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் விலை ரூ 1.27 லட்சம்

இளசுகளின் மனசை ரவுசு பண்ணுமா பஜாஜ் பல்சர் N160 - ரிவியூ

பஜாஜ் நிறுவனம் பைக்கை எந்த போசிஷனில் விற்பனை செய்கிறது என்பதில் தெளிவாக இருந்தது. சரியாக ஸ்போர்ட்டி கம்யூட்டர் பைக்காக இந்த பல்சர் N160 பைக் அறிமுகமாகியுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட NS160 பைக் பெரிய அளவில் மக்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. அதனால் அந்நிறுவனம் NS160 பைக்கை நிறுத்திவிட்டு N160 பைக்கின் விற்பனையை அதே செக்மெண்டில் துவங்கவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, July 17, 2022, 18:00 [IST]
English summary
Bajaj pulsar n160 review design specs performance features handling ride comfort other details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+