இந்தியாவின் 125சிசி பைக்குகளில் எது சிறந்தது? - பார்க்கலாம் வாங்க!
நல்ல மைலேஜும் வேணும், செயல்திறனிலும் சூப்பராக இருக்கோணும். அப்புறம், இந்த பட்ஜெட்டும் நம்ம கையை தாண்டக்கூடாது, என்பவர்களுக்கான சாய்ஸ்தான் 125சிசி பைக்குகள்.
தற்போது முன்னணி பிராண்டுகள் மிகச்சரியான விலையில், சிறந்த பைக் மாடல்களை இந்த செக்மென்ட்டில் விற்பனை செய்து வருகின்றன. அதில், எந்த பைக் மிகச்சிறப்பானது என்பதை கண்டுகொள்வதற்கான செய்தித்தொகுப்பாக இது அமைகிறது.

முன்னணி மாடல்கள்
ஒவ்வொரு நிறுவனத்திடம் இருக்கும் சிறந்த 125சிசி பைக்குகளில் ஒன்றை தேர்வு செய்து இங்கே தொகுத்துள்ளோம். அடுத்தடுத்த ஸ்லைடுகளில் சிறந்த 125சிசி பைக் மாடல்களின் விபரங்களை காணலாம்.

ஹோண்டா சிபி ஷைன்
இந்த செக்மென்ட்டில் ஹோண்டா நிறுவனம் ஷைன் மற்றும் ஸ்டன்னர் ஆகிய இரு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. ஆனால், ஸ்டன்னரின் வடிவமைப்பு இளைஞர்களுக்கானதாக மட்டுமே இருக்கிறது. எனவே, அனைவருக்கும் ஏற்ற ஷைன் பைக்கை இங்கே தேர்வு செய்துள்ளோம்.

ஹோண்டா ஷைன் - தொழில்நுட்ப விபரம்
எஞ்சின்: 124.7சிசி, ஏர்கூல்டு
பவர்: 10.12 பிஎச்பி @7,000ஆர்பிஎம்
டார்க்: 10.54 என்எம் @5,500ஆர்பிஎம்
கியர்பாக்ஸ்: 4 ஸ்பீடு(N-1-2-3-4)
மைலேஜ்: 65கிமீ/லி
பெட்ரோல் டேங்க்: 10.5 லிட்டர்கள்
எடை: 120கிலோ
விலை: ரூ.52,063 முதல் ரூ.59,248 வரை

பஜாஜ் டிஸ்கவர் 125எம்
டிஸ்கவர் வரிசையில் விற்பனை செய்யப்படும் மாடல்கள் ஒரு சில வித்தியாசங்களுடன் சில மாடல்களில் விற்பனை செய்யப்படுகின்றன. அதில், அனைவருக்கும் ஏற்ற மாடலான டிஸ்கவர் 125எம் பைக்கை இங்கே தேர்வு செய்துள்ளோம். மைலேஜுக்கு கியாரண்டி சொல்லக்கூடிய இந்த பைக் கொடுக்கும் பணத்திற்கு நிறைவான மாடல். இந்த பைக்கின் பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொழில்நுட்ப விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிஸ்கவர் 125எம்- தொழில்நுட்ப விபரம்
எஞ்சின்: 124.6சிசி, டிடிஎஸ்-ஐ
பவர்: 11.5 எச்பி @8,000ஆர்பிஎம்
டார்க்: 10.8என்எம் @6,000ஆர்பிஎம்
கியர்பாக்ஸ்: 4 ஸ்பீடு(1-N-2-3-4)
மைலேஜ்: 76கிமீ/லி
பெட்ரோல் டேங்க்: 9.5 லிட்டர்கள்
எடை: 118கிலோ
விலை: ரூ.48,500 முதல் ரூ.50,499 வரை

ஹீரோ கிளாமர் (FI)
இந்த செக்மென்ட்டில் அதிக விலை கொண்ட மாடல். ஃப்யூவல் இன்ஜெக்ஷன் எஞ்சினுடன் வருவதே இதற்கு காரணம். சிறந்த எரிபொருள் சிக்கனத்தையும், செயல்திறனும் மிக்கது. டியூவல் டோன் கிராஃபிக்ஸ் ஸ்டிக்கருடன் கவர்ச்சியாக இருக்கிறது. ஆனால், நீண்டகாலமாக மார்க்கெட்டில் இருந்து வரும் இந்த பைக்கில் ஹீரோ பெரிய அளவில் மாற்றங்களை செய்யாதது குறையே. தொழில்நுட்ப விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

கிளாமர்- தொழில்நுட்ப விபரம்
எஞ்சின்: 124.8சிசி, ஏர்கூல்டு(ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம்)
பவர்: 9.1 எச்பி @7,000ஆர்பிஎம்
டார்க்: 10.35என் @4,000ஆர்பிஎம்
கியர்பாக்ஸ்: 4 ஸ்பீடு(N-1-2-3-4)
மைலேஜ்: 81.1 கிமீ/லி
பெட்ரோல் டேங்க்: 12 லிட்டர்கள்
எடை: 129கிலோ
விலை: ரூ.58,700 முதல் ரூ.62,750 வரை

டிவிஎஸ் ஃபீனிக்ஸ் 125
பிரிமியம் மோட்டார்சைக்கிள் என்று டிவிஎஸ் குறிப்பிடும் இந்த பைக்கில் செக்மென்ட்டிலேயே சில புதுமையான வசதிகள் கொண்ட மாடல். அப்பாச்சி போன்றை எல்இடி கெய்டு விளக்குகள், முழுவதுமான டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், கவர்ச்சிகரமான பாடி கிராஃபிக்ஸ், நல்ல மைலேஜ் போன்றவை இதன் சிறப்பம்சங்களாக கூறலாம்.

டிவிஎஸ் ஃபீனிக்ஸ் 125 - தொழில்நுட்ப விபரம்
எஞ்சின்: 124.5சிசி ஈக்கோத்ரஸ்ட் எஞ்சின்
பவர்: 11 எச்பி @8,000ஆர்பிஎம்
டார்க்: 10.8என்எம் @6,000ஆர்பிஎம்
கியர்பாக்ஸ்: 4 ஸ்பீடு(N-1-2-3-4)
மைலேஜ்: 67கிமீ/லி
பெட்ரோல் டேங்க்: 12 லிட்டர்கள்
எடை: 116கிலோ
விலை: ரூ.49,850 முதல் ரூ.52,190 வரை

யமஹா எஸ்எஸ்- 125
சிறந்த செயல்திறன் கொண்ட யமஹா பிராண்டுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். அவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில், 125சிசி செக்மென்ட்டில் யமஹா விற்பனை செய்து வரும் இந்த மாடல் சரியான சாய்ஸாக இருக்கும். இதில், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருப்பதால், குறைந்த கியர் ரேஷியோ கொண்டது. இதனால், ஆக்சிலரேஷன் மிக விரைவாக இருக்கும் என்பதால், மிகச்சிறந்த செயல்திறன் விரும்புவோரை திருப்திப்படுத்தும் மாடலாக கூறலாம். வயிற்றுப் பகுதியில் பெல்லி கவுல் கொடுக்கப்பட்டிருப்பதும், டியூவல் டோன் கிராஃபிக்ஸ் ஸ்டிக்கரும் கவர்ச்சியை தருகின்றது. தொழில்நுட்ப விபரங்களை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

யமஹா எஸ்எஸ்- தொழில்நுட்ப விபரம்
எஞ்சின்: 123சிசி, ஏர்கூல்டு
பவர்: 11எச்பி @7,500ஆர்பிஎம்
டார்க்: 10.4என்எம் @6,500
கியர்பாக்ஸ்: 5 ஸ்பீடு(1-N-2-3-4-5)
மைலேஜ்: 75கிமீ/லி
பெட்ரோல் டேங்க்: 13.6 லிட்டர்கள்
எடை: 125 கிலோ
விலை: ரூ.54,642

சுஸுகி ஸ்லிங்ஷாட் ப்ளஸ் 125
125சிசி செக்மென்ட்டில் ஸ்லிங்ஷாட் போன்று சிறந்த மாடல் இருந்தும் சுஸுகியால் போட்டியாளர்களுடன் போட்டியிட இயலவில்லை. மிக மென்மையான கியர்பாக்ஸ் மற்றும் எஞ்சின் கொண்ட மாடல் இது. எந்த கியரில் செல்கிறோம் காட்டும் இன்டிகேட்டர் குறிப்பிடத்தக்க வசதி. ஸ்டைலும், செயல்திறனும் மிக்க மாடல். இவை இருந்தும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த பைக் பவர் விஷயத்தில் இது பின்தங்குகிறது. அதனை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

ஸ்லிங்ஷாட் - தொழில்நுட்ப விபரம்
எஞ்சின்: 124சிசி, ஏர்கூல்டு
பவர்: 8.8 எச்பி @7,000ஆர்பிஎம்
டார்க்: 10என்எம்
கியர்பாக்ஸ்: 5 ஸ்பீடு(1-N-2-3-4-5)
மைலேஜ்: 75கிமீ/லி
பெட்ரோல் டேங்க்: 12 லிட்டர்கள்
எடை: 129கிலோ
விலை: ரூ.56,352 முதல் ரூ.58,077 வரை

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு
இந்த செக்மென்ட்டில் விற்பனை அடிப்படையில் ஹோண்டா ஷைன் முன்னிலையில் இருந்தாலும், கொடுக்கும் பணத்திற்கு சிறப்பு வாய்ந்த மாடல் பஜாஜ் டிஸ்கவர் 125எம் பைக்தான். சிறந்த தொழில்நுட்பம் கொண்ட அதிக மைலேஜ் தரும் பைக் மாடல். சிற்ப்பம்சங்கள், டிசைன், மைலேஜ் உள்ளிட்ட விஷயங்களுடன் மிகக் குறைவான விலை கொண்ட மாடல் என்பதும் கவனிக்கத்தக்கது. எனவே, இந்த செக்மென்ட்டில் கொடுக்கும் பணத்திற்கு சிறப்பு வாய்ந்த மாடல் பஜாஜ் டிஸ்கவர் 125எம் என்று கூறலாம். பிராண்டு மற்றும் தனிப்பட்ட விருப்பத்தின்பேரில் இந்த தேர்வு மாறலாம்.


Click it and Unblock the Notifications








