இந்தியாவின் 5 சிறந்த 150சிசி பைக்குகள்: சிறப்புத் தொகுப்பு
100சிசி கம்யூட்டர் பைக் செக்மென்ட்டிலிருந்து பலரது கவனம் தற்போது 150சிசி பைக்குகள் மீது விழுந்திருக்கிறது. எரிபொருள் சிக்கனம், செயல்திறன், விலை என அனைத்திலும் சிறப்பான 150சிசி பைக்குகள் மார்க்கெட்டில் குவிந்துவிட்டன.
முந்துங்கள்... இச்சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே!
அதில், சிறந்த 150சிசி பைக் மாடல்களை ஸ்லைடரில் காணலாம். எஞ்சின், மைலேஜ், விலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஒப்பிட்டும் வாசகர்கள் தெரிந்துகொள்ளலாம்.

பட்டியல்
பேஸ் மாடலின் விலை, எஞ்சின், மைலேஜில் ஒன்றுக்கொன்று நேரடியாக போட்டி போடும் பைக்குகள் பட்டியலில் தொகுக்கப்பட்டுள்ளன. 150சிசி செக்மென்ட்டில் சிறந்த 5 பைக் மாடல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

5. யமஹா எஃப்இசட் எஸ் வெர்ஷன் 2.0
இளைஞர்களின் கனவு பிராண்டாக விளங்கும் யமஹாவிடமிருந்து கிடைக்கும் சிறந்த 150சிசி மாடல். யமஹா பைக் மைலேஜ் தராது என்ற முத்திரையை துடைத்துக் கொள்ளும் வகையில், தற்போது அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் புளூகோர் தொழில்நுட்பம் கொண்ட எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட எஞ்சின் என்பதும் குறிப்பிடத்தக்கது. கவர்ச்சியான பல வண்ணங்களில் கிடைக்கிறது. முன்புறத்தில் டிஸ்க் பிரேக் வசதி கொண்டது. ஸ்டைலான பட்ஜெட் விலை கொண்ட 150சிசி பைக் மாடல். கூடுதல் தகவல்களை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

தொழில்நுட்ப விபரம்
எஞ்சின்: 149சிசி ஏர்கூல்டு(ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம்)
பவர் விபரம்: 13.1பிஎஸ் பவரையும், 12.8என்எம் டார்க்கையும் வழங்கும்.மைலேஜ்: 54கிமீ/லிபெட்ரோல் டேங்க் கொள்ளளவு:12 லிட்டர்கள் (1.2லிட்டர்கள் ரிசர்வ்)எக்ஸ்ஷோரூம் விலை: ரூ.78,250
4. சுஸுகி ஜிக்ஸெர்
150சிசி மார்க்கெட்டில் சமீபத்திய வரவான சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் கவர்ச்சியான டிசைன் கொண்ட காம்பேக்ட் பைக் மாடலாக வந்துள்ளது. இதனால், நகர்ப்புறத்திலும் ஓட்டுவதற்கு ஏற்ற சிறந்த 150சிசி பைக் மாடலாக கூறலாம். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், செயல்திறன் மிக்க எஞ்சின், சிறந்த மைலேஜ், கூடுதல் வசதிகள் என போட்டி போடுகிறது. முன்புறத்தில் டிஸ்க் பிரேக்குடன் கிடைக்கிறது. கூடுதல் விபரங்களை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

சுஸுகி ஜிக்ஸெர்- தொழில்நுட்ப விபரம்
எஞ்சின்: 155சிசி, ஏர்கூல்டு
பவர் விபரம்: 14.59எச்பி பவரையும், 14என்எம் டார்க்கையும் வழங்கும்.மைலேஜ்:63.4 கிமீ/லிநடைமுறை மைலேஜ்: நகர்ப்புறத்தில் 50கிமீ/லி, நெடுஞ்சாலையில் 58கிமீ/லிபெட்ரோல் டேங்க் கொள்ளளவு: 15லிட்டர்கள் (2லிட்டர் ரிசர்வ்)எக்ஸ்ஷோரூம் விலை: ரூ.72,199.

3.ஹோண்டா சிபி டிரிக்கர்
ஹோண்டா யூனிகார்ன் சிறந்த பைக் மாடல் என்றாலும் அது பழமையான மாடலாகிவிட்டதால், ஹோண்டாவிடம் இருந்து கிடைக்கும் சிறந்த 150சிசி மாடல். கட்டுறுதிமிக்க தோற்றம், ஹோண்டாவின் ஸ்மூத்தான எஞ்சின் கொண்டதுடன், நவீன வசதிகள் கொண்ட பைக் மாடல். ஹோண்டா பிராண்டு விரும்பிகளுக்கு ஏற்ற பட்ஜெட் விலையிலான 150சிசி பைக். இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் கிடைக்கிறது. தொழில்நுட்ப விபரங்களை அடுத்த ஸ்லைடில் காணலாம்

தொழில்நுட்ப விபரம்
எஞ்சின்:149.1சிசி, ஏர்கூல்டு.
பவர் விபரம்: 13.30 எச்பி பவரையும், 12.5என்எம் டாரக்கையும் அளிக்கும்.மைலேஜ்: 60கிமீ/லிநடைமுறை மைலேஜ்: நகர்ப்புறத்தில் 50கிமீ/லி, நெடுஞ்சாலையில் 60கிமீ/லிபெட்ரோல் டேங்க் கொள்ளளவு: 12 லிட்டர்கள்எக்ஸ்ஷோரூம் விலை: ரூ.65,633.

2. நியூ ஹீரோ எக்ஸ்ட்ரீம்
பல புதிய மாற்றங்களுடன் வந்திருக்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 150சிசி செக்மென்ட்டில் மிகச்சிறந்த சாய்ஸ் என்று கூறலாம். ஸ்டைலான தோற்றம், மென்மையான ஓட்டுதல் சுகத்தை தரும் எஞ்சின், விலை, ஹீரோ நிறுவனத்தின் சிறந்த சர்வீஸ் நெட்வொர்க் போன்றவை இதற்கு பக்கபலமாக இருக்கின்றது. எமது டெஸ்ட் டிரைவ் அனுபவத்தில் உயரம் குறைவானர்களுக்கு இது சிறப்பான மாடலாக இருக்காது. இருசக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குடன் கிடைக்கிறது. ஹீரோ பிராண்டின் நம்பகமான பைக் மாடல்களில் ஒன்று. கூடுதலாக தொழில்நுட்ப விபரங்களை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

தொழில்நுட்ப விபரம்
எஞ்சின்: 149.2சிசி, ஏர்கூல்டு
பவர் விபரம்: 14.21எச்பி பவரையும், 12.8என்எம் டார்க்கையும் அளிக்கும்.மைலேஜ்: 65கிமீ/லிநடைமுறை மைலேஜ்: நகர்ப்புறத்தில் 45-50கிமீ/லி, நெடுஞ்சாலையில் 60கிமீ/லிபெட்ரோல் டேங்க் கொள்ளளவு: 15 லிட்டர்கள் (2 லிட்டர்கள் ரிசர்வ்)எக்ஸ்ஷோரூம் விலை:66,516.

1.பஜாஜ் பல்சர் 150டிடிஎஸ்ஐ
150சிசி பைக்குகள் மீது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சியை ஏற்படுத்திய மாடல் இது. நீண்ட காலமாக மார்க்கெட்டில் இருந்தாலும், சிறந்த தொழில்நுட்பம், மைலேஜ் போன்றவற்றால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகியதால், விற்பனையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தோற்றம், ஓட்டுதல் தரம், செயல்திறன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், எஞ்சின் ஆஃப் சுவிட்ச், ஆட்டோமேட்டிக் இண்டிகேட்டர் ஆஃப் வசதி போன்றவற்றால் ஓட்டுபவருக்கு சுகத்தை தரும் மாடல். இருவர் அமர்ந்து செல்வதற்கு வசதியாக இருக்கும். முன்சக்கரம் டிஸ்க் பிரேக் வசதி கொண்டது. சிறந்த ரீசேல் மதிப்பு கொண்ட பைக். ஒருமுறை வைத்திருந்தவர்களை மறுமுறையும் வாங்கச் செய்யும் மாடல். கூடுதல் தகவல்கள் அடுத்த ஸ்லைடில் காணலாம்.

பல்சர் 150 - தொழில்நுட்ப விபரம்
எஞ்சின்: 149சிசி, ஏர்கூல்டு.
பவர்: 14.85 எச்பி பவர், 12.5 என்எம் டார்க்மைலேஜ்: 65 கிமீ/லிநடைமுறை மைலேஜ்: நகர்ப்புறத்தில் 55கிமீ/லி, நெடுஞ்சாலையில் 60கிமீ/லிபெட்ரோல் டேங்க் கொள்ளளவு: 15 லிட்டர்கள் (3.2 லிட்டர்கள் ரிசர்வ்)எக்ஸ்ஷோரூம் விலை: ரூ.67,145.

150சிசி பிரிமியம் மாடல்கள்
இதே 150சிசி செக்மென்ட்டில் கூடுதல் விலையில் விற்பனையாகும் பிரிமியம் பைக் மாடல்களை வேறொரு தொகுப்பில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








