பெண்களுக்கான டாப் - 6 இலகு எடை கொண்ட ஸ்கூட்டர் மாடல்கள்!

By Saravana

ஆண்களை போன்றே பெண்களுக்கும் இப்போது வெளியில் செல்லும் தேவைகளும், அவசியமும் அதிகமாகியிருக்கிறது. அலுவலகம், ஷாப்பிங், கல்லூரி செல்வதற்கு பொது போக்குவரத்தை நம்பி செல்வதில் இருக்கும் நடைமுறை பிரச்னைகள் ஏராளம். தவிரவும், அப்பா, சகோதரன், கணவர் என யாரையும் தொந்தரவு செய்யாமல், குறித்த நேரத்தில் செல்வதற்கு தங்களது அன்றாட பணிகளை செய்வதற்கு அவர்களுக்கு ஸ்கூட்டர்களே சிறந்த தேர்வாக இருக்கிறது.

இந்தநிலையில், மார்க்கெட்டில் இருபாலருக்கும் தனித்தனியாக பிரத்யேக அம்சங்கள் கொண்ட ஸ்கூட்டர் மாடல்கள் மலிந்துவிட்டன. அதில், பெண்கள் எளிதில் கையாளக்கூடிய இலகுவான ஸ்கூட்டர் மாடல்களை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

01. டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ்

01. டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ்

மார்க்கெட்டில் கிடைக்கும் மிகவும் இலகுவான எடை கொண்ட ஸ்கூட்டர். 95 கிலோ எடையுடைய இந்த ஸ்கூட்டரில் 5 பிஎச்பி பவரை வழங்கும் திறன் கொண்ட 88சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 65 கிமீ மைலேஜ் தரும் என டிவிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

டிவிஎஸ் பெப் ப்ளஸ் ஸ்கூட்டரில் 5 லிட்டர் கொள்ளளவு உடைய பெட்ரோல் டேங்க் உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி, மொபைல்போன் சார்ஜர், சைடு ஸ்டான்ட் அலாரம், ட்யூப்லெஸ் டயர்கள், ஸ்டோரேஜ் பகுதியில் எல்இடி விளக்கு போன்றவையும் இருக்கிறது. இளஞ்சிவப்பு உள்பட 5 விதமான வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டர் சென்னையில் ரூ.48,568 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

02. டிவிஎஸ் ஸ்ட்ரீக்

02. டிவிஎஸ் ஸ்ட்ரீக்

கவர்ச்சிகரமான இலகு ஸ்கூட்டரான டிவிஎஸ் ஸ்ட்ரீக் 96 கிலோ எடை கொண்டது. இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 87.8சிசி எஞ்சினும் அதிகபட்சமாக 5 பிஎச்பி பவரை அளிக்கும். லிட்டருக்கு 68 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் லிட்டருக்கு 55 கிமீ மைலேஜை எதிர்பார்க்கலாம்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இருக்கை திறக்க வேண்டிய அவசியமற்ற வகையில், வெளிப்புறத்திலேயே அமைந்த பெட்ரோல் டேங் மூடி செல்ஃப் ஸ்டார்ட், மொபைல்போன் சார்ஜர், எளிதான கையாளுமை கொண்ட ஸ்கூட்டர். 5 விதமான இரட்டை வண்ணங்களில் கிடைக்கிறது. சென்னையில் ரூ.49,215 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.இதே வரிசையில் வெளியாகும் டிவிஎஸ் ஸெஸ்ட் 110 ஸ்கூட்டர் சற்று பவர்ஃபுல்லான மாடல்.

03. சுஸுகி லெட்ஸ்

03. சுஸுகி லெட்ஸ்

சுஸுகி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனத்தின் இலகு எடை கொண்ட ஸ்கூட்டர். இந்த ஸ்கூட்டர் 98 கிலோ எடை கொண்டது. 8.50 பிஎச்பி பவரை வழங்க வல்ல 112சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. லிட்டருக்கு 63 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. 5.2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

சுஸுகி லெட்ஸ் ஸ்கூட்டரில் செல்ஃப் ஸ்டார்ட், மொபைல்போன் சார்ஜர், ட்யூப்லெஸ் டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் ரூ.51,850 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

04. ஹீரோ ப்ளஷர்

04. ஹீரோ ப்ளஷர்

ஹீரோ ப்ளஷர் ஸ்கூட்டர் 101 கிலோ எடை கொண்டது. இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 102சிசி எஞ்சின் அதிகபட்சமாக 7 பிஎச்பி பவரை வழங்கும். இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 63 கிமீ மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

செல்ஃப் ஸ்டார்ட் வசதி, மொபைல்போன் சார்ஜர், ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. 10 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. சென்னையில் ரூ.54,678 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

05. யமஹா ஃபேஸினோ

05. யமஹா ஃபேஸினோ

மிக வித்தியாசமான தோற்றத்தில் கவர்கிறது யமஹா ஃபேஸினோ. இந்த ஸ்கூட்டர் 103 கிலோ எடை கொண்டது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் 113சிசி எஞ்சின் அதிகபட்சமாக 7 பிஎச்பி பவரை வழங்கும். லிட்டருக்கு 66 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரிலும் 5.2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ட்யூப்லெஸ் டயர்கள் இப்போது சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 21 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மொபைல்போன் சார்ஜர் இல்லை. இந்த ஸ்கூட்டர் 5 விதமான வண்ணங்களில் கிடைக்கிறது. ரூ.56,459 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

06. ஹோண்டா ஆக்டிவா ஐ

06. ஹோண்டா ஆக்டிவா ஐ

ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டர் 103 கிலோ எடை கொண்டது. இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 109சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரை அளிக்கும். லிட்டருக்கு 66 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. 5.2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

செல்ஃப் ஸ்டார்ட் வசதி, ட்யூப்லெஸ் டயர்கள் போன்ற அம்சங்களை பெற்றிருக்கிறது இருக்கிறது. மொபைல்போன் சார்ஜர் வசதி இல்லை. ஆனால், மற்ற மாடல்களைவிட இதில் கூடுதல் சிறப்பம்சமாக காம்பி பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் முன்பக்க, பின்பக்க சக்கரங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வண்டியை நிறுத்தும் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 6 விதமான வண்ணக் கலவைகளில் கிடைக்கிறது. ரூ.55,250 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 8, 2016, 16:16 [IST]
English summary
Top 6 Best light weight scooters for Women.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+