இந்தியாவிலேயே இப்படி ஒரு வண்டியை பார்க்க முடியாது! பிகாஸ் ஆர்யூவி 350 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ!
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் அப் நிறுவனமான பிகாஸ் நிறுவனம் இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த முடிவு செய்தது. அதன்படி தனது ஆர்யூவி 350 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது என்றால் ரைடர்ஸ் யூட்டிளிட்டி வெஹிகிள் என அர்த்தம் ஆகும். இந்த ரக ஸ்கூட்டர்கள் இந்தியா போன்ற நாட்டிற்கு மிகப் பெரிய தேவையாக இருக்கிறது. இது தனித்துவமான ஸ்கூட்டராக உருவாக்கப்பட்டுள்ளது.
பிகாஸ் நிறுவனம் இந்த ஸ்கூட்டரை முற்றிலுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக உருவாக்கியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து விதமான சாலைகளிலும் அனைத்து விதமான ரோடு கண்டிஷன்களிலும் இயங்கும் வகையில், இந்த ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஸ்கூட்டரை ஓட்டி பார்க்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. புனேவில் உள்ள சாக்கன் என்ற நிறுவனத்தின் தயாரிப்பு ஆலையில் ஸ்கூட்டரை ஓட்டி பார்த்தோம்.

பிகாஸ் ஆர்யூவி 350 ஸ்கூட்டரை பார்க்கும்போது இன்று சாலையில் பார்க்கும் கூட்டத்தை விட சற்று வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறது. தாய்லாந்து போன்ற நாடுகளில் இது போன்ற ஸ்கூட்டர்களை காண முடியும். இந்தியாவில் இப்படியான ஸ்கூட்டர்கள் வருவது இதுதான் முதல் முறை. இந்த ஸ்கூட்டரின் முன்பக்கம் சதுர வடிவிலான ஹெட்லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் பக்கவாட்டுப் பகுதிகளில் டார்ன் சிக்னல் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரின் முன்பக்க மத்திய பகுதி கிளாஸி கருப்பு நிற செக்ஷன் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிகாஸ் லோகோ சரியான இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் வடிவமைப்பில் மிக முக்கியமான ஹைலைட்டாக இருப்பது இதில் உள்ள 16 இன்ச் அலாய் வீல் தான்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இடையே மிகப் பெரிய அலாய் வீலாக இந்த வீல் தான் இருக்கிறது. இந்த வீல் 3 விதமான கலராக இருக்கிறது. கிரே, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் ஆகிய கலராக இருக்கிறது. இது மெட்டல் பாடி பேனல் நிறத்துடன் கான்ட்ராஸ்ட் டூயட் நிறமாக காட்சியளிக்கப்படுகிறது.
இந்த ஆர்யூவி 350 ஸ்கூட்டரில் அகலமான ஃப்ளோர் போர்டு வழங்கப்பட்டுள்ளது சீட்டுகள் எல்லாம் சாஃப்டாக வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கம் சிங்கிள் பீஸ் கிராப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்க லைட்டுகள் காம்பேக்டாகவும் டர்ன் லைட் சிக்னல் மற்றும் மற்ற லைட்டிங் அம்சங்களுடன் இது வழங்கப்பட்டுள்ளது.

இந்த பிகாஸ் ஆர்யூவி 350 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை 5 இன்ச் கொண்ட டிஎஃப்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது ஐபி67 ரேட்டிங் உடன் இருக்கிறது. இதில் கால் நோட்டிபிகேஷன் சார்ஜிங் குறித்த தகவல்கள் எல்லாம் இடம்பெறுகின்றன. மேலும் ரைடர் எந்த மோடில் ரைடிங் செய்து கொண்டிருக்கிறார் என்ற தகவலும் இதில் வருகிறது. இதை நீங்கள் வலது பக்க ஹேண்டில் பாரில் உள்ள பட்டன் மூலம் கண்ட்ரோல் செய்ய முடியும்.
இந்த ஸ்கூட்டரின் சீட்டுக்கு கீழே உள்ள ஸ்டோரேஜ் பகுதி சற்று சிறிதாக தான் இருக்கிறது. இது ஆஃப் சைஸ் ஹெல்மெட்டை மட்டுமே வைக்கக் கூடியதாக இருக்கிறது. அங்கு தான் நீங்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சார்ஜிங் போர்ட்டையும் காணமுடியும். இதுபோக பவர்டெரைன் ஸ்விட்சும் இருக்கிறது. நீண்ட நாட்களாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் சுவிட்ச் ஆப் செய்து வைப்பதன் மூலம் பேட்டரி பாதுகாப்பாக இருக்கும்.

அதிக ஸ்டோரேஜ் விரும்பும் மக்களுக்கு முன்பக்க ஏப்ரான் பகுதியில் சிறிய பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் போன் உள்ளிட்ட சில முக்கியமான பொருட்களை வைத்துக் கொள்ளலாம். நீங்கள் பலசரக்கு கடைக்கு சென்று விட்டு வரும்போது அவர்களை தொங்கவிட்டுக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. இதில் நீங்கள் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்டுகளையும் காண முடியும்.
இதுபோக ப்ளோர் போர்டுக்கு கீழேயும் ஸ்டோரேஜ் பகுதி இருக்கிறது. இந்த பகுதி பெரும்பாலும் சார்ஜிங் கேபிள்களை வைக்கப் பகுதியாக பயன்படுத்த முடியும். இந்த ஸ்டோரேஜ் பகுதியை முற்றிலுமாக லாக் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் நீங்கள் எதையாவது மறைத்து வைக்க வேண்டும் என விரும்பினால் இந்த பகுதியை பயன்படுத்தலாம்.

நாங்கள் தயாரிப்புக்கு முந்தைய வெர்ஷன் ஸ்கூட்டரை தான் ஓட்டி பார்த்தோம். இதில் பெயிண்ட் ஃபினிஷ் மற்றும் பேனல் சரியில்லாமல் இருந்தன. முக்கியமாக டிஸ்ப்ளே பகுதிகளில் பல விஷயங்கள் சரியாக இல்லை. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக் எல்லாம் சீப்பாக இருந்தது. சுலபமாக ஸ்கிராட்ச் ஆகும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக இருந்தது. ஃப்ளோர் போர்டு பகுதியில் வழங்கப்பட்டுள்ள ஸ்டோரேஜ் பகுதி சற்று வித்தியாசமாக இருந்தது.
இந்த பிகாஸ் ஆர்யூவி 350 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை ஹைபர் டிரைவிங் வீல் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 4.69 பிஎச்பி பவரையும் 165 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள டார்க் வீல் டார்க் ஆகும். இதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை பொறுத்த வரை 3 கிலோ வாட் ஹவர் லித்தியம் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த ஸ்கூட்டரை முழுவதுமாக சார்ஜ் செய்து ஓட்டினால் 135 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் தரும் என ஏஆர்ஏஐ சான்று அளித்துள்ளது. ரியல் வேல்டில் இந்த
ஸ்கூட்டர் 120 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் தரும் என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள பேட்டரி பேக்கேஜ் 0- 80 சதவீதம் வரை 1.35 கிலோ வாட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால் 1 மணி நேரம் 55 நிமிடம் வரை எடுத்துக் கொள்ளும், முழுவதுமாக சார்ஜ் செய்ய கூடுதலாக 40 நிமிடங்கள் தேவைப்படும். இதுபோக ஸ்லோ சார்ஜிங் ஆப்ஷன்களும் வழங்கப்படுகிறது.
ஸ்லோ சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் ஏற்றினால் 840 வாட் சார்ஜரை பயன்படுத்தும் போது 3 மணி நேரம் 55 நிமிடத்திலும், 500 வாட் சார்ஜரை பயன்படுத்தும் போது 6 மணி நேரம் 50 நிமிடத்திலும் இந்த ஸ்கூட்டர் சார்ஜ் ஆகிறது. இந்த ஸ்கூட்டர் எக்கோ ரைட்டிங் மோட்டில் அதிகபட்சமாக 45 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க உதவுகிறது. இதுபோக மற்ற இரண்டு மோடுகள் பயன்பாட்டில் இருக்கிறது.
ரைடு மோடை பொருத்தவரை அதிகபட்சம் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் ஸ்போர்ட்ஸ் மோடை பொருத்தவரை அதிகபட்சம் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் பயணிக்க முடியும். இந்த ஸ்கூட்டர் 0-40 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 5.4 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது.
இந்த ஸ்கூட்டரை சாலையில் ஓட்டி பார்க்கும்போது ரெகுலரான ஸ்கூட்டர் ஃபீல் தான் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரில் ஆரம்பத்தில் இருக்கும் பவர்ஃபுல்லான பன்ச் மற்ற ஸ்கூட்டர்களில் இல்லை என்ன சொல்லலாம். மோடுகளை மாற்றும்போது ஏற்படும் பெர்ஃபார்மென்ஸ் மாற்றம் என்பது மிகச் சிறப்பாக இருக்கிறது.
நாங்கள் விரும்புவது ஸ்போர்ட்ஸ் மோட் தான். நீங்கள் பெர்ஃபார்மென்ஸ் ரேஞ்சும் சிறப்பாக பெற விரும்பினால் உங்களுக்கு ரைடு மோடு ஏற்றதாக இருக்கும். அதிக ரேஞ்ச் பயணிக்க விரும்புபவர்களுக்கு எக்கோ மோடு சிறந்ததாக இருக்கும். ஆனால் இதில் பெர்ஃபார்மென்ஸ் குறைவாக தான் இருக்கும்.
கரடு முரடான சாலைகளிலும் இந்த பைக் சிறப்பாக செயல்பட்டது. பள்ளமேடுகளை இதன் முன்பக்கம் உள்ள சஸ்பென்ஷன் சிஸ்டம் நன்றாக தாங்கியது. பின்பக்கம் உள்ள சஸ்பென்ஷன் சிஸ்டம் கொஞ்சம் ஸ்டிஃப்பாக இருப்பது போன்ற தோற்றம் இருக்கிறது. பின்பக்க பில்லியன் ரைடர் அமர்ந்து செல்லும்போது இது கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம்.
இந்த ஸ்கூட்டரில் நீங்கள் வேகமாக சென்று திரும்பும் போது ஸ்கூட்டர் சின்னதாக இருப்பதாலும், டயர் பெரியதாகவும், அகலமும் குறைவாக இருப்பதாலும், உங்களுக்கு கான்ஃபிடென்ஸ் கிடைக்காமல் போகலாம். இதனால் விபத்து ஏற்பட கூட வாய்ப்பு இருக்கிறது. இதனால் வாகனத்தை கவனமாக திருப்ப வேண்டும்.
இந்த ஸ்கூட்டரில் உள்ள மற்றொரு முக்கியமான பிரச்சினை பிரேக் தான் பின்பக்க பிரேக் சிறப்பாக வேலை செய்கிறது. காம்பி பிரேக் சிஸ்டமும் சிறப்பாக சரியான நேரத்தில் வேலை செய்கிறது. முன்பக்க பிரேக் ஸ்டேபிள் இல்லாமல் இருக்கிறது. இது உங்களுக்கு கான்ஃபிடென்ஸ் கெடுக்கும் வகையில் அனுபவத்தை கொடுக்கும் இனிஷியல் பைக் மற்றும் ஸ்டாப்பிங் பவர் இதில் குறைவாக இருக்கிறது.
இறுதி தீர்ப்பு: பிகாஸ் ஆர் யூ 350 இந்திய இவி ஸ்டார்ட் அப் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்டிலும் வித்தியாசமான லுக்கில் இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் ரேஞ்ச் மற்றும் டிசைன் ஆகியவை மக்களை ஈர்க்கும் வகையில் இருக்கிறது. பெரிய அதே நேரம் குறுகிய அகலம் கொண்ட டயர்கள் ஸ்டிஃப்பான சஸ்பென்ஷன் மற்றும் சீப்பான பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள குறைகளாக சொல்லலாம்.
இந்த ஸ்கூட்டரில் உள்ள வித்தியாசமான ஸ்டோரேஜ் சிஸ்டம் மற்றும் வித்தியாசமான ஸ்கூட்டரை விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். தினந்தோறும் பயன்பாட்டிற்கு இந்த ஸ்கூட்டரை பயன்படுத்தலாம் ஆனால் இதை நீண்ட நேரம் நாங்கள் ஓட்டி பார்த்தால் தான் இதில் உள்ள நிறைகுறைகளை தெளிவாக சொல்ல முடியும். இதற்கான வாய்ப்பு விரைவில் அமைதியும் என நம்புகிறோம்.


Click it and Unblock the Notifications









