ஊருக்குள்ள இந்த பைக்கை ஓட்டிட்டு போன செம மாஸா இருக்கும்! ஹீரோ கரீஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக் எப்படி இருக்குது?
கடந்த 2003-ம் ஆண்டு நாமும் நமது இந்திய சாலைகளும் புதிய பைக்கில் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் ஹீரோ மோட்டோகார்ப் (அப்பொழுது ஹீரோ ஹோண்டா) நிறுவனம் தனது புதிய ஸ்போர்ட்ஸ் டூரர் டூவீலர் பைக்கை அறிமுகப்படுத்தியது. இந்த பைக் இந்திய சாலைகளில் வேகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி விட்டது என சொல்லலாம்.
அந்த காலத்தில் ஹீரோ நிறுவனமும் ஹோண்டா நிறுவனமும் இணைந்து செயல்பட்டது. அப்பொழுது வெளியான ஹீரோ ஹோண்டா கரீஷ்மா பைக் இந்திய சாலைகளில் டூவீலரில் லுக்கையே மாற்றி அமைத்தது. இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஹீரோ நிறுவனம் மீண்டும் தனது கரீஷ்மா பைக்கை அப்டேட் செய்து அதற்கு புது அவதாரத்தை வழங்கியுள்ளது.

புதிதாக ஹீரோ நிறுவனம் தற்போது கரீஷ்மா எக்எம்ஆர் என்ற பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் பழைய கரீஷ்மா பைக் பெற்ற அளவுக்கு பெயரை பெறுமா என்பதை பார்க்க நாங்கள் இந்த ஹீரோ கரீஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கை டெல்லி சாலைகளில் ஓட்டி பார்த்தோம். எங்கள் அனுபவம் எப்படி இருந்தது என பார்க்கலாம் வாருங்கள்.
டிசைன் மற்றும் அம்சங்கள்: புதிய ஹீரோ கரீஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கை பார்க்கும் போதே இது அதன் முந்தைய பைக்கை விட பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. கரீஷ்மா பைக்கை முதலில் டிசைன் செய்தது ஹோண்டா நிறுவனம் தான் . 2014 ஆம் ஆண்டு இசட்எம்ஆர் மற்றும் ஆர் வரிசையில் உள்ள பைக்குகள் எல்லாம் ரேசிங் டிசைன் டிபார்ட்மெண்ட் மூலம் பல்வேறு டிசைன் மாற்றங்களை பெற்றது.

புதிய ஹீரோ கரீஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கை பொறுத்தவரை முற்றிலுமாக ஹீரோ நிறுவனம் டிசைன் செய்தது. இதில் எச் வடிவ டி ஆர் எல் மற்றும் எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. இந்த எச் வடிவ டி ஆர் எல் எல், எல்இடி ஹெட்லைடிற்கு இடையே வழங்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் மல்டி ஏரோ டைனமிக்ஸ் கொண்ட பல்வேறு டிசைன் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த டிசைன் எல்லாம் இந்த பைக் காற்றைக் கிழித்துக்கொண்டு வேகமாக செல்லவும் அதே நேரத்தில் பைக்கின் இன்ஜின் விரைவாக கூலாகவும் பயன்படும் என ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எக்ஸ்எம்ஆர் மற்றும் ஹீரோ ஆகிய லோகோக்கள் தெளிவாக தெரிகிறது.

இந்த பைக்கில் மஸ்குலர் ஆன 11 லிட்டர் கொள்ளளவு கொண்ட பியூயல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கருப்பு நிற பேனல்கள் நீங்கள் கால் முட்டியை வைக்கும் பகுதிக்கு கொஞ்சம் மேலே வழங்கப்பட்டுள்ளது. இது கரீஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்குகளுக்கு எக்ஸ்ட்ரா லேயர் டெக்சராகவும் காண்ட்ராஸ்டாகவும் வழங்கப்பட்டுள்ளது.
மற்றொரு முக்கியமான டிசைன் ஹைலைட்டை பொருத்தவரை இந்த கரீஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கில் கிளிப் ஆன் ஹேண்டில் பார்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் இன்ஜின் ஹைலைட்களும் இருக்கிறது. மேலும் இந்த பைக்கில் 14 ஸ்போக் அலாய் வீல்களும், ஸ்பிளிட் சீட் செட்டப்பும், ஸ்டப்பியான எக்ஸாஸ்ட் மற்றும் குறுகலான பின்பக்கம் ஸ்பிளிட் கிராப் ரெயின் உடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கரீஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இது எல்சிடி வடிவில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்டேன் நேவிகேஷன், இன்கம்மிங் கால், எஸ்எம்எஸ் அலர்ட் ஆகிய வசதிகள் இருக்கிறது. மேலும் இந்த பைக்கில் பாஸ்ட் சார்ஜிங் யுஎஸ்பி போர்ட்டுகளும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஸ்பெக்ஸ் மற்றும் டைமென்ஷன்: இந்த ஹீரோ கரீஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கை பொறுத்தவரை புதிய லிக்யூட் கூல்டு 210 சிசி டிஓஎச்சி சிங்கள் சிலிண்டர்,4 வால்வு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 25.15 பிஎச்பி பவரை 9250 ஆர்பிஎம்மிலும் 20.4 என்எம் டார்க் திறனை 7250 ஆர்பிஎம்மிலும் வழங்குகிறது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஸ்லீப்பர் மற்றும் அசிஸ்டன்ட் அம்சங்களுடன் இருக்கிறது.

இந்த கரீஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கை பொறுத்தவரை புதிய ட்ரையல்ஸ் பிரேம் செட்டப் அதிக டென்சில்ஸ் கொண்ட ஸ்டீல்களை கொண்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் சஸ்பென்ஷனை பொறுத்தவரை முன்பக்கம் 37மிமீ டெலஸ்கோபிக் போக்குகளும், பின்பக்கம் 6 ஸ்டெப்புகள் கொண்ட கேஸ் சார்ஜர் ஃப்ரீ லோடட் அட்ஜஸ்ட்மென்ட் மோனோ ஷாக் அப்சர்வர்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பைக்கை பொறுத்தவரை 17இன்ச் அலாய் வீல், 100/ 80 என்ற டயருடன் முன்பக்கமும் 140/70 என்ற டயருடன் பின்பக்கமும் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொறுத்தவரை பீட்டில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. 2 வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் இருக்கிறது. மேலும் இந்த பிரேக்குகள் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 300மிமீ டிஸ்க்கும் பின்பக்கம் 220மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஹீரோ கரீஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கை பொறுத்தவரை 2068 மிமீ நீளமும் 760 மிமீ அகலமும் 110 மிமீ உயரமும் 1351 மிமீ வீல் பேஸூம் இருக்கிறது. இந்த கரீஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கை பொறுத்தவரை மொத்தம் 163.5 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. இந்த பைக் 160 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் 810 மிமீ சீட் உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது.
ரைடிங் இம்ப்ரஷன்: புதிய ஹீரோ கரீஷ்மா எக்ஸ் எம்ஆர் பைக்கே பொருத்தவரை ஸ்போர்ட் டூரர் ரக பைக்காக வந்துள்ளது. இந்த பைக் முற்றிலுமாக புதிய பைக்காக அதே நேரம் கரீஷ்மா என்ற பெயரை மட்டும் பழைய பைக்கில் இருந்து எடுத்து வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வரவுள்ளது.
இந்த பைக்கில் லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது சில்க் போன்ற ஸ்மூத்தாக செயல்படுகிறது. நீங்கள் 100 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் சென்றாலும் ஒரு சின்ன வைப்ரேஷன் கூட இல்லாமல் இருக்கிறது 4500 ஆர்பிஎம் வரை இன்ஜின் மெதுவாக தான் பிக்அப் ஆகிறது. ஆனால் அதற்குப் பிறகு பவர் சூப்பராக வெளிப்படுத்துகிறது.
5000 ஆர்பிஎம் முதல் 9500 ஆர்பிஎம் வரை இன்ஜின் தனது பெஸ்ட்டான திறனை வெளிப்படுத்துகிறது. பைக் 9,800 ஆர்பிஎம்மிற்கு மேல் செல்லும் போது தான் அதிகமான வேகத்தை எட்டுகிறது. இந்த பைக்கில் ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்டன்ட் கிளட்ச் இருப்பதால் கியர் மாற்றவது சுலபமாக இருக்கிறது. இதனால் இந்த பைக் ஓட்டும் அனுபவம் மிகவும் சிறப்பாக இருக்கிறது.
இந்த ஹீரோ கரீஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கை பொறுத்தவரை நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு சிறந்த பைக்காக இருக்கும். அதனால் இதன் சீட்டுகள் எல்லாம் சிறப்பான குஷன் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளன. நீண்ட தூர பயணத்தை செய்யும் போது இந்த சீட்டுகள் பயணிகளுக்கு சொகுசான அனுபவத்தை வழங்குகிறது. மேலும் ஃபூட் ரெஸ்ட்கள் எல்லாம் சற்று பின் தள்ளி இருக்கிறது. ஹேண்டில் பார்களும் உயர் உயரம் குறைவாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த கரீஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கின் சஸ்பெண்டன்ஸ் செட்டப்பை பொறுத்தவரை முன் பக்கம் கொஞ்சம் சாஃப்டாக வழங்கப்பட்டுள்ளது. அதனால் முன்பக்கம் ஏதாவது மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும் போது அதிகமான அதிர்வுகளை காண முடியும். ஆனால் பின்பக்கம் சிறப்பான சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தத்தில் டிரைவிங் அனுபவம் சிறப்பாக இருக்கும்.
இந்த பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் இருந்தாலும் சற்று வித்தியாசமாக செயல்படுகிறது. முன்பக்கம் ஏபிஎஸ் மிக மெதுவாக தான் ரியாக்ட் ஆகிறது. ஏபிஎஸ் இருக்கிறதா இல்லையா என்று தெரியாத நிலையில் தான் செயல்படுகிறது. பின்பக்கம் காரில் திரும்பும் போது சற்று வித்தியாசமான செயல்பாட்டை உணர முடிகிறது.
இறுதி தீர்ப்பு: ஹீரோ கரீஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கை பொறுத்தவரை ஹிரோவின் கரீஷ்மா என்ற பெயரை மீண்டும் உயிர்த்தெழும்ப வைத்துள்ளது. இந்த பைக் ஸ்போர்ட்ஸ் டூரர் என்ற பெயரைப் பெற்றுள்ளது. இந்த பைக் ரூபாய் 1.73 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஹீரோ கரீஷ்மா எக்ஸ்எம்ஆர் முதன்முறையாக ஸ்போர்ட் டூரர் பைக்கை வாங்குபவர்களுக்கும் கொஞ்சம் பழைய நினைவுகளுடன் பைக் ஓட்ட நினைப்பவர்களுக்கும் சிறந்த பைக்காக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









