ராயல் என்ஃபீல்டு ஷோரூம்ல ஈ கூட மொய்க்காது போல, ஹீரோ மேவ்ரிக் 440 பைக் இவ்வளவு சூப்பரா இருக்குதா?
440 சிசி, ஏர் அல்லது ஆயில் கூல்டு இன்ஜின் 27 பிஎச்பி பவர் மற்றும் 36 என்எம் டார்க் திறன என நாங்கள் சொன்னதும் உங்கள் மனதிற்கு தோன்றுவது என்ன பைக்? பலருக்கும் ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 பைக் தான் தோன்றியிருக்கும்.
ஆனால் நாம் இங்கே அந்த பைக்கை பற்றி காணப் போவதில்லை. ஹீரோ மோட்டார் சைக்கிள் நிறுவனம் ஹார்லி டேவிட்சன் உடன் சேராமல் தனியாக தயாரித்து உள்ள ஹீரோ மேவ்ரிக் 440 பைக் பற்றி தான் இந்த பதிவில் விரிவாக காணப் போகிறோம்.

சமீபத்தில் தான் புதிய பைக்கை அறிமுகப்படுத்தியது மேவ்ரிக் 440 என்ற பெயர் கொண்ட இந்த பைக். ரூபாய்1.99 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இது பேஸ் வேரியன்டிற்கான விலை தான். டாப் வேரியன்டின் விலை ரூ2.24 லட்சம் ஆகும். இதன் டிசைனுக்காக மட்டுமல்ல இந்த பைக்கின் இன்ஜினிற்காகவும் இந்த பைக் மக்கள் மத்தியில் மிகப்பெரிய பேசப்படும் பொருளாக மாறி உள்ளது.
ஹீரோ நிறுவனம் ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கிற்க்கு பயன்படுத்தும் இன்ஜினை கொண்டு ஹீரோ பிராண்டில் மேவ்ரிக் என்ற புதிய பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கை ஓட்டி பார்க்க எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு அழைப்பு வந்ததன் பேரில் நாங்கள் ஓட்டி பார்க்க குஜராத் மாநிலம் புஜ் பகுதிக்கு சென்றோம். எங்களது விரிவான விமர்சனங்களை காணலாம் வாருங்கள்.

டிசைன் மற்றும் ஸ்டைல்: ஹீரோ மேவ்ரிக் பைகிற்கான ஸ்டைலிங் கிளாசிக் ரோடுஸ்டர் பைக்கின் ஸ்டைலாக இருக்கிறது. லோ ஸ்லங் புரோபைலாக இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பியூயல் டேங்க் மஸ்குலராக இருக்கிறது. இன்ஜின் பெரிதாக வெளியேறும் தெரியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்ரஸன் மற்றும் கிரேஸ் சமமான அளவு இருக்கும் படி இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் வீல் பேஸ் சற்று பெரியதாக இருக்கிறது.
இந்த பைக்கின் வீல் பேஸ் பெரிதாக இருப்பதால் இதன் ரைடிங் பொசிஷன் அக்ரஸிவான பொசிஷனில் இருக்கிறது. இதன் வீல் பகுதியும் பெரிதாக உள்ளது. ரோடுஸ்டர் பைக்கிற்கான எக்ஸாஸ்ட் எப்படி இருக்குமோ அதே போலவே இதிலும் இருக்கிறது. இந்த பைக்கின் பாடி பகுதி பெரும்பாலும் மெட்டலால் உருவாக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு சற்று பிரீமியம் பைக் போலவே காட்சி அளிக்கிறது.

இந்த பைக் எலகென்ஸான லுக்கில் இருக்கிறது. முன்பக்க வட்ட வடிவிலான ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. இதில் Hவடிவ டிஆர்எல்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்பக்க ஹெட்லைட் தான் இதன் லுக்கிற்க்கு டாமினேட் செய்யும் வகையில் இருக்கிறது. இந்த பைக் ரெட்ரோ ஸ்டைலில் இருக்கிறது. முன்பக்கம் 43மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் விண்டு ஷீல்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் சரியாக பார்க்கவில்லை என்றால் தெரியாது என்ற அளவில் தான் இது சிறிதாக வழங்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக பைக்கின் பக்கவாட்டு பகுதிக்கு சென்றால் நம்மை பெரிதாக கவனத்தை ஈர்க்கக் கூடியது. மஸ்குலரான பெரிய ஃப்யூயல் டேங்க் தான் . பக்கத்திலும் மேவ்ரிக் என்ற எழுத்து 3டியால் பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது டாப் வேரியண்டில் மட்டுமே இருக்கிறது. இதுபோக மேவ்ரிக் 440 என்ற பேட்ஜிங் பேட்டிங் மத்திய பகுதியில் ஃப்யூயல் கேப்பிற்க்கு கீழ்ப்பகுதியில் உள்ளது. பியூயல் கேப்பிற்கு மேல் பகுதியில் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்டுகள் உள்ளன.

பைக்கில் ஏறி அமர்ந்து ஹேண்டில் பாரை பிடித்தால் நீங்க தான் ரோட்டில் செல்லும் ராஜா என்ற நினைப்பு உங்களுக்கு வரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்லும் போது நமக்கு ஒரு கமெண்டிங் பொசிஷன் கிடைக்கிறது. இது நல்ல காஃபிடென்ஸை வழங்குகிறது.
இதனால் சாலையில் நீங்கள் யாரும் இல்லாத போது வாகனம் ஓட்டினால் இந்த பைக்கில் உள்ள ரைடிங் பொசிஷன் சீட்டிங் பொசிஷன் எல்லாம் உங்களுக்கு சிறப்பான ரைடிங் அனுபவத்தை தரும். மிட் செக்மெண்டில் என்ட்ரி லெவல் பைக்கில் இப்படியான வசதி இதுவரை நாம் வேறு எந்த பைக்கிலும் பார்த்ததில்லை.

பைக்கில் பொருத்தப்பட்டுள்ள ரியர்வியூ மிரர் வட்ட வடிவில் இருப்பதால் இது ஒரு ரெட்ரோ லுக்கை தருகிறது. அதேநேரம் பின்பக்கம் உள்ள வாகனங்கள் தெளிவாக தெரியும்படி நல்ல விஷனை கொடுக்கிறது. மெக்கானிக்கல் லுக் விரும்பிகளுக்காக இதை பைக்கில் எக்ஸ்போஸான இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஹீரோ நிறுவனம் இந்த 440 இன்ஜினை எப்படி எல்லாம் வடிவமைத்துள்ளது என்பதை வெளியில் காட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் இன்ஜின் கேஸிங்கிலும் ஹீரோ லோகோ என்பது இருக்கிறது.
இந்த பைக்கின் பின்பகுதியை பொறுத்தவரை ஸ்ட்ராங்கான கிராப் ரெயில்கள் மற்றும் பிரேக் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. பிரேக் லைட் H வடிவில் இருக்கிறது இதுபோக வட்ட வடிவிலான இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதே போன்ற இண்டிகேட்டர் தான் முன் பக்கமும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெக் மற்றும் டைமென்ஷன்: இந்த ஹீரோ மேவ்ரிக் பைக்கில் 440 சிசி ஆயில் அல்லது லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின் 26 பிஎச்பி பவரையும் 37 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.
முன்பக்கம் 43 எம்எம் டெலஸ்கோப்பிக் போர்க்கும் பின்பக்கம் 7 ஸ்டெப் அட்ஜஸ்டபிள் கொண்ட டுயின் ஷாக் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 803மிமீ சீட்டு உயரம் உள்ளது. 175மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கிறது. இந்த பைக்கின் வீல் பேஸை பொருத்தவரை 1388 மிமீ உள்ளது. மொத்தம் 191 கிலோ எடை கொண்டதாக இந்த பைக் இருக்கிறது.
நாங்கள் இந்த ஹீரோ மேவ்ரிக் பைக்கை குஜராத் மாநிலம் புஜ் என்ற நகரில் இருந்து டென்ட் சிட்டி என்ற பகுதிக்கு ஓட்டி சென்றோம் 100 கிலோ மீட்டர் தூரம் இந்த பைக்கை நாங்கள் ரைடு செய்து பார்த்தோம். ஒட்டுமொத்தமாக இந்த ரைடிங் அனுபவம் எங்களுக்கு இந்த பைக்கின் சிறந்த பெர்பார்மன்ஸையும் சொகுசு அனுபவத்தையும் வெளிகாட்டும் விதமாக அமைந்திருந்தது.
இந்த பைக்கை ஓட்டியது என்பது சுலபமாக இருந்தது. மிகக் குறைவான நேரத்தில் இந்த பைக்கை ஓட்டுவதற்கு நாங்கள் அடாப்டிங் டைமிங் எடுத்துக் கொண்டோம். இது பைக்கின் சீட் கம்போர்ட் சிறப்பாக இருந்தது. இது ஒட்டுமொத்த ரைடிங் அனுபவத்திற்கு நல்ல பலனை தந்தது. இந்த பைக்கில் உள்ள அகலமான ஹேண்டில்பார் ரைடருக்கு கமாண்டிங் பொசிஷனை தருவதால் சாலையில் அக்ரசிவாக இந்த பைக்கை ஓட்டுவதற்கு சுலபமாக இருந்தது.
இந்த பைக்கில் உள்ள சாஃப்டான சஸ்பென்ஷன் ஓட்டுவதற்கு மிக மிருதுவான அனுபவத்தை நமக்கு கொடுத்தது. ஒரு சில இடங்களிலேயே பைக் துள்ளி குதிக்கும் உணர்வை எங்களால் உணர முடிந்தது. ஹார்டான கார்னர் எடுக்கும் போது சற்று சிரமமாக இருந்தது. முக்கியமாக ஆஃப் ரோடு பயணத்தின் போது இந்த பைக் அதிகமான பள்ள-மேடுகளை தாங்கி சிறப்பான அனுபவத்தை கொடுத்தது.
இன்ஜின் பெர்பார்மன்ஸை பொறுத்தவரை 440 சிசி இன்ஜின் சற்று சோம்பேரியான இன்ஜின் போல தான் இருந்தது. முக்கியமாக 4000 ஆர்பிஎம்-க்கு மேல் செல்லும்போது ஆக்சிலரேஷன் பெரிய அளவில் எடுபடவில்லை என்பது நமக்கு கிடைத்த அனுபவமாக உள்ளது. அதனால் அதிக வேகத்தில் பெரிய அளவில் ஃபெர்பான்ஸை பெற முடியவில்லை.
இன்ஜினை பொறுத்த வரை பெரிய அளவில் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை. பிரேக்கிங் பொருத்தவரை முன்பக்கம் ஏபிஎஸ் கேலிபிரேசன் பிரேக்கிங் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் எந்த பிரச்சினையும் இல்லை. பின்பக்கம் உள்ள பிரேக்கிங் சற்று மேம்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. சில நேரங்களில் பிரேக்கிங் சற்று வீக்காக இருப்பதாக உணர்கிறோம்.
ஆனால் இந்த பின்பக்கம் பிரேக்கிங்கிற்க்கு ஈடு கட்டும் வகையில் இன்ஜின் பிரேக்கிங் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் முக்கியமான பல தகவல்களை வழங்குகிறது. இதில் உள்ள ஆர்பிஎம் மீட்டர் மிகத் தெளிவாக தகவல்களை வழங்கவில்லை என்பது ஒரு பிரச்சனை தான். இது நீண்ட தூர ரைடர்களுக்கு சற்று பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இறுதி தீர்ப்பு: இந்த ஹீரோ மேவ்ரிக் பைக் நல்ல சொகுசு அனுபவம் மற்றும் கமெண்ட்டிங்கான ரோடு பிரெசன்ஸ் ஆகியவை காரணமாக சிறப்பாக இருக்கிறது என சொல்லலாம். இதிலுள்ள சாஃப்ட் சஸ்பென்ஷன் மற்றும் இன்ஜின் கேரக்டர்கள் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. டைனமிக் பெர்ஃபார்மென்ஸ் செய்ய விரும்பும் ரைடர்களுக்கு இது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது.
இந்த பைக்கில் உள்ள பிரேக்கிங் சிஸ்டத்தை மேம்படுத்துவது இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் சில தகவல்களை தெளிவாக வழங்குவதன் மூலம் ஒட்டுமொத்த ரைடிங் அனுபவத்தை சிறப்பாக மாற்ற முடியும். லாங்கு ரேஞ்ச் என்றாலும் சரி அப்போது வெளியே எடுத்து செல்வதற்கும் இந்த பைக் ஒரு நல்ல ஆப்ஷன் தான்.


Click it and Unblock the Notifications









