ரோடே இல்லேனாலும் இந்த பைக்குல சும்மா பிச்சு உதறலாம்! அப்படி என்ன இருக்குது இதுல?
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் முதன் முறையாக ஹீரோ நிறுவனம் தனது எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை முதன்முறையாக இந்திய மக்களுக்கு காட்சிப்படுத்தியது. இதனால் இந்தியாவில் உள்ள ஸ்போர்ட்ஸ் பைக் விரும்பிகள் மத்தியில் இந்த பைக் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த பைக் பெரிய அளவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக பிஎஸ் 6 தரத்தில் தயாரிக்கப்பட்ட இந்த பைக்கில் பொருத்தப்பட்ட இன்ஜின் சிறப்பாக இருந்ததால் பலர் இந்த பைக்கை விரும்பி வாங்கினார்கள்.
இந்நிலையில் ஹீரோ நிறுவனம் கடந்த EICMA மோட்டார்ஸ் கண்காட்சியில் தனது எக்ஸ்பல்ஸ் 210 என்ற அப்டேட் செய்யப்பட்ட பைக்கை காட்சிப்படுத்தியது. இது எக்ஸ்பிரஸ் 200 பைக்கிலிருந்து சற்று வித்தியாசமாக அதிக பவர்ஃபுல்லாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் வடிவமைப்பு அதே எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் உள்ள அதே வடிவமைப்பு தான் இந்த பைக்கிலும் இருக்கிறது. இந்நிலையில் எக்ஸ்பல்ஸ் 210 பைக் ஓட்டிப்பார்க்க நமக்கு அழைப்பு வந்திருந்தது. அதன் பெயரில் டிரைவ்ஸ்பார்க் குழுவினர் உதய்ப்பூருக்கு சென்று இந்த பைக்கை ஓட்டி பார்த்தோம். இப்படியாக ஓட்டி பார்க்கும்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை இங்கே உங்களுக்காக பகிர்ந்துள்ளோம்.

ஹீரோ நிறுவனம் தனது எக்ஸ்பிரஸ் 200 பைக்கில் இருந்து எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ் 210 பைக்கை தயாரிக்கும் போது பழைய பைக்கில் இருக்கும் எந்த விஷயமும் ஒன்றாக இருக்காது. முன்பக்க லிவிங் பொசிஷன் மட்டுமே ஒன்றாக இருக்கும் என கூறியிருந்தார்கள். இந்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 பைக்கை அந்நிறுவனம் அந்நிறுவனத்தில் உள்ள மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரைடரான ராஸ் பிரான்ச் துணை கொண்டு வடிவமைத்துள்ளார்கள். இந்த வடிவமைப்பு டேக்டர் செய்யப்பட்ட டிசைன் அம்சங்கள் கொண்ட பைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் உள்ள அனைத்து பாகங்களும் சற்று உயரமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக முன் பக்க ஃபென்டர் உயரத்தில் இருக்கிறது. இதுபோக உயரமான விண்டு ஸ்க்ரீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் உள்ள லைட்டுகள் எல்லாம் எல்இடி லைட் செட்டப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது முன்பக்கம் வட்ட வடிவிலான ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஹீரோவின் எச் வடிவ எல்இடிகளும் வழங்கப்பட்டுள்ளன. மஸ்குலரான பெட்ரோல் டேங்க் எக்ஸ்டென்ஷன் செட்டப் உடன் வழங்கப்பட்டுள்ளது. சிங்கிள் பீஸ் சீட் இதில் வழங்கப்பட்டுள்ளது. சற்று மேலே தூக்கி வைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் சிஸ்டம் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது எல்லாம் டேக்கர் ரேஸ் பைக் இன் டிசைன் வடிவமைப்பு இன்ஸ்பிரேஷன் ஆகும்.

இந்த பைக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள சீட்டுகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. இதனால் ரைடர் எளிதாக சீட்டில் இருந்தபடியே கிரவுண்டில் தனது காலை நிறுத்திக் கொள்ள வசதியாக இருக்கிறது. அதே நேரம் எக்ஸாஸ்ட் சிஸ்டம் சற்று உயரமாக வைக்கப்பட்டிருந்தாலும், பின்பக்கம் இருக்கும் பயணி காலை வைக்கும் போது அவருக்கு கால் சூடு தெரியாத அளவுக்கு புரொடெக்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக இந்த பைக்கில் இருக்கும் வீல்கள் எல்லாம் வயர்டு வீல்களாக வழங்கப்பட்டுள்ளன. ஹேண்டில் பார் எல்லாம் டியூப்லர் ஹேண்டில் பார்களாக இருக்கிறது. அதே நேரம் ஹெட்லைட்டிற்க்கு சற்று மேலே கிராப் ஹேண்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. பைக் எங்கேயாவது கீழே விழுந்தால் அதை எளிதாக தூக்குவதற்கு இது பயன்படும்.
மேலும் இந்த பைக் ஆப்-ரோடு ஆப்ஷன் கொண்ட பைக் என்பதால் இதில் மெட்டல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆஃப் ரோடு பயணத்தின் போது ஏதாவது கற்களோ அல்லது கனமான பொருளோ நேராக இன்ஜினை வந்து தாக்கி இன்ஜினை செய்த படுத்தாமல் இருப்பதற்காக பாதுகாப்பிற்காக இந்த பாஸ்பிளேட் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்க கேரியரில் இண்டர்கிரேட் செய்யப்பட்ட கிராப் ரெயில்கள் பின்பக்க ரைடர்களுக்காக வழங்கப்பட்டுள்ளன.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 பைக்கில் உள்ள டாப் வேரியன்டில் 4.2 இன்ச் கொண்ட டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இதில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷன் இருக்கிறது மேலும் இதில் ஸ்விட்ச் செய்யக்கூடிய டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் இருக்கிறது. இது 3 விதமான மோடுகளில் வேலை செய்யும். ரோடு, டிரையல் மற்றும் அஃப்ரோடு ஆகிய மோடுகளை நாம் தேர்வு செய்து கொள்ள முடியும். இதுபோக உயரமான விண்டு ஸ்கிரீன் நக்கில் காட் பின்பக்க கேரியர் எல்லாம் இருக்கிறது.
பேஸ் வேரியண்டில் எல்சிடி ஸ்கிரீன் செட்டப் தான் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறிய வண்டி ஸ்கிரீன் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் மட்டுமே இதில் வழங்கப்பட்டுள்ளது. இதுதான் இந்த இரண்டு வேரியண்டிற்கும் இருக்கும் பெரிய வித்தியாசமாக பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இந்த பைக் குறித்த இன்ஜின் பற்றிய விபரங்களை பார்ப்போம்.

இந்த பைக்கில் 210 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின் முதன்முதலாக கரீஷ்மா பைக்கிலும் நாம் பார்த்திருந்தோம் அதே தான் தற்போது இதிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இதில் சற்று வித்தியாசமாக இன்டெக் எக்ஸாஸ்ட் நோட் டிஃப்ரண்ட் மேப் மற்றும் கூலிங் செட்டப் எல்லாம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த புதிய எக்ஸ்பல்ஸ் 210 பைக் அதிகபட்சமாக 9,250 rpm-யில் 24.2 பிஎச்பி பவரையும் 7250 rpm-யில் அதிகபட்சமாக 20.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல் விட 30 சதவீதம் அதிகமாகும்.
ஹீரோ எக்ஸ்பிரஸ் பைக் இன் இந்த இஞ்சின் 6 பீட் டாக்ஸுடன் பொருத்தப்பட்டுள்ளது மேலும் இதில் அசிஸ்டன்ட் மற்றும் ஸ்லீப்பர் கிளட்ச் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன இதனால் நீண்ட தூரம் பயணிக்கும் போதும் கியரை அதிகப்படுத்தவும் குறைக்கவும் பெரிய அளவில் சிரமப்பட தேவை இல்லை. ஆறு கியர்கள் இருப்பதால் நீண்ட தூர பயணத்திற்கு இந்த பைக் சிறந்ததாக இருக்கும். அதிக பெட்ரோல் குடிக்காமல் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கலாம்.

புதிய ஹீரோ எக்ஸ்பிரஸ் 210 பைக்கில் அதிக டென்ஷன் கொண்ட ஸ்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோக டபுள் கேண்டில் பிரேம் வழங்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்பக்கம் டெலஸ்கோபிக் போக் வழங்கப்பட்டுள்ளது இது 210 மிமீ அளவில் வழங்கப்பட்டுள்ளது. இதில் பத்து ஸ்டெப் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கிறது. பின்பக்கம் கேஸ் சார்ஜ்டு மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த எக்ஸ்பல்ஸ் 210 பைக்கில் உள்ள வீல்களை பொருத்தவரை முன்பக்கம் 21 இன்ச் வீலும் பின்பக்கம் 18 இன்ச் வீலும் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 90/90-21 என்ற அளவிலும் பின்பக்கம் 120/ 80 என்ற அளவிலும் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங் அம்சங்களை பொருத்தவரை முன்பக்கம் 270 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மூன்று விதமான மோடுகளை இதில் ஷேர் செய்து கொள்ள முடியும்.

இந்த எக்ஸ்பல்ஸ் 210 பைக்கை ஓட்டி பார்க்கும்போது நமக்கு ஆஃப்ரோடிலும், ஆன்-ரோடிலும் சிறப்பான ரைடிங் அனுபவம் கிடைத்தது. இதற்கு முந்தைய மாடல் விட இன்ஜின் சிறப்பாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது நமக்கு தெளிவாக தெரிகிறது. முதல் இரண்டு கியர்கள் மிக சீக்கிரமாகவே போட முடிகிறது. அதிக டாக்கை கொடுக்கிறது. இதனால் ஆஃப்-ரோடு சிறப்பாக இருக்கிறது. அதே நேரம் ஆன்-ரோட்டில் மிக விரைவாகவே மூன்று இலக்க ஸ்பீடை எட்டிப் பிடிக்க முடிகிறது. அதேநேரம் இதில் உள்ள சீட்டு இங்கும் சொகுசு வசதியுடன் சிறப்பாக இருக்கிறது.
இந்த பைக்கில் உள்ள சஸ்பென்ஷன் செட்டப் சிறப்பாக வேலை செய்கிறது. ஆன்-ரோடு ஆஃப்ரோடு எதுவானாலும் சரி அதற்கு ஏற்றார் போல் இது அட்ஜெஸ்ட் செய்து வேலை செய்கிறது. நேராக அதிக வேகத்தில் செல்ல வேண்டும் என்றாலும் சரி, ஷார்ப்பாக திரும்ப வேண்டும் என்றாலும் சரி இந்த பைக் சிறப்பாக இயங்குகிறது. இந்த பைக்கில் யூரோ கிரிப் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது ரைடருக்கு நல்ல நம்பிக்கையை தருகிறது.
இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள டிஸ்க் பிரேக்குகள் எல்லாம் சிறப்பாக வேலை செய்கின்றன. இதில் ஏபிஎஸ் மோடில் ரோடு ஆப்ஷனை செலெக்ட் செய்து ஓட்டும்போது மட்டும் இன்னும் சிறப்பாக கேலிபேட் செய்திருக்கலாம் என கருதுகிறோம். அதே நேரத்தில் ட்ரையல் அல்லது ஆஃப்-ரோடு ஏபிஎஸ் மோடை செட் செய்து நீங்கள் ஓட்டினால் உங்களுக்கு சிறப்பான ரைட்டிங் அனுபவம் கிடைக்கும். இந்த பிரேக்கிங் சிஸ்டம் பைக்கை விரைவாக நிறுத்துவதற்கு சிறப்பாக செயல்படுகிறது.
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்குக்கு சிறந்த மாற்றாக இந்த எக்ஸ்பல்ஸ் 210 என்ற பைக் கொண்டுவரப்பட்டுள்ளது இந்த பைக் ரூ 1.76 லட்சம் என்ற விலையில் இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. குறைந்த பட்ஜெட்டில் ஒரே நேரத்தில் ஸ்போர்ட்ஸ் பைக்அதேநேரம் ஆஃப்ரோடு அட்வெஞ்சர் பைக் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த பைக் ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும். அட்வெஞ்சர் டூரிங் மற்றும் அம்சங்களுக்கு இந்த பைக் சிறந்த பைக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ நிறுவனம் எக்ஸ்ட்ரீம் 250 ஆர் பைக் இன்ஜினையும் எக்ஸ்பல்ஸ் 210 பைக்கின் இன்ஜினையும் ஒரே நேரத்தில் வெளியிட்டுள்ள நிலையில், இந்த இன்ஜின் சிறப்பாக செயல்படுவது நமக்கு தெளிவாக தெரிகிறது. ஹீரோ நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 420 பைக்கில் தற்போது கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெரிய மற்றும் பவர்ஃபுல்லான டாக்டர் பைக்கை விரும்புபவர்களுக்கு இந்த பைக் ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









