ஆக்டிவா இ ஸ்கூட்டரை வீட்ல வச்சு சார்ஜ் செய்ய முடியாதுனு தெரியும்.. ஆனா அதுபற்றிய இந்த முக்கிய தகவல்கள் தெரிமா?

ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) இந்த பெயரை அறியாதவர்களே இருக்க முடியாது. இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் டூ-வீலர் மற்றும் ஸ்கூட்டர் மாடலாக இதுவே பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது. இந்த ஸ்கூட்டர் தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் (Electric) அவதாரத்திலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது இந்தியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே இதை அறிமுகப்படுத்தியது ஹோண்டா இரண்டு சக்கர வாகன (HMSI) உற்பத்தி நிறுவனம். ஆக்டிவா இ (Activa e) மற்றும் க்யூசி 1 (QC1) என்கிர இண்டு மாடல்களை அது நாட்டில் அறிமுகம் செய்தது.

நவம்பர் மாதத்தில் இந்த இரண்டு எலெக்ட்ரிக் டூ-வீலர்களை ஹோண்டா அறிமுகப்படுத்தி இருந்தாலும், அதன் விலைகளை 2025 ஜனவரியில் இந்தியாவில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 வாயிலாகவே அறிவித்தது. ஆக்டிவா இ மாடலுக்கு ஆரம்ப விலையாக ரூ. 1.17 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் அதிகபட்ச விலையே ரூ. 1.52 லட்சம் மட்டுமே ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.

Honda activa e review

இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களிலேயே அது இப்போது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த ஸ்கூட்டர் மாடலையே சமீபத்தில் ஓட்டி பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது ஆக்டிவா இ குறித்து நாங்கள் அறிந்துக் கொண்ட தகவல்களையே இங்கே தொகுத்து வழங்கி இருக்கின்றோம்.

ஹோண்டா ஆக்டிவா இ ஸ்கூட்டரின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரம்: இதன் டிசைன் நவீன யுகத்திற்கு ஏற்றதாக உள்ளது. இன்றைய கால இளைஞர்களைக் கவரும் நோக்கிலேயே இந்த தோற்றம் அதற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. அதேநேரத்தில், ஆக்டிவா ஐசிஇ வெர்ஷனிடம் இருந்தும் சில டிசைன் தாத்பரியங்களை அது பெற்றிருப்பதை நம்மால் உணர முடிகின்றது.

Honda activa e scooter front view

ஆனால், ஆக்டிவா இ மாடலில் பெரிய அளவில் மடிப்புகளைப் பார்க்க முடியவில்லை. மிகவும் மென்மையான பாடி பேனல்களையே ஆக்டிவா இ தன்னுள் தாங்கி இருக்கின்றது. இதுவே ஆக்டிவா இ-யையும், ஆக்டிவா ஐசிஇ-யையும் வேறுபடுத்திக் காட்டுக்கின்றது. இதுமட்டுமல்ல, ஹோண்டா ஆக்டிவா ஐசிஇ வெர்ஷனில் ஹெட்லைட் மேல் இடத்தில் இருக்கும்.

அது மொழ-மொழவென வளைவான அமைப்பைக் கொண்டிருக்கும். ஆனால், ஆக்டிவா இ-இன் முன் பக்க மேல் பகுதி கூர்மையானதாக இருக்கும். அங்கு ஓர் டிஆர்எல் எல்இடி லைட் இடம் பெற்றிருக்கும். இதன் ஹெட்லைட், வாழை பழத்தை படுக்க வைத்ததை போல ஓர் அமைப்பில் முன் பக்கத்தின் முழு நீளத்தையும் ஆட்சி செய்கின்ற வகையில் அடிப் பகுதியில் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஹோண்டா நிறுவனம் இதன் மட்குவார்டை கூட அழகானதாக தயார் செய்திருக்கின்றது.

Honda activa e scooter rear view

அதன் நுனி பகுதிக்கு கருப்பு நிறத்தையே வழங்கியே அதை அழகாக அலங்கரித்திருக்கின்றது. வீல்களைப் பொருத்த வரை 12அங்குல அழகிய டைமண்ட்-கட் அலாய் வீல்களே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இத்துடன், ஆக்டிவா இ எனும் பேட்ஜைக் கொண்ட ஃப்ளஷ் வகை பக்கவாட்டு பேனல்கள், பின் பக்க பயணிகளுக்கான ஃப்ளஷ் வகை ஃபூட் ரெஸ்ட்டுகள், இரட்டை நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒற்றை துண்டு அமைப்புடைய இருக்கை, கருப்பு நிற கைப்பிடி உள்ளிட்டவையும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஆக்ட்வா இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான எலெக்ட்ரிக் மோட்டார் ஸ்கூட்டரன் ஸ்விங் ஆர்ம்-மிலேயே பொருத்தப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இங்கேயே பின் பக்கத்திற்கான சஸ்பென்ஷனும் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றது. சிறப்பம்சங்களையும் இந்த ஸ்கூட்டரில் ஹோண்டா வாரி வழங்கி இருக்கின்றது. குறிப்பாக இதன் டாப் ஸ்பெக் மாடலில் பெரிய 7 அங்குல வண்ண எல்சிடி திரையை அது வழங்கி இருக்கின்றது.

Honda activa e scooter tail lamp pic

அதேவேளையில், விலை குறைவான ஆரம்ப நிலை தேர்வில் 5 அங்குல அளவிலான திரையே வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. பகல் மற்றும் இரவு நேரங்களில் தெளிவான பார்வையை வழங்கும் வசதிக் கொண்ட திரையே இது ஆகும். இந்த திரையைக் கன்ட்ரோல் செய்ய ஜாய் ஸ்டிக் மற்றும் பட்டன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

மேலும், இந்த திரையை ஃப்ளூடூத் வாயிலாக செல்போனுடனும் இணைத்துக் கொள்ள முடியும். இதுமட்டுமல்ல திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை பெறும் வசதி, செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளை பெறும் வசதியையும் இதுக் கொண்டிருக்கின்றது. இந்த வசதி அனைத்தையும் ஹோண்டா தன்னுடைய 'ரோடு சிங்க் டூயோவோ' வாயிலாகவே வழங்கி இருக்கின்றது.

மேலே பார்த்த அம்சங்களை மட்டுமல்ல ஹோண்டா ஸ்மார்ட் சாவி வசதியும் ஆக்டிவா இ ஸ்கூட்டரின் உயர் நிலை தேர்விற்கு ஹோண்டா வழங்குகின்றது. ஆகையால், கார்களை போல ஆக்டிவா இ-இன் உயர்நிலை தேர்வை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த இ-ஸ்கூட்டரின் பயன்பாட்டை சிறப்பானதாக மாற்றும் பொருட்டு யுஎஸ்பி-சி டைப் சார்ஜிங் போர்ட், முன் பக்க ஏப்ரானில் இரண்டு சிறிய ஸ்டோரேஜ்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இங்கு செல்போன் போன்ற முக்கிய பொருட்களை வைத்துக் கொள்ள முடியும். பின் பக்கத்திலும் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. ஆனால், கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி பேக் இதில் வழங்கப்பட்டு இருக்கின்ற காரணத்தினால், வழக்கமான ஸ்டோரேஜைக் காட்டிலும் இது சற்றே குறைவானதாக இருக்கிறது. இங்கே டூல்ஸ்களையும், சிறிய வாட்டர் பாட்டிலையும் வைத்துக்கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

ஹோண்டா ஆக்டிவா இ ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி பேக் பற்றிய விபரம்: பேட்டரி பேக்கை பொருத்த வரை ஆக்டிவா இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இரண்டு வழங்கப்பட்டு இருக்கும். இரண்டுமே கழட்டி மாட்டும் வசதிக் கொண்டவை ஆகும். ஆனால், மிக சிறியவை. 1.5 kWh திறன் கொண்ட இரண்டு பேட்டரி பேக்குகளே அதில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

இரண்டையும் முழுமையாக சார்ஜ் செய்தால் 102 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். கழட்டு மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி பேக்கை இது கொண்டிருப்பதால் நொடிப் பொழுதில் வேறொரு முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி பேக்கை மாற்றிக் கொண்டு பயணித்துக் கொள்ள முடியும்.

ஆகையால், முழுமையாக பேட்டரி பேக் சார்ஜாகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இதில் இல்லை. இது வரவேற்கதக்க செயல் ஆகும். ஆனால், இந்த பேட்டரி பேக்கை வீட்டில் வைத்து சார்ஜ் செய்ய முடியாத அவலம் உள்ளது. எனவே பேட்டரி ஸ்வாப் மையங்களை கட்டாயம் நாடியே ஆக வேண்டும் என்கிற சிக்கல் இதில் உள்ளது.

இதற்காக பிரத்யேக சப்ஸ்கிரிப்ஷன் பிளான்களை ஹோண்டா வழங்குகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த ஸ்கூட்டரில் அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்ப்டடு இருக்கின்றது. அது 8.04 பிஎச்பி வரை உருவாக்கும். ஆக்டிவா 110 மாடல் உருவாக்கும் திறன் இது என்பது கவனிக்கத்தகுந்தது.

மேலும், டார்க் திறனை பொருத்த வரை 22 என்எம் டார்க்கை இது வெளியேற்றும். ஆக்டிவா இ ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ ஆகும். இதேபோல், இதற்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தை எட்ட வெறும் 7.3 செகண்டுகளே போதுமானதாக உள்ளது.

ஸ்போர்ட் மோடிலேயே இந்த உயர் ஆற்றல் திறனை நம்மால் எட்ட முடியும். இதுதவிர, எகனாமி, ஸ்டாண்டர்டு ஆகிய ரைடிங் மோட்களும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. சிறந்த ரைடு அனுபவத்திற்காக ஆக்டிவா இ ஸ்கூட்டரின் முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின் பக்கத்தில் 3 ஸ்டெப்களில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட ஹைட்ராலிக் மோனோஷாக் சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஏற்கனவே கூறியதைபோல 12 அங்குல டைமண்ட் கட் அலாய் வீலே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த வீல் முன் பக்கத்தில் 90 / 90 வகை டயரும், பின் பக்கத்தில் 110 / 80 வகை டயரும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இதேபோல், சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் பக்க வீலில் 160 மிமீ டிஸ்க்கும், பின் பக்க வீலில் 130 மிமீ டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆனால், ஆரம்ப நிலை வேரியண்டில் இரண்டு வீல்களிலும் டிரம் பிரேக்கே வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

ஹோண்டா ஆக்டிவா இ-யை எல்லாராலும் ஓட்ட முடியுமா? ஐசிஇ வெர்ஷன் ஆக்டிவாவை போலவே இதுவும் அனைவராலும் பயன்படுத்தக் கூடிய ஓர் தயாரிப்பாகவே உள்ளது. இதற்கேற்பவே அதன் அளவுகள் உள்ளன. 1,845 மிமீ நீளமும், 700 மிமீ அகலமும், 1,125 உயரத்தையும் அது கொண்டிருக்கின்றது. இதேபோல், இதன் வீல்பேஸ் 1,310 மிமீட்டராக உள்ளது. இதன் எடையும் மிக அதிகம் கிடையாது.

இதன் மொத்த எடையே 119 கிலோ மட்டுமே ஆகும். ஆனால், இதன் ஆரம்ப நிலை வேரியண்ட் 118 கிலோவை மட்டுமேக் கொண்டிருக்கும். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 171 மிமீட்டர் மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் வாயிலாகவே ஆக்டிவா அனுவருக்குமான டூ-வீலர் என கூறப்படுகின்றது. ஹோண்டா நிறுவனம் இந்த இ-ஸ்கூட்டரின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு 3 ஆண்டுகள் அல்லது 50 ஆயிரம் கிமீ வாரண்டியை அறிவித்து இருக்கின்றது.

ஹோண்டா ஆக்டிவா இ ஓட்டி பார்க்க எப்படி இருந்துச்சு? இயக்கத்தின்போது ஐசிஇ ஆக்டிவாவை அப்படியே பிரபலிக்கின்றது ஆக்டிவா இ. மிகவும் மென்மையான இயக்க அனுபவத்தையே அது எங்களுக்கு வழங்கியது. குறிப்பாக, எகனாமி ரைடிங் மோடில் மிகவும் ஸ்மூத்தான, அதிர்வுகள் அற்ற ரைடு அனுபவத்தை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனால், மிக மிக குறைவான வேகத்தில் மட்டுமே இந்த மோடில் அது பயணிக்க முடியும். அதேவேளையில், நீங்கள் அதீத ஆற்றலை எதிர்பார்ப்பவராக இருந்தால் ஸ்போர்ட்ஸ் மோடில் மட்டுமே அதை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், அதிலும் மணிக்கு 80 கிமீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்க முடியும்.

ஸ்டாண்டர்டு மோடில் நடு-நிலையான வேகத்தில் இ ஸ்கூட்டர் பயணிக்கும். அவசரமற்ற பயணங்களுக்கு உகந்த மோட் இதுவாகும். ரேஞ்சையும் பெரிய அளவில் பாதிக்காமல் இந்த மோடில் பயணித்திக் கொள்ள முடியும். இந்த அனைத்து மோட்களையும் மாற்றி மாற்றி பயன்படுத்தியே ஆக்டிவா இ ஸ்கூட்டரை நாங்கள் இயக்கி பார்த்தோம்.

இவ்வாறு பயன்படுத்தியதில் பேட்டரியின் சார்ஜ் தன்மை 70 கிமீ அல்லது 75 கிமீட்டருக்கு உள்ளாகவே வற்றிவிடும் என்பதை நாங்கள் அறிந்துக் கொண்டோம். ஆக்டிவா இ ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரி பேக் ஒவ்வொன்றும் 10 முதல் 15 கிலோ வரையில் எடைக் கொண்டதாக இருக்கும்.

இவற்றை சற்றே பலமானவர்களாக இருந்தால் மட்டுமே கையாள முடியும். இதை ஸ்கூட்டரில் இருந்து வெளியில் எடுக்கும் வரை கூடுதல் எடைமிக்கதாகத் தெரியும். ஆனால், வெளியே வந்த பின்னர் கொஞ்சம் சமாளிக்கக் கூடியதாக இருக்கும். இதில் வழங்கப்பட்டு இருக்கும் நல்ல ரைடு அனுபவத்தை வழங்கும் வகையில் உள்ளது.

குறிப்பாக, இரண்டு பேர் மிக தாராளமாக அமர்ந்து அதில் பயணிக்க முடியும். ஸ்கூட்டரின் உயரம் ரொம்ப அதிகம் இல்லை என்பதால் இந்தியர்கள் தாராளமாக ஸ்கூட்டரில் அமர்ந்தபடியே காலை தரையில் ஊன்றி வைத்து நிற்க முடியும். இதேபோல், இதன் பிரேக்கிங் செட்-அப்பும் மிக சிறப்பாக வேலை செய்கின்றது.

ஆனால், சஸ்பென்ஷன் சற்றே விறைப்பாக இருப்பதாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என நாங்கள் உணர்கின்றோம். எனவே எங்களின் இந்த ரைடு ரிவியூவின்போது புதிய ஹோண்டா ஆக்டிவா இ எங்களுக்கு ஓர் சிறப்பான ரைடு அனுபவத்தையே வழங்கியது. சில முரண்பாடுகள் இருந்தாலும், ஸ்கூட்டரின் பிளஸ்கள் அதை மழுங்கடிக்கச் செய்யும் வகையில் இருக்கின்றன. இதையே இந்த ரிவியூ வாயிலாக நாங்கள் தெரிந்துக் கொண்டோம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவு மிகவும் போட்டி நிறைந்த ஒன்றாக மாறிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஆக்டிவா இ ஸ்கூட்டர் நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஆனால், நாடு தழுவிய அளவில் விற்பனைக்குக் கிடைக்காத சூழலே இப்போது நிலவுகின்றது. விரைவில் இந்த குறை நீக்கப்பட்டு நாடு தழுவிய அளவில் விற்பனைக்குக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, March 24, 2025, 14:00 [IST]
English summary
Honda activa e review design features battery pack range and riding impressions
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X