ஹோண்டா டியோ Vs யமஹா ரே ஸீ: ஒப்பீட்டு பார்வை

முன் எப்போதும் இல்லாத அளவு புதிய மாடல்களின் வரவால் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சிறந்த எஞ்சின் பிக்கப், கையாளுமை, பொருட்கள் வைப்பதற்கான இடவசதி, பட்ஜெட் விலை போன்ற அனைத்தும் தற்போது ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பை அதிகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இளைஞர்களை குறி வைத்து களமிறக்கப்பட்ட ஹோண்டா டியோ மற்றும் யமஹா ரே ஸீ ஸ்கூட்டர்களின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் ஒப்பிட்டு பார்க்கலாம்.

ஹோண்டா டியோ

ஹோண்டா டியோ

தோற்றத்தில் புதிய பொலிவு, புதிய 110சிசி எஞ்சினுடன் தற்போது ஹோண்டா டியோ கிடைக்கிறது. தோற்றம், பெர்ஃபார்மென்ஸ் மூலம் காளையர்கள், கன்னியர்களின் மனம் விரும்பிய ஸ்கூட்டராக புதிய ஹோண்டா டியோ திகழ்கிறது.

யமஹா ரே ஸீ

யமஹா ரே ஸீ

ஹோண்டா டியோவுக்கு நேரடி போட்டியாளராக யமஹா ரே ஸ்கூட்டரை கூறலாம். பெண்களுக்கான அறிமுகம் செய்யப்பட்ட ரே ஸ்கூட்டரை சிறிது காஸ்மெட்டிக் மாற்றங்களை செய்து இளைஞர்களையும் கவரும் விதத்தில் ரே ஸீ என பெயரிட்டு விற்பனை செய்து வருகிறது யமஹா. டிசைன், மைலேஜ, எஞ்சின், விலை என அனைத்து விதத்திலும் ஹோண்டா டியோவின் மார்க்கெட்டை நேரடியாக குறி பார்த்து வருகிறது யமஹா ரே ஸீ.

 எடை

எடை

ஹோண்டா டியோ 110 கிலோ எடையையும், யமஹா ரே ஸீ 104 கிலோ எடையும் கொண்டது. டியோவைவிட யமஹா ரே ஸீ ஸ்கூட்டர் 6 கிலோ எடை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

மைலேஜ்

மைலேஜ்

யமஹா ரே ஸீ ஸ்கூட்டர் லிட்டருக்கு 53 கிமீ மைலேஜ் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், நடைமுறையில் லிட்டருக்கு சராசரியாக 40 - 45 கிமீ மைலேஜ் தரும். ஹோண்டா டியோ ஸ்கூட்டர் லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தருவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், நடைமுறையில், லிட்டருக்கு சராசரியாக 45 கிமீ மைலேஜ் தரும்.

 பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

ஹோண்டா டியோவில் 6 லிட்டர் பெட்ரோல் டேங்க்கும், யமஹா ரே ஸீ ஸ்கூட்டரில் 5 லிட்டர் பெட்ரோல் டேங்கும் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு ஸ்கூட்டர்களும் ஒரு லிட்டர் ரிசர்வ் வசதி கொண்டது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய ஹோண்டா டியோவில் 8 பிஎச்பி ஆற்றலை வழங்கும் 109சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 0- 96 கிமீ வேகத்தை 10 வினாடிகளில் கடந்துவிடும். யமஹா ரே ஸீ ஸ்கூட்டரில் 7 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 113 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 0- 96 கிமீ வேகத்தை எட்டுவதற்கு டியோவை ஒப்பிடும்போது இதன் பெர்ஃபார்மென்ஸ் சற்று குறைவுதான்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

ஹோண்டா டியோ அதிகபட்சமாக மணிக்கு 93 கிமீ வேகத்திலும், யமஹா ரே ஸீ ஸ்கூட்டர் 86 கிமீ வேகத்திலும் செல்லும். இரண்டு ஸ்கூட்டர்களும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியுடன் கிடைக்கிறது.

பிரேக்

பிரேக்

ஆக்டிவா போன்றே டியோவில் கோம்பி பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டிருப்பது கூடுதல் பாதுகாப்பை வழங்கும். யமஹா ரே ஸீயில் டிரம் பிரேக்குகளுடன் மட்டுமே கிடைக்கிறது.

டயர்

டயர்

ஹோண்டா டியோ ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. யமஹா ரே ஸீயில் சாதாரண ரக டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பொருட்கள் வைக்கும் இடம்

பொருட்கள் வைக்கும் இடம்

ஹோண்டா டியோவில் பொருட்கள் வைப்பதற்கான இடவசதி 18 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகவும், யமஹா ரே ஸீயில் 15.5 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகவும் இருக்கிறது.

விலை

விலை

சென்னையில் ஹோண்டா டியோ ஸ்கூட்டர் ரூ.54,544 விலையிலும், யமஹா ரே ஸீ ஸ்கூட்டர் ரூ.55,820 ஆன்ரோடு விலையில் யமஹா ரே ஸீ விற்பனை செய்யப்படுகிறது. யமஹா ரே ஸீயைவிட ஹோண்டா டியோ விலை ரூ.1,300 வரை குறைவு.

 தி வின்னர் இஸ்...

தி வின்னர் இஸ்...

ஸ்டைல், விலை, மைலேஜ், பெர்ஃபார்மென்ஸ் என அனைத்து விதத்திலும் யமஹா ரே ஸீயைவிட ஹோண்டா டியோ ஒரு படி முன்னே நிற்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 17, 2013, 12:47 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+