பட்ஜெட் பத்மநாபன்... புதிய ஹோண்டா லிவோ: சிறப்பு பார்வை
100சிசி மற்றும் 110சிசி மார்க்கெட்டில் நிலவும் கடும் சவால்களை எதிர்கொள்ளும் விதத்தில், ட்விஸ்ட்டர் பைக்கிற்கு பதிலாக புதிய பைக் மாடலை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
மேலும், தனது முன்னாள் கூட்டாளியான ஹீரோவின் மார்க்கெட் பங்களிப்பை வெகுவாக தம் பக்கம் திருப்புவதிலும் ஹோண்டா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதற்கான ஒரு மாடலாக தற்போது லிவோ என்ற புதிய பட்ஜெட் பைக் மாடலை களமிறக்கி இருக்கிறது. அதிகம் விற்பனையாகும் செக்மென்ட்டில் வந்திருக்கும் இந்த புதிய பைக்கில் இருக்கும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்
110 செக்மென்ட்டில் மிக நேர்த்தியான டிசைன் கொண்ட ஒரு சில மாடல்களில் லிவோவும் இப்போது இடம்பிடித்துள்ளது. குறிப்பாக, இதன் ஹெட்லைட் அதிக சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள் போன்ற ஒரு பிம்பத்தை மனதில் ஏற்படுத்துகிறது.

டிசைன் அம்சங்கள் தொடர்ச்சி...
பெட்ரோல் டேங்க் மிக மென்மையாக தோற்றமளிப்பதும், அதில் பொறிக்கப்பட்டிருக்கும் ஹோண்டா சின்னமும் பளிச்சென கவர்கிறது. டெயில்லைட், இன்டிகேட்டர் விளக்குகள் ஹோண்டா பைக் என்பதை எளிதாக கண்டுபிடிக்க உதவுகின்றன.

எஞ்சின்
புதிய ஹோண்டா லிவோ பைக்கில் 110சிசி ஏர்கூல்டு சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 9 எச்பி பவரையும், 8.5 என்எம் டார்க்கையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஹோண்டா எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தரும் மென்மையான அனுபவத்தை இந்த பைக்கும் வழங்கும் என்பதில் ஐயமில்லை.

மைலேஜ், பெட்ரோல் டேங்க்
பட்ஜெட் பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் சிக்கனமான எரிபொருள் செலவு உள்ள மாடலை தேர்வு செய்வர். அதற்கு தகுந்தாற்போல் லிட்டருக்கு 74 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையிலும் சிறப்பான மைலேஜை எதிர்பார்க்கலாம். இந்த பைக்கில் 8.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

எடை, வடிவம்
இந்த புதிய லிவோ பைக் வெறும் 111 கிலோ மட்டுமே எடை கொண்டது. 1,285மிமீ வீல் பேஸும், 1,099மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் இருக்கை அமைப்பும் மிக சிறப்பாக இருக்கிறது.

சக்கரங்கள், சஸ்பென்ஷன்
புதிய ஹோண்டா லிவோ பைக்கில் 80/100 18- இன்ச் அளவுடைய ட்யூப்லெஸ் டயர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது பஞ்சர் பிரச்னை தலைவலியை தீர்க்கும் விஷயம். அத்துடன் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் அமைப்பும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பிரேக் சிஸ்டம்
புதிய ஹோண்டா லிவோ பைக் டிரம் பிரேக் மற்றும் முன்புற டிஸ்க் பிரேக் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. டிஸ்க் பிரேக் மாடலில் முன்புறத்தில் 240மிமீ டிஸ்க் கொண்ட பிரேக் சிஸ்டம் உள்ளது. பின்புறத்தில் 130மிமீ டிரம் பிரேக் சிஸ்டம் உள்ளது.

மீட்டர் கன்சோல்
வேகம் மற்றும் எரிபொருள் அளவை காட்டும் விதத்தில் இரண்டு டயல்களை கொண்ட மீட்டர் கன்சோல் கொடுக்கப்பட்டிருக்கிறது. வண்டி ஓட்டும்போது எளிதாக கவனிக்கும் விதத்தில் எழத்து மற்றும் எண்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு டயல்களுக்கும் நடுவில் எச்சரிக்கை விளக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

சுவிட்சுகள்
கைகளால் எளிதாக கட்டுப்படுத்தும் வடிவமைப்பு கொண்ட சுவிட்சுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பாஸ் லைட் சுவிட்ச் இடது புறத்தில் இருக்கிறது. வலது புறத்தில் எலக்ட்ரிக் ஸ்டார்ட் சுவிட்ச் உள்ளது.

விலை
110சிசி செக்மென்ட்டில் சிறப்பான டிசைன், வசதிகள் கொண்ட மாடலாக புதிய ஹோண்டா லிவோ இறங்கியிருக்கிறது டிரம் பிரேக் மாடல் ரூ.52,989 எக்ஸ்ஷோரூம் விலையிலும், டிஸ்க் பிரேக் கொண்ட மாடல் ரூ.55,489 எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

நல்ல சாய்ஸ்
கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தில் நிறைவான ஓர் மாடலை வாங்க திருப்திபட விரும்பும் பட்ஜெட் பத்மநாபன் போன்றவர்களுக்கு இது நல்ல சாய்ஸாக இருக்கும். பட்ஜெட் விலையில் சிறப்பான தோற்றம், ஸ்மூத்தான எஞ்சின், அதிக மைலேஜ் கொண்டதாக வந்திருப்பதால் புதிய ஹோண்டா லிவோ பைக் ஓர் சிறந்த சாய்ஸாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








