ஜாவா 350 பைக்கை ஓட்டி பாத்தீங்க திரும்பி பைக்க விட்டு இறங்க மாட்டீங்க! உடல் வந்தாலும் மனசு அங்கேயே இருக்கும்!
புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஜாவா (Jawa), சமீபத்தில் அதன் ஜாவா 350 (Jawa 350) பைக்கை இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ப அப்கிரேட் செய்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கையே ரைடு ரிவியூ (Ride Review) செய்து பார்ப்பதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.
இந்த பைக்கை குஜராத்தில் உள்ள ரேன் ஆஃப் கட்ச் (Great Rann of Kutch) பகுதியில் வைத்தே நாங்கள் ரைடு ரிவியூ செய்து பார்த்தோம். தார் பாலைவனத்தில் உள்ள ஓர் உப்பு நிறைந்த பகுதியே இது ஆகும். இத்தகைய சவால் நிறைந்த பகுதியிலேயே புதிய ஜாவா 350 பைக்கை ஒரு கை பார்த்துவிட்டோம்.

இந்த ரைடு ரிவியூ பயணத்தின் போது எங்களுக்குக் கிடைத்த முக்கிய தகவல்களையே இந்த பதிவில் நாங்கள் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். அதாவது, ஜாவா 350 பைக்கின் ரைடு ரிவியூ தகவலை தமிழில் முழுமையாக பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஜாவா 350 பைக்கின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்: கிளாசிக் மோட்டார்சைக்கிளாக இருந்தாலும் இந்த பைக் நவீன யுகத்திற்கு ஏற்றதாக மாற்றப்பட்டு இருக்கின்றது. அதாவது, கிளாசிக் தோற்றத்தில் உருவாக்கப்பட்ட நவீன அம்சங்கள் நிறைந்த பைக்காக ஜாவா 350 காட்சியளிக்கின்றது. இன்னும் புரியும்படி கூற வேண்டும் தோற்றத்தில் இந்த பைக் பழைய ஸ்கூல் பையனைப் போலவும், வேலை மற்றும் பயன்பாட்டு ஆகியவற்றில் 2கே கிட்ஸைப் போல மிகவும் அட்வான்ஸ்டாகவும் இருக்கும்.

இதற்கு உதாரணமாக, பைக்கை கிளாசிக்காக காண்பிப்பதற்காக குரோம் பூச்சு கொண்ட ஹெட்லைட், எக்சாஸ்ட் பைப்புகள் மற்றும் எஞ்சின் கேஸ் ஆகியவை இருக்கின்றன. இத்துடன், இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் ஃப்யூவல் டேங்க்கும் பழைய மாடல்களைப் பிரதிபலிக்கும் வகையிலேயே உள்ளது. அதற்கு டூயல் டோன் வண்ணம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
இதில் 1929 எம்பளம் இடம் பெற்றிருக்கின்றது. இது ஃப்யூவல் கேப்பில் நம்மால் காண முடிகின்றது. இதேபோல், வட்ட வடிவ இன்டிகேட்டர்கள், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட ஒற்றை துண்டு அமைப்புடைய இருக்கை, நீளமான மட்குவார்டு மற்றும் அகலமான டயர்கள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இவை ஜாவா 350 பைக்கின் கிளாசிக் தோற்றத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் உள்ளன. இந்த அகலமான டயர்கள் மிக சிறந்த இழுவை திறன் மற்றும் கிரிப்பிற்கு உகந்தவை ஆகும். இந்த பைக்கை குறிப்பிட்ட விஷயங்களில் ஜாவா மேம்படுத்தி இருக்கின்றது. புதிய சேஸிஸ், பெரிய எஞ்சின், திருத்தியமைக்கப்பட்ட சஸ்பென்ஷன் ஆகியவை ஜாவா 350இல் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இவையும் அதன் பங்காக பைக்கின் சிறந்த இயக்கத்திற்கும், லுக்கிற்கும் வலு சேர்த்திருக்கின்றன என்றே கூறலாம். உயரமான சஸ்பென்ஷன் மற்றும் பெரிய கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகிய இரண்டும் சேர்ந்து மிகவும் கரடுமுரடான சாலையை சமாளிக்கும் திறனை இந்த பைக்கிற்கு வழங்கி இருக்கின்றன. ஆகையால், கரடு-முரடான பாதையில் பயணித்தாலும் பெரிய அளவில் அசௌகரியமான உணர்வு ஏற்படாது.

மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இருக்கை மற்றும் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் ஆகியவை சேர்ந்து நீண்ட மற்றும் ஆஃப்-ரோடு பயணத்தை ரம்மியமானதாக மாற்றுகின்றன. இந்த பைக்கின் கூலிங் சிஸ்டத்தையும் ஜாவா மேம்படுத்தி இருக்கின்றது. இதன் ரேடியேட்டர் மற்றும் குளிரூட்டும் மற்ற அமைப்புகளை மறுவடிவமைப்பு செய்ததன் வாயிலாகவே இந்த பணிகள் நிறைவுற்றிருக்கின்றன. மேலும், ஒவ்வொரு ரைடையும் இந்த மாற்றங்கள் இனிமையாக செய்திருக்கின்றன.
எஞ்சின் திறன் மற்றும் பிற முக்கிய அம்சங்களின் விபரங்கள்: இந்த பைக்கில் 334 சிசி திறன் கொண்ட எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. முந்தைய வெர்ஷனிலும் இதே திறன் கொண்ட பைக்கே பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், சில மேம்பாட்டு வேலைகள் இதில் செய்யப்பட்டு இருக்கின்றன.

அந்தவகையில், அதிர்வுகள், இரைச்சல்கள் பெரிய அளவில் குறைக்கப்பட்டு இருக்கின்றன. இது ஓர் டிஓஎச்சி மோட்டார் ஆகும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 22.1 பிஎச்பி பவரையும், 28.2 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வசதியுடன் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
இதன் வீல் பேஸ் 1,449 மிமீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ரைடு அனுபவம் இன்னும் மேம்பட்டிருக்கின்றது என்றே கூறலாம். இந்த ரைடு மேலும் மேம்படுத்தும் விதமாகலே ஹை புரொஃபைல் டயர்கள் மற்றும் உயர்தர சஸ்பென்ஷன்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, இந்த பைக்கின் முன் பக்க வீலில் பயன்படுத்தப்பட்ட இருக்கும் டெலிஸ்கோபிக் ஃபோர்க் பைக் ரைடை அதிக நம்பிக்கைக்குரியதாக மாற்றி இருக்கின்றது.

இதன் கிரவுண்ட் கிளியரன்ஸும் உயர்த்தப்பட்டு இருக்கின்றது. 178 மிமீ ஆகும். அதேவேளையில் இதன் இருக்கை உயரம் 802 மிமீட்டராக இருக்கின்றது. மணல் பாங்கான மற்றும் மிகவும் கரடு-முரடான சாலையைச் சமாளிக்க இந்த உயரமும் உதவியாக இருக்கின்றது. குறிப்பாக, இதன் எஞ்சின் திறம்பட இயங்கி அனைத்து சாலைகளையும் அசால்டு செய்துவிட்டது.
இந்த பைக்கில் எம்ஆர்எஃப் ஜேப்பர்ஸ் வகை டயரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. முன் பக்கத்தில் 100/90-18 அளவுள்ள டயரும், பின் வீலில் 130/80-17 டயரும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இவை கரடு-முரடான சாலையை சமாளிக்கும் வசதிக் கொண்டவை மட்டுமல்ல சரித்துவிடாமல் அதிக கிரிப்புடன் இயங்கும் திறன் கொண்டவையும் ஆகும்.

பிரேக்கிங் சிஸ்டமும் இந்த பைக்கில் மிக சிறப்பான செயல்பாட்டையே வெளிப்படுத்துகின்றது. பைப்ரே ஃப்ளோட்டிங் காலிபர்கள் கொண்ட 280 மிமீ டிஸ்க் பிரேக் முன் வீலிலும், 240 மிமீ டிஸ்க் பிரேக் பின் வீலிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இவற்றுடன் இரு வீல்களிலும் ஏபிஎஸ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இவை உடனுக்குடன் நிறுத்தத்தை வழங்குவதுடன் பாதுகாப்பான பிரேக்கிங்கையும் வழங்கும்.
ஓட்டி பார்க்க புதிய ஜாவா 350 எப்படி இருந்தது? திறந்தவெளிக் கொண்ட அனைத்து விதமான சாலைகளுக்கு ஏற்ற ஓர் பைக்கே ஜாவா 350 ஆகும். நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் பைக்கின் ஒவ்வொரு ரைடையும் சுவாரஷ்யமானதாக மாற்றுகின்றது. பள்ளம் மேடுகள் நிறைந்த சாலைகளில் பயணிப்பதைக்கூட இது சுவாரஷ்யமானதாக மாற்றுகின்றது.

இதையே எங்களின் ரைடு ரிவியூவின்போது பெற்ற அனுபவம் ஆகும். நீண்ட தூர பயணமாக இருந்தாலும் உங்களால் உற்சாகத்துடன் பயணிக்க முடியும். சிறிதும் உங்களுக்கு இந்த பயணம் சளிக்காது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் அதிகம் பைக்கு ரைடை விரும்புபவராக இருப்பின், இந்த பைக்கில் ஓய்வெடுக்காமல் ஓட்டவே பயணிக்க நீங்கள் நினைப்பீர்கள்.
குறிப்பாக, பெண்டுகள் மற்றும் சடென் வளைவுகளில் நம்பிக்கையுடன் திருப்பிக் கொள்ள இந்த பைக் எங்களை அனுமதித்தது. எங்களின் ரைடர் கைதேர்ந்தவர் என்பதால் ஒவ்வொரு வளைவுகளையும் மிக நேர்த்தியாக கையாண்டார். இதற்கு மிக சிறந்த ஒத்திசைவையே ஜாவா 350 வழங்கியது. அதிக வேகத்தில் பைக்கை திருப்பும் கொஞ்சம் ப்ளேஃபுல்லாக இருந்தது.

ஆனால், பிரேக்கிங் விசயத்தில் கொஞ்சம் ஏமாற்றமே மிஞ்சியது. 280 மிமீ டிஸ்க் மிக சிறந்த பிரேக்கிங்கை வழங்கியது. ஆனால், பின்புறத்தில் இருக்கும் 240 மிமீ டிஸ்க் பிரேக் அதிக வேகத்தில் செயல்பட லேசாக திணறியது. இதுவே எங்களை ஏமாற்றும் வகையில் அமைந்தது.
சவாரியின்போது நிமிர்ந்து உட்காரவும், வசதியாக அமர்ந்து பயணிக்க ஏதுவாகவும் பைக்கின் ஒற்றை துண்டு அமைப்புடைய இருக்கை உதவியாக இருக்கின்றது. அதிக குஷன் வசதிக் கொண்ட இருக்கையே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதீத வேகத்தில் பயணிக்கும் பைக் அல்ல என்றாலும் லேசாக சீறி பாய இதன் 334 சிசி எஞ்சின் உதவியாகவே இருக்கின்றது.

பெரிய அளவில் சிரமமின்றி மணிக்கு 100 கிமீ வேகத்தை இது எட்டிவிடும். அதேவேளையில், இது மணிக்கு 110 கிமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கும். இந்த அதிக வேகத்திலும் அதிர்வுகள் பெரிய அளவில் இருக்காது. உயரமான கிரவுண்ட் கிளியரன்ஸ் பைக்கிற்கு எந்தவிதமான சாலையாக இருந்தாலும் சமாளிக்கும் வசதியை ஏற்கனவே நாங்கள் கூறியதைபோல் வழங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரைடு ரிவியூவின் போது ஒவ்வொரு சாலையிலும் அதிக நம்பிக்கையுடன் பயணித்தோம். குறிப்பாக ரான் சதுப்பு நிள பகுதியில் திறம்பட சாகச பயணங்களை நாங்கள் செய்தோம். இந்த பாதையில் சாதாரணமான டூ-வீலர்களால் பயணிக்க முடியாது என்பது கவனிக்கத்தகுந்தது. எனவே வழக்கமான பயன்பாட்டிற்கு மட்டுமல்ல ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் உகந்த இருசக்கர வாகனமாகவே ஜாவா 350 இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









