பைக்கில் இருந்து கீழே இறங்க மனசே வரல! சொல்லி வெச்சி அடிச்ச கேடிஎம் - விலையை மட்டும் பார்க்காதீங்க

கேடிஎம் இந்தியா (KTM India) நிறுவனம் அதன் பிரபலமான '390 அட்வென்ச்சர்' (390 Adventure) பைக்கின் புதிய மேம்படுத்தப்பட்ட வெர்சனை சமீபத்தில், இந்த பிப்ரவரி மாத துவக்கத்தில்தான் மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ரூ.3.68 லட்சத்தில் இருந்து எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்ட புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கை நாங்கள் ஓட்டி பார்த்தோம். பைக்கின் இருக்கையில் அமர்ந்ததுமே மற்ற அட்வென்ச்சர் பைக்குகளில் இருந்து இது வித்தியாசமானது என்பதை எங்களால் உணர முடிந்தது. மேலும், பலத்தரப்பட்ட கஸ்டமர்களை கவரும் விதமாக பல்வேறு விதமான வேரியண்ட்களில் புதிய 390 அட்வென்ச்சர் பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், உயரம் குறைவான கஸ்டமர்களையும் கவர்வதற்காக இந்த பைக்கின் ஒரு வேரியண்ட் ஆனது தாழ்வான சீட் பொசிஷன் உடன் விற்பனை செய்யப்படுகிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், முந்தைய காலத்தில் விற்பனை செய்யப்பட்ட முதல்-தலைமுறை கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கில் சில குறைப்பாடுகள் இருந்தன.

ktm 390 adventure bike review

ஏனென்றால், அது அந்த சமயத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கேடிஎம் 390 ட்யூக் பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக இருந்தது. ஆனால், புதிய 390 அட்வென்ச்சர் பைக் ஆனது டக்கார் ராலி போட்டியில் வெற்றி பெற்ற கேடிஎம் 450 ராலி பைக்கை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது.

இத்தகைய, புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கை கோவாவில் ஓட்டி பார்த்த எங்களுக்கு பைக்கை பற்றிய பல்வேறு விஷயங்கள் தெரியவந்தன. இதற்காகவே 2 நாட்களில் இரு நீண்ட பயணங்களை இந்த அட்வென்ச்சர் பைக்கில் மேற்கொண்டோம். அதன் மூலம் நாங்கள் அறிந்துக் கொண்ட இந்த பைக்கை பற்றிய விஷயங்களை ரிவியூ (Review)-க இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

ktm 390 adventure bike review

தோற்றம்: ஏற்கனவே கூறியதுபோல், டக்கார் ராலி போட்டியில் வெற்றி பெற்ற கேடிஎம் 450 ராலி பைக்கை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதால், புதிய 390 அட்வென்ச்சர் பைக் ஆனது தோற்றத்தை பொறுத்தவரையில் நன்கு மேம்பட்டதாக உள்ளது. அதாவது, பழைய 390 அட்வென்ச்சர் பைக்கிற்கும், புதிய 390 அட்வென்ச்சர் பைக்கிற்கும் தோற்றத்தில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

புதிய 390 அட்வென்ச்சர் பைக்கின் முன்பக்கத்தில் நம்மை வெகுவாக வசீகரிப்பது பைக்கின் உயரமான மட்கார்ட் ஆகும். அதற்கு மேலே, ட்யூயல்-எல்இடி ஹெட்லைட் மற்றும் செங்குத்தான டிசைனில் நீளமான விண்ட்ஸ்க்ரீன் வழங்கப்பட்டுள்ளன. இதில், எல்இடி ஹெட்லைட்டை சுற்றி குதிரை லாடம் டிசைனில் எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டுள்ளன.

ktm 390 adventure bike review

பருத்த வடிவில் இருக்கும் இந்த பைக்கின் பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 14 லிட்டர்கள் ஆகும். ரைடரின் கால் முட்டிகளை பாதுகாக்கும் பாதுகாப்பான்கள், 5-இன்ச் டிஎஃப்டி வண்ண திரையும், ஒரே துண்டாக இருக்கையும் இந்த பைக்கில் இடம்பெறுள்ளன. பைக்கிற்கு பின்பக்கத்தில் சிறிய அளவில் எல்இடி டெயில்லைட் உள்ளது.

என்ஜின் & மெக்கானிக்கல் பார்ட்ஸ்: தோற்றத்தை பொறுத்தவரையில் வேண்டுமாயின் புதிய 390 அட்வென்ச்சர் பைக் ஆனது கேடிஎம் 450 ராலி பைக்கை போன்று இருந்தாலும், உள்ளே பொருத்தப்பட்டு இருக்கும் என்ஜின் ஆனது 390 ட்யூக் பைக்கில் இருந்து பெறப்பட்டது ஆகும். இந்த வகையில் 390 ட்யூக் பைக்கில் பொருத்தப்படும் அதே 399சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் இந்த பைக்கிலும் பொருத்தப்படுகிறது.

ktm 390 adventure bike review

அதிகப்பட்சமாக 45.3 பிஎச்பி மற்றும் 39 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த கியர்பாக்ஸ் செட்-அப்பில் பை-டைரக்‌ஷ்னல் குயிக்-ஷிஃப்டர் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. புதிய 390 அட்வென்ச்சர் பைக் ஆனது பிரிக்கப்பட்ட டிரெல்லிஸ் ஃப்ரேம் (Trellis Frame)-இல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சேசிஸை கொண்ட புதிய 390 அட்வென்ச்சர் பைக்கில் முன்பக்கத்தில் 41மிமீ-இல் யுஎஸ்டி ஓபன் கார்ட்ரிட்ஜ் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதில், 200மிமீ வீல் டிராவல் உடன் வழங்கப்பட்டுள்ள முன்பக்க யுஎஸ்டி ஓபன் கார்ட்ரிட்ஜ் ஃபோர்க் ஆனது 30 நிலைகளில் அழுத்தத்தை வழங்கக்கூடியதாக உள்ளது.

ktm 390 adventure bike review

அதேபோல், பின்பக்கத்தில் மோனோஷாக் ஆனது 205மிமீ வீல் டிராவல் உடன் ரீபாண்ட் டேம்பிங்கிற்கு 20 க்ளிக்குகளையும், ப்ரீலோடு அட்ஜெஸ்மெண்ட்டிற்கு 10 நிலைகளையும் கொண்டதாக உள்ளது. பொதுவாகவே, அட்வென்சர் பைக்குகளில் முன் சக்கரம் சற்று பெரியதாக வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கிலும் முன் சக்கரம் 21 இன்ச்சிலும், பின் சக்கரம் 17 இன்ச்சிலும் உள்ளன.

இந்த சக்கரங்களில் அப்போலோ நிறுவனத்தின் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பிரேக் பணியை கவனிக்க, இந்த பைக்கில் முன் சக்கரத்தில் 320மிமீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் 220மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், ஏகப்பட்ட மாடர்ன் அம்சங்கள் உடன் புதிய 390 அட்வென்ச்சர் பைக் உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றுள் முக்கியமானது, ரைடு-பை-வயர் தொழிற்நுட்பத்துடனான 3 ரைடிங் மோட்கள் ஆகும்.

ktm 390 adventure bike review

இதனுடன், கார்னரிங் ஏபிஎஸ், ஆஃப்-ரோடு ஏபிஎஸ், டிராக்‌ஷன் கண்ட்ரோல், கார்னரிங் டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றையும் இந்த புதிய கேடிஎம் பைக் கொண்டுள்ளது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 5-இன்ச் வண்ண டிஎஃப்டி திரை ஆனது ப்ளூடூத் மூலமாக மொபைல் போன் உடன் இணைக்கக்கூடியதாக உள்ளது. இதன் மூலமாக, போனுக்கு வரும் அழைப்புகளை கண்ட்ரோல் செய்வதுடன், பயணத்திற்கு தேவையான வழிக்காட்டுதலையும் பெறலாம்.

பயண அனுபவம்: முந்தைய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கை காட்டிலும் புதிய மாடலை ஹேண்ட்லிங் செய்வது எளிமையானதாக உள்ளது. இதன் காரணமாகவே, பைக்கை ஓட்டும்போது நமக்கு தனி சவுகரியம் கிடைக்கிறது. குறிப்பாக, கரடு முரடான ஆஃப்-ரோடு பயணங்களில் புதிய 390 அட்வென்ச்சர் பைக் வேற லெவலுக்கு செல்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

ktm 390 adventure bike review

தரையில் இருந்து ரைடர் இருக்கையின் உயரம் 830மிமீ ஆக குறைக்கப்பட்டுள்ளதால், உயரம் குறைவான ரைடர்களாலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் எளிதாக பைக்கை கண்ட்ரோல் செய்ய முடிகிறது. இருப்பினும், இந்த பைக்கின் இருக்கைகளில் கூடுதல் குஷினை சேர்க்கலாம் என கேடிஎம் நிறுவனத்துக்கு பரிந்துரைக்கிறோம். முக்கியமாக, பின் இருக்கையில் குஷின் குறைவாக இருப்பதுபோல் தோன்றுகிறது.

நீளமான விண்ட்ஸ்க்ரீனால் நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும்போது எதிர்காற்றில் வரும் தூசி, துகள்கள் முகத்தில் படாமல் தடுக்கப்படுகிறது. நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும்போது, பைக்கின் ஹேண்டில்பார் மற்றும் ரைடர் கால் வைக்கும் பகுதியில் சிறிய அதிர்வுகளை உணர முடிகிறது. அதுவே, ஆஃப்-ரோடுகளில் எழுந்து நின்று பைக்கை ஓட்டும்போது ஹேண்டில்பார் மற்றும் கால் வைக்கும் பகுதிகள் தான் ரைடருக்கு கூடுதல் தைரியத்தை வழங்குகின்றன என்பதை இங்கு சொல்லியே ஆக வேண்டும்.

ktm 390 adventure bike review

390 ட்யூக் பைக்கில் இருந்து பொருத்தப்பட்டுள்ள புதிய 390 அட்வென்ச்சர் பைக்கின் என்ஜின் ஆனது குறைந்த ஆர்பிஎம் வேகத்திலும் அதிக டார்க் திறனை வழங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், 3வது கியரிலும் மணிக்கு 25கிமீ என்கிற குறைவான வேகத்தில் மென்மையாக செல்ல முடிகிறது. 390 ட்யூக் பைக் உடன் ஒப்பிடுகையில், புதிய 390 அட்வென்ச்சர் பைக்கில் சற்று வித்தியாசமான கியர்பாக்ஸ் செட்-அப்பை கேடிஎம் வழங்கி உள்ளது.

0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.2 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த அட்வென்சர் பைக்கில் எந்தவொரு திருப்பமும் இன்றி நேராக செல்லும்போது ஜாலியான பயணத்தை எங்களால் பெற முடிந்தது. 100kmph-க்கு மேலான வேகத்தை எந்தவொரு பிரச்சனையும் இன்றி எளிதாக இந்த பைக் எட்டுகிறது.

ktm 390 adventure bike review

குயிக் ஷிஃப்டர் தொழிற்நுட்பம் பைக்கை குறைந்த வேகத்தில் ஓட்டும்போதும் சிறப்பாக செயல்படுகிறது. ஏற்கனவே கூறியதுபோல், ஆஃப்-ரோடு, ஸ்ட்ரீட் மற்றும் மழை என 3 விதமான ரைடிங் மோட்கள் புதிய 390 அட்வென்ச்சர் பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இதில், ஆஃப்-ரோடு மோட் ஆனது பைக்கின் முழு திறன்களை வெளிக்காட்டும் வகையில் உள்ளது.

இந்த ஆஃப்-ரோடு மோடில் த்ரோட்டிலின் ரெஸ்பான்ஸ் உடனுக்குடன் விரைவாக கிடைப்பது ஆரம்பத்தில் சற்று அசவுகரியத்தை ஏற்படுத்தினாலும், அதன்பின் அதனை பயன்படுத்த பயன்படுத்த எளிமையானதாக மாறியது. ஆஃப்-ரோடு மோடில் அதிக டார்க் திறனை குறைந்த என்ஜின் வேகத்தில் பெற முடிந்தது. ஆதலால், இந்த ஆஃப்-ரோடு மோட் ஆனது சவாலான பாதைகளில் பைக்கை ஓட்டும்போது மிகவும் உதவியாக இருக்கும்.

ktm 390 adventure bike review

இரண்டாவதாக உள்ள ஸ்ட்ரீட் மோட் ஆனது சாதாரணமான பயணத்தை வழங்கும் வகையிலும், 3வதாக உள்ள மழை மோடு ஆனது மென்மையான த்ரோட்டில் ரெஸ்பான்ஸை வழங்கக் கூடியது. இதன் மூலமாக, ஈரமான சாலைகளில் பைக்கை ஓட்டும்போது மழை ரைடிங் மோடில் கூடுதல் கண்ட்ரோலை பெறலாம்.

பைக்கின் சஸ்பென்ஷன் செட்-அப்பை பற்றி சொல்ல வேண்டுமென்றால், முன்பக்கத்தில் அட்ஜெஸ் செய்யக்கூடிய ஃபோர்க்குகள் மற்றும் பின்பக்கத்தில் மோனோஷாக் உடன் உள்ள புதிய 390 அட்வென்ச்சர் பைக் ஆனது நகர்புற சாலைகளில் உள்ள சிறிய பள்ளம் மேடுகளில் இருந்து, கரடு முரடான பாதைகள் வரையில் அனைத்தையும் சிறப்பாக சமாளிக்கிறது. பிரேக்குகள் இரு சக்கரங்களிலும் ஒரே சீராக செயல்படுகின்றன. டிஸ்க்குகள் கணக்கச்சிதமாக சக்கரங்களை பிடிக்கின்றன.

ktm 390 adventure bike review

இதனால், நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் செல்லும்போதும், ஆஃப்-ரோடு கண்டிஷன்களிலும் பைக்கை நிறுத்த அவற்றின் பிரேக் பாகங்கள் இருக்கும்போது எந்த பயமும் வேண்டாம். துல்லியமாக மதிப்பிடப்பட்ட ஏபிஎஸ் பயணத்தின்போது உங்களுக்கு கூடுதல் தைரியத்தை வழங்குகிறது. ஸ்போக்டு சக்கரங்களில் பொருத்தப்பட்டுள்ள அப்போலோ டயர்கள் சாலையில் நல்ல பிடிமானத்தை வழங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அட்வென்ச்சர் ரக பைக்குகளை உருவாக்குவதில் சமீப காலமாகவே கேடிஎம் நிறுவனம் நிறைய அனுபவங்களை பெற்று வருகிறது. அவற்றை எல்லாம் புதிய 390 அட்வென்ச்சர் பைக்கில் கேடிஎம் நிறுவனம் பயன்படுத்தி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அதனை, இந்த பைக்கின் இருக்கையில் அமர்ந்த போது எங்களால் உணர முடிந்தது.

ktm 390 adventure bike review

தாழ்வான இருக்கை அமைப்பு, கூடுதல் பவர்ஃபுல்லான என்ஜின் மற்றும் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் செட்-அப் உள்ளிட்டவற்றுடன் புதிய 2025 கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் ஆனது அதன் முந்தைய தலைமுறையை காட்டிலும் நன்கு மேம்பட்டதாக உள்ளது. பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு அரை லிட்டர் குறைக்கப்பட்டு இருப்பினும், ஆஃப்-ரோடு பயணங்களுக்கும், நெடுஞ்சாலை பயணங்களுக்கும் புதிய கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கை தைரியமாக பரிந்துரைக்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 25, 2025, 10:00 [IST]
English summary
Ktm 390 adventure bike first ride review price new features riding impressions
மேலும்... #ktm #bike review #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X