ரோடே இல்லேனாலும் ஓட்டிட்டு போகலாம்! கேடிஎம் 390 அட்வெஞ்சர் எஸ்டபிள்யூ மற்றும் எக்ஸ் பைக் எப்படி இருக்குது?
2019 ஆம் ஆண்டு இறுதியில் கேடிஎம் நிறுவனம் தனது 390 அட்வெஞ்சர் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த பைக் வழக்கமாக கேடிஎம் பைக்கில் உள்ள முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷனோ ஸ்போக் வீல்களோ இல்லாமல் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டது இடையில் கொரோனாவையும் நாம் கடந்து விட்டோம்.
இந்நிலையில் தான் கேடிஎம் நிறுவனம் தனது 390 அட்வெஞ்சர் பைக்கை அப்டேட் செய்ய முடிவு செய்தது. அதன் படி அப்டேட்டட் வெர்ஷனாக கேடிஎம் நிறுவனம் 390 அட்வெஞ்சர் எஸ்டபிள்யூ மற்றும் 390 அட்வெஞ்சர் எக்ஸ் ஆகிய இரண்டு பைக்குகளை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பைக்குகளை ஒட்டிப் பார்க்க டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு கேடிஎம் நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தது. இந்த பைக்குகளை ஓட்டி பார்க்க எங்கள் குழு ஆர்வமுடன் புனேவிற்கு புறப்பட்டுச் சென்றோம். கேடிஎம் அட்வெஞ்சர் 390 எஸ்டபிள்யூ மற்றும் கேடிஎம் அட்வெஞ்சர் 390 எக்ஸ் ஆகிய இந்த இரண்டு பைக்குகளும் நம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா? ஓட்டி பார்க்க எப்படி இருந்தது? என்பதை விரிவாகக் காணலாம் வாருங்கள்.
மாற்றங்கள் என்ன?: கேடிஎம் 390 அட்வெஞ்சர் எஸ்டபிள்யூ பைக்கை பொறுத்தவரை வழக்கமான கேடிஎம் 390 அட்வெஞ்சர் பைக்கில் இருந்து இரண்டு முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஒன்று சஸ்பென்ஷன் மற்றொன்று வீல். இந்த மாற்றங்களை பேப்பரில் பார்க்கும்போது பெரிதாக தெரியவில்லை ஆனால் ஓட்டி பார்க்கும்போது வித்தியாசம் நன்றாக தெரிகிறது.

இந்த பைக்கில் முன்பக்கமும் பின்பக்கமும் சஸ்பென்ஷனை முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதி இருக்கிறது. முன்பக்க போர்க்கில் கம்ப்ரஷன் மற்றும் ரீபவுண்டு அட்ஜஸ்மென்ட் 30 கிளிக்குகள் வரை கொடுக்கப்பட்டுள்ளது. கேடிஎம் ஃபேக்டரியில் இருந்து வரும் போது 15 கிளிக்குகள் வரை செட்டப் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.
பின்பக்கம் கொடுக்கப்பட்டுள்ள மோனோஷாக் சஸ்பென்ஷனை பொறுத்தவரை ப்ரீ-லோடு மற்றும் ரீபவுண்டு அட்ஜெஸ்ட்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஃப்ரீ-லோடுக்கு 10 கிளிக்குகளும் ரிபவுண்டுக்கு 30 கிளிக்குகளும் வழங்கப்பட்டுள்ளது. இதில் கேடிஎம் நிறுவனத்தின் ஃபேக்டரி ஃபிட்டிங்காக ரீபவுண்டுக்கு 10 கிளிக்குகளும் என்ன செட் செய்யப்பட்டு வருகிறது. இந்த பைக்கில் ஸ்மோக் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஸ்டீலாக இல்லாமல் அலுமினியமாக வழங்கப்பட்டுள்ளது. டயரை பொறுத்தவரை மெட்சீலர் டியூப் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய அட்வெஞ்சர் எக்ஸ் பைக்கை பொருத்தவரை கலர்ஃபுல்லான டிஎப்டி நெகட்டிவ் எல்இடி ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் பெரிய பிஸ்டன் போர்க் பொருத்தப்பட்டுள்ளது. இது 170மிமீ வீல்லுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் லிவர்கள் அட்ஜஸ்ட் செய்யும்படி அமைக்கப்படவில்லை அதே நேரம் குவிக் ஷிப்டர்களும் இல்லை. டயர்களும் மெட்சீலர் டயர்களுக்கு பதிலாக எம்ஆர்எப் மீட்டியோ எம்ஓ கிரிப் எஸ்டு டயர்கள் வழங்கப்பட்டுள்ளது.
இன்ஜினை பொறுத்தவரை 373சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 42.9 பிஎச்பி பவரை 8000 ஆர்பிஎம்-ல் வெளிப்படுத்தும், 37 என்எம் டார்க் திறனை 7000 ஆர்பிஎம்-ல் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு பைக்குகளுக்குமே இந்த ஒரே இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது.

ஒர்த்தா இல்லையா? : கேடிஎம் 390 அட்வெஞ்சர் எஸ்டபிள்யூ மற்றும் எக்ஸ் ஆகிய இரண்டு பைக்கிலும் எங்களுக்கு ஓட்ட கிடைத்தது. இரண்டு பைக்கையும் நாங்கள் முழுமையாக ஆப் ரோடு செய்யும் ஒரு இடத்தில் ஓட்டிப் பார்த்தோம். 390 அட்வெஞ்சர் எஸ்டபிள்யூ பைக்கை பொறுத்தவரைக் கரடு முரடான பாதைகளுக்கு ஏற்றதாக இருந்தது. இதன் சஸ்பென்ஷனை ரைடர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட் செய்ய முடியும்.
முன்பக்க போர்க்களை நீங்கள் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போதே கூட அட்ஜெஸ்ட் செய்ய முடியும். ஆனால் பின்பக்க மோனோஷாக் சஸ்பென்ஸனை பொருத்தவரை அட்ஜெட் செய்ய ஸ்பேனர் தேவைப்படும். இதனால் வாகனத்திலிருந்து இறங்கித் தான் இதை அட்ஜெஸ்ட் செய்ய முடியும். கேடிஎம் நிறுவனம் இந்த பைக்கின் ஃப்யூயல் டேங்கில் சில செட்டப் ஆப்ஷன்களை ஸ்டிக்கரில் வைத்துள்ளது. ஆனால் இதைப் பார்க்க ரைடர் டேங்கை அகற்ற வேண்டும்.

இந்த கேடிஎம் 390 அட்வெஞ்சர் எஸ்டபிள்யூ பைக்கில் உங்களுக்கான செட்டிங்கை செய்துவிட்ட பிறகு நீங்கள் ரைடு செய்து பார்த்தால் நிச்சயம் ஆஃப்ரோடுகளில் கரடு முரடான பாதைகளில் இந்த பைக் நிச்சயம் சுலபமாக இருக்கும். நீங்கள் ஒரு டேக்கர் ரேஸர் போல நிச்சயம் உணர்வீர்கள்.
இதன் அலாய் வீல்கள் அலுமினியம் ஷைனிங்கில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் பெரும் பள்ளம் மேடுகளில் துணிவுடன் ஏற்றி இறக்கலாம். போர்க் பாதிக்கப்படுமோ எனக் கவலை உங்களுக்கு வேண்டாம். இது எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா இடங்களிலும் நல்ல ஸ்டிராங்காக இருக்கும்படி தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆஃப்ரோடு பயணத்தில் கேடிஎம் அட்வெஞ்சர் 390 எஸ்டபிள்யூ பைக்கில் சரியான சஸ்பென்சன் செட்டப்பை செட் செய்து பயணித்தால் அதன் அட்வெஞ்சர் தன்மையை நாம் நன்கு ரசிக்கலாம். அதே நேரத்தில் நேரான ரோடுகளில் சுற்றிலும் உள்ள இயற்கையை ரசித்துச் செல்லலாம். சிறிய சிறிய மேடு பள்ளங்களைப் பற்றி எல்லாம் கவலைப்படவேண்டியதேயில்லை.
எங்களுக்கு பைக்குகள் ரைடிற்காக வழங்கப்பட்ட நாளில் நேரங்களில் 390 அட்வெஞ்சர் எஸ்டபிள்யூ பைக்கையே பெரும்பாலும் ஓட்டி பார்க்க வேண்டிய தேவையிருந்தது. அதன் பின்னர் தான் கேடிஎம் நிறுவனத்தின் புதிய என்ட்ரி லெவல் பைக்கான 390 அட்வெஞ்சர் எக்ஸ் என்ற பைக்கையும் ஓட்டிப்பார்த்தோம்.

இந்த கேடிஎம் 390 அட்வெஞ்சர் பைக் நீண்ட தூரப் பயணத்திற்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலையில் சிறப்பாகச் செயல்படுகிறது. ஆஃப் ரோடுகளில் நீங்கள் பயணிக்கும் போதும் பெரிய சிரமம் ஏற்படவில்லை. எம்ஆர்எஃப் டயர்கள் மற்றும் பெரிய பிஸ்டன் ஆகியவை இதற்குச் சிறப்பாக உதவுகிறது.
இறுதித் தீர்ப்பு : கேடிஎம் 390 அட்வெஞ்சர் பைக் 2020ம் ஆண்டு இந்தியாவிற்குள் வரும் போது சரியான பைக்காக இல்லை. ஆனால் இந்த 390 அட்வெஞ்சர் எஸ்டபிள்யூ மற்றும் அட்வெஞ்சர் எக்ஸ் ஆகிய பைக்குக்களை பொருத்தவரை 390 அட்வெஞ்சர் அனுபவத்தை முழுமையாக வழங்கும் பைக்குகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
390 அட்வெஞ்சர் எக்ஸ் பைக்குகளை பொருத்தவரை டூரிங்கிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சிறிய சிறிய ஆஃப்ரோடுகளில் நிச்சயம் பயம் இல்லாமல் ஓட்டிச்செல்ல முடியும். டூரிங் விரும்பிகளுக்கு இது நல்ல சாய்ஸாக இருக்கும். கேடிஎம் 390 அட்வெஞ்சர் எஸ்டபிள்யூ மற்றும் எக்ஸ் ஆகிய இரண்டு பைக்குகளுக்கு இந்தியர்களுக்கு ஏற்ற பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. எஸ்டபிள்யூ ஆஃப்ரோடு விரும்பிகளுக்கும், அட்வெஞ்சர் எக்ஸ் டூரிங் விரும்பிகளுக்கு ஏற்ற பைக்காக இந்த பைக்குகள் இருக்கும்.


Click it and Unblock the Notifications









