வண்டிய விட்டு இறங்க மாட்டேனு அடம் பிடிச்சாலும் ஆச்சரியப்பட ஒன்னுமில்ல.. மேட்டர் ஏரா 5000பிளஸ் இ-பைக் ரிவியூ

இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன (Electric Two Wheeler) உலகில் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் மேட்டர் (Matter)-ம் ஒன்றாகும். பெரும்பாலான மின்வாகன உற்பத்தியாளர்கள் இந்தியாவின் ஸ்கூட்டர் பிரிவை மையாகக் கொண்டு தங்களது தயாரிப்புகளை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டு இருக்கின்றனர்.

ஆனால், மேட்டர் நிறுவனமோ தனித்துவமாக இந்தியாவின் எலெக்ட்ரிக் பைக் பிரிவை மையப்படுத்தி செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் தற்போதைய நிலவரப்படி ஏரா (Aera) எனும் பைக் மாடலை மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டு உள்ளது. இதில் இரண்டு விதமான தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

Matter aera 5000 review

5000 (Aera 5000) மற்றும் 5000பிளஸ் (Aera 5000+) ஆகியவையே அவை ஆகும். இதில், சமீபத்தில் 5000பிளஸ் தேர்வையே நமது டிரைவ்ஸ்பார்க் குழு சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தது. அப்போது இந்த மின்சார பைக்குறித்து கிடைத்த முக்கியமான தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். அதாவது ரைடு ரிவியூ விபரங்களையே இப்பதிவின் வாயிலாக வெளியிட்டுள்ளோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான தகவலைக் காணலாம்.

மேட்டர் ஏரா 5000 பிளஸ் பைக்கின் ஸ்டைல் எப்படி இருக்கு? "அமைதிக்கு பெயர்தான் சாந்தி" என கூற கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த வார்த்தை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் பொருந்தும். சத்தமே இல்லாமல் மிகவும் அமைதியாக இயங்கும் திறன் கொண்டவையே மின்சார வாகனங்கள் ஆகும். என்னதான் இந்த வாகனம் அமைதியாக இயங்கும் திறன் கொண்டதாக இருந்தாலும், இதன் தோற்றம் மிகப் பெரிய கர்ஜிக்கும் மிருகங்களுக்கு இணையானதாக உள்ளது.

Matter aera 5000 console

அந்த அளவிற்கு மிகவும் முரட்டுத் தனமான தோற்றத்திலேயே ஏரா 5000 பிளஸ் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இந்த வாகனத்தை ஓட்டும்போது, வாடி வாசலில் இருந்து வெளியே வரும் முரட்டுக் காளையை அடக்கிய உணர்வு கிடைத்தாலும் சந்தேகப்பட ஒன்றுமில்லை. அதேவேளையில், இந்த வாகனத்தை இயக்கும்போது, சாலையோரத்தில் உள்ள மிட்டாய் கடையை பார்த்த குழந்தையை போல சிரிப்பையும், மகிழ்ச்சியையும் கிடைக்கும்.

இத்தகைய அனுபவமே எங்களுக்கு மேட்டர் ஏரா 5000 பிளஸ்ஸை இயக்கும்போது கிடைத்தது. மேலும், சாலையில் இந்த வாகனத்தை ஓட்டி சென்றபோது பலர் அந்த வாகனத்தை திரும்பி பார்க்கத் தொடங்கினர். சிலர் வாகனத்தை விரட்டி வந்தும் பார்த்தனர். அந்த அளவிற்கே தனித்துவமான மற்றும் சூப்பரான தோற்றத்தை இந்த வாகனம் கொண்டிருக்கின்றது.

Matter aera 5000 button

இந்த எலெக்ட்ரிக் பைக்கில் இன்டிகேட்டர்கள் வழங்கப்படவில்லை. வழங்கப்படவில்லை என்றதும் இன்டிகேட்டர் லைட்டுகளே இல்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். ஃப்யூவல் டேங்க் போன்று இருக்கும் அந்த அணிகலனிலேயே லைட்டுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுவே பைக்கின் தனித்துவமான தோற்றத்திற்கும் காரணமாக இருக்கின்றது. மேலும், இதன் இறுதியில் 07 என்கிற எண்ணும் இடம் பெற்றிருக்கின்றது.

இவை அனைத்தும் சேர்ந்தே பைக்கின் பக்கவாட்டு பகுதிக்கு ஸ்போர்ட்டி தோற்றத்தை வழங்குகின்றது. இதுதவிர, இந்த தோற்றத்திற்கு கூடுதல் பிளஸ்ஸாக அமையும் வகையில் இரட்டைத் துண்டு அமைப்புடைய இருக்கை, விநோதமான மற்றும் கூரான அமைப்புடைய ஹெட்லைட், இரட்டை நிறத்திலான முன் பக்க மட்குவார்டு ஆகியவை இருக்கின்றது.

Matter aera 5000 suspension

மின்சார மோட்டார் மற்றும் ரேஞ்ஜ் திறன் பற்றிய விபரம்: இந்த எலெக்ட்ரிக் பைக்கில் 5 kWh பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதனால் ஓர் முழு சார்ஜில் 125 கிமீ வரை ரேஞ்ஜ் தர முடியும். இத்துடன், 10 கிலோவாட் திறன் கொண்ட மின்சார மோட்டாரே ஏரா 5000 பிளஸ் மாடலில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதனால் அதிகபட்சமாக 14.08 பிஎச்பி வரை வெளியேற்ற முடியும். இது ஓர் கியர்பாக்ஸ் கொண்ட எலெக்ட்ரிக் பைக் ஆகும். இந்தியாவில் வேறு எந்த எலெக்ட்ரிக் பைக்கிலும் கியர்பாக்ஸை உங்களால் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹைப்பர் ஷிஃப்ட் 4 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Matter aera 5000 front design

இன்பில்ட் ஆக்டீவ் லிக்யூடு கூலிங் சிஸ்டமே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. தனித்துவமான இயக்க அனுபவத்தை 3+1 ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஈகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் மோட் ஆகியவற்றுடன் ரிவர்ஸ் மோடும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதில் சிறப்பு என்னவென்றால் ஸ்போர்ட் மோடிலேயே உச்சபட்ச வேகத்தை தொட முடியும். அதேவேளையில், இந்த மோடில் இயக்கும்போது ரேஞ்ஜ் 70 கிமீ மட்டுமே கிடைக்கும்.

ரைடு அனுபவம் எப்படி இருந்தது? இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கும் சஸ்பென்ஷன் மிக சிறப்பாக வேலையை செய்கின்றது. அது ஓர் வீரனைப் போல் பள்ளம்-மேடுகளை ஒரு கை பார்த்துவிட்டது. மேலும், மிக சிறந்த சவாரி அனுபவத்தையும் இது வழங்குகின்றது. ஆகையால், தொடர்ந்து ரைடு செய்யவே நீங்கள் விரும்புவீர்கள்.

Matter aera 5000 motor

இருப்பினும், இதன் ரேஞ்ஜ் திறன் சற்று குறைவு என்பதால் அது மட்டும் கொஞ்சம் கவலையளிக்கக் கூடியதாக இருக்கின்றது. நீங்கள் இந்த பைக்கில் நல்ல ரேஞ்ஜ் திறனை பெற விரும்புகின்றீர்களா, அப்போது ஈகோ மோடே சிறந்தது. இதிலேயே மிக சிறந்த மற்றும் மெதுவான இயக்க அனுபவத்தை பெற முடியும். சிட்டி மோட், நகரங்களுக்குள் பயணிப்பதற்கு என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஓர் மோடே இதுவாகும்.

ஸ்போர்ட் மோட், அதிக மற்றும் உற்சாகமான ரைடு அனுபவத்தை பெற இது மிகுந்த உதவியாக இருக்கும். மணிக்கு 100 கிமீ முதல் 105 கிமீ வரையிலான வேகத்தில் இந்த மோடை பயன்படுத்தும்போது பயணிக்க முடியும். இந்த அதிகபட்ச வேகமே பைக்கின் ரேஞ்ஜ் திறனை, அதாவது, பேட்டரி திறனை விரைந்து உறிஞ்சுகின்றது. ஆகையால், மேட்டர் ஏரா 5000பிளஸ் பைக்கில் முடிந்த அளவு பொறுமையான வேகத்தில் பயணிப்பதே நல்லது.

Matter aera 5000 rear suspension

கியர்பாக்ஸ் பற்றிய சுவாரஷ்ய தகவல்: ஒவ்வொரு கியர் மோடும் தனித்துவமான ரைடு அனுபவத்தை வழங்கும். ஆகையால், ஃப்யூவல் வாகனங்களை இயக்குவதைப் போன்ற அனுபவமே இதிலும் கிடைக்கும். ஆனால், கிளட்ச் வழங்கப்படவில்லை. எனவே ஒவ்வொரு முறையும் கியரை மாற்றும்போது கிளட்சை பிடிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

அதேவேளையில் கிளட்ச் இல்லாதது லேசான சிரமமான அனுபவத்தை வழங்கும் வகையில் இருக்கின்றது. அதேவேளையில், இந்த கியர்பாக்ஸ் வேகத்தை குறைப்பானதற்கானது அல்ல என்பது இங்கே குறிப்படத்தகுந்தது. இது பலவீனமான மீளுருவாக்கத்தின்போது (regeneration) மிகப் பெரிய அளவில் உதவியாக இருக்கும். இதற்காகவே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Matter aera 5000 rear seat

டிரைவ்ஸ்பார்க்கின் இறுதி முடிவு என்ன? நீங்கள் அதிகம் ரேஞ்ஜை விரும்புபவர் மற்றும் அதிக வேகத்தில் பயணிக்கக் கூடியவர் என்றால் நிச்சயம் இந்த வாகனம் உங்களுக்கானது அல்ல. இதை ரெண்டையும் செய்பவராக இருப்பின் விரைவில் சார்ஜ் தீர்ந்து நீங்கள் சாலையோரத்தில் நிற்க நேரிடும். இதன் மீளுருவாக்கமும் பெரிய அளவில் பலனளிக்கவில்லை.

இதிலும் மிகப் பெரிய அளவில் முன்னேற்றம் தேவை. அதேவேளையில் உங்களுக்கு தேவையானது கவர்ச்சியான தோற்றம் இ-பைக் மட்டும்தான் என்றால் இது உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். மிகவும் முரட்டுத்தனமான தோற்றம் இதற்கு உண்டு. ஆகையால், சாலையில் பலரின் கவனத்தை உங்களால் ஈர்க்க முடியும்.

Matter aera 5000 tail lamp

வழக்கமான ஸ்கூட்டர்களை மட்டுமே கண்டுக் கொண்டிருக்கும் இந்திய சாலைக்கு இது தனித்துவமான விருந்தாகும். குறிப்பாக, மிக சிறந்த திறனை வெளியேற்றும் இ-பைக்காக இது காட்சியளிக்கின்றது. ஆகையால், ஸ்போர்ட் பைக் போன்று இயக்க அனுபவத்தை பெற வேண்டும் என எண்ணுபவர்களுக்கும் மேட்டர் ஏரா 5000 பிளஸ் ஓர் மிக சிறந்த தேர்வாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 8, 2024, 10:00 [IST]
English summary
Matter aera 5000 plus review we explained specs dimensions and riding impressions details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X