டிவிஎஸ் யூரோகிரிப்போட இந்த டயரு இருந்தா ரோடு விளையாட்டு பொம்மை மாதிரி ஆகிரும்! ரோட்ஹவுண்ட் டயர் ரிவியூ!

டிவிஎஸ் டயர் உற்பத்தியில் களமிறங்கி 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. நிறுவனத்தின் டயர்கள் பைக் மற்றும் ஸ்கூட்டர் என பலதரப்பட்ட வாகனங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே கடந்த 2019 ஆம் ஆண்டில் 'டிவிஎஸ் யூரோகிரிப்' (TVS Eurogrip) என்கிற புதிய பெயர் டயர் உற்பத்தி நிறுவனத்திற்கு சூட்டப்பட்டது.

இந்த பெயர் மாற்றத்திற்கு, நிறுவனம் உலகளாவிய டயர் சந்தையில் முன்னணி நிறுவனமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டு இருப்பதே காரணமாகும். பெயரை மட்டுமே நிறுவனம் மாற்றவில்லை, தன்னுடைய டயர் தயாரிப்பையும் உலக தரத்திற்கு நிறுவனம் உயர்த்தி இருக்கின்றது. இந்த யுக்தியின்கீழ் உருவாக்கப்பட்ட ஓர் தரமான டயரையே டிவிஎஸ் யூரோகிரிப் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.

TVS eurogrip roadhound tyre review

டிவிஎஸ் யூரோகிரிப் ரோட்ஹவுண்ட் (TVS Eurogrip Roadhound) டயரே அது ஆகும். அசாதாரணமான ரைடு அனுபவத்தை விரும்பும் வாகன ஓட்டிகளுக்கு என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டயரே இது ஆகும். இந்த டயர் பொருத்திய இருசக்கர வாகனத்தையே நாங்கள் அண்மையில் ரைடு செய்து பார்த்தோம்.

அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவத்தையே இந்த பதிவில் உங்களிடம் பகிர்ந்துக் கொள்ளும் விதமாக தொகுத்து வழங்கி இருக்கின்றோம். கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடு-வே டிராக்கில் வைத்தே இந்த ரைடு எக்ஸ்பீரியன்ஸை நாங்கள் செய்து பார்த்தோம். இதுகுறித்த முழு விபரங்களையும் காணலாம், வாங்க.

Eurogrip roadhound tyre

டிவிஎஸ் யூரோகிரிப் ரோட்ஹவுண்ட் டயரின் விவரக் குறிப்புகள், விலைகள் மற்றும் ரைடிங் இம்பிரஷன் பற்றி முதலில் பார்க்கலாம். இது ஓர் குவாட்-காம்பவுண்ட் ரேடியல் டயர் ஆகும். மிக சிறந்த கார்னரிங் கிரிப், அதிக கம்ஃபோர்ட் மற்றும் நீண்ட ஆயுளைக் கொண்டதாக இந்த டயரை டிவிஎஸ் யூரோகிரிப் தயாரித்து இருக்கின்றது.

இந்த டயர்குறித்து டிவிஎஸ் யூரோகிரிப் கூறுகையில், ரோட்ஹவுண்ட் ஈரமான சூழ்நிலையிலும் நல்ல பிடிமானத்தை வழங்கும் என தெரிவித்து இருக்கின்றது. மேலும், ஆக்குவா பிளானிங் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக இந்த டயரின் கான்டேக்ட் பேட்ச் பள்ளங்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த பள்ளங்கள் துளியளவும் தண்ணீரை சேர்த்து வைக்காமல் உடனடியாக வெளியேற்றும் திறன் கொண்டவை.

Eurogrip roadhound

எனவே எந்தமாதிரியான சூழலிலும் ஆக்குவா பிளானிங் என்பதே ஆகாது. மழை காலத்தில் டயருக்கும், சாலைக்கும் இடையில் இருக்கும் தொடர்பை துண்டிக்கும் வகையில் நீர் செயல்படுவதையே ஆக்குவா பிளானிங் என்பர். இதைத்தொடர்ந்து, ரோட்ஹவுண்ட் டயரை கரடு-முரடான பாதை மற்றும் பள்ளம்-மேடு நிறைந்த சாலை என எதில் வேண்டுமானாலும் வைத்து அடி அடியென அடித்தாலும் மிக சிறந்த ஆயுட்காலத்துடன் அது உழைக்கும் என கூறப்படுகின்றது.

மூன்று சுவர்களைக் கொண்டதாக இந்த டயர் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. முதல் சுற்று சுவர் பிடிமானத்தையும், நல்ல ஆயுட்காலத்தையும் வழங்கும். மற்ற இரண்டு கூடுதல் கார்னரிங் கிரிப் மற்றும் விரைப்பு தன்மைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இதன் அடிநிலை லேயர் பயணத்தின் போது அதிக வசதியை அதிகரிக்கும்.

Tyre review

ரோட்ஹவுண்ட் டயரை முன் பக்கம் வீல் மற்றும் பின் பக்கம் வீல் என இரண்டிற்கும் தனிதனியாக விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் முன்பக்க ஆப்ஷனில் ஒற்றே தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது. அது, 120/70 அளவுகளில் கிடைக்கும். ஆனால், பின் பக்கத்திற்கு இரண்டு விதமான ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கும். அவை 160/60 மற்றும் 180/55 ஆகும்.

அனைத்தும் மிக சிறப்பான இயக்க அனுபவத்தை வழங்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. டிவிஎஸ் யூரோகிரிப் இந்த புதிய டயரை அதன் மதுரை ஆலையில் வைத்தே தயாரிக்கின்றது. இங்கு எப்படி டயர்கள் தயாரிக்கப்படுகின்றன என்கிற அனைத்து புராசஸ்களையும் காணும் வாய்ப்பும் எங்களுக்குக் கிடைத்தது.

TVS eurogrip roadhound tyre

முதல் நாள் ஆலையின் செயல்பாட்டைக் காணும் வாய்ப்பும், மறு நாளே இந்த டயரைப் பொருத்திய டூ-வீலர்களை இயக்கி பார்க்கும் வாய்ப்பும் எங்களுக்கு கிடைத்தது. பெனெல்லி லியன்சினோ மற்றும் டிஆர்கே 502, கவாஸாகி நிஞ்ஜா 650 மற்றும் இசட்650, ஹோண்டா சிபிஆர் 650 மற்றும் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட்ராட் போன்ற சூப்பர் பைக்குகளுக்கானதே இந்த டிவிஎஸ் யூரோகிரிப் ரோட்ஹவுண்ட் ஆகும்.

இதில் ஒரு சிலவற்றை நாங்கள் ஓட்டி பார்த்தோம். பைக் எதுவாக இருந்தாலும், அதன் டயரின் திறன் வெளிப்பாடு வேற லெவலில் இருந்தது. இன்னும் தெளிவாக கூற வேண்டும் கனப்பொழுதில் டயர்கள் வெப்பநிலையை அடைந்து, சீரான செயல்திறனை வெளிப்படுத்தத் தொடங்கியது. இத மிக சிறந்த பிடிமானம் ஷார்ப்பான வளைவுகளில்கூட நம்பி வளைக்கச் செய்யும் வகையில் இருந்தன.

TVS tyre review

ஆரம்ப இயக்கநிலையிலேயே இந்த டயர் மிக சிறந்த பிடிமானத்தை வழங்கி நம்பிக்கையைப் பெற தொடங்கிவிட்டது. மேலும், பிரேக்கிங்கின்போது இந்த டயர் மிக சிறப்பாக செயல்பட்டது. இழுத்தல் மற்றும் வழுக்குதல் என எந்த அசௌகரியமான அனுபவத்தையும் இந்த டயர் எங்களுக்கு வழங்கவில்லை. குறிப்பாக, இந்த டயரின் நீட்டிக்கப்பட்ட தோள்பட்டைகள் ஆக சிறந்த கிரிப்பையும், ஸ்மூத் ரைடிங் அனுபவத்தையும் வழங்கின.

வளைந்து வளைந்து ஓட்டும்போது இதே அனுபவத்தையே டிவிஎஸ் யூரோகிரிப் ரோட்ஹவுண்ட் டயர் எங்களுக்கு வழங்கியது. டிரெயில் பிரேக்கிங்கின் போதுகூட ஆவ்சம் என கூறும் அளவிற்கு பிரேக்கிங்கை அந்த டயர்கள் வழங்கின. இதுதவிர சாய்வாக செல்லும்போதுகூட ஆக்ரோஷமாக த்ரோட்டிலை கொடுக்க இந்த டயர் அனுமதித்தது.

பொதுவாக, இவ்வாறு செய்யும்போது சில டயர்கள் போதிய பிடிமானத்தை வழங்காமல் சரித்துவிடும். ஆனால், டிவிஎஸ் யூரோகிரிப் ரோட்ஹவுண்ட் இந்த சூழலைகூட மிகவும் சாதாரணமாக செய்ய செய்துவிட்டது. மேலும், மெதுவாக சாய்ந்த வண்ணம் திருப்பும்போது டயர் சாலையுடன் இருக்கிப் பிடித்திருந்தததைப் போன்ற அனுபவத்தையே வழங்கியது.

இதுபோன்று அனைத்திலும் மிக சிறப்பாகவே டிவிஎஸ் யூரோகிரிப்பின் இந்த புதிய டயர் செயல்பட்டது. இவற்றின் விலையும் சற்று குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 120/70 அளவுள்ள முன் பக்க டயர் ரூ. 12,999க்கும், பின் பக்க டயர்களான 160/60-க்கு ரூ. 14,999 மற்றும் 180/55 ரு. 16,999-ம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எங்களுக்கு குறைவான நேரமே இருந்தது. இருப்பினும், அனைத்து நிலைகளிலும் புதிய டயர் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை அனைத்து நிலைகளிலும் ரைடு செய்து பார்த்தோம். இதன் வாயிலாக இந்த டயர் ரேஸ் மற்றும் டிராக் பயன்பாட்டிற்கு உதவியானதாக இருக்கும் என்பது தெரிகின்றது. ஆனால், இதை வழக்கமான சாலை மற்றும் ரோடுகளில் வைத்து எங்களால் இயக்க முடியவில்லை. ஆகையால், இந்த பயன்பாடுகுறித்த விபரத்தை எங்களால் கூற முடியவில்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, July 27, 2023, 15:45 [IST]
English summary
Newly launched tvs eurogrip roadhound ryre review in tamil
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X