சிங்கிள் சார்ஜ்ல 150 கி.மீ போகலாம்! டாப் ஸ்பீடு 110 கி.மீ! ஓபன் ரோர் பைக் ஓட்டி பார்க்க எப்படி இருக்குது?

இந்தியாவில் எலெக்ட்ரிக் டூவீலர் புரட்சி மிகப்பெரிய அளவில் பரிணாம வளர்ச்சி பெற்று வருகிறது. பொதுமக்கள் மத்தியில் மெதுமெதுவாக எலெக்ட்ரிக் டூவீலர்களை வாங்கும் எண்ணம் அதிகரித்துவிட்டது. அதே நேரம் இந்தியாவில் பல புதிய எலெக்ட்ரிக் டூவீலர் நிறுவனங்கள் உதயமாகி கொண்டே இருக்கிறது. பல புதிய நிறுவனங்கள் இந்தியாவில் தரமான எலெக்ட்ரிக் டூவீலர்களை தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு நிறுவனம் தான் ஓபன் இவி. இந்நிறுவனம் ரோர் (Oben Rorr) என்ற எலெக்ட்ரிக் டூவீலரை தயாரித்து அதிகாரப்பூர்வமாக சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. இந்த எலெக்ட்ரிக் டூவீலரை ஓட்டி பார்க்க டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு கடந்த வாரம் அழைப்பு வந்திருந்தது. அதன் பெயரில் நாங்கள் இந்த ஓபன் ரோர் எலெக்ட்ரிக் டூவீலரை ஓட்டிப் பார்த்தோம். அதன் விமர்சனத்தை (Oben Rorr Review) தொடர்ந்து காணலாம்.

oben rorr review

இந்த பைக்கை பார்க்கும் போது ஓபன் இவி நிறுவனத்தின் உள்ள டிசைனர்கள் எல்லாம் ஹோண்டா சிபி 300 ஆர் (Honda CB 300R) பைக்கின் மிகப்பெரிய ரசிகர்களாக இருப்பார்கள் போல. அதில் உள்ளதைப் போலவே வட்டமான ஹெட்லைட்டுகள், முன்பக்கம் மாஸான டிசைன், ஆங்குலரான போலி டேங்க் பகுதி, இருக்கிறது.

இது போக அதன் பக்கவாட்டில் சில்வர் நிற ஸ்ரவுட்ஸ், பின்பக்கம் சற்று உயரமாக டிசைன் செய்யப்பட்ட பகுதி. ஒரு ஹோண்டா நிறுவனம் தனது சிபி 300 ஆர் பைக்கை அளவை சுருக்கி இன்ஜின் இல்லாமல் வெளியிட்டால் இப்படி இருக்குமோ அப்படி வெளியிட்டுள்ளது.

oben rorr review

மற்ற எலெக்ட்ரிக் வாகனங்கள் போல இந்த ஒபன் ரோர் பைக்கில் டச் ஸ்கிரீன் அல்லது டிஎப்டி டிஸ்ப்ளே கிடையாது. இதில் நெகட்டிவ் நிற எல்சிடி டிஸ்ப்ளே (Nagative LCD Display) ஆட்டோ பிரைட்னஸ் கண்ட்ரோலுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ரைடர்க்கு தேவையான தகவல்கள் எல்லாம் இருக்கிறது. மேலும் இது இ-சிம் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷனுடன் விற்பனைக்கு வருகிறது. இந்த ரோர் பைக்கில் ஆன்ட்டி தெஃப்ட் சிஸ்டம் இருக்கிறது.

இந்த ஓபன் ரோர் பைக்கை மொத்தமாக பார்த்தால் ஒரு பெட்ரோல் பைக் எப்படி இருக்குமோ அப்படியாக தான் இது டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதன் லைட்டிங் செட்டப் எல்லாம் எல்இடியாக வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக கால் வைக்கும் பகுதியும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளில் உள்ளதை போல இருக்கிறது. ஆனால் கியர் மட்டும் இதில் கிடையாது. இதன் பில்டு குவாலிட்டியும் சிறப்பாக இருக்கிறது.

oben rorr review

இந்த பைக்கின் ஒட்டுமொத்த ஃபிட் மற்றும் ஃபினிஷில் சில பிரச்சனைகள் இருக்கிறது. அதை நாம் இங்கே குறிப்பிட வேண்டும். இதன் பெயிண்ட் ஃபினிஷ் சிறப்பாக இருக்கிறது. பிரைடர் ஸ்கீம்களில் நன்றாக இருக்கிறது. ஆனால் சில இடங்களில் புள்ளி புள்ளியாக ஃபினிஷ் சரி இல்லாமல் இருப்பது போல் தெரிகிறது.

நெகட்டிவ் எல்இடி ஆட்டோ பிரைட்னஸ் செட்டப் தானாக ப்ரைட்னஸை ஏற்றி இறக்கி கொண்டே இருக்கிறது. நாங்கள் இந்த பைக்கை ஓட்டி பார்க்கும்போது சில நேரங்களில் இதில் ஃபிலிக் (Flick) ஆகுவதை எங்களால் பார்க்க முடிந்தது. இதுவும் இந்த பைக்கில் ஒரு பிரச்சனையாக பார்க்கலாம். ஆனால் மற்றபடி ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல டிசைன் மற்றும் லுக்கையே இந்த பைக் பெற்றுள்ளது.

oben rorr review

ஸ்பெக் மற்றும் டைமென்ஷன்: இந்த ஓவன் ரோர் பைக் 4.4 கிலோ வாட் எல்எஃப்பி பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இந்த பேட்டரியில் இந்த பைக் 187 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் என ஐடிசி (187KM IDC Range) சான்று வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ரியல் வேல்டில் நீங்கள் எந்த மோடை பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்து ரேஞ்ச் மாறுபடும். மேலும் நீங்கள் செலக்ட் செய்யும் மோடை பொறுத்து டாப் ஸ்பீடு லிமிட்டும் மாறுபடும்.

இந்த பைக்கில் எக்கோ(Eco), சிட்டி(City) மற்றும் ஹேவோக் (Havoc) ஆகிய மூன்று ரைடு மோடுகள் உள்ளன. எக்கோ மோடில் இந்த பைக் ரியல் வேர்ல்ட் ரேஞ்சாக 150 கிலோ மீட்டர் ரேஞ்சையும், அதிகபட்ச வேகமாக 50 கிலோ மீட்டர் வேகத்தையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

oben rorr review

சிட்டி மோடில் அதிகபட்சமாக 70 கிலோமீட்டர் வேகத்தை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக மாறும். இது ரியல் வேல்டில் 120 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் என எதிர்பார்க்கலாம். ஹேவோக் மோடில் அதிகபட்சமாக 110 கிலோமீட்டர் வேகம் வரை இந்த பைக் செல்லும் திறன் கொண்டதாக மாறும் ஆனால் வெறும் 100 கிலோமீட்டர் ரேஞ்ச் தான் தரமுடியும்.

இந்த பைக்கின் மோட்டாரை பொறுத்தவரை 10.72 பிஎச்பி பவரையும் 330 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக் ரியர் வீல் டிரைவ் சிஸ்டத்தின் உடன் பெல்ட் டிரைவ் சிஸ்டம் கொண்டு இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக் 1423 மிமீ நீளமான வீல் பேஸூம் 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

oben rorr review

இந்த பைக்கின் சீட் தரையிலிருந்து 810மிமீ உயரத்தில் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக் மொத்தமே 13 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. சஸ்பென்ஷன் செட்டப்பை பொறுத்தவரை முன்பக்கம் 37மீமி ஃபோர்க் மற்றும் பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 17இன்ச் அலாய் வீல்கள் 110/ 70-12 என்ற அளவில் முன்பக்க டயரும் 130/70-17 என்ற அளவில் பின்பக்க டயரும் வழங்கப்பட்டுள்ளது.

ரைடிங் இம்ப்ரஷன்: இந்த பைக்கை ஓட்டி பார்க்கும்போது பைக் விரைவாக செயல்படுகிறது. முக்கியமாக ஹாவெக் மோடில் நாம் எதிர்பார்க்காத பெர்ஃபார்மென்சை வெளிப்படுத்துகிறது. எக்கோ மற்றும் சிட்டி மோடில் ஒரு டிசென்டான பெர்ஃபாமன்ஸை எதிர்பார்க்கலாம். மூன்று இலக்க வேகத்தில் செல்ல ஹாவெக் மோட் மட்டும் தான் ஒரே வழி. அதிலும் நீங்கள் 90 கிலோமீட்டர் வேகத்தை கடந்து விட்ட பின்பு 100-ஐ எட்டிப் பிடிக்க கொஞ்சம் அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது.

oben rorr review

ரைட் குவாலிட்டி சிறப்பாக இருக்கிறது. பின்பக்க சஸ்பென்ஷன் சற்று சிப்பாக இருப்பதாக தெரிகிறது. பள்ள மேடுகளில் ஏறி இறங்கும்போது அது அந்த கடின தன்மையை பயணிக்கு கடத்துகிறது. மேலும் பைக் துடிப்பாக இருக்கிறது. வளைந்து நெளிந்து செல்ல ஏதுவான வகையில் பைக் செயல்படுகிறது.

ஓபன் நிறுவனம் இந்த பைக்கின் பின்பக்க சஸ்பென்ஷனை சற்று சாப்பிட்டாக மாற்றினால் பள்ள மேடுகளில் சிறப்பான செயல்படும் பைக்காக இது இருக்கும். இந்த ரோர் பைக் சிட்டி பைக் தான். சிட்டிகளில் ஸ்டிஃப்பான சஸ்பென்ஷன் பெரிய அளவுக்கு உதவி செய்யாது. பிரேக்கில் அடுத்த பிரச்சினை இருக்கிறது.இது ஓபன் ரோவர் பைக்கின் முழு பெர்ஃபார்மென்சை வெளிப்படுத்துவதிலிருந்து தடுக்கிறது.

oben rorr review

முன்பக்க பிரேக் சிறப்பான பைட்டை வெளிப்படுத்தவில்லை. அதே நேரம் பின்பக்க பிரேக் மிக அதிகமான பைட்டை வெளிப்படுத்துகிறது. பின்பக்க பிரேக் சற்று அழுத்தி பிடித்தால் வீல் லாக்காக கூட வாய்ப்பு இருக்கிறது. இதனால் பைக் வேகமாக வந்து பிரேக் பிடிக்கும்போது பனிக்கட்டியில் வீரர்கள் சறுக்குவது போல சறுக கூட வாய்ப்பு உள்ளது.

இந்த பைக்கின் சார்ஜிங் நேரத்தை டெஸ்ட் செய்யும் அளவிற்கு அதிக நேரம் எங்களுக்கு பைக் வழங்கப்படவில்லை. இந்த பைக்கின் ரேஞ்சையும் எங்களால் டெஸ்ட் செய்ய முடியவில்லை. இருந்தாலும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ரேஞ்சை கிட்டத்தட்ட எட்டிப்பிடித்து விடும் என்றே சொல்லலாம். நாங்கள் பெரும்பாலும் ஹாவக் மோடியிலேயே அதிகமான ரைடுகளை செய்தோம். சார்ஜிங் நேரம் மற்றும் ரேஞ்ச் குறித்த முடிவுகளை நாங்கள் சொல்ல எங்களுக்கு இன்னும் அதிக நேரம் பைக் ஓட்ட தேவைப்படுகிறது.

இறுதி தீர்ப்பு: இந்த ஒபன் ரோவர் பைக்கை பொறுத்தவரை சில முக்கிய அம்சங்களும் இருக்கிறது. மேலும் சில மேம்படுத்த வேண்டிய அம்சங்களும் இருக்கிறது. இந்த பைக் ஸ்பீடு மற்றும் ரேஞ்சில் நாங்கள் பார்த்தவரை சிறப்பாக இருக்கிறது. மேலும் வளைவு நெளிவு திருப்பங்களில் இந்த பைக் சிறப்பாக செயல்படுகிறது. பள்ள மேடு நிறைந்த சாலையில் பயணிப்பது, பிரேக்குகளில் இருக்கும் பிரச்சினை ஆகியவற்றை சரி செய்ய வேண்டும்.

மேலும் இந்த பைக்கில் உள்ள ஃபினிஷ் பிரச்சனையில் ஓபன் எப்படி இதை தவறவிட்டது என்று தெரியவில்லை. இந்த ஓபன் ரோர் புலி போல உருமும் என நினைத்தோம் ஆனால் பல இடங்களில் இது பூனை போல இருக்கிறது. ஆனால் இதில் சில விஷயங்களை மாற்றினால் புலியாக மாறிவிடும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 7, 2023, 9:00 [IST]
English summary
Oben rorr review battery range performance
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X