ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இப்படி ஒரு அப்டேட்டா? வேற லெவலுக்கு மாறிருச்சு... உடனே வாங்கணும் போல தோணுது!

ஓலா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆப்ரேட்டிங் சிஸ்டமான மூவ்-வில் 2.0 என்ற புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. இது குறித்த முழு விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இப்படி ஒரு அப்டேட்டா? வேற லெவலுக்கு மாறிருச்சு . . . உடனே வாங்கணும் போல தோணுது !

ஓலா நிறுவனம் இந்தியாவில் கார்ப்பரேட் கால் டாக்ஸி பிஸ்னஸ் மூலம் அறிமுகமானது. இந்நிலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கவுள்ளதாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்நிறுவனம் தெரிவித்தது. அப்போதில் இருந்தே அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிகப்பெரிய தொழிற்சாலை அமைக்கப்பட்டு, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் பணிகள் தொடங்கின.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இப்படி ஒரு அப்டேட்டா? வேற லெவலுக்கு மாறிருச்சு . . . உடனே வாங்கணும் போல தோணுது !

அதன் லுக் மற்றும் ஸ்டைல் பிடித்து போக மக்கள் பலர் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க ஆர்வம் காட்டினர். கடந்தாண்டு இறுதியில் இதன் விற்பனை துவங்கப்பட்ட நிலையில், தற்போது மாதம் சுமார் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரை விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய அப்பேட்டை தற்போது கொண்டு வந்துள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இப்படி ஒரு அப்டேட்டா? வேற லெவலுக்கு மாறிருச்சு . . . உடனே வாங்கணும் போல தோணுது !

ஓலா தனது எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு ஸ்மார்ட் ஸ்கூட்டராகவே அறிமுகப்படுத்தியது. இந்த சூழலில் அதன் ஆப்ரேட்டிங் தளமான மூவ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் தற்போது 2.0 அப்டேட்டை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் என்னென்ன புதிய அம்சங்கள் இருக்கின்றன? இதனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டும்போது என்ன விதமான பலன் கிடைக்கும்? என்ற கேள்விகளுக்கு எல்லாம் இந்த செய்தி விடையளிக்கிறது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இப்படி ஒரு அப்டேட்டா? வேற லெவலுக்கு மாறிருச்சு . . . உடனே வாங்கணும் போல தோணுது !

ஏற்கனவே இருந்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆபரேட்டிங் சிஸ்டத்தில், நார்மல், ஸ்போர்ட் மற்றும் ஹைப்பர் ஆகிய ரைடிங் மோடுகள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது ஈக்கோ என்ற புதிய மோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்திய பலர், ரேஞ்ச் குறைவாக இருப்பதாக அங்கலாய்த்தனர். அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில், ஈக்கோ மோடு வழங்கப்பட்டுள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இப்படி ஒரு அப்டேட்டா? வேற லெவலுக்கு மாறிருச்சு . . . உடனே வாங்கணும் போல தோணுது !

ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அராய் ரேஞ்ச் 181 கிலோ மீட்டர்கள் ஆகும். ஆனால் ஈக்கோ மோடில் உங்கள் ரைடிங் ஸ்டைலை பொறுத்து, 170 கிலோ மீட்டர்கள் வரை ரேஞ்ச் கிடைக்கலாம் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்கள் ஈக்கோ மோடில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதனை செய்தபோது 170 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரேஞ்ச் கிடைத்ததாக கூறியுள்ளனர். ஆனால் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வாடிக்கையாளர்கள் பலர், ஏற்கனவே நார்மல் டிரைவிங் மோடிலேயே சிங்கிள் சார்ஜில் 200 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரேஞ்ச் பெற்றுள்ளனர். தற்போது ஈக்கோ மோடில் அதை விட அதிக தூரம் பயணிக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே உங்களுக்கு 200 கிலோ மீட்டர்கள் ரேஞ்ச் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் ஓட்டும் முறை உள்பட பல்வேறு காரணிகளை பொறுத்து, ரேஞ்ச் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது விஷயம் ஆகும். உங்களுக்கு அதிக ரேஞ்ச் கிடைக்க வேண்டுமென்றால், ஈக்கோ மோடில் மணிக்கு 45 கிலோ மீட்டர்கள் வேகம் வரை பயணிக்கும் ஓலா நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இப்படி ஒரு அப்டேட்டா? வேற லெவலுக்கு மாறிருச்சு . . . உடனே வாங்கணும் போல தோணுது !

இதற்கிடையே பேட்டரியின் சார்ஜ் சதவீதம் 15க்கும் கீழே குறைந்தால், ஸ்கூட்டர் எந்த மோடில் இருந்தாலும் உடனயாக ஈக்கோ மோடிற்கு சென்று விடும். இதனால் இருக்கும் சார்ஜில் முடிந்தளவுக்கு நீண்ட தூரம் பயணிக்க முடியும். ஆனால் குறைவான சார்ஜில் பயணிப்பது பேட்டரியின் ஆயுளை குறைக்கும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கூறியுள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இப்படி ஒரு அப்டேட்டா? வேற லெவலுக்கு மாறிருச்சு . . . உடனே வாங்கணும் போல தோணுது !

அடுத்த முக்கிய அப்டேட் க்ரூஸ் கண்ட்ரோல். கார்களில் இருப்பது போல தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் க்ரூஸ் கண்டரோல் வசதியை வழங்கியுள்ளது. ஆனால் மணிக்கு 20 கிலோ மீட்டர்கள் முதல் 80 கிலோ மீட்டர்கள் வரையிலான வேகத்திற்கு மட்டுமே க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பயன்படுத்த முடியும். அதேபோல் ஆக்ஸலரேஷன் கொடுத்தாலோ அல்லது பிரேக் பிடித்தாலோ க்ரூஸ் கண்ட்ரோல் வசதி 'டீஆக்டிவேட்' ஆகி விடும் என்பதும், எக்கோ மோடு தவிர மற்ற அனைத்து மோடுகளிலும் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இப்படி ஒரு அப்டேட்டா? வேற லெவலுக்கு மாறிருச்சு . . . உடனே வாங்கணும் போல தோணுது !

இந்த மூவ் ஓஎஸ் 2.0-வில் அடுத்த அப்டேட்டாக டிஜிட்டல் லாக் சிஸ்டம் இருக்கிறது. அதாவது ஓலா நிறுவனம் செல்போன் செயலி (ஓலா எலெக்ட்ரிக் கம்பேனியன் ஆப்) ஒன்றை வழங்கியுள்ளது. இந்த செயலியை உங்கள் செல்போனில் இன்ஸ்டால் செய்து கொள்வதன் மூலம், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரிமோட் முறையில் கட்டுப்படுத்த முடியும். ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை லாக்/அன்லாக் செய்வது, 'பூட் ரிலீஸ்' செய்வது போன்றவற்றை செல்போன் மூலமாகவே செய்ய முடியும். அத்துடன் சார்ஜ் எவ்வளவு இருக்கிறது என்ற ஸ்டேட்டஸ், வெவ்வேறு மோடுகளில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எவ்வளவு தூரம் பயணிக்கும், ஓடோ மீட்டர் ரீடிங் போன்றவற்றை ரியல் டைமில் பார்க்கவும் முடியும்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இப்படி ஒரு அப்டேட்டா? வேற லெவலுக்கு மாறிருச்சு . . . உடனே வாங்கணும் போல தோணுது !

அத்துடன் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள ஸ்கிரினில் மேப்பை பயன்படுத்தும் ஆப்ஷனும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 'மேப் மை இந்தியா' தளத்துடன் கைகோர்த்து ரியல் டைம் மேப் டிராக்கிங் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணம் சுலபமாக அமையும். ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், மேப் பயன்படுத்துவது மிகவும் எளிமையாக உள்ளது. பெரும்பாலான நேரங்களிலும் மிகவும் துல்லியமாக இருப்பது இதன் சிறப்பம்சம். நெட்வொர்க் கவரேஜ் சிறப்பாக இல்லாத இடங்களிலும் கூட ஓரளவிற்கு சிறப்பாக செயல்படுவதை எங்கள் அனுபவத்தில் உணர்ந்தோம். ஆனால் மிகவும் துல்லியமாக வேண்டுமென்றால், நெட்வொர்க் கவரேஜ் சிறப்பாக இருக்க வேண்டும். இதன் துல்லியத்தை, நெட்வொர்க் கவரேஜ்தான் தீர்மானிக்கிறது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இப்படி ஒரு அப்டேட்டா? வேற லெவலுக்கு மாறிருச்சு . . . உடனே வாங்கணும் போல தோணுது !

ஓலா நிறுவனம் ஏற்கனவே தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஸ்பீக்கரை இணைத்திருந்தது. தற்போது அதை ஆக்டிவேட் செய்யும்படியாக இந்த அப்டேட்டில் மியூசிக் ஆப் வழங்கப்பட்டுள்ளது. ரைடர்கள் தங்களது செல்போனை ப்ளூடூத் மூலம் ஸ்கூட்டருடன் கனெக்ட் செய்து ஜியோ சாவான், ஸ்பாட்டிஃபை போன்ற செயலிகளை பயன்படுத்தி பாடல்களை பிளே செய்யலாம். ப்ளூடூத் மூலம் இணைப்பது எளிமையாகவும், தடையற்றதாகவும் உள்ளது. அனைத்து நேரங்களிலும் இது சிறப்பாக செயல்படுகிறது. அவுட்டோர் பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் ஆடியோ தரம் உள்ளது. ப்ளூடூத் 'ஆன்' செய்யப்பட்டிருந்தால், ஒவ்வொரு முறை நீங்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும்போது, உங்கள் செல்போன் ஆட்டோமேட்டிக்காகவே ஸ்கூட்டரின் இணைக்கப்பட்டு விடுகிறது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இப்படி ஒரு அப்டேட்டா? வேற லெவலுக்கு மாறிருச்சு . . . உடனே வாங்கணும் போல தோணுது !

இந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் மூவ் 2.0 அப்டேட் தற்போது புதியதாக டெலிவரி செய்யவுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும், ஏற்கனவே உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் பொருந்தும். ஏற்கனவே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்தி வருபவர்கள், இந்த மூவ் 2.0 அப்டேட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த அப்டேட் டவுன்லோடு ஆகும்போதும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்த முடியும். ஆனால் அதை இன்ஸ்டால் செய்யும்போது ஸ்கூட்டரில் குறைந்தது 30 சதவீதம் சார்ஜ் இருக்க வேண்டும். மேலும் ஸ்கூட்டர் பார்க்கிங் மோடில் இருக்க வேண்டும். இந்த அப்டேட்டிற்கு 60-90 நிமிடங்கள் வரை ஆகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய அப்டேட் குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஓலா #ola
English summary
Ola updated move os 2 0 know full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X