இது யாருக்கான மோட்டார்சைக்கிள்?- ராயல் என்ஃபீல்டு ஜிடி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திடமிருந்து நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு புத்தம் புதிய மாடல் என்பதால் கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிள் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது அதே எதிர்பார்ப்பை மனதில் சுமந்து கொண்டு கோவாவில் நடந்த ராயல் என்ஃபீல்டு அறிமுக நிகழ்ச்சி மற்றும் டெஸ்ட் டிரைவ் வைபவத்தில் டிரைவ்ஸ்பார்க் தளமும் பங்குகொண்டது.

இதுவரை வந்த ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளில் இலகு எடை, அதிக திறன் கொண்ட இந்த மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்ற கேள்வியுடன் கான்டினென்டல் ஜிடி.,யை டெஸ்ட் டிரைவ் செய்தோம். இரண்டு நாட்களில் 350 கிமீ தூரத்துக்கு கான்டினென்டல் ஜிடி.,யில் பயணித்து அதன் சாதக, பாதகங்கள் குறித்த எமது அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

தோற்றம்

தோற்றம்

மார்க்கெட்டிலேயே இப்போது பிரத்யேக ஸ்டைல் கொண்ட ஒரே மோட்டார்சைக்கிள் கான்டினென்டல் ஜிடி.,தான். 1960 களில் இங்கிலாந்தை கலக்கிய கஃபே ரேஸர் மோட்டார்சைக்கிளின் டிசைன் தாத்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு முற்றிலும் புதுமையான தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பார்வையிலேயே பிடித்துப் போகும் இந்த மோட்டார்சைக்கிள் வடிவமைப்பில் இங்கிலாந்தின் ஸினோபியா டிசைன் நிறுவனம் முக்கிய பங்காற்றியுள்ளது.

தரம் நிரந்தரம்

தரம் நிரந்தரம்

எந்தவொரு பாகத்தை பார்த்தாலும் உயர்தரமும், குரோமிய பூச்சு கொண்ட பாகங்களும் பளிச்சிடுகின்றன.

எஞ்சின்

எஞ்சின்

இந்த மோட்டார்சைக்கிளில் இருப்பது 29.1 பிஎச்பி ஆற்றலை வழங்கும் சிங்கிள் சிலிண்டர் 535 சிசி எஞ்சின். ஆனால், இந்த எஞ்சினை மேம்படுத்தினால், இதன் பெர்ஃபார்மென்ஸ் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

சிறப்பான டார்க்

சிறப்பான டார்க்

பிற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை விட இந்த புதிய மோட்டார்சைக்கிளின் எஞ்சினின் டார்க் மிக சிறப்பாக இருக்கிறது. இது 4,000 ஆர்பிஎம்.மில் 44 என்எம் டார்க் வரை அளிக்கும்.

க்ரூஸ்

க்ரூஸ்

2,500 ஆர்பிஎம் முதல் 4,000 ஆர்பிஎம் வரை இந்த எஞ்சின் க்ரூஸ் செய்ய சிறப்பாக இருக்கிறது. அதிர்வுகள் குறைவு. ஆனால், 4,000 ஆர்பிஎம் தாண்டும்போது அதிர்வுகள் அதிகம் தெரிகிறது.

 டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 130 கிமீ வரை தொட்டு பார்த்தோம். முன் கூறியதுபோல் 4,000 ஆர்பிஎம் தாண்டிவிட்டால் அதிர்வுகள் அதிகம் தென்படுகிறது என்பதோடு, இன்னொன்று வேலையையும் இந்த மோட்டார்சைக்கிள் காட்டியது. அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள்.

பேண்ட் காலி

பேண்ட் காலி

முதல் நாள் ஜீன்ஸ் போட்டு ஓட்டியதுபோது எதுவும் தெரியவில்லை. மறுநாள் டிராக் பேண்ட் போட்டு ஓட்டியதுபோது சைலன்சர் சூடு பேண்ட்டை பதம் பார்த்துவிட்டது. சைலன்சரில் கொடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு பட்டையை இன்னும் கொஞ்சம் கூடுதலாக பின்புறம் நீட்டியிருந்தால் சைலன்சர் சூடு காலை பதம் பார்க்காது.

ரைடிங் பொசிஷன்

ரைடிங் பொசிஷன்

மற்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை போல ஏறி உட்கார்ந்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு உட்கார்ந்து செல்ல முடியாது. இதன் ஹேண்டில்பார் பக்கவாட்டில் நீண்டிருப்பதால் உடலை சற்றே முன்புறமாக கவிழ்ந்து ஓட்டுவது போன்று இருக்கிறது. இது உயரத்தை பொறுத்து மாறுபடலாம். இதன் ரைடிங் பொசிஷன் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கிறது.

முதுகு வலி

முதுகு வலி

பிற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை போல இதனை நீண்ட தூரம் ஓட்டுவதற்கு சிறப்பானதாக இருக்கும் என்று சொல்ல தோன்றவில்லை. குறுகிய பயணங்களுக்கும், தினசரி பயன்பாட்டிற்கும் ஓகே. மற்றபடி, நீண்ட தூரம் பயணித்தால் முதுகு வலி நிச்சயம் வரும்.

யாருக்கு சிறந்தது?

யாருக்கு சிறந்தது?

இதன் ரைடிங் பொசிஷனை வைத்து பார்க்கும்போது இந்த மோட்டார்சைக்கிள் உயரமானவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.

கையாளுமை

கையாளுமை

இந்த மோட்டார்சைக்கிளின் கையாளுமை வெகு ஜோராக இருக்கிறது. வளைவுகளிலும் மிகச் சிறப்பான சமநிலையை தருகிறது. பிக்கப் அதிகம் இருப்பதாலும், இதன் சிறப்பான 5 ஸ்பீடு கியர் பாக்ஸும் பதறாமல் ஓவர் டேக் செய்வதற்கு துணை நிற்கின்றன.

மைலேஜ்

மைலேஜ்

எஞ்சினின் முழு திறனை பரிசோதிக்கும் விதமாக த்ராட்டிலை முழு அளவு திருகி ஓட விட்டபோது, லிட்டருக்கு சராசரியாக 20 கிமீ மைலேஜ் கொடுத்தது. சீரான டிரைவிங்கில் அதிகபட்சமாக 25 கிமீ மைலேஜை தந்தது.

ரியர் வியூ கண்ணாடி

ரியர் வியூ கண்ணாடி

ஹேண்டில்பார் வெளிப்புறமாக நீண்டிருப்பதால் ரியர் வியூ கண்ணாடியில் பின்புறம் வரும் வாகனங்களை தெளிவாக பார்க்கலாம். ஆனால், நாம் டெஸ்ட் டிரைவ் செய்த மோட்டார்சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த ரியர் வியூ கண்ணாடிகளின் டிசைன் நம் நாட்டில் சட்ட ரீதியில் அனுமதிக்கப்படாது என்று தெரிகிறது. எனவே, விற்பனைக்கு வரும் மோட்டார்சைக்கிளில் புதிய டிசைன் கொண்ட ரியர் வியூ கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.

 பிரேக்

பிரேக்

பிரேக் விஷயத்தில் மற்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுடன் இது ஒத்துப் போகிறது. இதில், பொருத்தப்பட்டிருக்கும் பிரேம்போ டிஸ்க் பிரேக் அமைப்பு மிகச்சிறப்பான நிறுத்துதல் திறனை மோட்டார்சைக்கிளுக்கு அளிக்கிறது. ஒவ்வொரு பயணமும் கூடுதல் பாதுகாப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

ஹெட்லைட் பிரகாசம்

ஹெட்லைட் பிரகாசம்

புரொஜெக்டர் ஹெட்லைட், ஸினான் பல்புகள் என எந்தவொரு கூடுதல் சிறப்பு சமாச்சாரமும் இல்லை. ஆனால், இதன் ஹெட்லைட் மிக பிரகாசமாக இருக்கிறது. இதனால், இரவு பயணங்களின்போது எந்த பிரச்னையும் இருக்காது.

சவுண்ட்டை கேட்டாலே

சவுண்ட்டை கேட்டாலே

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் என்றவுடன் நினைவுக்கு வருவது அதன் அலாதியான சப்தம்தான். மற்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளைவிட இந்த புதிய மோட்டார்சைக்கிளின் அதிக சப்தம் கொண்டது.

பெயிண்ட் சூப்பர்ப்

பெயிண்ட் சூப்பர்ப்

இந்த மோட்டார்சைக்கிளின் மிக முக்கியமான அம்சமாக பெயிண்டிங்கை கூறலாம். மிக மிக தரமாகவும், பார்ப்பதற்கு சிறப்பாகவும் இருக்கிறது. இதற்காக, சென்னை ஆலையில் பிரத்யேக பெயிண்ட் தயாரிப்பு பிரிவையும் ராயல் என்ஃபீல்டு அமைத்துள்ளதாம்.

2 சீட்டர்

2 சீட்டர்

டெஸ்ட் டிரைவ் செய்வதற்கு பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட கான்டினென்டல் ஜிடி மாடல் ஒற்றை இருக்கை வசதி கொண்டது. ஆனால், அங்கு நடந்த நிகழ்ச்சியின்போது நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் ஒன்று இரண்டு பேர் பயணிக்கும் வசதி கொண்டதாக இருந்தது. பின்புறம் அழகுக்காக பெட்டி போன்ற அமைப்புடன் பிளாஸ்டிக் பாகம் பொருத்தப்பட்டிருந்தது. அந்த மோட்டார்சைக்கிளில் பின்புற பயணி கால் வைப்பதற்கான ஃபுட் ரெஸ்ட்டும் உள்ளதை நீங்கள் பார்க்கலாம். வாடிக்கையாளர்களின் விருப்பதிற்கு ஏற்ப இரண்டு பேர் பயணிக்கும் வசதி கொண்ட மாடலும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால், பின்புறம் அமர்ந்து செல்பவருக்கு இடவசதி மிக நெருக்கடியாக இருக்கும்.

 வண்ணங்கள்

வண்ணங்கள்

டெஸ்ட் டிரைவுக்கு சிவப்பு நிற மோட்டார்சைக்கிள் வழங்கப்பட்டது. மறுநாள் அறிமுகத்தின்போது மஞ்சள் வண்ண மோட்டார்சைக்கிள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு வண்ணங்களில் சிவப்பு படு கவர்ச்சியாக இருக்கிறது.

 இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

இரட்டை டயல்கள் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அதில், அனலாக் ஸ்பீடோமீட்டர், ஆர்பிஎம் மீட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்பீடோமீட்டர் டயலில் ஓடிய கிலோமீட்டர் தொலைவை தெரிந்துகொள்வதற்கு டிஜிட்டல் திரை கொடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரை பார்ப்பதற்கு தெளிவாக இருக்கிறது.

போட்டோஷூட்

போட்டோஷூட்

போட்டோஷூட் நடத்துவதற்காக கோவா அருகிலுள்ள திவார் என்ற சிறிய தீவுக்கு சென்றோம். அந்த தீவுக்கு செல்வதற்கான படகும் 50 ஆண்டுகள் பழமையானது. அந்த தீவில் இருந்த நூறாண்டுகளை கடந்த போர்த்துகீசியர்களின் சர்ச் ஒன்றும் எம்மை பிரமிப்பில் ஆழ்த்தியது.

டெலிவிரி

டெலிவிரி

அடுத்த மாதம் இந்த புதிய மோட்டார்சைக்கிளின் டெலிவிரி துவங்கப்பட உள்ளதாக ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது. புதிய ஆலையில் போதுமான உற்பத்தி திறன் இருப்பதால் அதிக காத்திருப்பு காலம் இருக்காது என நம்புவதாகவும் அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 இந்த எஞ்சின் ஏன்?

இந்த எஞ்சின் ஏன்?

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பழைய 500சிசி எஞ்சினை ரீபோர் செய்து பெரிய பிஸ்டனை போட்டு 535சிசி எஞ்சினாக மாற்றியுள்ளது. பழைய கஃபே ரேஸர் மாடலில் 250சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருந்த நிலையில், ஏன் 500சிசி எஞ்சின் என்ற கேள்வியை முன்வைத்தோம். புதிய எஞ்சினை வடிவமைப்பதற்கு அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்பதுடன், அதனை ஈடுகட்ட விலையையும் அதிகம் நிர்ணயிக்க வேண்டியிருக்கும் என்பதை தவிர்க்கவே இவ்வாறு செய்ததாக ராயல் என்ஃபீல்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போட்டியா... இதுக்கா??

போட்டியா... இதுக்கா??

கேடிஎம் டியூக் 390 உள்ளிட்ட பைக்குகளுடன் இந்த புதிய மோட்டார்சைக்கிளை ஒப்பிட முடியாது என்று ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது. இது முற்றிலும் புதிய மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட்ட மோட்டார்சைக்கிள் என்று நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 ஆக்சஸெரீஸ்

ஆக்சஸெரீஸ்

கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிளுக்கு சிறப்பு ஆக்சஸெரீஸ்களையும் ராயல் என்ஃபீல்டு அறிவித்தது. லெதர் ஜாக்கெட் ரூ.14,000 விலையிலும், கருப்பு - சிவப்பு கொண்ட டெக்ஸ்டைல் ஜாக்கெட் ரூ.3,500 விலையிலும், முழு கிளவுஸ் செட் ஒன்று ரூ.3,000 விலையிலும், ஏஜிவி ஹெல்மெட் ரூ.3,000 விலையிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிற மோட்டார்சைக்கிள்களை மனதில் நினைத்துக் கொண்டு செல்பவர்களின் எதிர்பார்ப்பை வேறு விதத்தில் நிறைவு செய்யும். தரமும், ஸ்டைலும் வழிந்தோடுகிறது. ஸ்டைல், ஸ்டைல், ஸ்டைல் என ஸ்டைலை மட்டுமே விரும்புகிறவர்களுக்கு இந்த மோட்டார்சைக்கிள் மிகச் சிறப்பான சாய்ஸ்.

டிரைவ்ஸ்பார்க் டீம்

டிரைவ்ஸ்பார்க் டீம்

டெஸ்ட் டிரைவ்: ஜோபோ குருவில்லா

எழுத்தாக்கம்: சரவணராஜன்

More from DriveSpark

Article Published On: Thursday, December 5, 2013, 15:07 [IST]
English summary
As the year draws to a close, Royal Enfield is looking to set ablaze the Indian roads with the all-new 535cc Cafe Racer ‘Continental GT'. My first impression of this red thumper was how it's one of the best versions of a perfectly tailored modern bike with an antique-like appeal. Very regal, indeed.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+