ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் எப்படி உள்ளது? டெஸ்ட் ரைடு ரிவியூ!! ஹிமாலயனுக்கு இணையானதுதானா?

ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 (Scram 411), இணையத்தில் நீண்ட நாட்களாக உலாவந்து கொண்டிருக்கும் பைக்கின் பெயர் என்றுதான் சொல்ல வேண்டும். ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக்கின் சாலை-சார்ந்த வெர்சனாக கொண்டுவரப்படும் இதன் ஸ்பை படங்கள் கடந்த பல மாதங்களாக சோதனை ஓட்டங்களின்போது வெளியாகி வந்துள்ளன. ஸ்க்ராம்ப்ளர் போன்றதான தோற்றத்தை கொண்டிருந்தாலும், மற்ற ராயல் என்பீல்டு மாடல்களை போல் ஸ்க்ராம் 411-ஐ பக்கா ஸ்க்ராம்ப்ளர் பைக் என கூற இயலாது.

ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் எப்படி உள்ளது? டெஸ்ட் ரைடு ரிவியூ!! ஹிமாலயனுக்கு இணையானதுதானா?

ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளுக்கு சுமார் 100 வருடங்களுக்கு மேல் வரலாறு உள்ளது. ஐரோப்பாவில் இருந்து துவங்கிய இந்த வரலாறு, அதன்பின் சகதி பைக்குகளின் வருகையால் சற்று குறைய துவங்கியது. ஏனெனில் ஸ்க்ராம்ப்ளர் தோற்றத்துடன் சற்று ஆஃப்-ரோடு பண்புகளையும் கொண்ட பைக்குகளை எதிர்பார்க்க வாடிக்கையாளர்கள் ஆரம்பித்தனர். இதனால் ஸ்க்ராம்ப்ளர் தோற்றத்தில் பைக்கை வடிவமைத்தாலும், அதற்கு சில ஆஃப்-ரோடு பண்புகளை வழங்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் எப்படி உள்ளது? டெஸ்ட் ரைடு ரிவியூ!! ஹிமாலயனுக்கு இணையானதுதானா?

இதனை புரிந்துக்கொண்டு ராயல் என்பீல்டு உருவாக்கியுள்ள மோட்டார்சைக்கிள்தான், ஸ்க்ராம் 411 ஆகும். இந்த பைக்கினை கர்நாடகா மாநிலத்தில் உள்ள பிக்ராக் டெர்ட் பார்க்கில் இயக்கி பார்த்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை விமர்சனமாக தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் எப்படி உள்ளது? டெஸ்ட் ரைடு ரிவியூ!! ஹிமாலயனுக்கு இணையானதுதானா?

டிசைன் & ஸ்டைல்

ஏற்கனவே கூறியதுபோல், கடந்த காலங்களில் இருந்து ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் மிகவும் ஆற்றல்மிக்கவைகளாகவும், தொழிற்நுட்ப அம்சங்கள் மிக்கவைகளாக உருவெடுத்துள்ளன. மாறாத ஒன்று என்றால், அது ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளுக்கு உண்டான தோற்றம் ஆகும். உலகம் முழுவதிலும் பல்வேறான பிராண்ட்களில், பல்வேறான விலைகளில் ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன, உருவாக்கப்பட்டு வருகின்றன.

ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் எப்படி உள்ளது? டெஸ்ட் ரைடு ரிவியூ!! ஹிமாலயனுக்கு இணையானதுதானா?

ஆனால் இவை அனைத்திலும் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப், சகதிபைக்-ஸ்டைலில் மட்கார்ட்கள், ஒற்றை-துண்டு இருக்கை அமைப்பு, பெரிய அளவிலான பெட்ரோல் டேங்க் மற்றும் இரு-பயன்பாட்டு டயர்கள் உள்ளிட்டவை பொதுவான அம்சங்களாக வழங்கப்பட்டு வருகின்றன. ஆதலால் இவை அனைத்தையும் மறக்காமல் தனது புதிய ஸ்க்ராம் 411 பைக்கிலும் ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கியுள்ளது.

ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் எப்படி உள்ளது? டெஸ்ட் ரைடு ரிவியூ!! ஹிமாலயனுக்கு இணையானதுதானா?

பிரபலமான ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும், அதில் இருந்து வேறுப்படுத்தி காட்டும் வகையில் பல்வேறு டிசைன் பாகங்களை ஸ்க்ராம் 411 பெற்றுள்ளது. முன்பக்கத்தில் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப் அப்படியே ஹிமாலயனில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ள கூடு புதுமையானதாக உள்ளதால், முன்பக்கத்தில் இருந்து பார்த்தாலும் ஹிமாலயன் நமது ஞாபகத்திற்கு வரவில்லை.

ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் எப்படி உள்ளது? டெஸ்ட் ரைடு ரிவியூ!! ஹிமாலயனுக்கு இணையானதுதானா?

ஹெட்லேம்பிற்கு பின்னால் வழங்கப்பட்டுள்ள மாஸ்க் போன்ற பாகமானது இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் பகுதி வரையில் நீண்டுள்ளது. இந்த பைக்கின் ஹேண்டில்பார் அமைப்பானது ரைடரை நிமிர்ந்து அமர வைக்கிறது. ஹேண்டில்பாரின் இரு முனைகளிலும் பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள ஃபோர்க் கேட்டர்களின் கீழ் பாதி கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் எப்படி உள்ளது? டெஸ்ட் ரைடு ரிவியூ!! ஹிமாலயனுக்கு இணையானதுதானா?

19-இன்ச்சில் உள்ள இந்த பைக்கின் முன்பக்க ஸ்போக்டு சக்கரத்தில் சியட் க்ரிப் இரட்டை-பயன்பாடு டயர் பொருத்தப்பட்டுள்ளது. சக்கரத்தின் ரிம் கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. ஹிமாலயனின் பெட்ரோல் டேங்க் அப்படியே தொடரப்பட்டாலும், ஸ்க்ராம் 411 பைக்கில் பெட்ரோல் டேங்க் நீட்டிப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த புதிய பைக்கிற்கு மொத்தம் 7 விதமான நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கேற்ப பெட்ரோல் டேங்க் நீட்டிப்பு பேனல்களில் கிராஃபிக்ஸை தேர்வு செய்யலாமாம்.

ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் எப்படி உள்ளது? டெஸ்ட் ரைடு ரிவியூ!! ஹிமாலயனுக்கு இணையானதுதானா?

மற்றப்படி என்ஜின், சேசிஸ், எக்ஸாஸ்ட், பின் சக்கரம் மற்றும் பைக்கின் பின் இறுதிமுனை உள்ளிட்டவை அனைத்தும் ஹிமாலயனை ஒத்து காணப்படுகின்றன. ஆனால் ஹிமாலயனில் இரு-துண்டு இருக்கை அமைப்பு வழங்கப்பட்டு கொண்டிருக்க, புதிய ஸ்க்ராம் 411-இல் ஸ்க்ராம்ப்ளர் பைக்கிற்கு உண்டான ஸ்டைலில் ஒற்றை-துண்டு இருக்கை அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய இருக்கை அமைப்பு பைக்கின் டிசைன் & ஸ்டைலை ஹிமாலயனில் இருந்து வேறுப்படுத்தி காட்டியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் எப்படி உள்ளது? டெஸ்ட் ரைடு ரிவியூ!! ஹிமாலயனுக்கு இணையானதுதானா?

தொழிற்நுட்ப வசதிகள்

ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் என்றாலே சேசிஸ், என்ஜின் மற்றும் இவற்றை தாங்கும் இரு சக்கரங்கள் என்பவையே நம்மில் பலரது ஞாபகத்திற்கு வரும். ஆனால் உண்மையில், இத்தனை வருடங்களில் ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளும் தொழிற்நுட்பங்களில் பல புரட்சிகளை கண்டுள்ளன. இதன் விளைவாக வெளிநாட்டு சந்தைகளில் பல விலையுயர்ந்த ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் விற்பனையில் உள்ளன.

ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் எப்படி உள்ளது? டெஸ்ட் ரைடு ரிவியூ!! ஹிமாலயனுக்கு இணையானதுதானா?

ஆனால் ஸ்க்ராம் 411 மாடலை பொறுத்தவரையில், இதனை நம் நாட்டு வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப விலை குறைவான பைக்காக கொண்டுவரவே ராயல் என்பீல்டு விரும்பியுள்ளது. இதனால் மிகவும் தேவையான, அடிப்படை தொழிற்நுட்பங்களே இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. ஸ்க்ராம் 411 பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் பகுதியில் இரட்டை-பேட் அனலாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் எப்படி உள்ளது? டெஸ்ட் ரைடு ரிவியூ!! ஹிமாலயனுக்கு இணையானதுதானா?

இதன் ஒரு பேட் பயணத்திற்கான வழிக்காட்டுதலுக்காக வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் வாயிலாக செயல்படக்கூடியதாக உள்ள இந்த வழிக்காட்டுதல் வசதியின் மூலம் ஒவ்வொரு திருப்பலுக்குமான திசைகளை பெறலாம். இதனால் பயணம் மேலும் எளிதாகும். முதன்முதலாக மீட்டியோர் 350 பைக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வழிக்காட்டுதல் வசதி ராயல் என்பீல்டு மேக் இட் யுவர்ஸ் பிரோகிராமின் கீழ் கூடுதல் தேர்வாக மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் எப்படி உள்ளது? டெஸ்ட் ரைடு ரிவியூ!! ஹிமாலயனுக்கு இணையானதுதானா?

இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் வழங்கப்பட்டுள்ள மற்றொரு சிறிய அளவிலான திரையானது பெட்ரோல் அளவு, பயண தூரங்கள், ஓடோமீட்டர் மற்றும் நேரம் உள்ளிட்ட வழக்கமான விபரங்களை காட்டக்கூடியதாக உள்ளது. ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக, என்ஜினின் ஆர்பிஎம் வேகத்தை காட்டக்கூடிய டச்சோமீட்டர் புதிய ஸ்க்ராம் 411 பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் பகுதியில் வழங்கப்படவில்லை.

ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் எப்படி உள்ளது? டெஸ்ட் ரைடு ரிவியூ!! ஹிமாலயனுக்கு இணையானதுதானா?

இதனுடன் தற்போதைய காலக்கட்டத்தில் அடிப்படை அம்சமாக மாறி வருகின்ற எல்இடி ஹெட்லேம்ப் இந்த பைக்கில் கொடுக்கப்படவில்லை. இதற்கு மாற்றாக பழமையான ஹலோஜன் ஹெட்லேம்ப் அமைப்பே கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய தொழிற்நுட்ப அம்சங்கள் இல்லாத காரணத்தினால் ஸ்க்ராம் 411 பைக்கின் விலையினை மிகவும் மலிவானதாக எதிர்பார்க்கிறோம்.

ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் எப்படி உள்ளது? டெஸ்ட் ரைடு ரிவியூ!! ஹிமாலயனுக்கு இணையானதுதானா?

இந்த பைக்கில் அடிப்படை ஸ்விட்ச்கியரே வழங்கப்பட்டுள்ளது. இதில் ஸ்விட்ச்கள் தரமானவைகளாக உள்ளதை இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். பயணிகளின் பாதுகாப்பிற்கு இரட்டை-சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. மற்ற மாடர்ன் ராயல் என்பீல்டு பைக்குகளுடன் ஒப்பிடுகையில் புதிய ஸ்க்ராம் 411 -இல் தொழிற்நுட்பங்கள் குறைவுதான். ஆதலால் இந்த பைக்கிற்கு நீண்ட ஆக்ஸஸரீகள் லிஸ்ட்டை ராயல் என்பீல்டு வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.

ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் எப்படி உள்ளது? டெஸ்ட் ரைடு ரிவியூ!! ஹிமாலயனுக்கு இணையானதுதானா?

என்ஜின் செயல்படுதிறன் & ரைடிங் அனுபவங்கள்

பொதுவாகவே ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் உற்சாகமான பயண அனுபவத்தை வழங்கக்கூடியவை. எங்களுக்கும் ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக் பிக்ராக் டெர்ட் பார்க்கில் ஆஃப்-ரோடு பாதைகளில் குஷியான ரைடிங்கை வழங்கியது. இந்த பைக்கில் ஹிமாலயனின் அதே 411சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு, SOHC என்ஜினே வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 6,500 ஆர்பிஎம்-இல் 24.3 பிஎச்பி மற்றும் 4,500 ஆர்பிஎம்-இல் 32 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் வழக்கம்போல் 5-ஸ்பீடு ஸ்லிப்-ஷிஃப்ட்டிங் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் எப்படி உள்ளது? டெஸ்ட் ரைடு ரிவியூ!! ஹிமாலயனுக்கு இணையானதுதானா?

ஸ்க்ராம் 411 பைக்கில் இயக்க ஆற்றல் வழங்கீடு மிகவும் மென்மையானதாக உள்ளது. முதற்கட்ட முடுக்கம் சிறப்பானதாக கிடைத்தது. அதேபோல் பைக்கை நிறுத்தும்போதும் இயக்க ஆற்றல் வலிமையானதாக கிடைத்தது. அதேநேரம் என்ஜினின் அதிகப்பட்ச வேகமும் சிறப்பாக உள்ளது. இந்த பைக்கில் தினந்தோறும் 100இல் இருந்து 105kmph வேகத்தில் பயணிக்கலாம். இந்த வேகத்தில் செல்லும்போது பைக்கின் ஓட்டுனர் கால் வைக்கும்பகுதி மற்றும் ஹேண்டில்பார் சற்று அதிர்வுறுக்கின்றன.

ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் எப்படி உள்ளது? டெஸ்ட் ரைடு ரிவியூ!! ஹிமாலயனுக்கு இணையானதுதானா?

ஹிமாலயனில் முன்பக்கத்தில் 21-இன்ச்சில் சக்கரம் வழங்கப்பட, இந்த பைக்கில் 19 இன்ச்சில் தான் முன் சக்கரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பைக்கில் கூடுதலாக முன்பக்கத்தில் தரையை நோக்கிய பயணம் கிடைக்கிறது. இதன் விளைவாக ஹிமாலயனை காட்டிலும் இந்த பைக்கில் கியர்களை அவ்வப்போது மாற்ற வேண்டிய சூழல் உருவாகுகிறது. முன் சக்கரம் சிறியதாக வழங்கப்பட்டுள்ளதால், ஹிமாலயனை காட்டிலும் இந்த புதிய பைக்கின் எடை குறைவானதாகவே உள்ளது.

ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் எப்படி உள்ளது? டெஸ்ட் ரைடு ரிவியூ!! ஹிமாலயனுக்கு இணையானதுதானா?

இதன் காரணமாக ஸ்க்ராம் 411 பைக்கை எந்தவொரு பாதையிலும் எளிதாக ஹேண்டில் செய்ய முடிகிறது. முன் சக்கரத்தின் அளவு குறைக்கப்பட்டிருப்பது எல்லா விதங்களிலும் எதிரொலிக்கிறது. அதாவது பைக்கின் முன்பக்கம் ஹிமாலயனை காட்டிலும் 10மிமீ தாழ்வானதாக உள்ளது. அதேபோல் ஓட்டுனர் இருக்கையின் உயரம் 5மிமீ குறைவாக உள்ளது. இத்தகைய மாற்றங்கள் அனைத்தும் சேர்ந்து ஸ்க்ராம் 411 பைக்கில் மகிழ்ச்சியான பயணத்தை வழங்குகின்றன.

ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் எப்படி உள்ளது? டெஸ்ட் ரைடு ரிவியூ!! ஹிமாலயனுக்கு இணையானதுதானா?

இந்த பைக்கின் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 220மிமீ- 200மிமீ ஆகும். ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ப என்ஜினிற்கு அடியில் பாதுகாப்பான் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் பணியை இந்த பைக்கில் 300மிமீ டிஸ்க் முன்பக்கத்திலும், 240மிமீ டிஸ்க் பின்பக்கத்திலும் கவனித்து கொள்கின்றன. இவற்றுடன் ஏற்கனவே கூறியதுபோல் இரட்டை-சேனல் ஏபிஎஸ் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் எப்படி உள்ளது? டெஸ்ட் ரைடு ரிவியூ!! ஹிமாலயனுக்கு இணையானதுதானா?

ஆஃப்-ரோட்டிற்கும் ஏற்ற ஸ்க்ராம்ப்ளர் ரக பைக்காக கொண்டுவரப்பட்டுள்ளதால் இதில் ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏபிஎஸ்-ஐ எதிர்பார்த்தோம். ஆனால் அது வழங்கப்படவில்லை. இந்த பைக்கினை நாங்கள் தட்டையான ட்ராக் பாதையிலும் ஓட்டி பார்த்தோம், அதேநேரத்தில் சிறிய ஆஃப்-ரோடு பாதைகளிலும் இயக்கி பார்த்தோம். இதில் ஆஃப்-ரோட்டில் இயக்குவது எங்களுக்கு சிறப்பான பயண அனுபவத்தை வழங்கியது.

ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் எப்படி உள்ளது? டெஸ்ட் ரைடு ரிவியூ!! ஹிமாலயனுக்கு இணையானதுதானா?

ஆஃப்-ரோட்டில் ஹேண்ட்லிங் தரமானதாகவும், எளிமையானதாகவும் இருந்தது. குறிப்பாக ஹிமாலயனை காட்டிலும் இதில் ஹேண்ட்லிங் குறிப்பிடத்தக்க அளவில் எளிமையானதாக உள்ளது. இதனால் சிறந்த ரைடர்கள் ஸ்க்ராம் 411 பைக்கில் அதன் எல்லை வேகம் வரையில் பயமின்றி பயணிக்கலாம். இந்த பைக்கில் நாங்கள் பயணித்தது குறிப்பிட்ட கிமீ மட்டுமே ஆகும். ஆதலால் நீண்ட தூர பயணங்களில் இந்த பைக் எவ்வாறான பண்பை வெளிப்படுத்துகிறது என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.

ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் எப்படி உள்ளது? டெஸ்ட் ரைடு ரிவியூ!! ஹிமாலயனுக்கு இணையானதுதானா?

நிறத்தேர்வுகள்

ஏற்கனவே கூறியதுபோல் புதிய ஸ்க்ராம் 411 பைக் மொத்தம் 7 விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. அவையாவன,

- கிராஃபைட் சிவப்பு

- கிராபைட் நீலம்

- கிராஃபைட் மஞ்சள்

- வெள்ளை ஃப்ளேம்

- சில்வர் ஸ்பிரிட்

- பிளாஸிங் கருப்பு

- ஸ்கைலைன் நீலம்

ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் எப்படி உள்ளது? டெஸ்ட் ரைடு ரிவியூ!! ஹிமாலயனுக்கு இணையானதுதானா?

போட்டி மாடல்கள்

இந்தியாவில் ராயல் என்பீல்டு ஸ்க்ராம்ப்ளர் 411 பைக்கிற்கு யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் நேரடி போட்டி மாடலாக விளங்குகிறது. ஆனால் ஸ்டைலிலும் சரி, தொழிற்நுட்ப அம்சங்களிலும் சரி ஸ்க்ராம் 411-ஐ காட்டிலும் யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் முன்னிலை வகிக்கிறது. ஆனால் வாடிக்கையாளர் தொடு மையங்கள் ராயல் என்பீல்டு நிறுவனத்திடம் கிளாசிக் லெஜண்ட்ஸை காட்டிலும் அதிகம் உள்ளன.

ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் எப்படி உள்ளது? டெஸ்ட் ரைடு ரிவியூ!! ஹிமாலயனுக்கு இணையானதுதானா?

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

மற்ற ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளுடன் ஒப்பிடுகையில் ராயல் என்பீல்டின் ஸ்க்ராம் 411 முற்றிலும் வேறுப்பட்டதாக உள்ளதாக ஆரம்பத்திலேயே கூறிவிட்டோம். ஏனெனில் ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் என்றாலே பொதுவாக சாதாரண சாலைகளுக்கு ஏற்றதாகவே வடிவமைக்கப்படும். ஆனால் இந்த புதிய ராயல் என்பீல்டு பைக் ஆஃப்-ரோட்டிற்கும் ஏற்றதாக வடிவமைக்கப்பட்டிருப்பது புதுமையானதாக பார்க்கப்படுகிறது. அத்துடன் அட்வென்ச்சர் பைக்குகள் பிரிவில் வரவேற்பை பெற்றுவரும் ஹிமாலயனின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.

Most Read Articles
English summary
Royal enfield scram 411 review design style features engine performance riding impressions
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X