சுஸுகி ஜிக்ஸெர் எப்படியிருக்குன்னு பார்க்கலாம்! - படங்கள்
சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் விலை மே மாதத்தில் அறிவிக்க சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஜூலை முதல் டெலிவிரி துவங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
150சிசி மார்க்கெட்டில் சற்று பிரிமியம் பைக்காக நிலைநிறுத்தப்பட இருக்கும், இந்த புதிய 155சிசி பைக்கின் அம்சங்கள் உள்ளிட்ட கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

விலை குறைவாக இருக்கும்
சுஸுகி ஜிக்ஸெர் சிறப்பான தோற்றத்தை கொண்டிருப்பதால் போட்டியாளர்களுக்கு நிச்சயம் போட்டியை கொடுக்கும். மேலும், போட்டியாளர்களைவிட விலை குறைவாக இருக்குமாம்.

மோனோ ஷாக்அப்சார்பர்
பின்புறத்தில் மோனோ ஷாக்அப்சார்பரும், டியூப் லெஸ் டயரும் கொண்டிருக்கிறது. பின்புற டயரின் அளவும் யமஹா எஃப்இசட் பைக்கை ஒத்ததாக இருக்கிறது.

புகைப்போக்கி குழாய்
இருக்கை, பைக்கின் பின்புற டிசைன் ஆகியவை வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும். புகைப்போக்கி குழாய் இரட்டை மஃப்ளர்களுடன் கூடிய கேன் டைப் கொண்டது. இது பைக்கின் தோற்றத்துக்கு கூடுதல் மிடுக்கை தரும்.

முகப்பு
முகப்புத் தோற்றம், குறிப்பாக ஹெட்லைட் டிசைன் பல்சர் 200என்எஸ் பைக்கை நினைவூட்டுகிறது.

எஞ்சின்
இந்த பைக்கில் 155சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். ஆற்றல் விரயத்தை தவிர்க்கும் ஈக்கோ பெர்ஃபார்மென்ஸ் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால், அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என சுஸுகி தெரிவிக்கிறது.

சேஸீ
ஜிஎஸ்எக்ஸ் ஆர் 1000சிசி பைக்கை உருவாக்கிய அதே எஞ்சினியர் குழுதான் இந்த பைக்கின் ஃப்ரேமை வடிவமைத்துள்ளனர்.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்
ஹயபுசா பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் டிசைனை பல விதங்களில் ஜிக்ஸெர் பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் ஒத்திருக்கிறது.

புது வசதி
கியர் நியூட்ரலில் இருந்தாலும், கிளட்ச் லிவரை சிறிது பிடித்தால்தான் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியும். அதாவது, ஸ்கூட்டியில் பிரேக் லிவரை பிடித்துக் கொண்டு ஸ்டார்ட் செய்வது போன்று இதனை ஸ்டார்ட் செய்ய வேண்டுமாம். இதன்மூலம், குழந்தைகள் அல்லது சிறியவர்கள் எஞ்சினை எளிதாக ஸ்டார்ட் செய்வதை தவிர்க்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








