இந்திய மார்க்கெட்டின் முன்னணி 125 சிசி ஸ்கூட்டர்களின் சிறப்பம்சங்கள் ஒப்பீடு!

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பும், எண்ண ஓட்டத்திற்கும் தக்கவாறு புதிய வாகன மாடல்கள் மார்க்கெட்டிற்கு வருவது வழக்கம். அந்த வகையில், தற்போது 125சிசி ஸ்கூட்டர் மார்க்கெட்டில் சிறப்பான பல புதிய மாடல்கள் வந்துள்ளன.

மைலேஜ் தராது என்ற எண்ணம் போய், அதிலுள்ள சவுகரியத்தை சுவைத்து பார்த்த நம் நாட்டு வாடிக்கையாளர்கள் தற்போது ஸ்கூட்டர்களை வாங்குவதில் அலாதி ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில், தற்போது கூடுதல் பெர்ஃபார்மென்ஸ் கொண்ட 125சிசி ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில், மார்க்கெட்டில் இருக்கும் முன்னணி 125 சிசி ஸ்கூட்டர்களின் முக்கிய சிறப்பம்சங்களை இங்கே ஒப்பீடு செய்து பார்க்கலாம்.


 வகைபாடு

வகைபாடு

விலை, மைலேஜ், வசதிகள் போன்ற எந்த அடிப்படையிலும் இல்லாமல், 125சிசி ஸ்கூட்டர் என்ற ஒரே வகையிலான ஸ்கூட்டர்களை இங்கே ஒப்பீடு செய்துள்ளோம். அடுத்தடுத்த ஸ்லைடுகளில் அவற்றை காணலாம்.

ஹோண்டா ஆக்டிவா 125

ஹோண்டா ஆக்டிவா 125

சிறப்பான டிசைன், தரமான கட்டுமானம் கொண்ட மாடல். வெஸ்பாவுக்கு அடுத்த அதிக சக்திகொண்ட எஞ்சினுடன் வந்துள்ளது. ஆப்ஷனல் டிஸ்க் பிரேக்குகள், பவர்ஃபுல் எஞ்சின், மெட்டல் பாடி, பயனுள்ள தகவல்களை தரும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் போன்றவை இந்த ஸ்கூட்டரை வாங்குவதற்கான முதன்மை காரணங்களாக இருக்கின்றன. இதுதவிர, ஹோண்டா பிராண்டு மதிப்பும், 110 ஆக்டிவா ஸ்கூட்டரின் நம்பகத்தன்மையும் கூடுதல் வலுசேர்க்கிறது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

லிட்டருக்கு 59 கிமீ மைலேஜ் தரும் என ஹோண்டா தெரிவிக்கிறது. நடைமுறையில் 50 கிமீ மைலேஜ் தரும் என்று நம்பலாம். 5.3 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. 8.6 எச்பி ஆற்றலையும், 10.12 என்எம் டார்க்கையும் அளிக்கும் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இருக்கைக்கு கீழே 18 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்ட் இருக்கிறது.

சுஸுகி ஆக்செஸ்

சுஸுகி ஆக்செஸ்

குடும்பத்துக்கான ஸ்கூட்டர் மாடலாக இந்த சுஸுகி ஸ்கூட்டர் மார்க்கெட்டிங் செய்யப்படுகிறது. சிம்பிளான குறை சொல்ல முடியாத டிசைன். பவர்ஃபுல் எஞ்சின், அதேநேரத்தில் ஆக்டிவா 125 ஸ்கூட்டரைவிட குறைவான விலையில் கிடைக்கிறது.

 இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

லிட்டருக்கு 57 கிமீ மைலேஜ் தரும் என சுஸுகி தெரிவிக்கிறது. நடைமுறையில் 45 கிமீ முதல் 50 கிமீ வரை மைலேஜ் தரும். 6.0 லிட்டர் பெட்ரோல் டேங்க் இருக்கிறது. 8.58 எச்பி பவரையும், 9.8 என்எம் டார்க்கையும் தரும் 124சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இருக்கைக்கு கீழே 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்ட் உள்ளது. 112 கிலோ எடை கொண்டது.

விலை: ரூ.51,611 டெல்லி ஆன்ரோடு

 சுஸுகி ஸ்விஷ்

சுஸுகி ஸ்விஷ்

ஆக்செஸ் ஸ்கூட்டர் தோற்றத்தில் கவராத வாடிக்கையாளர்களை வளைப்பதற்காக கொஞ்சம் ஸ்டைலான டிசைனுடன் சுஸுகி வெளியிட்ட மாடல் இது. ஆக்செஸ் ஸ்கூட்டரில் இருக்கும் அதே எஞ்சின்தான் இந்த ஸ்கூட்டரிலும் செயல்புரிகிறது. ஆக்செஸ் ஸ்கூட்டரை விட சற்று விலை அதிகம்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

ஆக்செஸ் போன்றே லிட்டருக்கு 57 கிமீ மைலேஜ் தரும் என்கிறது சுஸுகி. 6.0 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது. 8.58 எச்பி பவரையும், 9.8 என்எம் டார்க்கையும் அளிக்கும் 124சிசி எஞ்சின் கொண்டது. இருக்கைக்கு கீழே 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்ட் உள்ளது. 110 கிலோ எடை கொண்டது.

விலை: ரூ.52,671 டெல்லி ஆன்ரோடு விலை.

 மஹிந்திரா டியூரோ டிஇசட்

மஹிந்திரா டியூரோ டிஇசட்

சாலையில் அதிக அளவில் இந்த மஹிந்திரா ஸ்கூட்டரை பார்க்க முடியாததற்கு காரணமாக இரண்டு முக்கிய விஷயங்களை கூறலாம். போட்டியாளர்களை ஒப்பிடும்போது குறைவான மைலேஜ் மற்றும் ஆற்றல் குறைவான எஞ்சின். விலை குறைவு என்பதே இதன் பலம். 110 ஸ்கூட்டரின் விலையில் இந்த 125சிசி ஸ்கூட்டரை வாங்கிவிடலாம்.

 இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

லிட்டருக்கு 56.25 கிமீ மைலேஜ் தரும் என்கிறது மஹிந்திரா. நடைமுறையில் 45 கிமீ முதல் 48 கிமீ வரையிலான மைலேஜ் தரும் என்று நம்பலாம். 6.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் இருக்கிறது. 8 எச்பி பவரையும், 9 என்எம் டார்க்கையும் அளிக்கும் 124.6 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இருக்கைக்கு கீழே 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்ட்டும், முன்புறத்தில் கிளவ் பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது. 114 கிலோ எடை கொண்டது.

விலை: ரூ.43,788 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

 வெஸ்பா எல்எக்ஸ்125

வெஸ்பா எல்எக்ஸ்125

பிரிமியம் மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் வெஸ்பா பிராண்டிலான குறைவான விலை மாடல். மைலேஜ், டிசைன், வலுவான மோனோகாக் மெட்டல் பாடி, சொகுசான இருக்கைகள் இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களாக இருக்கின்றன.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தரும் என்கிறது வெஸ்பா. நடைமுறையில் 50 கிமீ முதல் 55 கிமீ மைலேஜை தரும் என்று நம்பலாம். 8.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. 10.06 எச்பி பவரையும், 10.60 என்எம் டார்க்கையும் அளிக்கம் 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இருக்கைக்கு கீழே 16.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்ட் உள்ளது. 114 கிலோ எடை கொண்டது.

விலை: ரூ.59,996 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

வெஸ்பா எஸ்

வெஸ்பா எஸ்

இந்தியாவின் அதிக விலை கொண்ட ஸ்கூட்டர் மாடல். வெஸ்பா எல்எக்ஸ்/விஎக்ஸ் மாடல்களின் டிசைனில் சிறிது மாறுதல்களை செய்யப்பட்டு பாரம்பரிய டிசைனில் கலக்கலாக இருக்கிறது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. 10.06 எச்பி பவரையும், 10.60 என்எம் டார்க்கையும் அளிக்கும் 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இருக்கைக்கு கீழே 16.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்ட் உள்ளது. 114 கிலோ எடை கொண்டது.

விலை: ரூ.75,424 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. ஆன்ரோடு விலை ரூ.80,000ஐ தொடுகிறது.

விரைவு ஒப்பீடு

விரைவு ஒப்பீடு

125 சிசி மார்க்கெட்டில் இருக்கும் முக்கிய ஸ்கூட்டர் மாடல்களின் சிறப்பம்சங்களை விரைவாக ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளும் வகையிலான இந்த செய்திபயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். உங்களது கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, May 9, 2014, 12:33 [IST]
English summary
We have compiled mileage figures, engine specifications and important feature details of some of the top 125cc scooters available in the Market for a quick comparison.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+