அதிக மைலேஜ் தரும் 100-110சிசி பைக்குகள்!!
பெட்ரோல் விலை அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த வேளையில் கார் வைத்திருப்பவர்களும் பைக்கில் செல்ல வேண்டிய கட்டாயம் நிலை வந்துவிட்டது. எனவே, சிறந்த மைலேஜ் தரும் பைக்குகளுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், பைக் தேர்வு செய்வதற்காக 100- 110சிசி பைக்குகளை இங்கே வரிசைப்படுத்தியுள்ளோம். நகரச் சாலை, நெடுஞ்சாலையில் பரிந்துரைக்கப்பட்ட வேக அளவில் ஓட்டுதலில் கிடைத்த சராசரி மைலேஜ் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

டிவிஎஸ் ஸ்போர்ட்
சராசரி மைலேஜ்: 65 கிமீ/லி
பெட்ரோல் டேங்க் கொள்ளளவு: 2.5 லி ரிசர்வுடன் 16 லிட்டர்
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நம்பகமான பைக் மாடல்களில் ஒன்றாகவும், ஊரக மார்க்கெட்டில் முன்னிலை பெற்ற மாடலாகவும் திகழ்கிறது. இந்த பைக்கில் 8 எச்பி ஆற்றலையும், 7.5 என்எம் டார்க்கையும் அளிக்கும் 99.7சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது. 5 நிலைகளில் மாற்றிக் கொள்ளும் வசதி கொண்ட பின்புற சஸ்பென்ஷன் அமைப்பை கொண்டுள்ளது. சென்னையில் ரூ.43,545 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

மஹிந்திரா செஞ்சூரோ
சராசரி மைலேஜ்: 70 கிமீ/லி
பெட்ரோல் டேங்க் கொள்ளளவு: 1.6 லி ரிசர்வுடன் 13.7 லிட்டர்
ஏராளமான புதிய வசதிகளுடன் வந்து பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் மஹிந்திரா செஞ்சூரோவில் 8 எச்பி ஆற்றலையும், 8.5 என்எம் டார்க்கையும் அளிக்கும் 106.7சிசி எம்சிஐ- 5 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 4 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது. சென்னையில் ரூ.51,550 விலையில் கிடைக்கிறது.

பஜாஜ் டிஸ்கவர் 100டி
சராசரி மைலேஜ்: 75கிமீ/லி
பெட்ரோல் டேங்க் கொள்ளளவு: 3.5 லி ரிசர்வுடன் 10.0 லிட்டர்
மைலேஜில் சிறந்த பைக்காக இருந்து வரும் டிஸ்கவர் வரிசையில் வந்த புதிய பைக் மாடல் இது. 100சிசி செக்மென்ட்டில் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் மாடலாக விளங்கும் இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 102சிசி எஞ்சின் 10 எச்பி ஆற்றலையும், 10.2 என்எம் டார்க்கையும் அளிக்கும். சென்னையில் ரூ.59,015 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

ஹோண்டா சிபி ட்விஸ்ட்டர்
சராசரி மைலேஜ்: 70 கிமீ/லி
பெட்ரோல் டேங்க் கொள்ளளவு: 1.6 லி ரிசர்வுடன் 8 லிட்டர்
ஹோண்டாவின் அதிக மைலேஜ் தரும் பைக் மாடல்களில் முன்னிலை வகிக்கிறது. சிறந்த 9 எச்பி ஆற்றலையும், 9 என்எம் டார்க்கையும் அளிக்கும் 109சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ரூ.63,636 விலையில் சென்னையில் கிடைக்கிறது.

ஹீரோ ஸ்பிளென்டர் என்எக்ஸ்ஜி
சராசரி மைலேஜ்: 65 கிமீ/லி
பெட்ரோல் டேங்க் கொள்ளளவு: 1.8 லி ரிசர்வுடன் 9.51 லிட்டர்
ஸ்பிளென்டர் வரிசையில் சற்று பிரிமியமான பைக் மாடல். ஸ்பிளென்டரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 97.2சிசி எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டு உள்ளது. 8எச்பி ஆற்றலையும், 8 என்எம் டார்க்கையும் வழங்கும் எஞ்சினுடன் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைந்து செயல்புரிகிறது. ரூ.53,924 விலையில் சென்னையில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








