100- 110சிசி செக்மென்ட்டில் அதிக மைலேஜ் தரும் டாப்- 5 பைக் மாடல்கள்!

By Saravana

100சிசி மற்றும் 110சிசி பைக்குகளை வாங்குபவர்கள் பெரும்பாலும், எரிபொருள் சிக்கனம் கொண்ட மாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவது வழக்கம். ஏனெனில், மாதாமாதம் எரிபொருளுக்கான செலவீனத்தை பட்ஜெட் போட்டு செலவிடுபவர்கள் என்பதால், எரிபொருள் சிக்கனம் முக்கியத்துவம் பெறுவது இயல்பு.

விற்பனையில் எண்ணிக்கையிலும் சிறப்பான பங்களிப்பை வழங்குவதால் பைக் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் சிறந்த மைலேஜ் வழங்கும் பைக் மாடல்களை இந்த செக்மென்ட்டில் வைத்துள்ளன. அதில், அதிக மைலேஜ் தரும் 100சிசி மற்றும் 110சிசி இடையில் விற்பனை செய்யப்படும் 5 சிறந்த மைலேஜ் பைக் மாடல்களை தேர்வு செய்து இங்கே வழங்கியுள்ளோம்.


பட்டியல்

பட்டியல்

தயாரிப்பாளர்கள் தெரிவித்த மைலேஜ் விபரத்தின் அடிப்படையில் அதிக மைலேஜ் தரும் 100சிசி மற்றும் 110சிசி ரகத்தில் டாப்- 5 பைக் மாடல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

 1.டிவிஎஸ் ஸ்போர்ட்

1.டிவிஎஸ் ஸ்போர்ட்

டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனையில் முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் மாடல். போட்டியாளர்களைவிட டியூவல் டோன் ஸ்டிக்கரில் கவர்ச்சியான மாடல். இந்த பைக்கில் 8 எச்பி பவரையும், 7.5 என்எம் டார்க்கையும் அளிக்கும் 99.7சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. பெயருக்கு ஏற்றாற்போல் டிசைனில் மட்டுமின்றி, செயல்திறனிலும் சிறந்த 100சிசி பைக் மாடல். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. இந்த பைக்கின் பின்புறத்தில் 5 ஸ்டேஜ் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ரியர் ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது.

டிவிஸ் ஸ்போர்ட் மைலேஜ்

டிவிஸ் ஸ்போர்ட் மைலேஜ்

தயாரிப்பாளர் மைலேஜ் விபரம்: 87.7கிமீ/லி

நடைமுறை மைலேஜ்: 65கிமீ/லி

பெட்ரோல் டேங்க்: 2.5 லிட்டர் ரிசர்வுடன் 16 லிட்டர்கள்

எக்ஸ்ஷோரூம் விலை: ரூ.42,670

2. ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட்

2. ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட்

ஸ்டார்ட்/ ஸ்டாப் சிஸ்டத்துடன் கூடிய முதல் பைக் மாடல். மேலும், நாட்டின் நம்பர்- 1 தயாரிப்பாளர் ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்பு என்பதுடன் புதிய ஸ்டிக்கரும் வாடிக்கையாளர்களை கவரும் அம்சம். சிறப்பான சர்வீஸ் கட்டமைப்பு கொண்ட ஹீரோ நிறுவனத்தின் பெயர் பெற்ற ஸ்பிளென்டர் பிராண்டில் வரும் இந்த பைக்கின் எஞ்சினும் நம்பகத்தன்மை வாய்ந்தது. இந்த புதிய பைக்கில் 7.88 எச்பி பவரையும், 8.04 என்எம் டார்க்கையும் அளிக்கும் 97.2சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட மாடல்.

ஹீரோ ஐ-ஸ்மார்ட் மைலேஜ்

ஹீரோ ஐ-ஸ்மார்ட் மைலேஜ்

தயாரிப்பாளரின் மைலேஜ் விபரம்: 90கிமீ/லி

நடைமுறை மைலேஜ்: 75கிமீ/லி

பெட்ரோல் டேங்க்: 8.7 லிட்டர்கள்(1.8லிட்டர் ரிசர்வ்)

எக்ஸ்ஷோரூம் விலை: ரூ.47,250

 3.மஹிந்திரா செஞ்சூரோ

3.மஹிந்திரா செஞ்சூரோ

இருசக்கர மார்க்கெட்டில் மஹிந்திராவுக்கு புதிய அடையாளத்தை கொடுத்த மாடல் செஞ்சூரோ. புதுமையான வசதிகளுடன், இதன் மைலேஜும் வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கிறது என்றால் மிகையல்ல. இந்த பைக்கில் 8 எச்பி பவரையும், 8.5 என்எம் டார்க்கையும் வழங்கும் 106.7சிசி எம்சிஐ-5 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

 செஞ்சூரோ மைலேஜ் விபரம்

செஞ்சூரோ மைலேஜ் விபரம்

தயாரிப்பாளரின் மைலேஜ் விபரம்: 85.4கிமீ/லி

நடைமுறை மைலேஜ்: 70கிமீ/லி

பெட்ரோல் டேங்க்: 13.7லிட்டர்கள்(1.6லிட்டர் ரிசர்வ்)

எக்ஸ்ஷோரூம் விலை: ரூ.46,000

 4. ஹோண்டா சிபி ட்விஸ்ட்டர்

4. ஹோண்டா சிபி ட்விஸ்ட்டர்

இளைஞர்களை கவரும் வகையில், கச்சிதமான அளவில், ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட 110சிசி பைக். ஆனால், முன்புறத்தில் தெரியும் ஸ்போர்ட்டி தோற்றம் பின்புறத்தில் காண முடியவில்லை என்பது குறை. மைலேஜில் 100சிசி பைக்குகளுக்கு இணையாக போட்டியிடுகிறது. ஹோண்டாவின் நம்பகத்தன்மை வாய்ந்த மென்மையான ஓட்டுதல் சுகத்தை தரும் 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த பைக் எஞ்சின் அதிகபட்சமாக 9 எச்பி பவரையும், 9என்எம் டார்க்கையும் வழங்குகிறது.

ட்விஸ்ட்டர் மைலேஜ் விபரம்

ட்விஸ்ட்டர் மைலேஜ் விபரம்

தயாரிப்பாளர் மைலேஜ் விபரம்: 85கிமீ/லி

நடைமுறை மைலேஜ்: 70கிமீ/லி

பெட்ரோல் டேங்க்: 8 லிட்டர்கள்

எக்ஸ்ஷோரூம் விலை: ரூ.45,159

5. பஜாஜ் டிஸ்கவர் 100டி

5. பஜாஜ் டிஸ்கவர் 100டி

அதிக மைலேஜ் தரும் பிராண்டாக அறியப்பட்ட டிஸ்கவர் பெயர் பலகையில் வரும் 100சிசி பைக். பஜாஜின் 100சிசி பைக்குகளில் விலை அதிகமான மாடல். இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 102சிசி எஞ்சின் அதிகபட்சமாக 10 எச்பி பவரையும், 10.2 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. இதுவரை பார்த்த டாப்- 5 மாடல்களில் அதிக சக்திவாய்ந்த மாடல் இதுதான். தோற்றத்திலும் சிறப்பானது.

 டிஸ்கவர் 100டி மைலேஜ் விபரம்

டிஸ்கவர் 100டி மைலேஜ் விபரம்

தயாரிப்பாளரின் மைலேஜ் விபரம்: 91கிமீ/லி

நடைமுறை மைலேஜ்: 75கிமீ/லி

பெட்ரோல் டேங்க்: 10லிட்டர்கள்(3.5 லிட்டர் ரிசர்வ்)

எக்ஸ்ஷோரூம் விலை: ரூ.49,000

எது சிறந்தது?

எது சிறந்தது?

இந்த செக்மென்ட்டில் 16 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொள்ளளவுடன் வரும் டிவிஎஸ் ஸ்போர்ட் அனைத்து சாலைநிலைகளிலும் சிறப்பான மைலேஜ் வழங்குவதோடு, ஒருமுறை பெட்ரோல் டேங்க்கை நிரப்பினால் 1,040கிமீ தூரம் வரை செல்லலாம். அடிக்கடி பெட்ரோல் நிலையங்களுக்கு செல்வதை தவிர்ப்பதுடன், நீண்ட தூர பயணங்களுக்கும் ஒத்துழைக்கும். கவர்ச்சியான வசதிகள், விலையில் மஹிந்திரா செஞ்சூரோ ஸ்கோர் செய்கிறது. மறுபுறம் ஹோண்டா ட்விஸ்ட்டர் மென்மையான எஞ்சின், மைலேஜ், ஸ்டைலில் கலக்குகிறது. மைலேஜ்தான் வேண்டும் என்பவர்களுக்கு சிறப்பான சாய்ஸாக டிஸ்கவர் 100டி முதன்மை பெறுகிறது. அடுத்த ஸ்லைடில் எது பெஸ்ட் மாடல் என்பதை காணலாம்.

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

மைலேஜிலும் மட்டுமின்றி, விலை, நம்பகத்தன்மை, தொழில்நுட்பம், ஸ்டைல், சர்வீஸ் கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் ஹீரோ ஸ்பிளென்டர் ஐ- ஸ்மார்ட் சிறந்ததாக கூறலாம். போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களில் எரிபொருளை சேமிக்கும் ஸ்டார்ட்/ ஸ்டாப் சிஸ்டமும் இந்த பைக்கை தேர்வு செய்ய வலுசேர்க்கும் அம்சம்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 13, 2014, 14:41 [IST]
English summary
Bikes in the 100cc and 110cc commuter segment has thus become the battleground for the likes of Hero, Honda, Bajaj, TVS and Mahindra, fighting for supremacy. Each manufacturer has more than one model on offer. In our list we have shortlisted one model from each manufacturer that offers the highest fuel economy.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+