தயாரிப்பாளர்களின் குறைந்த விலை பைக் மாடல்கள் - சிறப்பு தொகுப்பு
தினசரி பயன்பாட்டுக்கு ஸ்கூட்டர்களும், பட்ஜெட் விலை கொண்ட பைக்குகளும் சிறந்ததாக இருக்கின்றன. பல கூடுதல் வசதிகளை அளித்தாலும், மைலேஜ் என்று வரும்போது ஸ்கூட்டர்கள் பின்தங்கி விடுகின்றன.
அதிக மைலேஜ் என்ற ஒற்றை காரணத்துடன் தற்போது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருப்பது குறைந்த சிசி திறன் கொண்ட பைக்குகள்தான். சிறந்த மைலேஜ் தருவதுடன், குறைந்த பராமரிப்பு செலவு கொண்டிருக்கும் அதுபோன்ற பைக்குகளை இந்த செய்தியில் தொகுத்து வழங்குகிறோம். ஒவ்வொரு தயாரிப்பாளரும் வழங்கும் குறைந்த விலை பைக்கை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

ஹீரோ எச்எஃப் டான்
விலை: ரூ.43,590
மைலேஜ்: 72 கிமீ/லி
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்து வரும் குறைந்த விலை மாடல். குறைந்த பராமரிப்பு, அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதாக திகழ்கிறது. அடிப்படை அம்சங்களை கொண்டிருந்தாலும் தோற்றத்தில் குறை சொல்ல முடியாது. 7.7 எச்பி பவர் கொண்ட 97 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

யமஹா க்ரக்ஸ்
விலை: ரூ.44,115
மைலேஜ்: 64 கிமீ/லி
யமஹாவின் விற்பனை செய்து வரும் குறைந்த விலை பைக் மாடல். 7.6 எச்பி பவரை அளிக்கும் 106சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. போட்டியாளர்களை ஒப்பிடும்போது நம்பகத்தன்மை குறைவான மாடலாக இருக்கிறது.

பஜாஜ் பிளாட்டினா
விலை:ரூ.46,311
மைலேஜ்:68 கிமீ/லி
அதிக மைலேஜுக்கும், குறைவான பராமரிப்புக்கும் பெயர் பெற்ற மாடல். யமஹா க்ரக்ஸ், ஹீரோ டான் போன்ற பைக்குகளில் வட்ட வடிவ ஹெட்லைட் பிடிக்காதவர்களுக்கு பிளாட்டினா பிடித்துப் போகலாம். எலக்ட்ரிக் ஸ்டார்ட், டிஸ்க் பிரேக்குகள் கிடையாது.

ஹோண்டா ட்ரீம் நியோ
விலை ரூ.49,938
மைலேஜ்: 73 கிமீ/லி
நம்பர் - 1 இடத்தை குறிவைத்து காய் நகர்த்தி வரும் ஹீரோ நிறுவனத்தின் புதிய பைக் மாடல் என்பதோடு, தற்போது குறைந்த விலை மாடலும் கூட. அதிக எரிபொருள் சிக்கனம் வழங்குவதோடு, சிறந்த டிசைன், அலாய் வீல்கள் உள்ளிட்டவற்றுடன் கிடைக்கிறது. 8.25 எச்பி ஆற்றலை வழங்கும் 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

டிவிஎஸ் ஸ்போர்ட்
விலை: ரூ.43,493
மைலேஜ்: 64 கிமீ/லி
ஸ்போர்ட்டியான தோற்றத்துடன் ஊரக மார்க்கெட்டுகளில் அதிகம் விரும்பப்படும் மாடலாக விளங்குகிறது. கரடு முரடான சாலைகளுக்கு ஏற்றதாக இருப்பதும் முக்கிய அம்சமாக கூறலாம். 7 எச்பி ஆற்றலை வழங்கும் 100சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

சுஸுகி ஹயாட்டே
விலை: ரூ.57,259
மைலேஜ்: 67 கிமீ/லி
சுஸுகியின் குறைந்த விலை மாடல். 8.4 எச்பி ஆற்றலை வழங்கும் 112சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 100சிசி செக்மென்ட்டில் சரியான பைக் இல்லாமல் சுஸுகி தடுமாறுகிறது. தவிரவும், தோற்றம், விலை போன்ற காரணங்களும் போட்டியாளர்களிடமிருந்து ஹயாட்டேவை மட்டுமல்ல சுஸுகியையும் தனிமைப்படுத்தியுள்ளது.

எது பெஸ்ட்?
தோற்றம், விலை, மைலேஜ் என அனைத்திலும் டிவிஎஸ் ஸ்போர்ட் சிறந்த பைக்காக கூறலாம். டிவிஎஸ் ஸ்போர்ட்டைவிட சற்று கூடுதல் பிரிமியம் பைக் வேண்டுவோர்க்கு ஹோண்டா ட்ரீம் நியோ சிறந்த தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








