மத்திய அரசின் ஜிஎஸ்டி உயர்வால் மொத்தமா என்ஜினே மாற்றப்பட்ட டிரையம்ப் பைக்! இப்போது ஓட்டுவதற்கு எப்படி இருக்கு?

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனம் அதன் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் (Scrambler 400X) மோட்டார்சைக்கிளை 350சிசி மோட்டார்சைக்கிளாக மாற்றியுள்ளது. மத்திய அரசாங்கத்தின் ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) வரி குறைப்பை பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியாக இந்த நடவடிக்கையை டிரையம்ப் நிறுவனம் கையில் எடுத்துள்ளது. அதாவது, 350சிசி-க்கு மேல் உள்ள பைக்குகளுக்கான ஜிஎஸ்டி 40% ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், 350சிசி மற்றும் அதற்கு கீழ் உள்ள பைக்குகளுக்கான ஜிஎஸ்டி 18% ஆக குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, 398சிசி என்ஜினை பெற்றுவந்த 400சிசி டிரையம்ப் பைக்குகள் அனைத்திலும் புதிய 349சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், புதிய 349சிசி என்ஜினுக்கு மாற்றப்பட்டுள்ள அப்டேட்டான ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் (பெயர் மாற்றப்படவில்லை) பைக்கை நாங்கள் சமீபத்தில் ஓட்டிப் பார்த்தோம். அதன் மூலம் எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை இங்கே விரிவான ரிவியூ (Review) ஆக வழங்கியுள்ளோம்.

triumph scrambler 400x bike test ride review

புதிய மாற்றங்கள் என்ன?

ஏற்கனவே கூறியதுபோல், 400சிசி டிரையம்ப் பைக்குகளில் முக்கியமான மாற்றமாக புதிய 349சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய 398சிசி என்ஜின் உடன் ஒப்பிடுகையில் புதிய என்ஜின் சிஸ்டத்தில் 89மிமீ போர் (Bore)-இல் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என்றாலும், ஸ்ட்ரோக் (Stroke)-இன் நீளம் 64மிமீ-இல் இருந்து 56.1மிமீ ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய என்ஜினை பெற்ற விலை குறைவான டிரையம்ப் ஸ்பீடு டி4 (Speed T4) பைக் பெறும் அதிகப்பட்ச இயக்க ஆற்றல் 7,500 ஆர்பிஎம்-இல் 29 எச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 31 என்.எம் டார்க் திறன் ஆகும். இது முந்தைய 398சிசி என்ஜினின் இயக்க ஆற்றலை காட்டிலும் 2 எச்பி மற்றும் 5 என்.எம் டார்க் திறன் மட்டுமே குறைவாகும்.

triumph scrambler 400x bike test ride review

அதுவே, மற்ற டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ்சி (XC) பைக்குகளில் புதிய 349சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-இல் 37 எச்பி மற்றும் 7,000 ஆர்பிஎம்-இல் 32 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இது முந்தைய 398சிசி என்ஜினின் இயக்க ஆற்றலை காட்டிலும் 3 எச்பி மற்றும் 5.5 என்.எம் டார்க் திறன் குறைவாகும்.

இவற்றுடன், 'டிராக்கர் 400' (Tracker 400) என்கிற புதிய பைக்கையும் டிரையம்ப் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. மற்ற வெளிநாட்டு சந்தைகளில் 400சிசி என்ஜினாக விற்பனை செய்யப்படும் டிராக்கர் 400 ஆனது இந்தியாவில் நேரடியாக 350சிசி பைக்காக களமிறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பைக்கிலும், ஏற்கனவே விற்பனையில் உள்ள அட்வென்ச்சர் ரக பைக்கான த்ரக்ஸ்டன் 400 (Thruxton 400) பைக்கிலும் புதிய 349சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 8,750 ஆர்பிஎம்-இல் 40 எச்பி மற்றும் 7,500 ஆர்பிஎம்-இல் 32 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

triumph scrambler 400x bike test ride review

இது இவற்றின் 398சிசி என்ஜினை காட்டிலும் 2 எச்பி மற்றும் 5 என்.எம் டார்க் திறன் குறைவாகும். இந்த அனைத்து டிரையம்ப் பைக்குகளிலும் புதிய 349சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருந்தாலும், இவற்றின் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. பைக்குகளின் பெட்ரோல் டேங்கில் வழங்கப்படும் பேட்ஜ் உள்ளிட்டவை அனைத்தும் அப்படியே தொடரப்பட்டுள்ளன.

தோற்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மிகவும் சில மாற்றங்கள் என்று பார்த்தால், என்ஜினின் மீது வழங்கப்பட்டு வந்த 'TR Series 400' என்கிற பேட்ஜ் நீக்கப்பட்டுள்ளது. அதேபோல், என்ஜின் சிஸ்டத்தில் இம்மொபிலிசர் (Immobiliser) வழங்கப்படவில்லை. இது பைக் திருடு போவதை தடுக்கும் தொழிற்நுட்ப கருவியாகும். அதாவது, கள்ள சாவியை பயன்படுத்தியோ அல்லது சாவி இல்லாமலோ யாராவது பைக்கை திருடுவது போல் உணர்ந்தால் இது என்ஜினை ஸ்டார்ட் ஆகாமல் பார்த்து கொள்ளும்.

triumph scrambler 400x bike test ride review

இத்தகைய பாதுகாப்பு அம்சம், 350சிசி என்ஜினுக்கு மாற்றப்பட்டுள்ள டிரையம்ப் பைக்குகளில் நீக்கப்பட்டுள்ளது. இது முன்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், பைக்குகளின் தோற்றம் மாற்றப்படாதது போல் இம்மொபிலிசருக்கான இண்டிகேட்டர் விளக்கும் ஹேண்டில்பாருக்கு மத்தியில் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்ட்டர் பகுதியில் வழக்கம்போல் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த இண்டிகேட்டர் விளக்கால் எந்த பயனும் இல்லை.

ஓட்டுவதற்கு எப்படி இருக்கு?

அப்டேட் செய்யப்பட்ட புதிய டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்கை நாங்கள் பெங்களூரு சாலைகளில் ஓட்டிப் பார்த்தோம். நீங்கள் ஏற்கனவே இந்த பைக்கை 398சிசி என்ஜின் உடன் ஓட்டி இருந்தால், இரண்டிற்கும் இடையேயான வித்தியாசங்களை உங்களால் உணர முடியும். முந்தைய 398சிசி என்ஜின் உடன் ஒப்பிடுகையில், புதிய 349சிசி என்ஜினால் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்கில் பிக்-அப் சற்று குறைந்திருப்பது உண்மையே.

triumph scrambler 400x bike test ride review

இருப்பினும், நெடுஞ்சாலையில் மூன்று இலக்க எண்ணில் வேகத்தை எட்டுவது எளிதாக இருந்தது. இருப்பினும், சிறிய அளவிலான என்ஜினால் சைலன்சர் உறுமும் சத்தம் முன்பை விட சற்று அதிகமாக உள்ளது. அளவில் பெரியதான என்ஜின்களுக்கே உண்டான சத்தத்தை பைக் இழந்துள்ளது. இருப்பினும், அளவில் பெரிதான என்ஜினை கொண்ட பைக்குகளை ஓட்டியது இல்லை என்றால், புதிய ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்கில் உங்களுக்கு எந்த குறையும் தெரியாது.

நெடுஞ்சாலைகளில் மணிக்கு 80- 100கிமீ வேகத்தை இந்த பைக் எளிதாக எட்டுகிறது. பைக்கின் சஸ்பென்ஷன் இப்போதும் மென்மையானதாக உள்ளதால், புதிய ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் ஆனது நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக பயணிப்பதற்கு, நகர்புற சாலைகளில் வளைந்து வளைந்து செல்வதற்கு என இரண்டிற்கும் ஏற்றதாக உள்ளது. கரடு முரடான பாதைகளிலும் இந்த பைக்கில் எளிதாக செல்ல முடிகிறது.

triumph scrambler 400x bike test ride review

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய 349சிசி என்ஜின் உடன் அப்டேட் செய்யப்பட்ட டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்கை வாங்க நாங்கள் தாராளமாகப் பரிந்துரைக்கிறோம். முந்தைய 400சிசி என்ஜின் உடன் ஒப்பிடுகையில் பைக்கின் பெர்ஃபார்மன்ஸ் சற்று குறைந்துள்ளது என்றாலும், இப்போதும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் வழக்கமான சாலைகளிலும், ஆஃப்-ரோடுகளிலும் பயணிப்பதற்கு ஏற்றதாக உள்ளது. இருப்பினும், இந்த பைக்கில் மீண்டும் இம்மொபிலிசரை கூடுதல் ஆக்ஸசரீயாக ஆவது டிரையம்ப் வழங்க வேண்டும் என்பது எங்களது விருப்பமாகும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 10, 2026, 10:40 [IST]
English summary
Triumph scrambler 400x test ride review with new 350cc engine new changes and riding impression
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X