ராயல் என்ஃபீல்டு மார்கெட் காலியாக போகுது! இந்த பைக்கை ஓட்டி பாத்தா வாங்கியே ஆகனும்னு ஒத்த கால்ல நிப்பீங்க!

இந்திய பைக் ஓட்டிகள் எல்லாம் ஒரு காலத்தில் சிங்கிள் சிலிண்டர் 350-500 சிசி இன்ஜின் கொண்ட பைக்கை வாங்க வேண்டும் என்றால் ராயல் என்ஃபீல்டை தவிர வேறு வாய்ப்புகள் எதுவும் இல்லை. ஆனால் சமீபத்தில் ஜாவா-யெஸ்டி மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் இந்த செக்மெண்டில் பைக்குகளை களம் இறக்கி வருகின்றன. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அட்வெஞ்சர் ரக பைக்குகளில் தற்போது கவனம் செலுத்தி வருகிறது.

இதுவரை தனிக்காட்டு ராஜாவாக இருந்த ராயல் என்ஃபீல்டிற்கு தற்போது போட்டி அதிகமாகிவிட்டது. இந்த போட்டியில் தற்போது சர்வதேச பிராண்டுகளாக ஹார்லி-டேவிட்சன் மற்றும் டிரையம்ப் ஆகிய நிறுவனங்களும் சேரப்போகிறது. இந்நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் கைகோர்த்து ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு கடும் போட்டியை வழங்கப்போகிறது.

Triumph Speed 400 Review

டிரையம்ப் நிறுவனம் இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்துடன் சேர்ந்து தனது பைக்குகளை தயாரித்து இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. முதல் பைக்காக தனது ஸ்பீடு 400 என்ற பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் நேரடியாக ராயல் என்ஃபீல்டிற்கு போட்டியாக களம் இறங்குகிறது. இந்த ஸ்பீடு 400 பைக்கை நாங்கள் புனேவில் ஓட்டிப் பார்த்தோம். இதன் ரிவியூவை தான் இதோ உங்களுக்காக வழங்கப்போகிறோம்.

டிரையம்ப் ஸ்பீடு 400 டிசைன் மற்றும் அம்சங்கள்: இந்த புதிய ஸ்பீடு 400 பைக்கின் வடிவமைப்பை எல்லாம் டிரையம்ப் நிறுவனம் தான் செய்துள்ளது. இந்த பைக் தான் டிரையம்ப் வடிவமைத்ததிலேயே சிறிய ரக பைக்காக இருக்கிறது. இந்த பைக் பெரிய மார்டன் கிளாசிக் பைக்கை சுருக்கி வடிவமைக்கப்பட்டது போல இருக்கிறது. இதன் டேங்க் வடிவமைப்பு, ஃபின்டு இன்ஜின் பாகம், போல்டான கிராஃபிக்ஸ், எக்ஸாஸ்ட் எல்லாம் டிரையம்ப் டிசைன் மொழியிலேயே இருக்கிறது.

Triumph Speed 400 Review

இந்த ஸ்பீடு 400 பைக்கின் முக்கிய ஹைலைட்டாக முழு எல்இடி லைட்டிங் செட்டப், டிரையம்ப் நிறுவனத்தின் தனித்துவமான டேடைம் ரன்னிங் லைட், டூயல் ஃபார்மெட் இன்ஸ்ட்ரூமென்ட் ஆகியன உள்ளது. இன்ஸ்ட்ரூமென்டில் ஸ்பீடோமீட்டர் அனலாக்கிலும் மற்றவைகள் எல்லாம் எல்சிடி ஸ்கிரீனில் டிஜிட்டாலாகவும் வழங்கப்பட்டுள்ளது. இதை ஆப்ரேட் செய்ய ஹேண்டில் பாரிலேயே பட்டன் வழங்கப்பட்டுள்ளது.

முன்பக்கம் தங்க நிற யூஎஸ்டி ஃபோர்க்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் சிங்கிள் சீட் செட்டப், 10 ஸ்போக் அலாய் வீல்கள் அப்பல்லோ/எம்ஆர்எஃப் டயர்களுடன் வருகிறது. இந்த பைக்கின் ஸ்டியரிங் லாக், ஆண்டி தெஃப்ட் இம்மொபிலைஸர், யூஎஸ்பி -சி சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

Triumph Speed 400 Review

இந்த ஸ்பீடு 400 பைக்கை பொருத்தவரை 3 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. அதன்படி கார்னிவெல் ரெட் - பாந்தோம் பிளாக், கேஸ்பியன் ப்ளூ மற்றும் ஸ்டோம் கிரே, பாந்தோம் பிளாக் மற்றும் ஸ்டோம் கிரே ஆகிய கலர் ஆப்ஷன்கள் உள்ளன.

இன்ஜின்: டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கை பொருத்தவரை டிஆர் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் கொண்ட முதல் பைக்காக விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கில் 398 சிசி சிங்கிள் சிலிண்டர், ப்யூயல் இன்ஜெக்ஷன், லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 4 வால்வு டிஓஎச்சி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் உராய்வுகளை குறைக்க டிஎல்சி கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

Triumph Speed 400 Review

ஸ்பீடு 400 பைக்கில் உள்ள இன்ஜின் 39.5 பிஎச்பி பவரையும், 37.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது பின் பக்க வீலுக்கு பவரை செலுத்தும். இதற்காக 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. வலது பக்கம் செயின் வழங்கப்பட்டுள்ளது. இதன் எக்ஸாஸ்ட் சவுண்ட் கேட்பதற்கு சற்று வித்தியாசமாக இருக்கிறது. இந்த பைக் டியூப்லர் ஸ்டீல் ஃப்ரேம் செட்டப் உடன் இருக்கிறது.

இந்த ஸ்பீடு 400 பைக்கின் முன்பக்கம் 43 மிமீ தலைகீழாக வைக்கப்பட்ட பெரிய பிஸ்டர்ன் ஃபோர்க் இருக்கிறது. பின்பக்கம் மோனோஷாக் ப்ரீலோடு அட்ஜெஸ்ட்மென்ட் உடன் கூடிய சஸ்பென்சன் செட்டப் இருக்கிறது. இரண்டுபக்கமும் கேஸ்ட் அலுமினியம் ஸ்விங்ஆர்ம் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீடு 400 பைக்கில் 140 மிமீ வீல் முன்பக்கமும், 130 மிமீ வீல் பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது.

Triumph Speed 400 Review

இந்த டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கின் 17 இன்ச் அலாய் வீலில் முன்பக்கம் 110/70 மற்றும் பின்பக்கம் 150/60 அளவுகளில் டயர் பொருத்தப்பட்டுள்ளது. எம்ஆர்எஃப் மற்றும் அப்பல்லோ டயர்கள் பொருத்தப்படுகிறது. நீங்கள் வாங்கும் போது எந்த டயர் பொருத்தப்பட்டுள்ளது என்பது உங்களது அதிர்ஷ்டத்தை பொருத்து தான்.

டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கை பொருத்தவரை ரைடரை மையப்படுத்தி தான் அதன் தொழிற்நுட்பங்கள் வழங்கப்படுள்ளது. முக்கியமாக டூயல் சேனல் ஏபிஎஸ், ரைடு பை ஒயர் திராட்டல், ஸ்விட்டசபிள் டிராக்ஷன் கண்ட்ரோல், மற்றும் டார்க் அசிஸ்ட் கிளட்ச் ஆகிய அம்சங்கள் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது.

Triumph Speed 400 Review

ரைடிங் இம்பிரஷன்: டிரையம்ப் ஸ்பீடு 400 பைக் வழக்கமான சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் போல இல்லாமல் சாலையில் வித்தியாசமாக இயங்குகிறது. இது 20-120 கிலோ மீட்டர் வேகத்தை 5வது கியரிலேயே எட்டி பிடிக்கிறது. இந்த பைக்கில் 10,000 ஆர்பிஎம் தான் ரெட் லைனாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் வேகமாக செல்லும் போது தான் ஒரு வைப் கிடைக்கிறது.

இந்த பைக்கில் 3000 ஆர்பிஎம் முதல் 9000 ஆர்பிஎம் வரை தான் 80 சதவீதமான டார்க் வசதி கிடைக்கிறது. இதில் வழங்கப்பட்டுள்ள கியர் பாக்ஸ் ஸ்மூத்தாக இருக்கிறது. இதனால் இந்த பைக் வெகு சிறப்பாக தனது செயல்பாட்டை காட்டுகிறது. முதல் 3 கியரில் வேகம் எடுக்கவில்லை. ஆனால் வீலிங் செய்ய நினைத்தால் இது செம பைக்காக இருக்கும்.

Triumph Speed 400 Review

இந்த பைக்கில் சில்கி ஸ்மூத் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது 0-60 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.8 நொடியில் எட்டி பிடித்துவிடும். 100 கி.மீ வேகத்தை வெறும் 7 நொடியில் எட்டி பிடித்துவகிறது. ரைடு பை வயர் சிஸ்டம் முதலில் சிரமமாக இருந்தாலும் பயன்படுத்த பயன்படுத்த பழகிவிடும். ரைடருக்கு பைக் சிங்க் ஆகிவிட்டால் பைக் ஓட்ட சுலபமாகிவிடும்.

டிரையம்ப் 400 பைக்கை பொருத்தவரை அதிகபட்சமாக 145 கிலோமீட்டர் வேகம் வரை தான் செல்லும்படி லிமிட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் பயணிக்கும் போது இது 165 கி.மீ வேகம் வரை பயணிக்க முடிந்தது. அப்படி என்றால் இதன் இன்ஸ்ட்ரூமென்ட் விஷயத்தில் ஏதாவது சிக்கல் இருக்கலாம் என தோன்றுகிறது.

இந்த ஸ்பீடு 400 பைக்கின் ரைடிங் போசிஷன் சிறப்பாக இருக்கிறது. பின்பக்கம் அமர்பவர்களுக்கான சீட் போஷிசன் மற்ற ரோடுஸ்டர் பைக்கை விட சிறப்பாக தான் இருக்கிறது. சஸ்பென்சன், வீல் மற்றும் டயர்கள் இந்த செக்மெண்டிலேயே சற்று வித்தியசமாக இருக்கிறது. இந்த பைக்கின் இந்தியன் வெர்ஷன் சற்று கடினமாக இருக்கிறது. இதற்கு வித்தியாசமான டயர்கள் தான் காரணம்.

இதன் சஸ்பென்சன் செட்டப் சாலையில் உள்ள பள்ள மேடுகளை எல்லாம் அசால்டாக கையாளுகிறது. இதன் போட்டி நிறுவன பைக்குகளை விட இது சிறப்பாக இருக்கிறது. அதிகமாக பைக் ஓட்டுபவர்கள் மேனோஷாக் சஸ்பென்சன் சற்று ஸ்டிஃப்பாக இருப்பதாக நினைப்பார்கள். இதன் ஸ்டியரிங் ஜாமென்டரியை பொருத்தவரை சஸ்பென்சன் செட்டப் உடன் சிறந்த பெலென்ஸிங் ஆக இருக்கிறது.

இந்த பைக்கை திருப்புவது சிறப்பாக இருக்கிறது. என்னதான் 176 கிலோ எடை இருந்தாலும் அது பைக் ஓட்டும் போது கனமாக தெரியவில்லை. அதே நேரம் டிராக்ஷன் கண்ட்ரோல் இருப்பதால் திரும்பும்போது தைரியமாக திருப்ப முடிகிறது. இந்த பைக்கில் 100 கி.மீ வேகத்திற்கும் அதிகமாக பயணிக்கும் போதும் அதிர்வு இல்லாமல் இருப்பதால் நீங்கள் வேகமாக பயணிக்க ஊக்கமளிக்கும்.

இந்த டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கின் பிரேக்கிங் ஒரளவிற்கு சிறப்பாகவே செயல்படுகிறது. இனிஷியல் பைட்டில் லேக் இருந்தாலும் இந்த பைக்கில் முன்பக்கம் உள்ள 300 மிமீ முன்பக்க டிஸ்க், 230 மிமீ பின்பக்க டிஸ்க், ஏபிஎஸ் ஆகியன இந்த பைக்கின் பிரேக்கிற்கு ஒரளவிற்கு உதவுகிறது.

இறுதி தீர்ப்பு: டிரையம்ப்- பஜாஜ் பார்ட்டனர் ஷிப் ராயல் என்ஃபீல்டின் மணிமகுடத்தை குறி வைத்து களம் இறங்கியுள்ளது. டிரையம்ப் ஸ்பீடு 400 பைக் ராயல் என்ஃபீல்டை மட்டும் பார்த்து வந்த மக்களை திரும்பி பார்க்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இனி இந்த செக்மெண்டில் மிகப்பெரிய அளவில் போட்டி உருவாகும்.

More from DriveSpark

Article Published On: Friday, July 14, 2023, 17:00 [IST]
English summary
Triumph speed 400 review engine specs design features driving impression and all other details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X