டிரையம்பில் இந்த அளவுக்கு கம்மியான விலையில் பைக் வரும்னு எதிர்பார்க்கல! ஓட்டி பார்த்தால் தான் எல்லாமே தெரியுது

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles), உலகளவில் பிரபலமான பைக் நிறுவனம் என்பது நம் எல்லாருக்குமே தெரியும். இந்தியாவிலும் பல வருடங்களாக பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இருந்தாலும், டிரையம்ப் நிறுவனத்தால் நம் நாட்டு சந்தையில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதனையடுத்தே இந்தியர்களுக்கு ஏற்ற வகையில் சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் உடன் 300சிசி- 500சிசி பைக்குகளை அறிமுகம் செய்ய துவங்கியது. தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்ப வழக்கத்தை காட்டிலும் குறைந்த செயல்திறனில் பைக்குகளை களமிறக்க டிரையம்ப் திட்டமிட்டுள்ளது.

இதன்படி, புதிய டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்குகள் கடந்த 2023ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டதை பார்த்திருந்தோம். மாடர்ன் டிரையம்ப் கிளாசிக் ரக பைக்குகளில் விலை குறைவான மாடல்களாக இவை களமிறக்கப்பட்டன. இருப்பினும், இவற்றை காட்டிலும் குறைந்த விலையிலான டிரையம்ப் பைக் மார்க்கெட்டில் எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து, இந்தியாவில் விலை குறைவான டிரையம்ப் பைக்காக டிரையம்ப் ஸ்பீடு டி4 (Speed T4) சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

triumph speed t4 ride review

ரூ.2.17 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் டிரையம்ப் ஸ்பீடு டி4 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஸ்பீடு 400 பைக்கின் அடிப்படையில் இருந்து கொண்டுவரப்பட்டு இருப்பினும், புதிய ஸ்பீடு டி4 பைக்கிற்கு என்று சில தனித்துவங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை அறியும் முயற்சியாக புதிய டிரையம்ப் ஸ்பீடு டி4 பைக்கை நாங்கள் ஓட்டி பார்த்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை ரிவியூவாக இங்கே வழங்கியுள்ளோம்.

புதிய மாற்றங்கள்: ஏற்கனவே கூறியதுபோல், கடந்த 2023ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் புதிய ஸ்பீடு டி4 ஆகும். மெக்கானிக்கல் பாகங்களை பொறுத்தவரையில், இந்த இரு பைக்குகளுக்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், புதிய ஸ்பீடு டி4 பைக்கின் விலையை குறைவாக கொண்டுவருவதற்காக சில பாகங்களை சிம்பிளானதாக டிரையம்ப் வழங்கியுள்ளது.

triumph speed t4 ride review

அவற்றுள் முக்கியமானதாக சொல்ல வேண்டுமென்றால், ஸ்பீடு 400 பைக்கில் முன்பக்க சஸ்பென்ஷனுக்கு யுஎஸ்டி ஃபோர்க்குகள் வழங்கப்படுகின்றன. ஆனால், புதிய ஸ்பீடு டி4 பைக்கில் சாதாரணமான டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் இடம்பெற்றுள்ளன. இதனால், ஸ்பீடு 400 பைக்கை ஓட்டுவதற்கும், டி4 பைக்கை ஓட்டுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் தெரிகிறது. அதேபோல், ஸ்பீடு 400 பைக்கில் காஸ்ட்லீயான லுக்கிற்காக முன்பக்க சஸ்பென்ஷன் ஃபோர்க்குகள் கோல்டன் நிறத்தில் வழங்கப்படுகின்றன.

ஆனால், புதிய ஸ்பீடு டி4 பைக்கில் அவ்வாறான கோல்டன் நிறம் எதுவும் கொடுக்கப்படவில்லை. ரியர்-வியூ மிரர்கள் சிம்பிளான டிசைனில் உள்ளன. இந்த புதிய பைக்கில் எம்.ஆர்.எஃப் ஜாப்பர்ஸ் பயஸ்-ப்ளே டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், ஸ்பீடு 400 பைக்கில் ரேடியல் டயர்கள் பொருத்தப்படுகின்றன. விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய 2025 ஸ்பீடு 400 பைக்கில் இன்னும் மேம்பட்ட வெர்டெஸ்டியன் டயர்களை டிரையம்ப் வழங்கியுள்ளது.

triumph speed t4 ride review

புதிய ஸ்பீடு டி4 பைக்கில் முன் சக்கரத்தில் ரேடியலாக பொருத்தப்பட்ட பிரேக் காலிபர்களும், பின் சக்கரத்தில் பிரேக் லிவர்களும் உள்ளன. இதில் பின்பக்க பிரேக் லிவர்களை தேவைக்கேற்ப அட்ஜெஸ் செய்ய முடியாது. 'ஸ்பீடு டி4' பேட்ஜ் ஆங்கிலத்தில் பைக்கின் சைடு பிளேட்டில் பொருத்தப்பட்டுள்ளது. புதிய ஸ்பீடு டி4 பைக்கில் முக்கியமான அப்கிரேட் அதன் என்ஜினில் தான் வழங்கப்பட்டுள்ளது. என்ஜின் வெளிப்படுத்தும் இயக்க ஆற்றலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன்.

ஸ்பீடு400 பைக்கை காட்டிலும் புதிய ஸ்பீடு டி4 பைக்கின் என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல் 8.9 பிஎச்பி மற்றும் 1.5 என்.எம் டார்க் திறன் குறைவு ஆகும். ஸ்பீடு 400 பைக்கில் பொருத்தப்படும் அதே 398சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் இந்த புதிய பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 7,000 ஆர்பிஎம்-இல் 30.6 பிஎச்பி மற்றும் 5,000 ஆர்பிஎம்-இல் 36 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது.

triumph speed t4 ride review

36 என்.எம் டார்க் திறனில் கிட்டத்தட்ட 85% டார்க் திறனை என்ஜினின் வெறும் 2,500 ஆர்பிஎம் வேகத்தில் பெற்றுவிடலாம் என டிரையம்ப் தெரிவிக்கிறது. என்ஜினின் முக்கால்வாசிக்கும் அதிகமான டார்க் திறன் விரைவாக கிடைப்பது நகர்புற போக்குவரத்துக்கும் மற்றும் எந்த சூழலுக்கும் ஏற்ப இயங்கும் பைக்கின் திறனை காட்டுகிறது. மேலும் இதற்கேற்ப, பின்பக்க ஸ்பிராக்கெட்டில் பற்களின் எண்ணிக்கை 43இல் இருந்து 39க்கு குறைக்கப்பட்டுள்ளது.

ரைடிங் இம்பிரஷன்ஸ்: என்ஜினின் பவர் குறைந்துள்ளது மற்றும் சஸ்பென்ஷனின் தன்மையும் குறைந்துள்ளது என்பதால் அதற்கேற்ப பைக்கை ஓட்டுவதும் எளியதாக உள்ளது. டிரையம்ப் பைக்குகளை ஹேண்டில் செய்வது என்றாலே சற்று கூடுதல் கவனம் அளிக்க வேண்டியிருக்கும். ஏனெனில் அந்த அளவுக்கு அவை பவர்ஃபுல்லானவையாக இருக்கின்றன. ஆனால், புதிய ஸ்பீடு டி4 பைக்கில் முற்றிலும் வேறுப்பட்டதாக உள்ளது.

triumph speed t4 ride review

ஸ்பீடு 400 பைக்கை காட்டிலும் ஸ்பீடு டி4 பைக்கை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் கண்ட்ரோல் செய்வதும், சரியான கியரை தேர்வு செய்வதும் இன்னும் எளியதாக உள்ளது. ஸ்பீடு 400 பைக்கை காட்டிலும் குறைவான என்ஜின் பவரை மட்டுமே இழந்துள்ளதால், அதிக ஆக்ஸலரேஷனை எதிர்பார்ப்பவர்களையும் இந்த பைக் ஏமாற்றாது. ஹைவேயில் ஹை ஸ்பீடில் ஜாலியான பயணத்தை இந்த பைக்கில் பெற முடிகிறது.

இருப்பினும், மணிக்கு 90கிமீ வேகத்திற்கு மேல் செல்லும்போது ஆக்ஸலரேஷனில் சிறிய தடுமாற்றத்தை நாங்கள் உணர்ந்தோம். நெடுஞ்சாலையிலும் இந்த பைக்கை எளிதாக கையாளலாம். என்ஜினின் இயக்கம் மிகவும் மென்மையாக உள்ளது. பைக்கின் டாப்-ஸ்பீடை எட்டியபோது மட்டுமே சிறிய அதிர்வுகளை உணர்ந்தோம். என்ஜின் கொஞ்சம் அதிகமாகவே சூடாகிறது. இதனால் ஏற்படும் வெப்பம் பைக் ரன்னிங்கில் இருக்கும்போது பெரியதாக தெரியவில்லை.

triumph speed t4 ride review

ஆனால், சிக்னல்களில் வாகனங்களுக்கு மத்தியில் நிற்கும்போது எரிச்சலூட்டுகிறது. மற்றப்படி, முன்பக்க சஸ்பென்ஷன் செட்-அப்பின் தரம் குறைக்கப்பட்டாலும் ஜாலியான பயணத்திற்கு அது எந்த விதத்திலும் குறையாக இல்லை. பள்ளம், மேடான வளைவுகளில் திருப்பும்போதும் ஸ்பீடு டி4 பைக் எங்களுக்கு எந்தவொரு பிரச்சனையையும் தரவில்லை. முன் பிரேக் கொஞ்சம் அதிக அழுத்தத்துடன் உள்ளது. அதாவது, மெதுவாக அழுத்தினால் ஷார்ப்பாக பிரேக் ஆகிறது.

ஆனால், பார்க் செய்யும்போது சற்று அழுத்தமாக பிரேக்கை கொடுக்க வேண்டியுள்ளது. அதேநேரம், பின்பக்க பிரேக் குறைவான வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும்போது சிறப்பாக செயல்படுகிறது. பைக்கில் ஏபிஎஸ் நன்றாக வேலை செய்கிறது. அதிவேகமாக சென்றுக் கொண்டிருக்கும்போது பின் பிரேக் உடன் ஏபிஎஸ் இணைந்துக் கொள்வதால் நாங்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் பின் பிரேக் சிஸ்டம் அருமையாக செயல்படுகிறது. இவ்வாறு, ஸ்பீடு டி4 பைக்கில் பிரேக் சிஸ்டம் மிக்ஸிங்காக உள்ளது.

triumph speed t4 ride review

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அதன் ஸ்பீடு 400 பைக்கை இன்னும் குறைந்த விலையில் கொண்டுவரும் முயற்சியாக அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதே இந்த ஸ்பீடு டி4 ஆகும். இந்த பிரிட்டிஷ் பைக் கடந்த காலங்களில் இருந்து 1000சிசி, 1200சிசி என பல்வேறு பவர்ஃபுல்லான பைக்குகளை உருவாக்கி இருக்கலாம்.

ஆனால், இவ்வாறான விலை குறைவான பைக்கை உருவாக்குவது இந்த நிறுவனத்திற்கு புதுமையானதாக இருக்கும். இதற்கு, இந்தியாவின் பஜாஜ் ஆட்டோவின் பங்களிப்பும் உள்ளது என்பதை மறவாதீர்கள். ஏற்கனவே கூறியதுபோல், ஸ்பீடு டி4 பைக்கை தினசரி பயன்பாட்டிற்கு தாராளமாக பயன்படுத்தலாம். அதேநேரம், ஹை ஸ்பீடான பயணங்களுக்கும் ஸ்பீடு டி4 ஏற்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, September 29, 2024, 17:02 [IST]
English summary
Triumph speed t4 bike first ride review price engine riding impressions check all details here
மேலும்... #triumph motorcycles #triumph #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X